Monday, November 13, 2017

நயனார் Vs நயினார்

அரசியலைப் பொறுத்தவரை பாலபாடம் படித்து வருகிறார் கமல் - பொன்.ராதா # பல அரசியல்வாதிங்க அது கூடப்படிக்கலையே?


===========
2 மழைபெய்யும்போதுதான் நீர் தேங்குகிறது, மழைநின்றால்நீர் வடிந்துவிடும் −ஜெயகுமார் # பகலில் தான் வெய்யில் அடிக்கிறது.இரவு வந்தால் நிலா வந்துடும்
==============
3 தமிழக அரசு குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு - அமைச்சர் ஜெயக்குமார். # பொய்க்கால் குதிரை எப்டிங்க வேகமா போகும்?
=================4 என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார். # கட்டடத்துக்குனு படிச்ட்டேன்
============5 என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார். # நயனார் Vs நயினார் பேர் பொருத்தம் பிரமாதம்.அறம் சிறக்கட்டும்=============
6 உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க நிதிகேட்ட ஒரே தலைவர் கமல்தான்: அமைச்சர்ஜெயக்குமார் # அப்போ கமலை தலைவரா ஏத்துக்கிட்டிங்க?
============
7 பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டது – அருண்ஜேட்லி # ஆபரேஷன் சக்சஸ் ,பேஷண்ட் அவுட் மொமெண்ட்
==============
8 யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்ஆனால் மக்கள் அதிமுக பக்கம் தான்! - ஜெயக்குமார் வேணா அறிக்கை விடலாம்,ஆனா ஓட்டு போடறது மக்கள்தான்
=============9 சினிமாவைத் தவிர்த்து கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் கிடையாது;Hராஜா# நாம மட்டும் அரசியல்ல பி ஹெச் டி யா முடிச்சிருக்கோம்?எல்லாம் கத்துக்கறதுதான்
=============
10 மக்களுக்கு புரியும்படி கமல் பேசினால் நன்றாக இருக்கும்!−EVKS # காங் மாதிரி ஊழலில் திளைத்த கட்சிகளை கை கழுவுவோம்கறாரு,புரிஞ்சுதுங்களா?
==============
11 ஒழிக்கப்பட்ட கறுப்புப் பணத்தை குஜராத் தேர்தலில் பார்க்கலாம்: ப.சிதம்பரம் # போலீசால் தேடப்படும் உங்க மகனை எங்கே ,எப்போ பார்க்கலாம்?
==============
12 நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் கல்வீச்சு குறைந்தது- அருண் ஜெட்லி. # குறையாதது நம்ம கட்சியோட சொல் வீச்சுதான்.அறிக்கைகளா குவியுது
=============
13 தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி கணிசமாக குறைந்தது . # பேங்க் ட்ரான்சக்சன்ல தான் எல்லாம் நடக்குதுனு நீங்களா நினைச்சா எப்டி?
============14 அதிமுகவை அழித்துவிட்டால் தமிழகத்தில் வளர்ந்துவிடலாம் என்று பாஜக கனவு −தினகரன் கட்சியை அவங்களுக்கே அளித்து விட்டார்களே
===============15 நான் 30 வயதில் சிறைக்கு சென்றவன் - தினகரன்# ரெகுலர் கஸ்டமருக்கு சலுகைகள் எதிர்பார்க்கறார் போல=============


16 அனைத்து வக்கீல்களின் பள்ளி சான்றுகளை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு. # அப்படியே இந்த டாக்டருங்க சர்ட்டிஃபிகேட்சையும் செக் பண்ணுங்க, பலர் மாட்டலாம்==============


17 ஓ.பி.எஸ்-ம் நானும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்: EPS # அப்போ ஆளுக்கு தலா 100 கோடி கன்பர்ம்?


==================


18 பாரதரத்னா MGR என்பதற்கு பதிலாக பாரதப்பிரதமர் என சொன்ன திண்டுக்கல்சீனிவாசன் பிராயசித்தமா"மோடியை பாரத ரத்னா னு சொல்லிட்டா சரியாகிடும்


===============

19 2023ல் ஆசிய கண்டத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கும் வகையில் முன்னேறி வருகிறது!−செல்லூர்ராஜூ ?ரெய்டுலயா?மழை வெள்ளத்தால் பாதிப்பிலா?


============


20 ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான வரி 18% லிருந்து 5 % ஆக குறைப்பு # குஜராத் தேர்தல் வருது பராக் பராக்

================

0 comments: