Wednesday, July 03, 2019

திமுக வுக்குப்போனாதான் திருட முடியும்

1  மம்தா பானர்ஜி:தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளிடம்,என்னுடைய கட்சியினர்,'கட்டிங்'வாங்கியுள்ளனர். அதை நான் கண்டித்து, பணத்தை திருப்பித்தர உத்தரவிட்டேன். கட்சியினரை நல்வழிபடுத்துவது தவறா?கட்டிங் வாங்குனதை கண்டிச்சீங்களா? இதெல்லாம் சினிமா ஷூட்டிங்க் பார்க்கற மாதிரி இருக்கு , நம்ப மாட்டோம்
 திருடுனதை திருப்பிக்குடுத்துட்டா அந்த திருட்டுக்குற்றம் சரி ஆகிடுமா? இது என்ன புது உருட்டா இருக்கு?============


காங்., கட்சியின் தலைவராக, ராகுல் தொடர்வதே சிறப்பானது. அதேசமயம், அவரது சொந்த விருப்பங்களும், மதிக்கப்பட வேண்டும் = மணிசங்கர் அய்யர்: 

குழப்பாதீங்க , அவரோட சொந்த விருப்பமே தலைவர் பதவியை ராஜினாமா பண்றதுதானே?

===============


3  தமிழகத்தில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, என்னிடம் ஆதாரம் உள்ளது. அவற்றை, தங்களது ஊடகங்களில் வெளியிட, தி.மு.க.,வினர் தயாரா?-அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் குமார்: 
 தண்ணீர்ப்பிரச்சனை திஒஇர்ந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கா?===============4  :தமிழகத்தில், குடிநீர் பிரச்னை இருப்பதாக, தி.மு.க.,வினர் அரசியலுக்காக பேசி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை என்பது வேறு; குடிநீர் பற்றாக்குறை என்பது வேறு. -

அமைச்சர், ஓ.எஸ்.மணியன்ஆமா அது கறுப்பா பயங்கரமா இருக்கும், இது பயங்கரமா கறுப்பா இருக்கும் , வடிவேலு காமெடி மாதிரி  பேசறாரு
=============
5  மக்களுக்கு எந்த இடர்ப்பாடும் இன்றி, குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு எடுத்துள்ளது.-

அமைச்சர், ஓ.எஸ்.மணியன்

எதிர்க்கட்சி வந்து அதைக்கெடுத்துள்ளது?

===============
 6  தண்ணீர் பற்றாக்குறையின்போது, உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு, ஊர் திரும்பியதும், ஆர்ப்பாட்டம் நடத்தும்,  ஸ்டாலினின் உத்தமர் வேடத்தை, தமிழக மக்கள் இனியும் நம்பமாட்டார்கள்-
  அமைச்சர், உதயகுமார் 


ஆளுங்கட்சி இப்போ அவங்களா? நீங்களா?


 அவர் போன டூர் மேட்டரை எல்லாம் இதுல இழுப்பது டுபாக்கூர்

=

==============


.7  தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு, தி.மு.க.,வே காரணம். தி.மு.க., ஆட்சியில், ஆற்றுப்படுகைகளில் அதிகளவில் மணல் எடுத்து சுரண்டியதால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது.-
  அமைச்சர், உதயகுமார் 


 திமுக ஆட்சி முடிஞ்சு 8 வருசம் ஆச்சு, இன்னுமா அதையே குறை சொல்வ்வீங்க? நீங்க அதுக்குப்பின் என்ன நடவடிக்கை  எடுஹ்ட்தீங்க?

===============

8    பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்லுாரிகளில்ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறியிருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.-முத்தரசன் :சர்கார் இதுபோல் சர்க்குலர்   விடுவதும் , பின் எதிர்ப்பு வந்த [பின் வாபஸ் வாங்குவதும் ரெகுலர்
===============9  நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து சிறிதும் கவலைப்படாத, பா.ஜ., அரசு, தன் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது, விபரீதங்களை உருவாக்கும்.-முத்தரசன் :விபரீதங்களை உருவாக்குமா? என்ன மிரட்றீங்க? ஆளுங்கட்சியை மிரட்றார்னு ஒரு கேஸ் போட்டுடப்போறாங்க=============10     அ.ம.மு.க.,வில் உள்ள, தங்க தமிழ்செல்வன், 'அ.தி.மு.க.,வுக்கு வருகிறேன்' என, இன்னும் வெளிப்படையாகச்சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், அவரை சேர்ப்பது குறித்து, கட்சி முடிவு செய்யும்=அமைச்சர், ஜெயகுமார்
தினகரனத்தவிர யார் வேணும்னாலும்  அதிமுக வுக்கு திரும்ப வரலாம்னு சொல்லியாச்சே? தெரியாதா?

இது மறைமுகமா அவருக்கு விடுக்கப்படும் அழைப்பு போல ================
11 .அரசியலில், நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. , வைகோ, தி.மு.க., மீது தொடுத்த விமர்சனங்களை எடுத்து பார்த்தால், அனைவருக்கும் புரியும்.-அமைச்சர், ஜெயகுமார் அப்போ வை கோ மாதிரி  தினல்கரனும் அதிமுக வில் வந்து இணைவார்ங்கறீங்களா?=============

12   'யாரும் எதிரியில்லை' என,பிரதமர் கூறுகிறார். ஆனால், அதற்கு நேர் எதிராக, லோக்சபாநிகழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு எதிராகவும் குரல்எழுப்புவது, அடுத்த ஐந்து ஆண்டுகள் குறித்தானஅச்சத்தை ஏற்படுத்துகிறது.-விழுப்புரம் எம்.பி., ரவிகுமார் அச்சம் , மடம், நாணம் , பயிர்ப்பு இதெல்லாம் பெண்களுக்கானது , நீங்க தைரியமா இருங்க ================
13  பா.ஜ.,வை எதிர்ப்பதற்காக, மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., - காங்., கட்சிகள், தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என , மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.=எஸ்.சுதாகர் ரெட்டி
காங் கோஷ்டிகள் மாதிரி மார்க்கிஸ்ட் கம்யூ கட்சியும் கோஷ்டிகளில் புகழ் பெறனும்னு விரும்புதோ என்ன வோ?==============
14   மம்தா பானர்ஜி எங்கள் கட்சியை, அரசியல் எதிராளியாக பார்க்கவில்லை; விரோதியாக பார்க்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது அர்த்தமில்லாதது.= எஸ்.சுதாகர் ரெட்டி
 எதிரிக்கு எதிரி நண்பன்  ஃபார்முலாவை உங்க எதிரிக்கட்சி பயன்படுத்திக்கப்போகுது, ஜாக்கிரதை
=============

15  ஒரு நம்பர் லாட்டரி முறைக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அனைத்து வகை லாட்டரிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த சமூக கொடுமையால், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.விஜய் கோயல்
 அதை தடை பண்ணா அரசாங்கம் வருமானத்துக்கு லாட்டரி தான் அடிக்கனும்னு சொல்வாங்களோ? 
==============

16  தங்கத்தமிழ்ச்செல்வன் இன்று தி.மு.க.வில் சேருவதாக தகவல் வெளியாகி உள்ளது
ஒரு இடத்துல நிரந்தரமா “தங்க” மாட்டாரா? தங்க தமிழ் ”செல்”வன்==============


17   , 'தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் விதத்தில் 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்'-ஸ்டாலின்
 கவலைப்படாதீங்க, சகாரா பாலைவனம் ஆகிட்டா நமக்கு மணல் காண்ட்ராக்ட் கிடைக்கும்===========

16  முன்னாள் பிரதமர் என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட்ட 14 உதவியாளர்களை மீண்டும் பணி அமர்ந்த வேண்டும் என்று மோடிக்கு மன்மோகன் கடிதம் எழுதி உள்ளார்
 செலவைக்குறைக்கனும்னு மோடி சொல்லிட்டாரே?
 பாஜக வாஜ்பாய்க்கே  குரைச்சாங்களே?
==============
17  மன்மோகன் சிங்கை சந்தித்தார் நிர்மலா சீதாரமன் இது நல்ல ஐடியா தான் , பொருளாதார நிபுணரின் ஐடியாக்களை பெறலாமே?========
18 கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது ; என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்

- திமுகவில் இணைந்தபின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
# நம்ம பிழைப்பு இப்டியே தாவித்தாவியே போய்டுமோ?

===============

19 தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்
# வருமானத்தைப்பெற திமுக வுக்குப்போனாதான் திருட முடியும்னு தெரிஞ்சுக்கிட்டாரு,புத்திசாலி

============


20 திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் - தங்க.தமிழ்செல்வன்

# அப்போ கனிமொழி ,உதயநிதி ,தயாநிதி மாறன் இவங்க"எல்லாம் நல்லது பண்ணமாட்டாங்களா?


===============0 comments: