Thursday, July 04, 2019

டோனி மாஸ்டர் பிளான்கள்

1  ஜி + பில்லா = ஜில்லா (அஜித்"பட"டைட்டில்ல இருந்து உருவி அமைச்சது)


பில்லா + கில்லி = பிகில் ( அஜித் ,விஜய் பட டைட்டில்களிடமிருந்து உருவி அமைச்சது)==============


கிறிஸ்துவரான"மைக்கேல்"கேரக்டர் நெற்றில விபூதி,குங்குமம் ,கழுத்துல சிலுவை டாலர் செயின்",காவி வேட்டி ,கறுப்பு சட்டை,அரசியல்வாதி லெவலுக்கு இறங்கி வந்திருக்கார்,நமக்கு மைனாரிட்டி ஓட்டும வேணும் ,மெஜாரிட்டி ஓட்டும வேணும் மொமெண்ட்


==============

FB ல ஒரு பொண்ணு இரண்டே நாள்ல 2 கிலோ வெயிட் குறைக்கனும்.. என்ன பண்ணலாம்..ஐடியா ப்ளீஸ்..னு கேக்குது,நம்மாளு தன் போன் நெம்பர் தந்து கால் பண்ணுங்க சொல்றேன் கறாப்டி்,இன்னொருத்தரு "உங்க போன் நெம்பர்"குடுங்க,கால் பண்ணி சொல்றேன்கறாரு,அது என்ன ராணுவ"ரகசியமா?பப்ளிக்கா சொல்லக்கூடாதா?


=============


4 இந்துவான சுதாரகுநாதனின் மகள் ஒரு கிறித்துவரை காதலித்து மதம் மாறி திருமணம்"செய்ததை கிண்டல் அடித்து மீம்ஸ்கள் வருகின்றன,அது அவரது தனி"மனித உரிமை,அதில்"தலையிடுவது தவறு.மாப்பிள்ளையை கிண்டல் செய்வது உருவ கேலி


=============


5 ஒரு தெலுங்குப்படத்துல வில்லன் டூ ஹீரோ = நான் நினைச்சா ஒரு செகண்ட்ல உன் ஆளை ரேப் பண்ணமுடியும்,பாக்கறியா?பாக்கறியா?


டவுட் 1 = ஒரு நொடி ல எப்டி?

டவுட் 2 = வில்லன் ரேப் பண்றதை ஹீரோ ஏன் பாக்கனும்?===========


6 லாஸ்லியா= Loss = நட்டம்

லியா (ஹிந்தில) கொண்டுவந்தான்

அப்போ பிக்பாஸ் லாஸ்லியா சென்ட்டிமென்ட்டலா ஜெயிக்காது னு யாரும் இன்னும் மொக்கை போடலியா?

=============


7 கொடை ஆரஞ்சு (கமலா ஆரஞ்சு) ,கேரட் ,பப்பாளிப்பழம் போன்ற காவி நிற பழங்களை தடை செய்ய வேண்டும் ,அப்போதுதான் பாஜக வின் காவி நிறம் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முடியும்


இப்படி வீராவேசமா எந்த எம்.பி யும் இன்னும் குரல் தர்லையா?=============


8 ச"மையல்"அறை=============
9 செஞ்சோற்று கடன் என்பது


தக்காளி சாதம்
அரிசிம்பருப்பு சாதம்
பீட்ரூட் சாதம்
சாப்பிட்டுட்டு ஹோட்டல்ல,கடன்"சொல்வது
பிரியாணி


============


10 ஒரு குடிகாரன் போதைல இருக்கறப்ப அவனை எதுவும் செய்யாத,போதை"தெளிந்த பின் வெளுத்துக்கட்டு − போலீஸ்காரரின் டைரியிலிருந்து


==============

11 கொடை ஆரஞ்சு (கமலா ஆரஞ்சு) ,கேரட் ,பப்பாளிப்பழம் போன்ற காவி நிற பழங்களை தடை செய்ய வேண்டும் ,அப்போதுதான் பாஜக வின் காவி நிறம் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முடியும்


இப்படி வீராவேசமா எந்த எம்.பி யும் இன்னும் குரல் தர்லையா?

================


12 நல்ல வேளை ,அ = அம்மா ங்கறதுக்குப்பதிலா
அ= அகத்தியர் னு பாடப்புத்தகத்துல மாத்துனாங்க,அ= அமித்ஷா னு மாத்தலை


=============


13 தமிழ் சினிமாக்களில் லேடி"கலெக்டர்னா full sleeve jkt தானே போடுவாங்க,கிளாமர் கிளி நயன்தாரா கூட அந்த மாதிரி தானே வந்தாங்க,"(அறம்)."அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும் "புகழ் கை காட்டி சேலம் கலெக்டர் ரோகினி ஏன் அப்டி இல்லை?


இப்டி சம்பந்தம் இல்லாம மொக்கை போட யாரும் இன்னும் கிளம்பலையா?
============


14 *2017: நேர்மையான ஆட்சியை தினகரனால் மட்டுமே தர முடியும்.. - தங்க தமிழ் செல்வன்*


*2019: நேர்மையான ஆட்சியை ஸ்டாலினால் மட்டுமே தர முடியும்.. - தங்க தமிழ் செல்வன்*

*2021:* நேர்மையான ஆட்சியை ரஜினியால்் மட்டுமே தர முடியும்.. - தங்க தமிழ் செல்வன்===============


15 தனது பெற்றோரிடம் ஏதாவது குறையோ ,தவறோ இருந்தால் மற்றவர்களிடம் அது பற்றி விவாதிக்காமல் /வெளிப்படுத்தாமல் இருப்பவரே நல்ல மகன்/ள்


==============


16 உனது முன்னேற்றத்தை பாதிக்காத ஒரு தோல்வி ,உன் எதிரியை பாதிக்கும் எனில் தோல்வி பெறுவது தவறு இல்லை


==============


17 காலம் பேசாது... ஆனால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்# #

இதே கருத்தை கமல் சொன்னா? ஒரு கற்பனை

காலம் பேசும் னு சொல்ல வரல , பேசுனா நல்லாருக்கும் ,காலம் கேள்வி கேட்குதோ இல்லையோ நிச்சயம் எதுனா பதில் சொல்லும்


===============


18 தேங்காயை வீட்ல நாம உடைச்சா அது"தேங்காத்தண்ணீ
கோயில்"ல குருக்கள் உடைச்சா
அது தீர்த்தம்,சாம்பிராணி,ஊதுபத்திப்புகை வாசத்துல கலந்து வர்றதால தெய்வீகத்தன்மை மாதிரி ஒரு பிரமை ,அவ்ளவ்தான்


==============


19 பாகிஸ்தானை செமி பைனல் வராவிடாமல் தடுக்க சிறந்த எளிய வழி யை டோனி கண்டுபிடிச்ட்டாப்டி


=============


20 தேவைப்படும்போது சிக்சர் அடிக்கவும் தெரியும்
தேவைப்படாத போது
சிங்கிள்ஸ் எடுக்கவே தவற விடவும் தெரியும் ,டோனி மாஸ்டர் பிளான்கள்


================

0 comments: