Saturday, July 06, 2019

புளிய மரத்தில் பேய் இருக்குமா?

1  தலைவரே!ஜிலேபி,கேசரி,லட்டு இதெல்லாம் சாப்பிடமாட்டீங்களா?ஏன்?உங்களுக்கு"சுகரும் இருக்கா?


அது வேற கத.காவி கலர் ல எது"இருந்தாலும் சாப்பிட"மாட்டேன்=============


2 நாங்கள் ஒருவேளை" ஆட்சிக்கு வந்தால் லாஸ்லியா என்ற அமங்கலமான பெயரை ப்ராபிட் லியா,/ கெய்ன் லியா என்று மாற்றுவோம் என உறுதி கூறுகிறோம்


============


3 சார் ,லாஸ்லியா தற்கொலைப்படை ஆரம்பிச்சதுக்காக உங்களைக்கைது பண்றோம்


அய்யய்யோ,ஏன்?
லாஸ்லியா வை தற்கொலைக்கு தூண்டறதுனுதானே அதுக்கு அர்த்தம்?
விளங்கிடும்===============


4 குருவே! புளிய மரத்தில் பேய் இருக்குமா?


புளிய மரத்துல புளி தான் இருக்கும்,அப்டி பேய் இருந்திருந்தா ஊர்ல ஒரு"பய ரசம் வைக்க முடியாது===============


5 கொஞ்சமா குடினு ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் அனுப்புறா என் ஆளு


அடடே!அப்றம் என்ன சார் செஞ்சிங்க?
ஒரு full பாட்டிலை பத்து மினி ஆப்"குவாட்டரா பிரிச்சு"கொஞ்சம்"கொஞ்சமா அடிச்ட்டேன்


=================


6 மேடம்,நீங்க ஜெயிச்சா நீங்க நடத்தற மது ஆலைகளை மூடுவோம்னீங்களே?எப்போ அதை செய்வீங்க?


மது விலக்கு வந்த பின் மூடுவோம்
மது"விலக்கு"தமிழகத்தில் எப்ப நடைமுறைக்கு வரும்?
கழக ஆட்சி மலரும்போது...
விளங்கிடும்===============

7 நீங்க முதன்முதலா நடிக்கற படத்துக்கு "பிறவி" னு டைட்டில்"வெச்சிருக்கீங்களே,அது ஏன்?


நடிப்பே நல்லா வர்லைன்னாக்கூட "பிறவி" நடிகன் டா அவன் னு பேரு எடுக்கலாமே?==============


8 சார் ,தமிழ் ல வர்ற ஒரு"நெம்பர் கன்னடத்துல வர்ற நெம்பரை விட 3 கம்மியா இருக்குமா?


என்னய்யா மடத்தனமா உளர்றே?
96 தமிழ்ப்படத்தை கன்னடத்துல ரீமேக்கறப்போ 99னு டைட்டில்"வெச்சிருக்காங்களே?===========


9 குருவே! கேரள பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பது ,தமிழகப்பெண்கள் தினமும் பேன் பார்ப்பது 'தலையாய' கடமை யா பண்றாங்களாமே? நிஜமா?


தலை "ஆய்ந்த" கடமை அது===============


10 ஹலோ,மேடம் ,திருமண தகவல் மையம் ல இருந்து பேசறோம்


சார் ,எனக்கு போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு
தெரியும் மேடம்,உங்க கணவர் இன்னொரு கல்யாணத்துக்கு புக் பண்ணி இருக்கார்,உங்களுக்குத்தெரியப்படுத்தனும் இல்ல?இது தான் திருமண தகவல் மையம்


=================


11 சார்,வர வர ரெட்டை அர்த்த கீச்சாளர்கள் ,பேஸ்புக்காளர்கள் சந்தில் அதிகமாகி கொண்டு இருக்கின்றனர். இதுக்கு என்ன பண்ண?


பாலோயர்ஸ் பாதி பேரு அன் பாலோ பண்ணனும்,பாலோயர்ஸ் பாதியா குறைஞ்சா கேயாஸ் தியரிப்படி டபுள்மீனிங்க் சிங்கிள் மீனிங்க்கா மாறிடும்=================


12 அமைச்சரே! அரசாங்க கஜானா வில் ஒரு வருச லாபக்கணக்கு பார்க்கச்சொன்னால் நட்ட கணக்கு பாக்கனும் முதல்ல னு சொல்றீங்களே?புரியல


மன்னா!ஒரு அரசு அதன் ஆட்சிக்காலத்தில் எத்தனை மரக்கன்றுகள் நட்டது என்ற மரம் "நட்ட கணக்கு" தான் அதன் லாபக்கணக்கு===============


13 நமக்கு புடிச்சவங்க நமக்கு புடிக்காதவங்க கூட பேசினா நாம என்ன செய்யனும் ?


நமக்கு பிடிச்சவங்க மனசுக்குப்பிடிக்காதவங்க கூட நாமளும் கடலை போடனும் ,தானிக்கு தீனி,கடலைக்கு கடலை,சுடலைக்கு சுடலை==============


14 ஆண்களில் ராமன்"கிடையாது,ங்கற வாதத்தை நான்"ஏத்துக்க மாட்டேன்


ஏன்?
எத்தனையோ ஆண்கள் இப்பவும் தான் தாலி கட்ன சம்சாரத்தை சந்தேகப்பட்டுட்டுதான் இருக்காங்க,அவங்க எல்லாம் ராமன் கேட்டகிரில தானே வருவாங்க================


15 டிவிட்டர் வந்ததால புத்தக அறிவு கொஞ்சம் வளர்ந்து இருக்கு


எப்டி?
முகநூல் புத்தக (Facebook) த்துல யார் யார் இருக்காங்க ,என்ன மாதிரி போஸ்ட் போடறாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்,லிங்க் ஷேர் பண்றாங்க================

16 டாக்டர் ,பாட்டில் மூடியைத்திறக்கறப்ப கால்ல அடிபட்டுடுச்சு


யோவ்,அதெப்டி?கைல தானே திறப்பாங்க?எப்டி கால்ல அடிபடும்
அதென்னமோ னாங்க ,உதைச்சேன்,வீங்கிடுச்சு
===============


17 உதயநிதிக்கு என்ன தகுதி இருக்குனு இளைஞர்"அணித்தலைவர் பதவி கிடைச்சுது?னு"மடத்தனமா"கேள்வி எழுப்பறாங்க சிலர்,மன்னர் ஆட்சி முறை தெரியாத மடையர்கள்

தாத்தா
அப்பா
பேரன்
மகன்
கொள்ளுப்பேரன்
இது வழக்கம் தானே?என்ன தவறு,கண்டீர்?
கஷ்டப்பட்டு திருடுன"காசை,கண்டவனுக்குத்தரமுடியுமா?===============

18 ஊதா மூங்கில் =I like only aunty or girls ன்னு ஒரு ஐடி பாலோவ் பண்ணுது.
நம்மளை என்னவா நினைச்சி இருப்பான் ?
சாதா மூங்கில் = ஒவ்வொரு பெண் ஐடி யா தேடீட்டு இருந்தா லேட் ஆகும் ,உங்களை பாலோ பண்ணிட்டா 99% லேடீஸ் ஐடி"கள் மென்சன் ல கவர்"ஆகிடும்னு"நினச்சிருப்பாரோ?=============


19 கைதி (சாமியார்) = யுவர்"ஆனர்",விவசாயம்"பண்ணனும், 42 நாள் பரோல்"வேணும்

ஜட்ஜ் = யோவ் ,நீ ஜெயிலுக்கு"வந்ததே ரேப்"பண்ணுனதாலதானே?இப்போ எதுக்கு விவசாயம் பண்ணனும்கறே?
கைதி = எங்க ஆசிரமத்துல விவசாயம் னா ரேப் தானுங் ,ஒரு கோட் வோர்டு


=============

20 தலைவரே!எந்தப்பிரச்சனையும் இல்லையே?எதுக்கு" வெளிநடப்புப்பண்றீங்க?
ஏதோ புறநானூறு,அக நானூறு,திருக்குறள் எல்லாம் மேற்கோள் காட்டி அர்த்தம் தெரியுமா?னு கேட்கறாங்களாம்,அதுக்கு படிச்சிருக்கனும்.படிச்சிருந்தா நாங்க ஏன் இந்த கேவலமான அரசியல் திருட்டுத்தொழிலுக்கு வர்றோம்?=================

0 comments: