Tuesday, November 07, 2017

பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர்

ஷார்ஜாவுக்கு வேற ஆளை அனுப்பிவிட்டு ஸ்டாலின் இங்கே இருந்திருக்கலாமே-அமைச்சர் வேலுமணி#அப்போ ஆளுங்கட்சி வேலை செய்ய எதிர்க்கட்சி கண்காணிக்கனும்?

==============


2 கமலை சுட்டு கொல்ல வேண்டும் இந்து மகாசபா தலைவர் பேச்சு… கமல் படத்தை சுடறாங்க,அரசியல்ல கமலையே சுடப்பார்க்கறாங்க


==============


3 கமலை இயக்குனர் ஷங்கரால் தான் தமிழக முதல்வராக்க முடியும் -- செல்லூர் ராஜூ

# ஏன்?மத்த டைரக்டர்கள் சிஎம் சப்ஜெக்ட் படமே பண்ண மாட்டாங்களா?


=============


4 2018 ஜனவரி முதல் தங்க நகைகளில் 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயம்"# அக்மார்க் சட்டம்


=============


5 மழையால் மது விற்பனை குறையவில்லை: செய்தி #தண்ணில நீந்திட்டே போய் தண்ணி அடிச்சிருப்பாங்களோ?


==============


6 உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்: செய்தி # மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி>?னு ஒரு செமினார் க்ளாஸாம்


=============


7 கந்து வட்டி தீக்குளிப்பு தொடர்பாக கார்ட்டூன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது #இணைய மக்கள் 5% பேருக்கு மட்டுமே தெரிஞ்ச கார்ட்டூன் இனி உலகம் பூரா 


=============


8 கோவை-  பேப்பர் ப்ளேட் ஆக விற்பனையாகும் பாஜக மெம்பர்ஷிப் ஃபார்ம்!... # மக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் உதவிட்டே இருப்பாங்க போல


===============


9 காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்-மோடி # அட்லீஸ்ட் ஏழை மக்களின் ரேஷன் கார்டையாவது விட்டு வைக்கவும்

==============


10 தாழ்வான பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருக்கிறது:EPS # மேடான பகுதிகளில்  தண்ணீர் தேங்காதது இந்த ஆட்சியின் சாதனைனு சொல்றாரா?


===============


11 மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்-  தமிழிசை # தமிழக பாஜக தலைவர் மாறப்போறாராம்


--------------=====12 ’ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியவில்லை’: தாக்கும் அருண் ஜெட்லி  # ஆனா நீங்க பண்ற தப்பெல்லாம் சரியா தெரியுதே?கரெக்டா தாக்கறாரே?


===============


13 அன்று கர்மவீரர் செய்ததை, நாளை நம் தர்மவீரர் செய்வார்’ -  பிரேமலதா # நம்ம செயல் தலைவர்தான் எதுவுமே செய்ய முடியலைன்னு ஃபாரீன் போய்ட்டார்


================


14 அரசியலுக்கு வருவேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா வந்துவிட்டோம்.
 பிள்ளை பிறக்க10 மாதம் ஆகும்-கமல்.# நார்மல் டெலிவரியா?அப்நார்மலா?தெரியல


================


15 இதுவரை ஒதுங்கி இருந்த நான் இனி ஒதுங்கப்போவதில்லை - கமல் # மாவீரன்ல ”ஒதுங்கு ஒதுங்கு” பாட்டு பாடினது ரஜினி , அதை இப்போ யூஸ் பண்றது கமல்


===============

16  அரசியலுக்கு வரும் கமல் முடிவை வரவேற்கிற்கிறேன் -திரு மாவளவன் # இப்படிக்கு பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர் 


================


17 சென்னையில் மழை என்றால் சேலத்தில் குடைபிடிப்பார் முதல்வர் EPS:ஸ்டாலின் #அவர்தேவலை. தமிழ் நாட்டுலதான் இருக்காரு,நாம ஃபாரீன்ல போட் ஓட்றமே?

================


18 2015 வெள்ளத்தின்போது  ஆட்சியாளர்கள்ஸ்டிக்கர் ஒட்டினர்,இது பிச்சையைவிட கேவலமானது - கமல் # அதை அப்பவே ஏன் தில்லா சொல்லலை?


=========================


19 காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாதவை... பிரதமர் மோடி # பாஜக வும் , சர்ச்சை பேச்சுகளும் போலவா?==============


20 செய்தி: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 'மின்சார அதிர்ச்சி' காத்திருக்கிறது- ராகுல்.
கரண்ட் பாலிடிக்ஸ் நிலவரம் தெரியாம இருக்காங்க பாஜக காரங்க


============

0 comments: