Monday, July 08, 2019

புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டே ரெண்டாயிரம் ரூபாக்கு கிடைக்குதே?

தலைவரே!

350 மாடுகளே தயாராக இருங்கள்!
38 சிங்கங்கள் வருகிறது கொலை பசியோடு!
அப்டினு நம்மாளு ஸ்டேட்டஸ் போட்டிருக்காரே?
நீதிக்கதை ல ஒற்றுமையா இருக்கற 4 மாடுகள் ஒரு சிங்கத்தை துரத்தி அடிக்கும்னு படிச்சோம்.இங்க 350 மாடுகள்னா கிட்டத்தட்ட 90 மடங்கு
.சிங்கம் அசிங்கம் ஆகாம இருந்தா சரி


=================


2 வாட்சப் ஸ்டேட்டசா "எனக்குப்பிடித்தது"அன்பு என்று கொட்டு முரசே" னு வெச்சிருக்கேன்,எப்டி இருக்கு?


முன்னுக்குப்பின் முரணா இருக்கே?
எப்டி?
அன்பு னு சொல்லிட்டு கொட்டு னு சொல்லலாமா?நங் னு"தலைல கொட்டுனா வலிக்குமில்ல?அதெப்டி அன்பாகும்?================


3 பொண்ணை விட மாப்ளை"குண்டா இருக்காரு,அதான் யோசிக்கறேன்


சம்பந்தி,மேரேஜூக்கு அப்றம் மாப்ளை இளைச்சிவாரு
எப்டி?
என் பொண்ணு சமைச்சா நாங்களே சரியா சாப்பிட மாட்டோம்,மாப்ளை மட்டும் கட்டு கட்டவா போறாரு?


===============


4 தலைவரே!திராவிடம்னா என்ன?


அதுக்கு நிஜமான அர்த்தம் எனக்குத்தெரியாது,எங்களைப்பொறுத்தவரை மாட்டிக்காம திருடறது தான் திராவிடம்==============


5 பெருமாள் ,திருமால் இரண்டும் ஒரே"கடவுள்தானே?


ஆமா,ஆனா "திருமா"ல் வேணாம் ,பெருமாள்"போதும்.அவரு வேற பகுத்தறிவுக்கூட்டணில இருக்காரு,எதுக்கு"வம்பு?================


6 3 6 எவ்ளோங்க?


18,எதுக்குக்கேட்கறீங்க?
மூணாறு போக டிக்கெட் எவ்ளோ?னு கேட்டேன்==============


7 தரகரே!பொண்ணோட அம்மா அப்பாவுக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது,அப்டி ஒரு ஜாதகம் பாருங்க


ஏன்?
மேரேஜூக்குப்பிறகு பொண்ணு கோவிச்ட்டு பிறந்தவீடு போக வழி இல்லையே?
================


8 டியர்,நமக்குள்ள சண்டை வந்துடுச்சு மனசு சரி இல்லை,பிறந்த வீட்டுக்குப்போய் 2 நாள் இருந்துட்டு வர்றேன்


சரி,வா ,ஜிஹெச் ல டிராப் பண்றேன்
எதுக்கு?
அங்கே தானே நீ பிறந்தே?===============


9 தலைவரே!திருமால் கூட ஒப்பிட்டு உங்களைப்பத்தி உங்க கட்சிப்பத்திரிக்கைல கட்டுரை வந்திருக்கே?பிடிச்சிருக்கா?


மால்−னா மாமூல் ,பணம் .பிடிக்காம இருக்குமா?===============

10 டாக்டர்,அடிக்கடி தேநீர் அருந்துபவர்கள் Tea"வர"வாதிகள்.!னு சொல்றாங்களே?அது உண்மையா?


இல்ல,அது கெடுதல் ,டீ"சாப" வாதிகள்னு வேணா சொல்லலாம்
===============


11 எனக்கு ஒரு "nick name" வைக்கணும்ன்னா என்ன பெயர் வைப்பீங்க...??


நிக்கர்===============


12 கணவர்க்கு பிறந்தநாள்..எப்பவுமே என்ன நினைச்சிட்டு இருக்க மாதிரி கிப்ட் வாங்கி குடுக்கனும்..என்ன வாங்கலாம்?
.பி.கு..500 ரூபாய்க்கு மட்டும்
500 ருபாக்கு"கிப்ட் வாங்கித்தந்தா அவரு உங்களை நினைக்க மாட்டாரு,நம்ம ஒர்த் 500 ருபாதானா?னு அதையே நினச்ட்டு இருப்பாரு


=================


13 சின்ன கொழுந்தியா கன்னத்தை கிள்ளிட்டேன் 🙈 அத பெரிய கொழுந்தியா பாத்துட்டு 😏பொறாமைப்படறாப்டி

நல்ல வேளை ,வீட்டம்மா பாக்கலை,பாத்திருந்தா கிள்ளிக்குடுத்த கைக்கு அள்ளிக்குடுத்திருப்பாப்டி


===================


14 மேடம் ,உங்க"நிக் நேம் என்ன?

நிக்
வாட்?
என் முழுப்பேரு"நிக்கி கல் ராணி,செல்ல சுருக் நிக்


==================


15 டாக்டர்,அரைமணிநேரத்துக்கு ஒருதடவ அரலிட்டர் தண்ணிகுடிச்சா அனல்காத்தும் நம்மேல் படும்போது பனிக்காத்தா மாறிடும்...அப்டிங்கறாங்களே?அது உண்மையா?

இருக்கலாம்,ஆனா கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை பாத்ரூம் போக வேண்டி இருக்கும்,வீட்ல இருந்தா,ரயில்ல போறப்ப பிரச்சனை இல்லை,பஸ்ல போறப்ப?


================


16 இந்த வயசுலயே சரியான மரமண்டையா இருக்கீங்களே?சின்ன வயசில எப்படி இருந்திருப்பீங்க?

செடி மண்டையா


===================


17 நாம செத்தா கொறைஞ்சது 4 பேராவது வருத்தப்படுற மாதிரி வாழணும் 😒

அதுக்காகத்தான் சிலர் 3 சம்சாரம் ,4 சம்சாரம் கட்டிக்கறாங்க போல


================


18 வாசல்ல உக்கார்ந்து ஊர்கதை பேச பிடிக்காது

வெரிகுட்
வீட்டுக்குள்ள கூட்டிட்டுப்போய் பேசுவேன்,வாசல்ல பொறுக்கிப்பசங்க நடமாட்டம் இருக்கும்

==============16 டாக்டர்,டெய்லி முகத்துக்கு தேன் தடவி படுத்தா சிவப்பாகிடுமா?

ஆமா,தேன் குடிக்க வரும் கட்டெறும்பு கடிக்க தடிச்சு சிவப்பாகும்=================


17 தலைவரே!ரஜினியோ,கமலோ உங்க கட்சிக்கு ஆதரவு தந்தா ஏத்துக்குவீங்களா?

நிச்சயமா
ஆனா அவங்க"தனியா களம் கண்டா ஏன் எரிச்சல் படறீங்க?
நாங்க மட்டும்தான் பதவிக்கு வரனும் ,திருடனும்,மத்தவங்க வேடிக்கை மட்டும் பார்க்கனும்


==================


18 தலைவரே!நம்ம கட்சித்தொண்டர்கள் எல்லாருக்கும் பிபி ,கொலஸ்ட்ரால் இஷ்டத்துக்கு ஏறிக்கிடக்கே,எதனால?

நாங்க ரோஷக்காரங்க ,உப்பு போட்டு சாப்பிடறோம்னு வெட்டி பந்தாவா சாப்ட்டதால அப்டி ஆகிடுச்சு


================


19 Dr.சிகரெட்ட பழக்கத்த விட்ருனு சொல்ல ஒரு தோழி இல்லயே.எப்டி விடறது?

சரக்கு,கஞ்சா,அபின்,பான் பராக்்னு 1008 கெட்ட பழக்கம் இருக்கும்,ஒவ்வொண்ணையும் விட தலா ஒரு தோழி வேணும்னா எங்கே போறது?


=================


20 3500 ருபா தையல் கூலி குடுத்து இந்த ஸ்பெஷல் ஜாக்கெட்"தெச்சுக்கிட்டேன்,எப்டி இருக்கு

அருமை,ஆனா"புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டே ரெண்டாயிரம் ரூபாக்கு கிடைக்குதே?இது காஸ்ட்லியா தெரில?=================

0 comments: