Friday, July 19, 2019

வை கோ மதிமுக வை கலைச்ட்டாரா? தொண்டர்கள் அதிர்ச்சி

1  :மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், இன்று, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் பேச உள்ளார் # இன்றைய சிலபஸ் பத்துப்பாட்டு எட்டுத்தொகையாம், எல்லாம் ரெடியா இருங்க, அங்கங்கே கேள்வி வேற கேட்பாரு


==============


2 மாநிலங்களவை சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது; மதிமுகவுக்கு இல்லை
நான் எம்பி ஆவதாக இருந்தால் சீட் ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தத்தின்போது ஸ்டாலின் கூறினார் - வைகோ மதிமுக வை கலைச்ட்டாரா?இவரு வேற ,மதிமுக வேறயா? அடப்பாவமே!

==============


3 புலியை கூண்டில் அடைத்தாலும் சீறிக்கொண்டேதான் இருக்கும் - வைகோ
# வாயை வெச்சுட்டு கம்முனு இருந்திருந்தா ஒரு வருசம் கூண்டுக்குள்ளே இருக்கவே தேவைஇல்லையே? இனி 365 நாட்கள் உறுமிட்டே இருக்க வேண்டியதுதான்


===========


4 இறுதி மூச்சு இருக்கும்வரை இந்தியாவுக்காக சேவையாற்றுவேன்!’ - ராகுல்காந்தி ராஜினாமா விளக்கம் # இவரு ராஜினாமா பண்ணுனதே ஒரு சேவை தான்


==========


5 வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடவில்லை : டிடிவி தினகரன்# அமமுக வே இல்லை


============


6  தனக்கு சாமி வந்துள்ளதாக கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானம் செய்த பேராசிரியை நிர்மலா தேவி...!
# கோர்ட்டுக்கு உள்ளே இந்த வேலையைப்பண்ணி இருந்தா கோர்ட்டை அவமதிச்ட்டார்னு 3 மாசம் உள்ளே"தள்ளி இருக்கலாம்


==============


7 தோல்விக்கு பரிகாரமாக பாஜகவில் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம் - தமிழிசை
# உறுப்பினர்களை சேர்க்கறீங்களே,அதுக்குப்பரிகாரமா என்ன பண்ணப்போறீங்க?


=============


8 தமிழகத்தில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 2001-2011 காலத்தில் இரு மடங்காக அதிகரித்தது: செய்தி -அதாவது வடக்கே இருந்து வேலை தேடி வரும் ஆட்கள் டபுள் ஆகிட்டாங்க


================


9 பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல முதல்வர், எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் பழனிசாமி - இன்பதுரை # நோக்கியா பேசிக் மாடல் போல னு சொல்லுங்க,பொருத்தமா இருக்கும் அதுதான் கீழே விழுந்தாலும் உடையாது,நெடுஞ்சாண் கிடையா விழுந்தாலும் கெத்து


================


10 ஜெ.வின் கட்டளையே சாசனம்.. சட்டசபையில் பாகுபலி வசனம் பேசிய ஓ.பி.எஸ்! # அதெல்லாம் சரி,ஜெ மரண மர்மத்தில் கட்டப்பா யார்?னு கண்டுபிடிச்சாச்சா?


================


11 கமலுக்கும் சீமானுக்கும் வாக்களிக்கும் இளைஞர்களுக்கு அரசியல் வரலாறு தெரிவதில்லை” - ஆ.ராசா # ஆமா,சர்காரியா கமிஷன் உட்பட பல ஊழல்கள் அவங்களுக்குத்தெரியாது,பரப்பனும்,எடுத்துச்சொல்லனும்


==============


12 பி.எம் சதக் யோஜனாவின் அர்த்தம் எனக்குத் தெரியாது!' - மக்களவையில் கனிமொழி காட்டம்
# அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னாத்தான் சம்பளமாம்,எப்டி வசதி?


==============
13 ஜிமிக்கி சேலஞ்ச் ,மூக்குத்தி சேலஞ்ச் ,நெக்லஸ் சேலஞ்ச், கொலுசு சேலஞ்ச்
இப்டி படிப்படியா முன்னேறி ஒட்டியாணம் சேலஞ்ச் ல வந்து முடியப்போகுது


=============

14 தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும்
கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் - தனியரசு எம்எல்ஏ # அல்ப ஆயுசுலஜனங்க சாகனும்னு நினைக்கறாருபோல,நல்ல எண்ணம்


================
15 தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை - அமைச்சர் சரோஜா
கார்லயே போனா கண்ணுக்குத்தெரியாது,பஸ்லயோ,ரயில்லயோ டெய்லி ஒரு"விசிட் அடிச்சுப்பாருங்க===============16 தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு வரவேண்டும் - தனியரசு எம்.எல்.ஏ # இவரு தனியரசா?"தண்ணி"அரசா?


==============

17 அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் எம்ஜிஆரை சுத்தமாக மறந்து விடுவார்கள் - ஆ.ராசா # அது"எப்டினு தெரில,ஆனா"250 வருசம் ஆனாலும் 2 ஜி ஊழலில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ஆட்டையைப்போட்டது ,வழக்குல ,தண்டனை ல இருந்து (தற்காலிகமா) தப்பிச்ச சாமார்த்தியத்தை மட்டும் ஜனங்க மறக்க"மாட்டாங்க===============18 அத்தி வரதரை காண குவியும் பக்தர்கள் – நேற்று ஒரு நாளில் மட்டும் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்
டோக்கன்"போட்டு ஒரு"டிக்கெட்,10 ருபா வசூல்"பண்ணாக்கூட டெய்லி 25 லட்சம் வசூல்"ஆகும் ,அனாதை ஆசிரமங்களுக்கு"தரலாம்


=================


19 1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... 'அன்பில் மகேஷ் பொய்யாமொழி # அவரு"பிறந்த"தேதி"தெரியுமா? 27/11/1977
7 வயசுல அவரு ஸ்கூலுக்கு வேணா"போய்"இருப்பாரு,பிரச்சாரத்துக்கு வேடிக்கை,பாக்க"வேணா"வந்திருக்கலாம்,3 ரூபா டைகர் பிஸ்கெட்டுக்காக......


==============


20 கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்
# அகரம் பவுண்டேஷன் நடத்தறாரு,அது பத்தி உங்களுக்கு எதுனா தெரியுமா? சும்மா பொங்க வேண்டியது


================

0 comments: