Friday, November 03, 2017

நித்யானந்தா ,ஜக்கி ,சினேகன்

நம்ம கட்சிக்காரங்க யாரும் குளிக்கவே மாட்டாங்கனு பேட்டி குடுத்தீ்களா?


அய்யோ ,தலைவரே,தீக்குளிக்க மாட்டாங்கனுதான் சொன்னேன்,திரிச்சுட்டாங்க=============

2 சமீபத்துல நீங்க பார்த்த சினிமா எது?


நான் எல்லா படத்தையும் பால்கனில இருந்துதான் பார்ப்பேன்.சமீபத்துல கிட்டே பார்த்த படம் "முதல் பாவம்"


===========


3 சார்,லெட்டர் பேடு ல ஒரு பேரு,பட டைட்டில்ல ஒரு பேரு,அது ஏன்?


எனக்கு கெட்டப் சேஞ்ச் ஒத்து வராதுனு சொன்னவங்க வாயை அடைக்கத்தான்==============


4 டியர்,இன்னைக்கு சூர சம்ஹாரம்.என்ன ஸ்பெஷல்?


கமல் நிரோஷா க்கு சூரசம்ஹாரம் படத்துல என்ன குடுத்தாரோ அதான்=============


5 யுவர் ஆனர்,விடிய விடிய போன் பண்ணி திட்றாங்க,


நம்ம பசங்களைப்பத்திதான் தெரியுமில்ல?நைட் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடலாமில்ல மேடம்?============


6 எங்க அப்பா மாதிரியே நானும் ஒரு சமூகப்போராளியா ஆகனும்னு ஆசப்படறேன்


அவர் போராளியா?
ஆகனும்னு ஆசைப்பட்டாரு==============

7 சார்,உங்க படம் பி ,சி சென்ட்டர் ஆடியன்சுக்கு புரியாதா?


ஏன்?
்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளதா பேட்டி தந்திருக்கீங்களே?==============


8 அடுத்த அட்லி படத்துல இருந்து ஒரு டயலாக் லீக் ஆகிடுச்சு


அதுக்குள்ளயா?சொல்லு
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை
அடப்பாவி=============


9 நான் கராத்தே ல பிளாக் பெல்ட் வாங்கி இருக்கேன்.அதனால அடுத்த தேர்தல்ல கப் எனக்குதான்


நம்ம கிட்டே இருக்கற மணி பிளாக்மணி,பெல்ட் பிளாக்.எப்டி==============


10 கேள்வி கேட்டா பதில் சொல்லாம மறுபடி கேள்வி கேட்டே கொல்றாங்க பா சிலர்.


யார் யார் எல்லாம் அப்டி?எத்தனை நாளா இப்டி?அப்டி என்ன கேள்வி?யார்ட்ட?

==================


11 பரத் க்கும் ,ஜிவிபி க்கும் என்ன ஒத்துமை?


இத்தனை நாளா பரத் சின்ன தளபதி,இனிமே ஜிவிபி லிட்டில் இளைய தளபதி யாம்==============


12 நாளைக்கு ரிலீஸ் ஆகும் மலையாளப்படத்துல மோகன்லால் க்கு விஷால் வில்லனா வர்றாரா?


இருக்காது
ஏன்?
அவரு சரத்குமாருக்கு தானே வில்லன்?==============


13 பாட்டி,ஒரு கதை சொல்லு


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு
ஐய்யே,அரதப்பழசான அட்லீ கதை எல்லாம் வேணாம்,புதுக்கதை சொந்தமா யோசிச்சு சொல்===============


14 பாப்பா,குட் டச் ,பேடு டச் பத்தி சொல்லித்தரவா?


வேணாம்,சினேகன் மாதிரி தாடி வெச்ச கேடிங்க தொட்டா அது பேடு டச். அதானே?=============


15 ஒரு முழுநாள் Fb வராமல் இருந்தேன், நிறைய யோசிக்க முடிந்தது


என்ன யோசிச்சீங்க?
இப்டி வராம இருந்தா மட்டும் நாம என்ன சாதிச்சிடப்போறோம்?னு=================


16 என் மகனோட எல்லா படத்துலயும் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும்.


இது என்ன பிரமாதம்?என் செல் போன்ல கூடத்தான் 50 மெசேஜ் இருக்கு==============


17 சார்,படத்தோட பட்ஜெட் 135 கோடி, வசூல் 200 கோடி ,ஆனா நஷ்டம் 14 கோடி னு சொல்றாங்க ,புரியல.

ப்ரமோ க்கு அவ்ளோ செலவு.அள்ளி விடனுமில்ல?


=================


18 1000 வேப்பிலைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டது எங்க சோப்

ஓஹோ,இப்டி கம்பெனி சீக்ரெட்டை உடைச்ட்டீங்களே?எல்லாரும் வேப்பிலையை தேய்ச்சு குளிச்ட்டா?


===============


19 பூட்டிக் கிடந்த அறையில் காற்று உள்ளே வரட்டும் என ஜன்னல்களை திறந்தேன்

என்ன ஆச்சு?
நித்யானந்தா ,ஜக்கி ,சினேகன் எல்லாம் உள்ளே வந்துட்டாங்க

=============

20 சார்,புது படம் பண்றோம்.V ல ஆரம்பிக்கற மாதிரி டைட்டில் சொல்லுங்க;

வீண் முயற்சி −இது ok வா?

===============

0 comments: