Monday, July 29, 2019

போட்டுக்”குடுத்து” பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்

1   : மத்திய உள்துறை அமைச்சரிடம், யாரைப் பற்றியும், எந்தவிதமான புகாரையும் கூறவில்லை. அது போன்ற பழக்கம், எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது.- பன்னீர்செல்வம்


அதாவது போட்டுக்”குடுத்து” பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்கறாரு?


=================


2 , : ஆள் பிடிக்கும் பணியில் உள்ள முதல்வர், இ.பி.எஸ்., எங்கள் கட்சி, மாவட்ட செயலர்களிடையே, பணம் மற்றும் அரசு ஒப்பந்த பணி வழங்குவதற்காக, கட்சி மாற வேண்டும் என, கூறியுள்ளார்.-தினகரன்

நைசா உங்களுக்கும் கட்சில ஒரு பதவி கேட்டு நீங்களும் மாறிட வேண்டியதுதானே?

=====================
3  அதன், 'ஆடியோ' விரைவில் வெளியிடப்படும்.-தினகரன் # ஆடியோ லாஞ்ச் ல கலந்துக்க ஜெயில்ல இருந்து பரோல்ல சசிகலா வருவாரா>ஜெயில்ல இருந்து பரோல்ல வெளில வர சசிகலாக்கு ஒரு சாக்கு கிடைச்சிடுச்சு

======================
4   சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், எங்கள் கட்சியினரை மிரட்டி, பா.ஜ.,வில் சேர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் கனவு பலிக்காது=மம்தா பானர்ஜி:\

மடில கனம் இருந்தாத்தானே வழில பயம், மிரட்டற அளவுக்கு அவங்க என்ன தப்பு பண்ணாங்க ?>

=============


5   மூப்பனார் பெயரை வைத்து, வாசன் அரசியலுக்கு வந்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகிறார். அப்படியெனில், ராஜிவ், சோனியா இல்லாமலா, ராகுல் அரசியலுக்கு வந்தார்>?. -யுவராஜா 

 சபாஷ் .  தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி

================

6 அரசியலில் வாரிசு இருப்பதும், உழைத்து வருவதும் உண்மை தான். காங்., கட்சியில் இருந்து பிரிந்திருந்த போது, இளங்கோவன், சிதம்பரம் போன்றோர், கட்சியை செய்யாத விமர்சனத்தை, வாசன் எப்போதும் செய்ததில்லை.-யுவராஜா 

 ஒரே கல்லுல 2 மாங்கா , வாசனை பாதுகாத்த மாதிரியும் ஆச்சு , போற போக்குல ப சி , ஈவிகேஎஸ் இவங்க 2 பேரையும் போட்டுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு

==================

7 அரசியல் நாகரிகம் தெரியாத அழகிரிக்கு, இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.-யுவராஜா  

 அரசியல்ல ஏதுங்க நாகரீகம்? அநாகரிகமா நடந்துக்கிட்டாதானே அது அரசியல்வாதிக்கு அழகு?
==============
8  ஆட்சி என்பது, துண்டு போன்றது; கட்சி என்பது, வேட்டி போன்றது. துண்டு போனால், அதை பிறகு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், வேட்டி போனால், அது நமக்கு அவமானம்-வைத்திலிங்கம், 

வேற கட்சில்; சேர்ந்தா வேற கரை வேட்டி கிடைக்குமே?

================== 
 9. நம் மானத்தைக் காக்கக்கூடிய தேர்தலாக, வேலுார் லோக்சபா தேர்தல் இருக்கிறது. இதை, மனதில் வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று, நம்மை நிரூபிக்க வேண்டும்.-வைத்திலிங்கம்,  

இப்படிச்சொன்னா ஜனங்க தோற்க வெச்சு மானத்தை வாங்கிடப்போறாங்க 

=================
10  'நீட்' தேர்வுக்கு எதிராக, அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபாவில் ஒற்றுமையுடன் குரல் கொடுத்தனர். ஹிந்தி, ஆங்கில மொழிகளில், தபால் தேர்வு நடத்துவதை மாற்றி, பிராந்திய மொழிகளில் நடத்தவும் கோரினர். இதற்கு, மத்திய அரசு பணிந்து, தபால் துறை தேர்வை ரத்து செய்தது. இதுபோல், தமிழக பிரச்னைகளில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், பார்லிமென்டில் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், நல்ல பலன் கிடைக்கும்.=  தனியரசு எம்.எல்.ஏ.,   

நீட் பிரச்சனைல இரு ம்கட்சிகளும் நீட்டா நடந்துக்கிட்டாங்க அப்டிங்கறாரு

=====================
11  தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட, தேசிய தகவல் ஆணையம், சில ஆண்டுகளாக, முழுமையாக செயல்படவில்லை.=தினகரன்  

 தகவல் அறியு,ம் உரி,மை சட்டப்படி அது ஏன்?னு தகவல் கேட்டுப்பாருங்க 

-==============
12  தகவல் அறியும் உரிமை சட்டத்தை முற்றிலும் செயலிழக்க செய்யும் வகையில், மத்திய அரசு அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, லோக்சபாவில் நிறைவேற்றி உள்ளது. =தினகரன்  

 அதெல்லாம் போகட்டும், நம்ம கட்சில இப்போ எத்தனை பேரு இருக்காங்க அப்டினு தகவல் சொல்ல ம்ஜுடியுமா?

==================
13 தன்னாட்சி அமைப்புகளை வீழ்த்தி, மத்திய அரசு தம் கட்டுப்பாட்டில் எடுத்து வருவது, ஜனநாயகத்திற்கு பேராபத்தாக முடிந்து விடும்.-தினகரன்  


ஒரு பணநாயகம் ஜனநாயகம் பற்றி கவலைப்படுதே அடடே!

====================


15 ] கல்வித்துறை சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணாமல், கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபடுகிறது. -ஜி.ராமகிருஷ்ணன்  :

 கல்வித்துறை சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை  இதுதான் போல 

===================


16 கஸ்துாரி ரங்கன் அறிக்கையில், 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தனியார் கல்வி நிறுவனங்கள் பெருக வாய்ப்பு ஏற்படும். கல்வியை தனியார் மயமாக்குவது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.  -ஜி.ராமகிருஷ்ணன்  :

டாஸ்மாக் ல 20 கஸ்டமருக்கு கம்மியா வந்தா அதை மூடனும் நு சொல்லுவாங்களா?

===================

17  மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்கலா' என்று மாற்ற அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யும் எந்த திட்டமும் இல்லை -  மத்திய இணை அமைச்சர் 

 பங்கலா -னு மாத்துனா அது பங்களாதேஷ் பெயர்க்குழப்பம் ஏற்படுமா?


பங்கலா-னு பெயர் மாற்ற வாய்ப்பு மங்கலா இருக்கு?

====================

18  'அனைத்து முன்னாள் பிரதமர்களையும் நினைவு கூரும் வகையில், பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும்,'' = மோடி 

முன்னாள் முதல்வர்கள் மட்டும் என்ன தக்காளித்தொக்கா?னு கேட்டு ஒரு கூட்டம் கிளம்பப்போகுது

--------------------

19 'தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்கும் சட்டம்தேவைப்ராமதாஸ்

 ஆந்திரா வில் 75% தெலுங்கர்களுக்கே வேலை வாய்ப்புனு அறிவிச்ச்தும் ஒரு 5% கூட்டி 80% வேணும்கறார் போ;;அ

=================

20   அ.தி.மு.க.,வில் உள்ளவர்களை தன் கட்சியில் இழுக்க, தினகரன் நாடகமாடுகிறார். இது நடக்காது. தினகரன் செய்வது, போர்ஜரி தொழில்-அமைச்சர் ஜெயக்குமார் 


அவரைக்கேட்டா அதுதான் சர்ஜரி அபொடிம்பாரோ?


===================

0 comments: