Monday, November 06, 2017

ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியா?

சார்.சென்னைல மழை வெள்ள அபாயம் ,உங்க ரசிகர் மன்றக்கண்மணிகள் மக்களுக்கு எதாவது உதவி?


அடாத மழையிலும் விடாத வசூல் மழைனு வடை சுடுவாங்க=============

2 டீச்சர்,எமிஜாக்சனுக்கு E வருமா?ஏ வருமா?


முழுசா கவர் பண்ணி இருந்தா emy ',கவர் பண்ணலைன்னா "A"my=============

3 ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியாமே?


அது தெரில,ஆனா டைரக்டர் அட்லி மாதிரி இருந்தா படம் சாம்பார் மாதிரிதான்==================

4 தலைவரே!மக்கள் குறை கேட்கும் சுற்றுப்பயணத்தை ஏன் ரத்து பண்ணீட்டீங்க?


பயங்கர மழை.முதல்ல நம்மை பாதுகாத்துக்குவோம்,தேர்தல் வரை டைம் இருக்கு================


5 மிஸ்,கஸ்தூரி மஞ்சள் பூசி டெய்லி குளிச்சா உங்க முகம் பொலிவு பெறும்


டாக்டர்,நடிகை கஸ்தூரி மஞ்சள் பூசி குளிச்சா அவங்க முகம்தானே அழகாகும்?=============


6 அவனுக்கு மட்டுமே புடிச்சவளா " மொத்தமா" மாறிடனும்


அவருக்கு ஒல்லி தான் பிடிக்கும்னு திடீர்னு பல்டி அடிச்ட்டா ரொம்ப சிரமம் ஆச்சே?==============


7 சாப்பிட்டியானு கேட்கக்கூட எனக்கு

ஆள் இல்லை .
இங்கே மட்டும்? குளிச்ட்டியா?தூங்கீட்டியா?னு கேட்க தனித்தனி ஆளா வெச்சிருக்கோம்?==============


8 அப்பவே

என் சம்சாரம் சொல்லிச்சி,
நான் தான் கேட்கலை,
தெரீல,அதான் காது கேட்கலைனு சொன்னேனே?
என்ன சொன்னாங்க?
=============


9 நயன்தாராவோட இந்நாள் காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்குப்பிடிச்ச வாசகம் எது?


"அறம்" செய்ய விரும்பு==============


10 டாக்டர்,இந்திய தேசிய உணவாக சரியான தேர்வு...எது?இட்லியா? பிரியாணியா?


ஆரோக்ய தேர்வு இட்லி
பாரம்பர்ய தேர்வு பழைய சோறு
பெண்களின் தேர்வு உப்புமா==============


11 இந்த அனிருத் அஜித் தவிர மத்த எல்லா நடிகர்களுக்கும் ரொம்ப நல்லாவே மியூசிக் போடுறாராமே,ஏன்?


ஏன்னா அவங்க எல்லாம் பாட்டை வெச்சு படத்தை ஓட்றவங்க=============

12 டாக்டர்,மயிலை வீட்டுல வெச்சு வளர்த்தலாமா?


இனி வளர்றக்கு என்ன இருக்கு?போனி கபூர் ஒத்துக்கறதும் சிரமம்============


13 சார்,உண்மையான தளபதி யாரு?

1 ஸ்டாலின்
2 நேஹ்ரா
மணி"ரத்ன சுருக்கமா" சொல்லனும்னா ரஜினி தான்
3 விஜய்
==============

14 எனக்குனு ஒருத்தி எந்த ஊர்ல பிறந்திருப்பாளோ தெரில


நீங்க எந்த ஊரு?
ஆதம்பாக்கம்
அப்போ ஏவாள்பாக்கம் ஏரியா ல தேடிப்பாருங்க==============


15 சார்,பெண்கள் மெனக்கெடுவது ஆண்கள் கவனிக்கவா?சக பெண்கள் பொறாமை கொள்ளவா?


மொத்தத்துல மெனக்"கெடறாங்க"================


16 தலைவரே! மழை வந்தா தேங்கத்தான் செய்யும்னு சமாளிக்கறாங்க,வெய்யில் ஏன் அப்டி தேங்கறதில்லை?


வெய்யில் (உதய)சூரியன் வழி வந்தது,் எப்போ தேங்கும்?============

17 சார்,உங்க ரசிகர்களால உங்களுக்கு 84 கோடி நட்டமா?எப்டி?


வாயை வெச்சுட்டு சும்மா இருக்காம 300 கோடி வசூல்னு வடை சுட்டாங்க, GST 28% கட்டனுமே=============
18 தலைவரே!மக்கள் பணி ஆற்ற களத்துல உங்களைக்காணோமே?

பாரீன் டூர் வந்திருக்கேன்.மழை நின்ன பின் ஆறுதல் சொல்ல வருவேன்


==================


19 சார்,நீங்க மழை வந்தா ஆளுங்கட்சிய கேள்விக்கேட்பீங்களா? எதிர்க்கட்சிய கேள்வி கேட்பீங்களா?

குடை எடுத்துட்டு வந்தியா?னு சம்சாரம்ட்ட கேட்பேன்


=================20 டாக்டர்,தொண்டை கட்டி இருக்கு,என்ன நிவாரணம்?
துளசி / சுக்கு கசாயம்
துளசி சென்னை ,நான் ஈரோடு டாக்டர்,எப்டி ஒர்க் அவுட் ஆகும்?


=============


0 comments: