Thursday, November 02, 2017

நீ பற்ற வைத்த நெருப்பு...

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க நான் தயார் - தமிழிசை
# நீங்க தயார்தான்,பேஷண்ட்ஸ் வரனுமில்ல?

==========


2 சிவகாசி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - EPS # மெர்சல் ல பிரச்சன பண்ணதுக்கு "சிவகாசி"ல சரி பண்ண ஐடியாவா

===========


3 கந்து வட்டிக் கொடுமையா புகார் கொடுங்க.−EPS#மோடினு ஒருத்தர் GST னு சொல்லி"28% வரி போடறார்ங்க.கந்து வட்டி"கூட 10% தான்


===========


4 புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்.. ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் செருப்பும்"கையைக்கடிக்கும் கந்து வட்டியும் எதுக்கு?


===========5 வாடிக்கையாளருக்கு தெரியாமல் பிரதமர் காப்பீடு திட்டத்துக்கு"ரூ.12 எடுத்ததால் வங்கிக்கு ரூ.8000 அபராதம் # ஆஹா,அபாரம் பரிமளா


===========


6 பாஜக வில் இருப்பவர்கள் யாரும் தீக்குளிக்க மாட்டார்கள்-H.ராஜா
# கஷ்டப்படறவங்கதான் தீக்குளிப்பாங்க.அடுத்தவங்களை கஷ்டப்படுத்தறவங்க எப்டி?


===========


7 வரி ஏய்ப்பு தெரியவந்தபிறகு, வட்டியோடு சேர்த்து 'காம்பவுண்டிங் டேக்ஸ்' கட்டியுள்ளார் விஜய் # SAC இதுக்கு என்ன சால்ஜாப் சொல்லப்போறாரோ?


=============


8 விஜய் GSTயை பற்றி பேசியது கற்பனை-SAC
# கற்பனை என்றாலும்,விற்பனை என்றாலும் இன்கம்டாக்ஸ்"ரெய்டு வருமே


============


9 காய்ச்சல் வந்தால் அது டெங்கு தான் என பயப்பட வேண்டாம்: அமைச்சர் செல்லூர்ராஜூ # அசால்ட்டா இருந்துக்கோ,முன்ஜாக்கிரதை"உணர்வெல்லாம் வேணாம்கறாரா?


============


10 நிதி நெருக்கடி'நாதெல்லா ஜூவல்லர்ஸ்'கடைகளை மூடுவதால் சீட்டுபணம் கட்டியவர்கள் தவிப்பு ,தனியார் நிறுவனத்திடம் சீட்டு போடுவது ஆபத்து


============

11 ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்.ரூ2,000 நோட்டு விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்பிஐ! # ரெட்டி பெட்டி குடுத்துட்டாரா?


============


12 புற்றுநோயை உருவாக்கும் புகையிலைப் பொருள் மாணிக்சந்த் குரூப் நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்
பற்ற வைத்த நெருப்பு...

===============


13 SAC பேட்டி க்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் அதிக ஆர்வத்தோட காத்திருக்காங்க போலயே,எப்டியும் எதுனா உளறுவாறு,வெச்சு செய்யலாம்னா?


==============


14 சேகர்ரெட்டியிடம் சிக்கிய நோட்டுகள்எந்தவங்கிக்கு சொந்தமானதுஎன தெரியவில்லை-RBI
# சிக்குனது ஏழையா இருந்தா சின்னாபின்னம் ஆக்கி கக்கவெச்சிருப்பாக


=============


15 பாஜகவை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தாமல் என் உயிர் போகாது −தமிழிசை # அதெல்லாம் ஆகறதில்ல.உங்க உயிரும் போகறதில்ல


=============


16 அரசு மதுபான கடைகளில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு. # இதெல்லாம் நல்லதுக்கில்லீங்கோ.மப்புல கையைப்பிடிப்பான்


=============


17 நிஜ வாழ்வில் நான் நடிப்பது இல்லை : ரஜினிகாந்த்
கவுண்ட்டர் யாருக்கு? கமலுக்கா?விஜய்க்கா?


============


18 ரஜினி நடிக்கும் 2.O திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது−ஷங்கர் வரச்சொல்லுங்க,பாத்துட்டு நாங்க"சொல்றோம்


=============


19 போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூருவில் மரணம் # பல உண்மைகளை மூடி மறைக்கனும்னா குற்றவாளியை போட்டுத்தள்ளனும் பார்முலா?


============20 எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுங்க... தினகரனிடம் சராமரியாக கேள்வி கேட்ட நீதிபதி # நிருபர்னா ஈசியா மடக்கிடுவாரு,கேட்பது ஜட்ஜ்.பம்மனும்


=============0 comments: