Thursday, July 04, 2019

இவரை பாண்டிச்சேரில இருந்து தமிழகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்களா?

 1   சென்னை மாநகரம், வறட்சியில், முதல் நகரமாக மாறியுள்ளது. தற்போதைய பிரச்னைக்கு, தமிழகத்தின் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரங்கள் ஆகியவையே காரணம்.-கிரண்பேடி:

இவரை பாண்டிச்சேரில இருந்து தமிழகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் 
பண்ணீட்டாங்களா?
வழக்கமா அவங்களைத்தானே குறை சொல்வாரு?
===================
2  : அ.தி.மு.க., கொடுத்த வேலையை, தங்கதமிழ்செல்வன்
 சரியாக செய்து முடித்திருக்கிறார். 
அவர் விலகியதன் பின்னணியில், அ.தி.மு.க., மட்டுமல்ல
, தி.மு.க.,வும் இருக்கிறது.-தினகரன்

விட்டா இவரை தோற்கடிக்க திமுக அதிமுக கூட்டணி
 வரும்னு அடிச்சு விடுவார் போல 

===================
3   தமிழகத்தை ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சிகளும், 
பெரிய வெற்றிகளைச் சந்தித்தது போல், மிகப் பெரிய தோல்விகளையும்
 சந்தித்துள்ளன. அதற்காக, அக்கட்சிகள், ஒட்டு மொத்தமாக 
வீழ்ச்சி அடைந்ததாகச் சொல்ல முடியாது.
-வாசன்:

 த மாக கூடத்தான் பெரிய எழுச்சியை சந்திச்சு ஆட்சி மாற்றத்துக்கு 
அடிகோலுச்சு, இப்போ அப்படியா?

===============


4  கரிகால சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது தான், இந்த 
குடிமராமத்து திட்டம். இத்திட்டத்தை, 2017ம் ஆண்டு முதல்வர், 
இ.பி.எஸ்., அறிவித்து, இதற்காக, முதற்கட்டமாக, 100 கோடி ரூபாயை
 ஒதுக்கினார். தொடர்ந்து, 2018ம் ஆண்டில், 325 கோடி ரூபாயை ஒதுக்கினார். இந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, கண்மாய்கள் துார் வாரப்பட்டன. 
தற்போது, இந்த ஆண்டிற்கான குடிமராமத்து திட்டப் பணிக்காக,
 500 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியுள்ளார்-அமைச்சர் உதயகுமார் : 

வாழும் கரிகால சோழரே!னு புகழ்றதுக்கு
 கூச்சப்படறாரு போஒல, அதான் சுத்தி வளைச்சு......

================

5கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட, மத்திய அரசு, மறைமுகமாக
 ஆதரவு தெரிவிக்கிறது. - வை கோ

இதை விட நேரடியா ஆதரிக்க முடியாது, பப்ளிக்காவே ஆதரிக்கறாங்க 
===========
6    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வெளிப்படையாக 
அனுமதி தராவிட்டாலும், நீங்களே இஷ்டம் போல் அணையைக் 
கட்டிக் கொள்ளலாம் என, மறைமுகமாக கூறி விட்டது- வைகோ  .

நமக்கு மட்டும் எல்லா ராணுவ ரகசியங்களும் தெரிஞ்சிடுதே எப்படி?
 மேலே ஒரு சு சுவாமி , இங்கே  வை கோ

================

 7  தற்போது, கர்நாடகத்தில், மேகதாது அணை கட்டப்பட உள்ளது. 
பின், தமிழகத்துக்கு, ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது.- வைகோ  


 சொட்டு நீர்ப்பாசனம் செய்ய ஆவன செய்யபப்படும் - ஈபிஎஸ்
==========

8   முதல்வராக, இ.பி.எஸ்., பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில், 
சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.-திருமா: # இந்த 
ஜாதிக்கட்சித்தலைவர்களை   எல்லாம்  ஒவ்வொரு குற்றம் 
நடக்கும்போதும் ஒருன் இழு இழுத்தா குற்றங்க்கள் குறையும்

==============

9  ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்பது போல, 'ஒரே தேசம் ஒரு குடும்ப அட்டை'
 என்பதும் சிறப்பான திட்டம். ரேஷன் அட்டையை வைத்து, 
எங்கு வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை வாங்கிக் 
கொள்ள முடியும்-தமிழிசை '

ரேஷன் கடைல யே வாங்க முடியறதில்லைங்க , ஸ்டாக் இல்லை 
போர்டு போட்டுடறாங்க 

===============


10 'ஒரே தேசம் ஒரு குடும்ப அட்டை'- திட்டத்துக்கான அடிப்படை,
 2011- 2012ம் ஆண்டிலேயே, காங்., ஆட்சியின் போது தொடங்கப்பட்டது.
 ஆனால், பா.ஜ., அரசு, எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், 
அதை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையுடன், 
அந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்-தமிழிசை '


 ஜிஎஸ்டி , உட்பட பல  திட்டங்களை காங் கொண்டு வந்ததைத்தான் மோடி இயக்குநர்
 அட்லீ மாதிரி பட்டி டிங்கரிங் பார்த்து  ரெடி பண்ணுவார் போல 


===================
11   ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை'' என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் இப்போதைக்கு எதுவும் அரசுக்கு இல்லை''  னு எதுக்கும் ஒரு வார்த்தை சேர்த்து சொல்லிடுங்க, நமக்கும் பாதுகாப்பா இருக்கும், எதிர்காலத்துல அப்டி நடந்க்தாக்கூட சமாளிக்கலாம்

===============

12  தங்கத்தமிழ்ச்செல்வன் இன்று மட்டும் ஹீரோ; நாளை ஜீரோ'' - மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் 


ஜீரோ வுக்கும் ஓ வுக்கும் வித்தியாசம் தெரியாம நிறைய பேரு அவருக்கு ஓ போட்டுட்டு இருக்காங்க 

============


13  திமுகவின் வருங்காலம் உதயநிதி ஸ்டாலின்”- டி.ஆர்.பாலு புகழாரம் # நாளைக்குபபோக வேண்டிய பஸ் ல இன்னைக்கே ஜன்னல் சீட்க்கு துண்டு போட்டு வெச்சானாம் ஒருத்தன்,கேவலம்,பதவிக்காகவும் ,காசுக்காகவும் என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு
===========
14 மு.க.ஸ்டாலின் புலியா? இல்லை பூனையா என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது- தமிழிசை# புலி யைப்பார்த்து அதே போல் வரி வரியா டிசைன் இருக்கனும்னு சூடு போட்டுக்கிட்ட பூனை னு சொல்லலாம்

==============
15 “தோல்விக்கு புதிய ஆரஞ்சு ஜெர்ஸிதான் காரணம்” - மெகபூபா முஃப்தி # இந்தியாவின் எதிரி பாகிஸ்தான்,பாகிஸ்தானை மறைமுகமாக வீழ்த்தியததில் மகிழ்ச்சி,காவி ன்னாலே காண்டு ஆகறீங்கள்ல?
=============16 சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்

# இவரு"நாட்டு நிலவரம் தெரியாம பேசறாரா?நடிக்கறாரா?சாராய ஆலைகள்"ல பாதிக்கு மேல நம்ம உடன்பிறப்புகள் ,நம்ம குடும்பத்தார்து"தானே?


=============
.17  'வாடிக்கையாளரிடம் கடன் தொகையை வசூல் செய்ய, குண்டர்களை அனுப்புவதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை,''  மத்திய நிதித்துறை இணை அமைச்சர், அனுராக் சிங் தாக்குர்

மிரட்டவும் கூடாது , ஆனா கடனும் வசூலிக்கனும்னா ஜட்ஜ் அய்யா தான் அதை செய்யனும்


ஒல்லியா இருக்கற ரவுடிகளை அனுப்பலாமா?


================

18 பார்லிமென்ட்டை, கேள்விக்கு உள்ளாக்கவே செய்வேன். அதில்,எந்த தவறும் இல்லை. இதற்காக நீங்கள் கோபித்தால், எனக்கு கவலை இல்லை,'' என தி.மு.க., - எம்.பி., ராஜா

 வெளிநடப்புதானே வழக்கமா நாம பண்றது ? இது என்ன புதுசா?

==============


8 வருசமா அவங்க ஆட்சிலயே இல்லை , இன்னும் அவங்க:ளையே குத்தம் சொன்னா எப்படி?

===============
 இவருக்கு மோடியும் ஆகாதுன் , கிரண்பேடியும் ஆகாது போல  2 டி எதிர்ப்பு


=============

0 comments: