Thursday, November 23, 2017

சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: ராதிகா ஆப்தே

தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு −பா.ஜனதா தலைவர்
# மீடியமா ஓடற படத்தை மெகா ஹிட் ஆக்கவே ஒரு கூட்டம்


============


2 ஓபிஎஸ் நிலை எனக்கு வந்திருந்தால் அரசியலை விட்டே போயிருப்பேன்.. ஜெயா டிவி நேர்காணலில் துரைமுருகன்!
# துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படறாரு போல


==============

3 தமிழக அரசு நிதி நெருக்கடியில் மூழ்கி கிடக்கிறது - ராமதாஸ் # அதை விட முக்கியம் டெங்கு கொசுக்கடியில் மூழ்கிகிடக்கு


============


4 ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த இடம் தமிழ்நாடு தான்:-ஓபிஎஸ் # இதைப்புரிஞ்சுக்கிட்ட ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் தான், சன் டிவி , கலைஞர் டிவி , ரெட் ஜெயண்ட் மூவிஸ்...=============
5 கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளை புரிந்துகொள்ள விளக்கவுரை தேவை - தமிழிசை# வழக்கமா டாக்டர் கையெழுத்துதான் நமக்கு புரியாது, இப்போ டாக்டருக்கே புரியலை,அப்போ கமல் கெத்து
===============
6 கமலின் ட்விட்டர் பதிவை புரிந்து கொள்ள கோனார் உரை வேண்டும்-தமிழிசை# ஏன்?வெங்கய”நாயுடு”உரை இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?கோனாரேதான் வேணுமா?==============
7 தமிழகத்தில் கால்அல்ல, கையைக்கூட பாஜகவால் ஊன்ற முடியாது- ஸ்டாலின்# நாம கூட்டணி வெச்சிருக்கும் “கை” நம்மை கை கழுவிட்டா தாமரை தயவு தேவைப்படும்
================
8 தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: -ஸ்டாலின். # நாமளும் ஒரு வருசமா இதே பல்லவியைத்தான் பாடிட்டிருக்கோம், பல் வலி வந்ததுதான் மிச்சம்
============
9 மோடி விளைந்த ”கதிர் ”- வைரமுத்து # அவரால வரும் “லட்சுமி”கடாட்சமே வேணாம்னு ஜனங்க புலம்ப ஆரம்பிச்ட்டாங்க , எல்லாம் ஷார்ட் ஃபிலிம் எஃபக்ட்தான்
=================
10 “நாங்கள் அனுப்பியது ஆளுநரை அல்ல; தமிழக நலனுக்கான சி.பி.ஐ. இயக்குநரை” அதிரவைக்கும் பி.ஜே.பி. தரப்பு # நான் அனுப்பியது கடிதம் அல்ல, இதயம் பாட்டு ரீமிக்ஸ் போல
============
11 எந்த துறையில் தவறு இருந்தாலும் சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்வோம்-செல்லூர்_ராஜூ# எல்லாத்துறையிலும்தான் தவறு இருக்கு, ஆட்சியை திருத்திடலாமா?
===================12 சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: ராதிகா ஆப்தே # இனி சினி ஃபீல்டில் ட்ரை பண்ணும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், சென்னைக்கு போட்றா ஒரு டிக்கெட்டை
============
13 முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி; விவசாயிகளின் சிரமங்களை நன்கு புரிந்தவர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் # அது உண்மைன்னா விவசாயிங்க மோடியை சந்திக்க ஏற்பாடு பண்ணி இருக்கலாமே?
==============
14 ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள்-தீபா கணவர் மாதவன் # அதை வெளீல சொல்லவே 19 வாரங்கள் தேவைப்பட்டிருக்கு
=============
`15 நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின தேதிகளை தவறாக குறிப்பிட்ட ஸ்டாலின் # கழகம் ஆட்சில இருந்தாலும் இல்லைன்னாலும் தப்பு நடக்கும்

=================
16 தெம்பும், தைரியமும் இருந்தால் தமிழக சட்டசபையை கூட்ட தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின் சவால்# பாக்கெட் வைத்த புதுச்சட்டை போட்டு வர நீங்க தயாரா?-EPS
===============
17 சிலிண்டர் வைத்திருந்தால் வறுமை கோட்டின் கீழ் இருந்து நீக்கம் - செய்தி # நேத்துத்தான் பேங்க்ல 10,000 ரூபா இருந்தாலே வறுமை கோட்டின் கீழ் இருந்து நீக்கம் னாங்க, 9999 ரூபா மெயிண்ட்டெயின் பண்ணனும்
=============
18 பதவி பித்து பிடித்து அலைகிறார் ஸ்டாலின்.- செல்லூர் ராஜூ! # நேத்து வரை அடிமையா இருந்தவங்க எல்லாம் எஜமான் ஆகும்போது அவருக்கு ஆசை இருக்காதா?
=============19 இந்தியா விரைவில் கவர்ச்சி நாடாக மாறும் - அருண் ஜேட்லி # போட்டுக்க துணிமணி கூட இல்லாம ஏழைங்க தெருத்தெருவா திரிவோம் போல


==============20 இதுவரை லஞ்சம் வாங்கவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரால் சொல்ல முடியுமா? - சாருஹாசன் # சாரி , தொழில் ரகசியத்தை வெளீல சொல்ல முடியாது


==================

1 comments:

ஆபிரகாம் வேளாங்கண்ணி said...

ஒரு வேள இப்படி இருக்குமோ தான் ஹீரோயின் ஆகறதுக்கும் நெறைய படங்களை வசப்படுத்துறதுக்கும் தன்னைத் தானே புரொமோட் பண்ணிக்கிறாங்களோ என்னவோ