Tuesday, November 21, 2017

ஓடி ஓடி ஓ.டி ஒர்க் பார்ப்பதன் மர்மம் என்னவோ?

அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
# ஓடி ஓடி ஓ.டி ஒர்க் பார்ப்பதன் மர்மம் என்னவோ?

============
  2 குடிக்க தெரியாதவர்களுக்கு கூட, குடிக்க கற்று கொடுத்தவர்கள் திமுகவினர்"− ஜெயக்குமார் # அடடா,இது தெரியாம டாக்டர் அய்யா கூட்டணி வெச்ட்டாரே?


==========


3 நடிகர் கமலஹாசன் ஒரு கோழை – H.ராஜா # எங்கேயோ சிஸ்டம் முன் உக்காந்து வாய்ச்சவடால் அடிக்கும் எல்லாருமே கோழைங்க தான் நீங்க உட்பட


=============


4 அறம் திரைப்படம் அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கிறது.-திருமா # அடி பலமா தலை?


===============


5 மோடி குஜராத் முதல்வராக இருந்தால் ஆளுநரின் ஆய்வை அனுமதிப்பாரா? − மாதவன்
# பலமான முதல்வருக்கும் ,பலவீனமான முதல்வருக்கும் வித்யாசம் இருக்கே?


==============


6 140க்கு பதிலாக இனி 130மிமீ இருந்தாலே உயர் ரத்த அழுத்தம் - டாக்டர்கள் வரையறை# 120 தான் இருந்தது,இதை படிச்சதும் 150 எகிறிடுச்சு


============


7 GST வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு - அருண் ஜெட்லி# குறைச்சுட்டே போய் கடைசில மைனஸ்ல கொண்டு வந்துடாதீங்க


===============


8 பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் இருந்து மீண்டுள்ளது − அருண் ஜெட்லி # குஜராத் தேர்தல் வர்றதால சீமந்த நிலை,தேர்தல் முடிந்தா மீண்டும் மந்தநிலை


==============


9 தமிழக அரசு தெளிந்த நீரோடை போன்றது: அமைச்சர் ஜெயக்குமார் # தெளிஞ்சிருச்சா?இனி இரட்டை இலை நமக்குதான்னு தெரிஞ்சிடுச்சா?


==============


10 மது பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு - உயர் நீதிமன்றம் # ஆய்வு செய்யறேன்னு குடிச்சுட்டு மட்டை ஆகிடப்போறாங்க


===============


11 தீவிரவாதியாக பார்க்கப்பட்ட பிரபாகரனை நான்தான் போராளியாக அறிமுகப்படுத்தினேன்−சீமான்# ஏமாளியாக அறியப்பட்ட எங்களை கோமாளியா நினைக்கறது நீங்கதான்


=============


12 சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை # (நட)ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதுண்டு==========


13 தமிழக அரசு மீது நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, ஸ்டாலின் காப்பியடிக்கிறார் -அன்புமணி
# நீங்க நைசா 2ஜி பத்தி பேசுங்க.கப்சிப் ஆகிடுவாரு


===================14 அம்மா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்- ஜெயகுமார். # அவர்"கையும் கறை தான் அவர் அல்லக்கை கையும் கறை தான்.தீர்ப்பை முழுசா படிக்கவும்


==============


15 நாங்கள் பரம்பரை பணக்காரர்கள்.−தினகரன் # அண்ணே,பரம்பரை பணக்காரரா இருந்தாலும் திருடுனா ரெய்டு வருமாம்


==============


16 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினரை கண்டு வியந்திருப்பார் - தமிழிசை
# வியந்திருப்பாரா?பயந்திருப்பாரா?


===============


17 ஜெ வின் கர்ச்சீப்புக்கு கூட உரிமையாளர் நான் தான் - தீபா # ரைட் ,10 டஜன் கர்ச்சீப் வாங்கிட்டு போய்ட்டே இருக்கனும்,சரியா?


===============


18 சபரிமலையில் ரூ.1,000 செலுத்தினால் சிறப்பு தரிசனம் செய்யலாம் # மனுசன் தான் லஞ்சம் வாங்கறான்னா...


===============


19 பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ரூ.900–க்கு விற்பனை in pakisthanனு ப்ரிண்ட் ஆகி இருக்குமா?

=============


20 போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை; மாநில அரசுக்கு சம்பந்தமில்லை: EPS # மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதுக்கு மத்தியஅரசுதான் பொறுப்பு


==============

0 comments: