Saturday, July 13, 2019

இதுக்கெல்லாம் தமிழகம் தான் முன்னோடி மாநிலம்னு நினைச்சா பெருமையா இருக்கு

1 மதுவிலக்கு கொள்கையில், அரசு உறுதியாக உள்ளது. =  தங்கமணி:


அதாவது பூரண மது விலக்கு இந்த ஜென்மத்துல கிடையாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது?

================2  மதுக் கடைகளை படிப்படியாகக்குறைப்போம். இதைப் பற்றி, யாரும் கவலைப்பட வேண்டாம்.-தங்கமணி:

டாஸ்மாக் கடைல் இருக்கற படிகளை ஒண்ணு ஒண்ணா ஸ்டெப் பை ஸ்டெப் பா எடுப்பாங்களோ?

 யாரு கவலைப்படறாங்க? எதிர்க்கற ஆளுக்கும் ராஜ்யசபா சீட் கொடுத்து வாய் அடைச்ட்டோம்

===============


3  உலகிலேயே அதிக இளைஞர்கள் உள்ள நாடாக, இந்தியா உள்ளது. அதனால், பழம்பெரும் கட்சியான, காங்கிரசுக்கு, இளைஞர் ஒருவர் தலைமை ஏற்பது தான் சிறந்தது-அமரீந்தர் சிங்: 

 75 வயசான  நீங்களே சொல்லும்போது அது சரியாத்தான் இருக்கும்


இந்தியாவுல இளைஞர்கள் இருக்காங்க சரி , காங்கிரஸ் கட்சில இளைஞர்கள் இருக்காங்களா?

=============


4  செய்தி: பா.ம.க., சார்பில், ராஜ்யசபா தேர்தலில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி போட்டியிட உள்ளார்


மதுவிலக்கு [பற்றி   எதுனா பேசுங்க பாஸ்


================5 : நாட்டின் வளர்ச்சி என்பது, முதலில் விவசாயத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். -கே எஸ் அழகிரி 


 டாஸ்மாக்கை சார்ந்து தான் எல்லா அரசும் இருக்கு 

==================


6 , மோடி அரசு, அடிப்படையிலேயே தவறு செய்து வருகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன், உற்பத்தி செலவுடன், 50 சதவீத லாபத்தை கணக்கிட்டு, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கூறினார். பிரதமரும், விவசாயிகளுக்கு, இரு மடங்கு லாபத்தை உயர்த்துவதாக கூறினார். பட்ஜெட்டில் இரண்டுமே நடக்கவில்லை. இதனால், விவசாயம் சீரழிந்து வருகிறது -கே எஸ் அழகிரி 


சாயம் வெளுத்துடுச்சுங்கறாரா?

===================
7   தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் பலரும் பல யோசனைகளை கூறினர். அவர்களுக்கு, நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன;- உதயநிதி


 அவங்களுக்கும் உங்களை மாதிரி ஒரே ஓவர் நைட்டில்  ஒபாமா ஆக அசை போல 


===============


8   தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இளைஞரணியை பலப்படுத்துவேன். சுற்றுப்பயண தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.-உதயநிதி


சும்மா ஒரு டூர் போக பிளான் போல===================

9   தற்போது வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டால், சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும். = அருண் ஜெட்லி   

அப்போ இப்போ இருப்பது சிறந்த இந்தியா இல்லையா? 5 வருசம் நாம ஆண்டிருக்கமே?


==============

10 
பேட்டரி வாகனங்களை வாங்கவும், நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த விலையில் வீடுகளை வாங்கவும், இது ஊக்கப்படுத்தும். உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் துறைகளில், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.-- அருண் ஜெட்லி   


 பக்கோடா பஜ்ஜி கடை தொழில் பற்றி  எதும் சொல்லலையே?

==============

11   அமைச்சர் ராஜு 

 தீப்பெட்டிக்கு, ஜி.எஸ்.டி., குறைப்பு, ஊக்கத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன், முதல்வர் அனுமதி பெற்று, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.-அமைச்சர் ராஜு 

வலியுறுத்துவோம்? வேற வழி? 


=================

12  ' மத்தியில், இப்போது நிலையான ஆட்சி வந்திருக்கலாம். ஆனால், அது நிலையான ஆட்சிதானா என்பது, போகப் போகத்தான் தெரியும்.=துரைமுருகன்


5 வருசம் கழிச்சு ஆமா இது நிலையான ஆட்சிதான்னு சொல்வார் போல 


=================


13   தமிழக ஆட்சிக்கு மதிப்புகொடுக்கும் ஆட்சி, மத்தியில் இல்லை. -துரைமுருகன்


அதுக்கு அவங்க கம்மி சீட்ல ஜெயிக்கனும், நம்ம ஆஅதரவு இல்லைன்னா அரசு கவிழனும், அப்பதான் பயம் இருக்கும்

=================


14  தமிழகத்தில், ஒரு தற்காலிக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என, உறுதியாகக்கூறுகிறேன்.-துரைமுருகன்

இதையே தான் அந்த டெய்லரும் சொன்னான்,(ரு) ஆனா 2 வருசமா ஒண்ணையும் காணோம்


================

15   ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, அடுத்தாண்டு, இலவச ஷூக்கள் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அதுக்காக செருப்பு வழங்குவதை   நிறுத்திடாதீங்க , இரட்டை இலையின் பரிசாக இரட்டைக்காலணி பரிசு தொடரட்டும்


====================

1 6  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, இளைஞர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, பரவலாக பேசப்படுகிறது


ப்ரி”ய்ங்க்”கா காந்தி?


===============

17  ''அம்மா உணவகங்களில், 108 கோடி இட்லிகள்; 28 கோடி சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன,'' -உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி 


 இது ஜனங்க சாப்பிட்ட கணக்கு, இந்த திட்டம்  மூலமா அமைச்சர்கள் சாப்பிட்ட கணக்கு ?

==================


18  கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மும்பையில் இருந்து கோவா அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு செல்லாமல், மும்பையில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதுக்கெல்லாம் தமிழகம் தான் முன்னோடி மாநிலம்னு நினைச்சா பெருமையா இருக்கு


===================


19   நான் இங்குதான் இருக்கிறேன். எம்.எல்.ஏ.,க்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க அனுமதி கேட்கவில்லை. யார் வந்தாலும் எனது அலுவலகத்தில் சந்திப்பேன். அரசியல் சட்டப்படி செயல்படுவேன்,''-கர்நாடக மாநில சட்டமன்ற சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார்


சட்டப்படி செயல்படுவாரா? ஆல்ரெடி அமைக்கப்பட்ட செட்டப்படி செயல்படுவாரா?

=================


20  ''பசுமை வீடு திட்டத்தால், பயனாளிகள் கடனாளியாகி உள்ளனர்,'' 
தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் 


கட்டுன் வீட்டை வித்து கடனை அடைச்சுட்டா போச்சு


================

0 comments: