Wednesday, July 03, 2019

”தியாக” ராஜன்

1   மேலிட தலைவர்களை, நான் எதிர்த்து பேசவில்லை. இப்போது, எதற்காக நீக்கினர் என்றே தெரியவில்லை.-கராத்தேதியாகராஜன்: 

எதற்காக நீக்கினீங்க?னு ஒரு சவுண்ட் விட்டுப்பாருங்க


 கூட்டணிக்கட்சி திமுக  வை விமர்சிச்சா அவங்களால தாங்கிக்க முடியாது


”தியாக” ராஜன்

 நீங்களும் உங்களுக்குனு ஒரு கோஷ்டியை உருவாக்குங்க, மீண்டும் சேர்த்துக்குவாங்க 

==================


2 : ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைப்படி தான், முடிவு எடுக்க முடியும்-பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான்

அவங்களைக்கேட்டா அமைச்சர் தான் முடிவெடுக்கனும்பாங்க, 
இப்படியே மாறி மாறி விளையாடுங்க 

==============

3: ஹிந்தி எதிர்ப்பு எனக்கூறும், தி.மு.க.,வினர் தான், அவர்கள் நடத்தி வரும், 45 பள்ளிகளில்,ஹிந்தியை கற்றுக் கொடுத்து,தமிழில் பேசினால் அபராதம்போடுகின்றனர்-  எச்.ராஜா

அப்போ 45 பள்ளிகளுக்கும் சீல் வைங்க 


திமுக மேல்மட்டத்தலைவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஹிந்தி பேச எழுத தெரியும் , இது கட்சில இருக்கற அடிமட்டத்தொண்டர்களுக்குத்தெரியுமா?

===============


'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டம், இந்தியாவுக்கு பொருந்தாது. -ஆனந்த் சர்மா 


வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் பாலிசி  ஒத்து வரார்தா?

===============


5  ஓட்டுகளுக்காக, பிரித்தாளும் அரசியலில், பா.ஜ., ஈடுபடக் கூடாது. அது, ஆபத்தான போக்கு.-ஆனந்த் சர்மா 

 ஆளும் கட்சியா? பிரித்தாளும் கட்சியா?ங்கறாரா?

================


6   நாட்டின் பன்முகத் தன்மைக்கு மரியாதை அளிப்பதுடன், அதை முழு மனதுடன், பா.ஜ., ஏற்க வேண்டும். -ஆனந்த் சர்மா 

மாநில கட்சிகளின் செல்வாக்குக்கு உலை வைக்கப்பார்க்கறாங்களா?

================


7  நாட்டின் ஒற்றுமையிலும், பாதுகாப்பிலும், எந்த சமரசமும்இருக்கக் கூடாது.-ஆனந்த் சர்மா 

 பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துட்டுதானே இருக்காங்க? 

 “கூட்டு” நல்;லாருந்தா சமரசமும் நல்லாருக்கும்

=============


8   நாட்டுக்காக இரு பிரதமர்களை இழந்துள்ள காங்கிரசுக்கு, அது நன்றாக தெரியும்.-ஆனந்த் சர்மா 

நீங்க மட்டும் இறந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா?

=============

9  அ.ம.மு.க.,வில் இருந்தபடியே, குழப்பத்தை உருவாக்குங்கள்' என, தங்க தமிழ்செல்வனுக்கு யாரோ, 'அசைன்மென்ட்' கொடுத்ததால் தான், அவர் இவ்வளவு நாள், இப்படிச் செயல்படுகிறார்--அ.ம.மு.க.,  மாரியப்பன் கென்னடி '

அதென்ன யாரோ? திமுகனு நேரடியா சொல்லுங்க

==============
10  .கொள்கை இல்லாத கட்சி என்று சொல்லும் தங்க தமிழ்செல்வன, எப்படி இரு ஆண்டுகளாக, அ.ம.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலராக இருந்தார்? =

அ.ம.மு.க.,  மாரியப்பன் கென்னடி '

ஜனங்க மூளை இல்லாதவங்க, நாம எது சொன்னாலும் நம்பிடுவாங்கனு நம்பிக்கைதான்

 எல்லாக்கொள்கையையும் மக்களிடையே பரப்பிட்டாரே? அதனால கொள்கை காலி ஆகிடுச்சோ?

=================


11 தலைமையை விமர்சித்த தங்க தமிழ்செல்வன வருத்தம் தெரிவிக்க வேண்டும்.-


அ.ம.மு.க.,  மாரியப்பன் கென்னடி '


இப்போ அவரு திமுக  தலைமையை ஏத்துக்கிட்டாரு, சாரி சொல்ல மாட்டாரு, சாரி


==============


'12  , தமிழகத்தில் உள்ள, ஆறு, குளங்களை துார் வாராதது, அனைவரும் செய்த தவறு=இல.கணேசன் 

அப்போ மத்திய அரசு மேலயும் தவறு இருக்கு?

============


13  . குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். =இல.கணேசன் 

 குறிப்பா எரிகளின் மேல் காலேஜ் எல்லாம் கட்டி வெச்சிருக்காங்க , அதை இடிக்கனும்

============


14  அதை, மாநில அரசு செய்ய வேண்டும்.தி.மு.க., விரும்பினால், அவர்களுக்கு வேண்டிய அரசு நடக்கும் கர்நாடகத்துடன் பேசி, காவிரியில் தண்ணீரை திறந்துவிடக் கூறலாம். -இல.கணேசன் 

அப்போ பாஜக அரசு வேண்டாத அரசா? மத்திய அரசுன்னா எல்லாருக்கும் பொதுதானே?


============


15  தண்ணீர் உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளை வைத்து, அரசியல் லாபம் அடையக் கூடாது.-இல.கணேசன் 

அரசியல் லாபம்னாலே பொது பிரச்சனைகளை வைத்து அடைவதுதான்

==============



16   காவிரி மேலாண்மை ஆணையம், தபால் அலுவலகம் போல் செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. -ஸ்டாலின்

 காலைல 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடிடறாங்களா?

==============

17  காவிரி மேலாண்மை ஆணையம் போட்ட முதல் உத்தரவையே, கர்நாடக அரசு அவமதித்துள்ளது.இதை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய, பா.ஜ., அரசிடம் வலியுறுத்த துணிச்சல் இல்லாமலும்,அ.தி.மு.க., அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.-ஸ்டாலின்

 உங்க கூட்டணிக்கட்சி தானே கர்நாடகா காங் அரசு? நீங்க தட்டி குட்டி கேட்கலாமே?

=========


18   காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, உடனடியாக, நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.-ஸ்டாலின்

 பிரச்சனைகளை தண்ணி பட்ட பாடா சமாளிக்கற ஆளா இருக்கனும்
================


19   கல்வி அறிவில்லாதவர்கள் மத்தியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை' எனக் கூறுவது, தவறானது. -ஸ்மிருதி இரானி 

 சிறுமிகள் [பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதற்கு வேறு என்ன காரனம்?

============


20  மெத்த படித்தவர்களும், பாரபட்சம்காட்டுகின்றனர் என்பது தான் உண்மை-ஸ்மிருதி இரானி 

 தண்டனைகள்  கடுமையாக்கப்பட்டால் பயம் வரும் , ஒரு ரேப் கேஸ்க்கு தீர்ப்பு வர 10 வருசம் ஆகிடுது, அதுக்குள்ள குற்றவாளி செத்தே போய்டுவான்

====================

0 comments: