Monday, July 01, 2019

SBI பேங்க்கை விட பெரிய கொள்ளைக்காரன் யார்?

 1  தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறைதான் ஏற்பட்டுள்ளது; குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை - ஓபிஎஸ் # தலைவர் பாணில சொல்லனும்னா நாங்கள் தேர்தலில்"தோற்கவில்லை,வெற்றி வாய்ப்பை"இழந்திருக்கிறோம=============
2 அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது


- தமிழிசை
# இதுல எப்டிண்ணே லைட் எரியும்் மொமெண்ட்.மழை வர்ற சீசன் ல யாகம் நடத்திட்டு....பெருமை வேற.
வானிலை அறிக்கை ல கடும் வெய்யில்னு சொல்ற அன்னைக்கு யாகம் நடத்தி மழை வர வைங்க பார்ப்போம்===============

3 தினமும் 2 வாளி நீரை மட்டுமே பயன்படுத்துகிறேன். -முதல்வர் பழனிசாமி.


# 1000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் கை வாளினு நினச்ட்டார் போல


=============


4 என் தலைவர் இரண்டு சிங்கக்குட்டிகளை பெற்றார்.//துரைமுருகன்.


//அப்போ கடைசிவரை அந்த 2 சிங்கக்குட்டிகளுக்கும் வனவாசம்தான்,நாடாளும் யோகம் இல்லைங்கறாரா?ஏன் சேம் சைடு கோல் போடறாரு?================


5 விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும்

- மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

# நக்கீரன் கோபால் காபிரைட்சுக்கு வருவாரே? பரவால்லையா?==============


6 விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும்


- மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ராகுல் ஏன் பதவி விலகறார்னு இப்போ தெரிஞ்சுடுச்சு , இவங்களை எல்லாம் வெச்சு எப்படி குப்பை கொட்றதுனு விரக்தி அடைஞ்சிருப்பாரு போல 


நாட்ல 1008 பிரச்சனை இருக்கு, இவரு\க்கு தேசிய மீசை தான் குறைச்சலா?
 இந்த தேசிய ”மீசை” இனி எத்தனை” மீம்சை ” சந்திக்கப்போகுதோ?எதிர்கொள்ளப்போகுதோ? 


--------------


7  “வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி # ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரம் ,சசிதரூர் இவங்க"மேல"கூட"வழக்கு இருக்கு,அவங்க இன்னும்"மாறலையே?=============
8 எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா நதிகளையும் இணைத்தால் 25 வருடங்களில் ஒரு ஆறு கூட இருக்காது - ஜக்கி வாசுதேவ் # பைப் லைன்ல தானே இணைக்கறாங்க?ஆவி ஆக"வாய்ப்பில்லையே?வேற என்னதான் பண்ணனும்கறாரு?
============9 அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - அமைச்சர் வேலுமணி # நல்ல வேளை,தண்ணீரை விலைக்கு வாங்குவதும் குற்றம் ,விற்பதும் குற்றம்னு சொல்லலை

=============

10 தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை - திமுக எம்.பி. கனிமொழி # அய்யய்யோ,கோவில்களில பாதுகாப்பை அதிகப்படுத்தனும்,இவங்க அடுத்த டார்கெட் தெரிஞ்சு போச்சு்
=============11 தமிழகத்தில் மிக மோசமான ஊழல் ஆட்சியை அதிமுக செய்து வருகிறது: மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு


# உண்மைதான்,தமிழகம்"கண்டது இரண்டு வகையான ஆட்சி

1 விஞ்ஞானபூர்வமா திருடி ஆதாரம் இல்லாம தப்பிக்கற கட்சி
2 பட்டவர்த்தனமா திருடி மடத்தனமா மாட்டிக்கற கட்சி


==============

12 காங்கிரஸ் என்ற பல்லக்கை தூக்கியதால் தான் திமுக வென்றது. -ராஜேந்திர பாலாஜி.


திமுக"வுக்கு காங் என்றும்"அல்லக்கை"தான்.==============


13 மக்களுக்கு தண்ணீர் தாகம்.. ஸ்டாலினுக்கு பதவி தாகம்.. தமிழிசை விமர்சனம்!

# மொத்தத்தில் இரு தரப்பினர்"தாகமும் தீரப்போறதில்லை,
அலைகள் ஓய்வதில்லை;
பயணங்கள் முடிவதில்லை
மாதிரிதான்
கோபுரங்கள்"சாய்வதில்லை================


14 முதலமைச்சர் பங்களாவுக்கு குடிநீர் சப்ளை : கட்டணம் செலுத்தவில்லை என மாநகராட்சி புகார்
)# 2 பக்கெட் தண்ணி தானே ஒரு நாள் பயன்பாடுன்னாரு,அதுக்கு எதுக்கு சார்ஜ்?இப்ப வெளில வரும் பாருங்க உண்மை பயன்பாடு விபரம்


================


15 நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய நேரம் இது! - பிரதமர் மோடி

#2000 கோடில
புது பிளைட் வாங்குனாரே,அதுல நம்ம எல்லாரையும் ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப்போகபபோறாரு போல=================


16 ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு


# SBI பேங்க்கை விட பெரிய கொள்ளைக்காரன் இருக்கான் போல,நாம போஸ்ட் ஆபீஸ் SB ல பணம் வரவு செலவு வைப்போம்==============
17 தினகரன் அரசியல் கட்சித் தலைவா்போல் அல்லாமல் தீவிரவாத இயக்கங்களின் தலைவா் போல் செயல்படுகிறாா் - தங்கதமிழ்செல்வன் # தீவிரவாத இயக்கங்களின்"தலைவர்"செயல்பாடுகள் எப்படி"தெரிஞ்சது ஏற்கனவே"அந்த இயக்கத்துல இருந்திருக்கீங்களா?னு"கேட்டு ஒரு"கேசை எழுதிடப்போறாங்க


===============

18 ஊழலை ஒழிக்க வேண்டும் - தயாநிதி மாறன் #
உங்களுக்கு எம்.பி சீட்"தந்த கட்சிக்கு எதிரா ஏன்"போர்க்கொடி தூக்கறீங்க?


===========19 காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள் பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
* காவலர் குடியிருப்பில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக பலர் குடியிருப்பதாக புகார்

# ஒரு 25 பேரு மாசாமாசம் சம்பளமே வாங்கிட்டாங்களாம்

================

20  பொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர ராகுல் முடிவு # அவ்ளோ நல்லவர்னா நீங்களே ஒருவரை,சீனியரை,நல்லவரை தேர்ந்தெடுத்து தலைவர் ஆக்கி இருக்கலாமே?இல்லைனா தங்கையையாவது தலைவர் ஆக்கி இருக்கலாம்,சும்மா டிராமா போடறது


=============

0 comments: