Wednesday, July 24, 2019

திமுக காரன் கூடாரம் கொண்டான்?


1   லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை, வரலாறாக சித்தரிக்க, பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர். அது, வரலாறு இல்லை; மர்மம். பணம், அதிகாரம், ஓட்டுப்பதிவு இயந்திரம் ஆகியவற்றின் மூலம், வெற்றி பெற்றனர்-மம்தா பானர்ஜி:


அப்போ கேரளா , தமிழகம் ல ஏன் வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது?


 மர்மம் எப்படி மம்தாவுக்கு மட்டும் தெரிஞ்சுது? இதுவே பெரிய மர்மம்தான்
====================

2: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.-ஸ்டாலின்


200  கூட்டுத்தொகை 200=2=0=0 = 2 , திமுக  3 எழுத்து  , எண் கணித சாஸ்திரப்படி 2 க்கும் , 3 க்கும் ஒத்து வர்லையே தலைவரே>


 அப்போ இந்த ஆட்சி 2021 வரை கவிழாதுனு ஒத்துக்கறீங்களா?


நல்ல காலம் பொறக்குது  ,நல்ல காலம் பொறக்குது அதிமுக ஆட்சி கவிழப்போகுதுனு சொன்ன வாக்கு எல்லாம் என்ன ஆச்சு?===================
3  எந்த மொழிக்கும், காங்கிரஸ் எதிரானது அல்ல. தாய் மொழியை தவிர, வேறு எந்த மொழியையும், ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்-கே.எஸ்.அழகிரி:

 ஆமா, அதனாலதான் கனிமொழிக்கும் ஆதரவு

================


4  புதிய கல்வி கொள்கை பற்றி, நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகளை, நான் வரவேற்கிறேன். அவர் சொன்ன விஷயங்களை, சர்ச்சைக்குள்ளாக்கி விட்டனர். என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால், இப்படி சொல்லி இருக்கிறார். இதுபற்றி, நான் பேசினால் தான், பிரதமர், மோடிக்கு கேட்கும் என, பலர் சொன்னார்கள். சூர்யா பேசியது கூட, மோடிக்கு கேட்டு விட்டது!-ரஜினி: தளபதி படத்துல  ஹீரோ கேரக்டர் பேரு சூர்யா, அதனால தான் சூர்யாவுக்க்ஜு ஆதரவுனு யாரும் இன்னும் கிளபம்பலையா?>என்ன? இவரு சேம் சைடு கோல் போடுறாரு

===============

5   மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கும் சங்கங்கள் பிரிக்கப்படும்.-அமைச்சர், ஜெயகுமார்  

 அவங்களை எல்லாம் அதிமுக உறுப்பினர்கள் ஆக்கிடுங்க 

=============


6  'நீட்' தேர்வு குறித்து, சட்டசபையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளையும் பேச, அ.தி.மு.க., ஆட்சியில் தான், முழு சுதந்திரம் உள்ளது.-அமைச்சர், ஜெயகுமார் 

 அப்போ ஜெ இருந்தப்ப ஏன் அமைச்சர்கள் யாருமே வாய் திறக்கலை? அது அதிமுக ஆட்சி அல்லவா? 

==============

ஆள் பிடிக்கும் பணியில் முதல்வர், இ.பி.எஸ்., கட்சிக்கு உள்ளார்.- தினகரன்  


தமிழகத்தில் எல்லா தரப்புஆட்களுக்கும் பிடிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்னும் ஒரு அர்த்தம் வருதே?

=================

8  மதுரையில், அ.ம.மு.க., மாவட்ட செயலர்களிடையே, பணம் மற்றும் அரசு ஒப்பந்த பணி வழங்குவதற்காக, கட்சி மாற வேண்டும் என, கூறியுள்ளார்.- தினகரன்  

 மதுரை மட்டும் தானா? மற்ற ஊர்  நிலவரம் இவருக்கு இன்னும் வந்து சேரலை போல 


=====================9 அதன், ஆடியோ விரைவில் வெளியிடப்படும். - தினகரன் 

 ஆடியோ லாஞ்ச் க்ம்கு நல்ல நேரம் பார்க்கறார் போல 


-=--------------------

 
10 தற்போது, அ.ம.மு.க., கட்சியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், வேலுார் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.- தினகரன்  

 பதிவு பண்ண ஒரு நாள் போதுமே?ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்

================


11  கட்சியை பதிவு செய்து, சின்னம் கிடைத்த பின், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்.- தினகரன்  

போட்டி இடுவீங்க சரி , வெற்றி பெறுவீங்களா? டெபாசிட் வாங்குவீங்களா?
================

'12  சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள், நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்த போது மகிழ்ந்தேன்.-வைகோ

வை கோ ஆதரவு தெரிவிச்ட்டாரா? நல்ல ராசி தான் சூர்யாவுக்கு 

================

13  ஸ்டெர்லைட் மற்றும் தேச துரோக வழக்குகளின் பணிச்சுமையால், நடிகர் சூர்யாவை ஆதரித்து, உடனே அறிக்கை தரும் கடமையில் தவறி விட்டது, என் மனதை காயப்படுத்துகிறது.-வைகோ


பாராட்டுக்கு முந்து


=============14  சுயலாபம் கருதி, எந்த முடிவையும், இதுவரை, த.மா.கா., எடுத்ததில்லை. =வாசன், 

எந்த முடிவையும், இதுவரை, த.மா.கா., எடுத்ததில்லை என்பதே சரி

===============

15  சுய மரியாதையை விலை பேசியது கிடையாது; விலை போனதும் கிடையாது. -வாசன், 


மார்க்கெட் உள்ள சரக்கு தாங்க விலை போகும்


 யாரும் விலை பேச வர்லைனு சொல்ல வர்றாரு

=============


16  நாம், ஆளும் கட்சியாக மாற வேண்டும். அதற்கான காலம், நம் உழைப்பால் வரும். மத்தியிலும், மாநிலத்திலும் நாம் ஏற்படுத்திய கூட்டணி, ஆட்சியில் இருக்கிறது என்பதை கூறி, மார்தட்டி கொள்ளலாம். த.மா.கா.,வுக்கு நல்ல பெயர் மட்டும் போதாது. உழைப்பும் வேண்டும்; ஊருக்கு உழைக்க வேண்டும்.-வாசன், 


உழைக்கனுமா? அப்போ அரசியல்ல எப்படி பிழைக்கறது?

======================


 ஸ்”மார்ட்” ( டின்) ஒர்க். மார்ட்”டின்” கட்டிட்டாங்க போல


==============


18 தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் தி.மு.க.,வினர் மும்மொழிக் கொள்கையை விமர்சித்து வருகின்றனர். புளுகு மூட்டைகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது,'' என மதுரையில் பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா


அப்போ திமுக காரன் கூடாரம் கொண்டான்?

============== இது நிஜமா நடந்தா உங்களுக்கு ஒரு ஷொட்டு , நடக்கலைன்னா கொட்டு

=================


20 தி.மு.க.,வினர், தமிழை விற்கும் வியாபாரிகள்,'' =, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் 

அதிமுகவினர் தமிழ் நாட்ட்சையே அடகு வைக்கும் வியாபாரிகளா?

====================


0 comments: