Monday, July 08, 2019

பார்ட் டைம் ஜாப்பா பிக்பாஸ் பண்றாரா? பாஸ்?




1  : தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், அவர்களது ஆட்சி காலத்தில் எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. -தமிழிசை

பாஜக் வுது தொல்லை நோக்கு திட்டமா?

================

2   மழை நீர் சேமிப்பு, நதி நீர் பிரச்னை குறித்து பேசுவதற்கு,  திமுக காரர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.-தமிழிசை

அட்லீஸ்ட் வெளிநடப்பு பண்ற உரிமையாவது உண்டுங்களா?

=============

3 ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்து வருவதை வரவேற்கிறோம்.- ஸ்டாலின்: 

ஆனா வேலூர்ல இருந்து மட்டும் சென்னைக்கு நீர் போகக்கூடாதுன்னு துரை முருகன் சொன்னாரே?

=============


 4  ஆனால், இது, தற்காலிக திட்டம். குடிநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.- ஸ்டாலின்: 

 அது அரசாங்கத்தின் கையில் மட்டும் இல்லை, ஒவ்வொரு தனிமனிதனும் மழை நீர் சேகரிப்பு , மரக்கன்று நடுதலில் விழிப்புணர்வு கொள்ளனும்

=============

5   நாங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம். =அமைச்சர், ஜெயகுமார்: 


பாஜக வுக்கு முட்டுக்கொடுக்கறதைப்பற்றி சொல்றாரா?

=============

6  பொங்கலுக்கு, 1,000 ரூபாய் தருவதாக கூறவில்லை; ஆனால், கொடுத்தோம். தற்போது, 2,000 ரூபாய் கொடுப்பதாகக் கூறியுள்ளோம்; அதையும் கொடுப்போம். 2021லும், அ.தி.மு.க., ஆட்சி தான் -அமைச்சர், ஜெயகுமார்: 


 ஓட்டுக்குப்பணம் தர்றோம் , ஓட்டு போட்டுட்டுங்கனு மறைமுகமா சொல்ற மாதிரி இருக்கே?

===============

7   நாட்டை விட்டு தப்பியோடிய பல்வேறு பொருளாதார குற்றவாளிகளை
, மீண்டும் நாடு திரும்பச் செய்வதற்கான முயற்சிகளில், அதிகாரிகள்
 தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.-வெங்கய்யா நாயுடு பேச்சு:

 லோன் கொடுக்கும்போதே சரியான டாக்குமென்ட்ஸ்
 வாங்கிட்டு தந்திருக்கனும். லஞ்சம் வாங்கிட்டு லோன் தந்தா இப்டித்தான்

============

8   மக்களிடமிருந்து
 கொள்ளையடித்து உருவாகும் கருப்பு பணத்தை வைத்துக் கொள்ள,
 நாடுகள் எப்படி அனுமதிக்கின்றன என்பது, வியப்பாக
 உள்ளது.'-வெங்கய்யா நாயுடு பேச்சு:

நேரடியா ஸ்விஸ் பேங்க் கிடமே கண்டனம் தெரிவிக்கலாமே?

============
9   தமிழகத்தில், தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
 அதற்காக, மழை வேண்டி யாகம் நடத்த சொல்லுவது, மக்களை
 திசை திருப்பும் செயல்=பாலகிருஷ்ணன்

யாகம் செஞ்சாதான் மழை யோகம்னு ஜனங்களை நம்ப வைக்கறாங்க 

=============


10  . இது, அறிவியலுக்கு முரணானது.
 மழை இல்லாததால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதாக அரசு கூறுவது,
 உண்மைக்கு புறம்பானது. மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரை 
செறிவூட்டும் தொலை நோக்குத் திட்டங்கள் எதுவும், அரசிடம் இல்லை. 
கிடைக்கும் தண்ணீரை கடலில் விட்டு, 'மழை பெய்யவில்லை'
 எனக் கூறுவது தவறு=பாலகிருஷ்ணன்

 கடல்லயே இல்லையாம்-னு சொல்லாம இருந்தா சரி

================
11 நடிகர் கமல், ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வர முடியாது-
அமைச்சர், ராஜு : 

தண்ணீர்ப்பிரச்சனைக்கு தீர்வு கேட்டா இவர் ஏன் பிக்பாஸ்  
பிரச்சனைக்கு தீர்வு சொல்றாரு?

================
12 கமல் அவரது துறையில் மட்டும் கவனம் செலுத்தினால், சிறப்பாக 
இருக்கும். அவரால், முழுநேர அரசியல்வாதியாக முடியாது-அமைச்சர், ராஜு : 


அதனால தான் பார்ட் டைம் ஜாப்பா பிக்பாஸ் பண்றாரா? பாஸ்?


============
13  அரசியலுக்கு வந்த நேரம் சரியில்லை.
 வயதான காலத்தில் வந்திருக்கிறார். அரசியல் என்பது, 
சாதாரணமானது அல்ல=அமைச்சர், ராஜு :

 கமல் அரசியலுக்கு வந்ததால் திமுக அதிமுக கட்சிகளுக்கு
 தான் நேரம் சரி இல்லைங்கறாங்களே? வாக்கு பிரியுதே? 

=========
14த.மா.கா., தனித்தன்மையோடு, ஐந்தாண்டுகளாக வளர்ந்து வருகிறது.-
   வாசன்

வாக்கு வங்கி % கணக்கு சொல்லுங்க 

============


15    தமிழகத்தில், மரியாதைக்குரிய கட்சிகளில், எங்கள் கட்சி 
முதலிடத்தில் இருக்கிறது. இது, வளரும், தொடரும், சிறக்கும்.-   வாசன்

திரு தமாக அப்டினு சொல்றாங்களா?  திரு திருனு தேர்தல்
 டைம்ல விழிக்கும் கட்சி ஆச்சே?

==============

16    வரும் தேர்தலில், எதிர்பார்ப்பதற்கு மேல் வெற்றி பெறும்-   வாசன் 

 எவ்ளோ எதிர்பார்க்கறீங்க?

எதிர்பார்க்கவே இல்லை

அப்போ எவ்ளோ வந்தாலும் அது எதிர்பார்ப்புக்கு மேலே தானே? 

=======

.17  அப்பா, அம்மாவை நடுத்தெருவில் நிற்க வைத்த, நடிகர் நாசர்
 தலைமையில் இயங்கும் நடிகர் சங்கத்தில், தொடர்ந்து முறைகேடு
 நடக்கிறது. இவர்கள், புதிதாக என்ன செய்தனர்? - நடிகர் ராதாரவி 

 அதான் நீங்களே சொல்லீட்டீங்களே? ஊழல் தான் செய்தனர்

=======

18  கட்டடத்தை, யார் வந்தாலும் கட்டுவர். ஆனால், நடந்த முறைகேடுகளுக்கு
 இதுவரை, விளக்கம் எதுவும் இல்லையே! - நடிகர் ராதாரவி 

 ஊழல் செஞ்சதுக்கு இடம் சுட்டிப்பொருள் விளக்கனுமா? 


============


19  நடிகர் சங்கத்தில் இதுவரை 
நடந்த ஊழலில், விஷாலுக்கு மட்டுமல்ல, நாசருக்கும் பங்கிருக்கிறது.- நடிகர் ராதாரவி 

 அப்போ அவங்க  2 பேரும் பங்காளிங்க>
=============
20  , சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து, 
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தான் வகிக்கும்
 பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில்
, சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது
, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பெண்மைக்கே உரிய 
உயர்ந்த தயையும், தாயுள்ளமும் சிறிதுமின்றி, கிரண்பேடி 
தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு, கடும் கண்டனம்
 தெரிவிக்கிறேன்-பா.வளர்மதி அறிக்கை: 


அவரோட கருத்தைப்பதிவு செய்ய்றது ஒரு குற்றமா? அ;ப்போ கருத்து 
சுதந்திரம் எதுக்கு இருக்கு ?

0 comments: