Sunday, November 05, 2017

அட்லி துணை

ரஜினி = நம்ம படத்த பத்தி கேவலமா நாலு வரி பேசுங்க


தமிழிசை = நீங்க நம்மாளாச்சே ஜி?
நெகடிவ் பப்ளிசிட்டி தான் இப்போ ட்ரெண்டே


===========

2 சார்,200 கோடி ரூபா க்ளப் ல நானும் சேரனும்.அதுக்கு என்ன"ப்ரொசிஜர்?


க்ளப் ல சேர்ந்துட்டோம்னு அடிச்சு விடுங்க,எவன் வந்து செக் பண்ணப்போறான்?=============


3 நமக்கு கைதூக்கி விடத்தான் யாரும் இல்லை

ஆனா
கால் வாரிவிட தான் எத்தனைபேர்
அப்போ தலைகீழா"நடந்து பாருங்க,கை"தூக்கி விடுவாக=============


4 நம்ம படம் 200,68,38,953 ரூபா கலெக்சன் பண்ணி இருக்கு


அடேங்கப்பா,எப்டீ துல்லியமா"சொல்றீங்க?
ரவுண்டா 200 கோடின்னா எவனும் நம்பமாட்டேங்கறான்============


5 சகாயம் IAS சார் போட்ட மதிப்பீடு தப்பு.நாங்க சொல்றது தான் சரி


ஓஹோ,நாம எதுவரை படிச்சிருக்கோம்?
5 ங்கிளாஸ் வரை
ஆங்,அப்ப சரி


============

ரைட்டர் சார்,பேனால இங்க் ஊற்றும்போது அதுல ஜிகினா தூவறீங்களே ,எதுக்கு?

எழுத்தில் மினுமினுப்பு கூடி உள்ளதுனு விமர்சனம் வருமில்ல?


==============


7 சார்,தமிழ்நாட்ல தான் லாட்டரிTkt தடை பண்ணீட்டாங்களே?சிக்கிம் 10 கோடி ,மணிப்பூர் 12 கோடினு கூவிட்டிருக்காங்க?

யோவ்,இது பட கலெக்சன் ரிப்போர்ட்


===============


8 தலைவரே!சுகர்பேஷண்ட்களோட எண்ணிக்கையை குறைக்க புதுமையான திட்டம் வெச்சிருக்கீங்களாமே?

ஆமா,முதல் கட்டமா சர்க்கரை விலையை டபுள் மடங்கு ஏத்திட்டம்


==============


9 தலைவரே!துப்பாக்கி படத்தை 2 டைம் பாத்ததா சொன்னீங்க;

ஆமா
இரட்டைக்குழல் துப்பாக்கி படத்தை 3 சீனுக்காக 4 டைம் பாத்ததை ஏன் சொல்லல?


==============


10 சார்,காட் பாதர் படத்துல இருந்து சில டயலாக்சை சுட்டுட்டீங்கனு சொல்றாங்களே?

ஓ,அது அந்தப்படமா?சிடி ல டைட்டில் வர்ல


==============

11 சார்,எனக்கு டெங்கு வந்திருக்கு,என்ன செய்யனும்?

மேடம் ,Fb ல ஸ்டேட்டஸ் போடறதை நிறுத்திட்டு ஹாஸ்பிடல் போகனும்


=============

12 இணையத்துல கூடவா ஜாதி பாத்து பழகுவாங்க?

இணையத்துலயோ,இணையும்போதோ யாரும் ஜாதி பாக்கறதில்லை,கல்யாணப்பேச்சை எடுத்தாதான் ஜாதி பிரச்சனை வரும்


================


13 மேடம்,இனிமே எந்தப்பேய்ப்படமும் ரிலீஸ் ஆக விட மாட்டீங்களா?அது ஏன்?

"G"HO"ST" படம் னா GST யை குறிக்குதே?


==============


14 ஜடஜ் −மேடம்,நீங்க கார் ரிஜிஸ்டர் பண்ண தந்த அட்ரஸ்ல இருக்கறவருக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையாமே?

அப்டியா?அவரை மேரேஜ் பண்ணிட்டா?


================


15 அமலாபால் கேஸ் முடிய 10 வருசம் ஆகும்?

எப்டி?
அடிக்கடி அமலாபாலை கிட்டக்கா பாத்துக்கலாம்னு ஜட்ஜ் நினைச்சா?


================


16 சார்.84 கோடி பணம் கட்டுங்க

எதுக்கு?
300 கோடி வசூல்னு விளம்பரம் வந்ததே?அதுக்கான 28% GST
சின்ன பையனா சார் நீங்க?அதை எல்லாம் நம்பிட்டு..


===============


17 மேடம்,இந்த கேஸ்ல வாய்தா கேட்க மாட்டீங்களா?ஏன்"

இதான் சாக்குனு லிப் கிஸ் அடிச்ட்டா?
புரில
வாய் தா ன்னு கேட்டதா நினைச்சுக்கிட்டா?


==================

18 ஜட்ஜ் −262 வது ஆதீனம் உயிரோட இருக்கறப்ப 263 வது ஆதீனமா உங்களை பிரகடனப்படுத்திக்கிட்டது செல்லாது
நித்தி−1நாள் டைம் குடுங்க,போட்டுத்தள்ளிடறேன்


===============

19 டீச்சர்,பேப்பர் திருத்தும்போதே இந்த ஸ்டூடண்ட் காப்பி அடிச்சிருக்கான்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?

அட்லி துணை னு பிள்ளையார்"சுழி போட்டிருக்கான்


==============


20 தலைவரே! சென்னை மழை வெள்ளத்தை பத்தி"கருத்து சொல்லாம இரூக்கீங்க?

இமயமலை,சிரபுஞ்சி யுடன் ஒப்பிடுகையில் இது கம்மி தான்


================

1 comments:

K. ASOKAN said...

பஞ்ச்கள் அனைத்தும் அருமை