Sunday, November 05, 2017

கமல் ஆலயம்னா"கமல் வீடு?

பழைய நோட்டுகளை இன்னும் எண்ணி முடிக்கவில்லை-RBI
# அதெல்லாம் பொருளாதார ரகசியம்,வெளியிட முடியாது,கூடாதுனு அடிச்சு விட்ருங்க

=============

2 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ சினிமா பாணியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது# இதான் சாக்குனு கமல் மேல கேஸ் போடலயா


=============


3 மக்களின் வலி பிரதமருக்குத் தெரியவில்லை-ராகுல் # அடுத்த தேர்தல் எப்போ வரும்?னு மக்கள் வழிமேல் விழி வெச்சு காத்துக்கிட்டு இருக்காங்க


==============

4 கலைஞர் டிவியில் தொகுப்பாளினியான ஜூலி... வாய்ப்பு கொடுத்த கலா மாஸ்டர் # எத்தனையோ பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க தயாரா இருக்கு "கலைஞர்"டிவி


===========


5 சென்னை மக்கள் வெள்ளம் குறித்து பயப்படவேண்டாம்!! -அமைச்சர் ஜெயக்குமார்
# சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ இதுக்கு எதுனா ஐடியா வெச்சிருப்பாரே?=============

6 கர்நாடக தலைமைச்செயலகத்தில் எலிகளைப் பிடிக்க ரூ.1.50 கோடி செலவு: #50 பூனைகளை வாங்கிப்போட்டிருந்தா அம்புட்டு காசும் மிச்சம்


==============

7 2015 மழை வேறு இப்போது பெய்துவரும் மழை வேறு மக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் வேலுமணி
# ஆனா அப்ப இருந்த அதே அதிமுக ஆட்சிதானே?அதான் பயம்


==============

8 சாப்பிடும் போது மோடிக்கு நன்றி சொல்லிட்டு சாப்பிடுங்கள்-தமிழிசை# வீட்டு சாப்பாட்டுக்கு GST விதிக்காத நல்ல எண்ணத்துக்கு நன்றி −இப்டியா


============


9 இப்போது தேர்தல் வந்தால்DMK கூட்டணி ஜெயிக்கும் - தந்தி டிவி கருத்துக்கணிப்பு மாச எக்சாம்ல பெயில் ஆனவன் மே ல எக்சாம் வெச்சா பாஸ்னானாம்


==============


10 மழை வந்தால் தண்ணிர் தேங்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார் # வாய்லயே ஒரு அறை விட்டா வீங்கத்தான் செய்யும்


================

11 மழைக்கு அமெரிக்காவை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் -வேலுமணி # ரோடெல்லாமே் குழியாக்கி மழை நீர் சேகரிப்பு பண்ணதா


================


12 பாஜகவை சீண்டுவோர் நிம்மதியாக இருக்க முடியாது : H.ராஜா # நாட்ல பாதிப்பேர் உங்களை கலாய்ச்சு மீம்ஸ் போட்டு ஜாலியாத்தான் இருக்காங்க


================


13 பேனருக்கு பதில், பலூனை பறக்கவிட்ட அதிமுகவினர்..
ஆனர் ,பேக்கா இருந்தாலும் சட்டத்தை மீறுவதில் மட்டும் ஷோக்கா யோசிக்கறாங்க


================

14 தமிழகத்திற்கு முதல்வராக தமிழன் வர வேண்டும் -ராமதாஸ் # அந்த தமிழன் பேரு அ வில் ஆரம்பிச்சு ணி யில் முடியனும்?ஆணியே புடுங்க வேணாம்


================


15 EPS அரசு கஜானாவை தூர்வாரி வருகிறது: மு.க.ஸ்டாலின்..# இவரு எதுக்கு அடி போடறார்னு புரிஞ்சுடுச்சு,எதிர்க்கட்சியா இருந்தாலும் வாய்ப்பு வேணுமாம்


==============


16 தமிழகத்தில் 35 IAS அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டனர், திறமையான பலருக்கு டம்மி போஸ்டிங் −ஸ்டாலின் # மம்மி ஆட்சியில் டம்மி மாட்சி


===============


17 காங்., ஆட்சியில் ஊழல் எளிது, தற்போது வர்த்தகம் எளிது – அருண் ஜேட்லி அரிது பொது ஜனம் நிம்மதி அரிது


================


18 ரஜினியை பின்னுக்குத்தள்ளிய விஜய் # போக்கிரி ல அசின் ,ஜில்லா ல காஜல் அகர்வால்னு நம்ம தளபதி ஏன் யாரா இருந்தாலும் பின்னால பிடிச்சு தள்றாரு?


=============


19 வெள்ளநிவாரணபொருட்களை கமலாலயத்திற்கு வந்து கொடுங்கள் -தமிழிசை
# கமல் ஆலயம்னா"கமல் வீடு னு அங்கே கொடுத்துடப்போறாங்க,தெளிவா புல் அட்ரஸ் தரவும்


==============


20 வேலைவெட்டி இல்லாதவர்கள் மீம்ஸ் உருவாக்குகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் # அந்த வேலையையாவது அவங்க பார்க்கறாங்க,நாம?


=================

0 comments: