Saturday, November 04, 2017

கமல் 5 ம் தேதி முந்திக்கப்போறாரு

நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை- கமல் # கட்சி தொடங்குவாரா?இல்லையா?என்பதை எப்போ அறிவிப்பார்?னு அப்போ அறிவிப்பாரா?


==========
2 அரசு ஒதுக்கிய குடியிருப்பை வாடகைக்கு விட்ட மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு # தீர்ப்பு வர்றதுக்குள்ள வித்துடப்போறான்
=============
3 மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல்: ஜெ.தீபா # முழிப்பு தட்னா போதும்,உடனே அறிக்கை தான்
==============
4 சமூக வலைத்தளத்தில் தமிழிசை யை விமர்சனம் செய்ததாக கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி புதியவன் கைது # பெண்ணால் கைதாகும் 5 வது ட்வீட்டர்
================5 தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி முதல்ல பாஜக Ad க்குதான் தடை போடனும்
=============
6 கந்து வட்டி கொடுமையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" - தமிழிசை # கந்துவட்டி 10% GST 28% னு பேசிக்கறாங்க


===========


7 மெர்சல் நல்ல படம் இல்லேன்னாலும் விமர்சனத்தாலதான் ஓடுது' - ஹைகோர்ட் நீதிபதிகள்# அடடா,இது தெரிஞ்சிருந்தா விமர்சிக்காம இருந்திருப்பமே−BJP


===========

8 நடிகை கவுசல்யாவும்
நித்யானந்தா வலையில்
சிக்கியதாக தகவல் # ஆதாரத்தை பாக்காம நம்ப மாட்டோம்,இதுக்குன்னே வாட்சப் வெச்சிருக்கோம்


============


9 ரேஷன்− சர்க்கரை விலை 1/11/17முதல் ரூ.13.50-ல் இருந்து ரூ.25ஆக உயர்கிறது "நியாய" விலைக்கடை


==============


10 மழைக்கால முன்னேற்பாடுகளை செய்யவில்லை என தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு # குடைகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்னு சமாளிப்பாகளோ?

==================


11 ஜெ.தீபாவின் ஓட்டுநர் ராஜா கொலை மிரட்டல் விடுப்பதாக தீபாகணவர் புகார் # கார் வெச்சிருந்தா டிரைவர் வெச்சிருக்கனும்.அவன் பிரச்னை வெச்சிருப்பான்


=============

12 தாய் மொழியை மறந்தால் முன்னேற முடியாது -தயாநிதி மாறன். "சன்"டிவி னு பேர் வெச்சு நாம முன்னேறலயா?


===============


13 சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல் ஆய்வு இறங்கிட்டார் களத்தூ் கண்ணம்மா ஹீரோ


===============


14 போலி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை-மோடி
விளம்பரத்தை மீடியால பாத்துட்டார் போல


=============


15 படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினி
இவரு முன் ஜாமீன் வாங்கறது 2.0 க்கா?காலா"வுக்கா?


=============


16 அரசின் திட்டங்களை விமர்சிப்பது இறையாண்மைக்கு எதிரானதல்ல- உயர்நீதிமன்றம்
ஜட்ஜூங்க தீர்ப்பைப்பத்தி மட்டும் மூச்சு விடக்கூடாது,அதானே?


==============

17 கந்துவட்டியை விட மிகக் கொடுமையானது GSTதான் -ஸ்டாலின்
# தலைவரே,2ஜி தீர்ப்பு மெர்சலா இருக்கப்போகுதாம்,கொடுமை கொடுமைனு கோயில் போனா...


==============

18 ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானது - அமைச்சர் செல்லூர் ராஜு
#100% விலை உயர்வை நம்ம ஊர்ல சாதா னு சொல்வாங்களா?


===============19 அடையாளத்தை பெருமையோடு கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் - ப.சிதம்பரம்
கலாய்க்கறாரா?கடுப்பேத்தறாரா?


================


20 விஸ்வரூபம் எடுக்கும் சரக்கரை விலை உயர்வு பிரச்சினை6/11/17ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்−ஸ்டாலின் # கமல் 5 ம் தேதி முந்திக்கப்போறாரு

==================

0 comments: