Wednesday, July 10, 2019

கேட்கறவன் கேனயனா இருந்தா பிகில் டீசர் ரிலீஸ்லயே 100 கோடி வசூல்னு டஹில் விடுவானாம்

1  திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் உழைப்பவர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன்: தங்க. தமிழ்செல்வன்


# சுவர் ஏறி குதிச்சு திருடற திருடன் கூட தன்னை உழைப்பாளினு தான் சொல்லிக்கறான் ,ஒரு பக்கம் ஒழுங்கா தங்க முடியாத "செல்"வன்=============


2 கோவில்களில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் இடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது ~ கர்நாடக அரசு # அப்போ உண்டியலை உடைச்சு எடுத்துக்கலாமா?இப்டி எல்லாம்"கண்டிஷன்"போடறதாலதான் ஐம்பொன் சிலையையே ஆட்டையைப்போட்டுடறாங்க


============


3 அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும்

- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
# மடத்தனமான திட்டம்,இது சமூக விரோதிகளுக்கு சாதகம்,ஏழை மக்களைக்கேடயமாக்கி அவங்க பலன் பெறுவாங்க===============


4 எம்.பி. உட்பட தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை: மோடி உறுதி # மனைவியைக்கொலை செய்த சசிதரூர்,

2 ஜி ஊழல் குற்றவாளிகள் ஆ ராசா ,கனிமொழி
,ஜாமீன் வாங்குவதில் கின்னஸ் சாதனை படைக்கப்போகும் பணப்பதுக்கல் குற்றவாளிகள் ப.சி,கார்த்தி இவங்க எப்போ கைதாவாங்க?==============

5 காமராஜரை போன்று எளிமையானவர் எடப்பாடி - செல்லூர் ராஜூ #
ஒரு நாளுக்கு 2 பக்கெட் தண்ணி போதும் னு ஒரு பேச்சுக்கு சொன்னாரு,அதை சீரியஸா எடுத்துக்கிட்டாரு போல,காமராஜர் என்னைக்கு ஒரு கிரிமினல் கால்ல விழுந்தாரு?


===============


6 நாங்கள் ஜாதகத்தை நம்புவதால் தான் நன்றாக இருக்கிறோம், நீங்கள் ஜாதகத்தை நம்பாததால் தான் இப்படி இருக்கிறீர்கள் - முதலமைச்சர் பழனிசாமி
யாரும் நேர்மையை ,ஜனங்களை நம்பலை ,ஒரு க்ரூப் ஜாதகத்தை நம்புது,எதிர் க்ரூப் பணத்தை நம்புது


==============


7 தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டுக்காக

தியாகங்கள் பண்ண வேண்டும் - மோடி
# ஜிஎஸ்டி வரி கட்டுவதில் இந்திய அளவில் தமிழகம் டாப் 5 க்குள் வருது,அதை எல்லாம் ஞாபகம் வெச்சுட்டு பேசுனா நல்லது=========


8 காங்கிரஸ் தலைவர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி

# பிரியங்கா காந்தி ரெடி ஆகியாச்சா?ஓவர் ,ஓவர்.
கட்சில இருக்கறவங்களே தேர்ந்தெடுங்க னு சொல்லிட்டு அங்கே சுத்தி இங்கே சுத்தி எங்கே வருவாங்க?னு தெரியாதா?===============


9 “கமல்ஹாசனுக்கு தான் என்கின்ற திமிர் அதிகமாகிக் கொண்டிருக்கிறது” - ராம சுப்ரமணியன் # படைப்பாளிகளிடமும் ,திறமைசாலிகளிடமும் திமிர் இருப்பது இயற்கை,குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு அது தெரியாது


==============


10 வங்கிக் கணக்குடனும் மொபைல் எண்ணுடனும் ஆதாரை இணைக்க அவசரச் சட்டம் ஏன்? - வேல்முருகன் கேள்வி
# கறுப்புப்பணம் வெச்சிருக்கற திருடன்தான்"அதுக்கு"பயப்படனும் ,நீங்க ஏன்"பதறுகிறீர்கள்?


===============


11 'சூரியன் உதிப்பதை 40 நிமிடம் நிறுத்தினேன்− நித்யானந்தா
# ஏய்யா,கேமரா ஓடறதையே உங்களால நிறுத்த முடியல,ரஞ்சிதா வீடியோ வர்றதை நிறுத்த முடியல,கோர்ட்ல சம்மன் வந்ததை நிறுத்தமுடியலை,சும்மா அடிச்சு விடறது ,கேட்கறவன் கேனயனா இருந்தா பிகில் டீசர் ரிலீஸ்லயே 100 கோடி வசூல்னு டஹில் விடுவானாம்


=============

12 தலைவி தமிழச்சி தங்க பாண்டியன் நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் தூங்குகிற படத்தை வைத்து 200மீம்ஸ் வந்து விட்டது.எதில் என்ன தவறு?தண்டமா வேடிக்கை பாத்துட்டு இருந்த மத்த 37 எம் பி ங்க என்னத்தை சாதிச்சாங்க?இவங்க என்ன சாதிக்கனும்னு எதிர்பார்க்கறீங்க?


==================


13 இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - உதயநிதி
!# ஏன்?வீட்ல அப்பா ,மகன் 2 பேரும் பேசிக்கறதில்லையா?சண்டையா?ஒரு வேளை உங்களை சமாதானப்படுத்தத்தான் பதவியா?


==============


14 ஏழை மக்கள் தினமும் பெட்ரோல், டீசல் பயன்படுத்துவது இல்லை என்பதால், விலை உயர்வு அவர்களை பாதிக்காது - அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன்
# மங்குனி அமைச்சரே! பெட்ரோல் ,டீசல் விலை ஏறுனா அத்தியாவசியப்பொருள் விலை ஏறும்னு தெரியாரா?


=================


15 மகராஷ்டிராவில் அணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் - தனாஜி சாவந்த் நீர்வளத்துறை அமைச்சர் #

நண்டுகளை வேட்டையாட,நாலு கோடி செலவு னு கணக்கு எழுதாம,விட்டதே"பெருசு


==============
16 டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம்
வக்கீல் மகன் வக்கீல் ஆகலாம்
ஒரு அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆகக் கூடாதா ?−தமிழன்_பிரசன்னா # நான் இதை ஆதரிக்கிறேன்,ஒரு போலீஸ்காரரு தன் மகன் போலீஸ் ஆகனும்னு நினைப்பாரு,ஒரு திருடனோட மகன் தன் மகனும் சாமார்த்தியமா திருடி சம்பாதிக்கனும்னுதானே நினைப்பாரு?================


17 மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோவுக்கு தண்டனை : தேசத்துரோக சட்டப் பிரிவை ரத்து செய்யவேண்டும் −திருமா
இப்டி ரத்து பண்ணனும்னு சொல்றதே தேச துரோகம்தானாம் ,நமக்கு வசதி எப்டி?


==================


18 ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் மன்மோகன்சிங்
யப்பிரதமர் ஒருவர் பதவிக்காலம் முடிந்த பின் இப்படி இறங்கி வருவது இதுவே முதல்"முறை


=================

19 சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியிலிருக்கும் வீடியோ வெளியானது # காவல் துறை எப்போ அவரைக்கைது பண்ணுச்சு , ஏன் இத்தனை நாளா வெளில சொல்ல்லை? இந்த விபரம் எல்லாம் வருமா? வராதா?====================


20  தொல்_திருமாவளவன்_MP அவர்களுக்கு அரசியல் நேர்மைக்கான "காயிதே மில்லத் விருது" காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அறிவிப்பு.# நேர்மைக்கு விருதா? நேர்மையா இருக்கறவங்க ஏன் திருடன் கூட கூட்டு சேரனும்?


==================


0 comments: