Tuesday, July 23, 2019

முருகன் -னா ஓம் போடனும், இவருக்கு அரசாங்கத்துக்கு ஓ போடறார்

1  காமராஜர் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.- சரத்குமார்.
# காமராஜர் ஆட்சில டாஸ்மாக்"இருந்ததா?பதவிக்காக"அவர்"யார் கால்லயாவது விழுந்தாரா?


===========

2 எம்.ஜி.ஆருக்கு பின்னர் யாரும் ஜொலிக்கவில்லை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் - கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் # அப்படிப்பாத்தா அறிஞர் அண்ணாவுக்குப்பின் திமுக,

காமராஜருக்குப்பின் காங்,
எம்ஜியார் ,ஜெ வுக்குப்பின் அதிமுக கூடத்தான் ஜொலிக்கல,அதுக்காக எல்லாக்கட்சிகளையும் கலைக்கனுமா?===============


3 ஜோதிகா Win ராட்சசி படத்தை தடைசெய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
ரிலீஸ் ஆகி மாமாங்கம் ஆகுது.சூர்யா வின்"நீட் எதிர்ப்புப்பேச்சுக்காக அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் ரமணா பார்முலாவை பாலோ பண்றாங்க.எப்படியோ படம் ஹிட் ஆகிடும்


==============


4 உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அழைப்பு
# உயிரோட,இருக்கும்போது ஒரு"தடவையாது, ரத்ததானம்"தரச்சொல்லுங்க.திருடலுங்க"அதையே"செஞ்சிருக்க"மாட்டாங்க


============


5 அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலினை தொடர்ந்து ராசாத்தி அம்மாளும் வருகை தந்தார் - செய்தி"# என்ன கொடுமைய்யா இது?வீட்டு ஆண்கள் எல்லாம்"காவியை எதிர்க்கறாங்க,அல்லது எதிர்க்கறதா டிராமா போடறாங்க,பொண்ணுங்க சாமி கால்ல ,சாமியார் கால்ல விழறாங்க,முதல்ல வீட்டை பாரு",அப்றம் நாட்டைப்பாரு


=============


6 தமிழ் சமுதாயத்திற்காக சிதம்பரம் என்ன செய்தார்.?-பொன்.ராதாகிருஷ்ணன்.# கோர்ட் சம்மன் அனுப்ச்சப்ப ஆஜர்,ஆகாம குடும்பத்துக்கே காய்ச்சல் ,ஐ ஆம்"சப்ரிங்"ப்ரம் பீவர் னு வாய்தா வாங்க"அப்ளை"செய்தார்


==============


7 ரஜினிகாந்த் ராஜராஜ சோழன் ஆட்சி அமைப்பார் - அர்ஜூன் சம்பத் # அப்போ"அவருக்குப்பிறகு தனுஷ்"தான்"தமிழக"முதல்வரா? ரைட்டு


============


8 துக்ளக் இதழ் படிப்பவர்கள் 70 சதவீதம் பேர் ஹிந்தி படிக்க விரும்புகிறார்கள்- ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து # 7 கோடி தமிழ் வாக்காளர்களில் எத்தனை % வாசகர்கள் துக்ளக் படிக்கறாங்க?அதை சொல்லுங்க முதல்ல. நெ1பத்திரிக்கை விகடன்,குமுதம் கூட 5 லட்சம் புக் தான் விற்குதாம்.துக்ளக் 1 லட்சம்?===================
9 1  சூட்கேஸ் கொடுத்து, வாங்கும் முறை, இந்த அரசிடம் இல்லை. மோடி அரசு, சூட்கேஸ் துாக்கும் அரசு இல்லையே என, எனக்கு தோன்றியது. அதனால், பட்ஜெட் உரையை, நான்சூட்கேஸில் எடுத்து செல்லவில்லை.-நிர்மலா சீதாராமன்:ஹாட் கேஷ் பிடிக்கும், சூட்கேஸ் பிடிக்காது?

===================

2   எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும், ஜனநாயக படுகொலை, கர்நாடகாவில் நடக்கிறது. இது எதிர்காலத்தில், பா.ஜ.,விற்கே திரும்பி வரும்.-நாராயணசாமி:


உங்க கட்சி ஆட்கள் ஏன் விலை போறாங்க? உறுதியா உங்க் பக்கம் நிற்கலாமே?

=================
3  மத்திய அரசின் திட்டங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதி, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கூடுதல் சுமை 
ஏற்பட்டுள்ளது.-பன்னீர்செல்வம்: 


தமிழக்ம் , கேரளா இந்த 2 மாநிலங்க்ளும் பாஜக வுக்கு வாக்களிக்காததாலா?


==================


4   தி.மு.க., என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். -உதயநிதி 

 ஆனா பதவி வேணும்னா அந்த இளைஞர் தலைவர் குடும்பத்துல இருக்கறவராகவோ , அவருக்கு நெருக்கமானவராகவோ இருக்கனும்?


===============

5  1949ல், தி.மு.க., துவங்கப்பட்ட போது, அண்ணாதுரை வயது, 40. கருணாநிதியின் வயது, 25. அன்பழகனின் வயது, 27. -உதயநிதி 


 அப்போ கலைஞரை விட 2 வருசம் சீனியர் ஆன அன்பழகனுக்கு ஏன் கட்சித்தலைவர் பதவி தரப்படலை?


=====================6 , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.-உதயநிதி 


சரி சரி  உங்க மகன் இன்பா அடுத்த வாரிசா?


==================


7   இந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை, நாடு முழுவதும் வளர்த்து, அசைக்க முடியாத ஆலமரமாக காட்சி அளிக்க வைத்துள்ளது.-உதயநிதி 


 ஆல மரமா?  கட்டு மரமா? ஆல மரம் தான் பல விழுதுகள் உள்ளது என்பதை மனிதன் மறந்தான்

===============

8  , தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக, பிராந்திய மொழிகளை சிதைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். இன்று, ஹிந்தி மொழி திணிப்பு, மத திணிப்பு ஆகியவை, கல்வி வாயிலாக நடக்கிறது. குலக்கல்வி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.-திருமா] 

திமுக காரங்க நடத்தற பிரைவேட் ஸ்கூல்ல ஏன் ஹிந்தி பாடமா இருக்கு? அதை எதிர்க்கலையா? நீங்க?


=================

9  தமிழ் மொழி வளர்ச்சிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக,  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, இந்த பட்ஜெட்டில், எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது; சமஸ்கிருதம், ஹிந்தி அல்லாத மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளனர் என்பதை, அவர்கள் அறிவிக்க வேண்டும்-கனிமொழி  


தமிழ் மொழி வளர்ச்சிக்காக கேள்வி கேட்கும் கனிமொழி, அட டைட்டில் நல்லாருக்கே?


===========


10    தமிழகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில், சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு வேலை, இலவசம் போன்ற இதர சலுகைகள் வழங்குவது, 90 சதவீதம் வரை காலதாமதம் ஆகிறது. பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டு, இழப்பீடு வழங்கப்படுகிறது.-முருகன் 


முருகன் -னா ஓம் போடனும், இவருக்கு அரசாங்கத்துக்கு ஓ போடறார்


==============
11  கல்வி என்பது, ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக மாறக் கூடாது. ஏழை, பணக்காரர் என, பாகுபாடு இல்லாமல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவச கல்வியை உறுதி செய்வது, அரசாங்கத்தின்பொறுப்பு. ஏழை மாணவர்களுக்கு, கல்வி தான், உயரே பறப்பதற்கான சிறகு. அது, முறிந்து போகாமல் இருக்க, அனைவரும் துணை நிற்போம்.-நடிகர் சூர்யா 


கரம் கொடுப்போம், அகரம் சிறக்க வாழ்த்துவோம்


==================


12  2  சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை கட்சியின் தலைவராக்கினால் காங்., 24 மணி நேரத்தில் உடையும்- நட்வர் சிங் 

 இவருக்கு தலைவர் பதவி கொடுத்துட்டா உடையாதா? ஓபிஎஸ் ஃபார்முலாவா?=======================


0 comments: