Wednesday, November 01, 2017

,கூட்டத்துல ஒரு கறுப்பு சிவப்பு எஸ்"ஆகப்பாக்குது

அதிமுகவிற்கு எந்த பிரச்சினை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார் - ராஜேந்திரபாலாஜி
# அதிமுக வோட இப்போதய பிரச்னையே பாஜக முத்திரை விழுந்ததுதானே?

============


2 ஜெ வை நேரடியாக
எதிர்த்த தலைவர்களில் நானும் ஒருத்தி - தமிழிசை # எனக்கு தெரிஞ்சு ரெண்டே பேர்தான் 1 டாக்டர் கலைஞர் 2 புரட்சிக்கலைஞர்

=============


3 கருத்துகளை அகற்ற தயாராகவே இருக்கிறோம்: தேனாண்டாள் பிலிம்ஸ் # உங்களை நம்பி உங்களுக்காக கம்பு சுத்திட்டு இருக்கற ரசிகர்கள் நிலை?

===========


4 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும்:முதல் அமைச்சர் எடப்பாடி # 7 1/2 நாட்டு சனி க்கு கேப்பே கிடையாதா?


============


5 இன்னும் 2 முறை தேர்தல் வந்தாலும் மோடிதான் பிரதமர்: எஸ்.வி.சேகர்
# இன்னும் 2 முறை கட்சி மாறுனாலும் இதேதான் சொல்வீங்களா? மாத்திடுவீங்களா?

===========


6 பொருளாதாரம் பற்றி புரிதலோடுதான் மோடியை ரஜினி ஆதரித்தார் - H ராஜா
கூடத்தான் ஆதரிச்சாரு,இப்போ அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டாரு


============


7 மெர்சல் பட வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி # FBல யாரோ போட்டதை உருவி தான் சேர்த்திருக்காங்கங்கறீங்களா?


===========


8 வெட்கமே இல்லாமல் எப்படிப் பைரசியை ஆதரிக்கிறீர்கள்? - எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி # "பைரவா"ன்னா எதிர்ப்பாரு
பைரசி ன்னா ரசிப்பாரு

============

9 மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக H ராஜா ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- விஷால் கட்டி பாத்தேன்னு பல்டி அடிப்பாரு


============

10 மைனாரிட்டியாக இருந்த போதும் 5 ஆண்டுகள் முழுமையாக திமுக ஆட்சி நடந்தது - மு.க.ஸ்டாலின் # 5 முதல்வர்கள் மாறுனாலும் ஆட்சி மாறாது போல ?


=============


11 சினிமாக்காரி என்ற முறையில் மெர்சல் படத்திற்கு என் ஆதரவு- ஜூலி
னு எப்டி சொல்றீங்க?
டெய்லிஒரு படம் டிவி ல பார்ப்பேன்,அப்ப சரிதான


==============


12 இந்திய மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு | # அரசியல்வாதிங்க மக்கள் பணத்தை சாப்ட்றாங்க,மிச்சம் வைக்கறதில்ல


=================


13 50 ஆண்டுகள் பழமையான அனைத்து கட்டடங்கள் இடிக்கப்படும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேளை,50 + வயசானவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல


===============


14 இனி எந்தப் படம் GSTயை எதிர்த்தாலும் விடமாட்டோம்!- தமிழிசை # GST வாழ்க ,வளர்க ! னு கோஷம் போடற மாதிரி ஒரு சீனாவது வைக்கனும்?


==============

15 துறைமுகங்கள் மூலம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது” -மோடி # தரைவழி,வான்வழி,கடல்வழினு 3 பக்கமும் கேட் போட்டுடனும் மொமெண்ட்


=============


16 முழுப்படம் பார்க்கலை... சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டுமே வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன்...எச்.ராஜா பல்டி # அதுலயும் அரைகுறை தானா?


==============17 இன்னும் ஒரு மாதத்தில் 1044 மருத்துவர்கள் நியமனம். அமைச்சர் விஜயபாஸ்கர் # அதுல அஞ்சு ரூபா டாக்டர் மாதிரி"அஞ்சு பேருக்காவது வாய்ப்பு குடுங்க


=============


18 மத்திய அரசுடன் முரண்பட்டால் திட்டங்களுக்கு நிதி பெறமுடியாது: செல்லூர்ராஜூ # நீதி முக்கியமா?நிதி முக்கியமா?ன்னா எல்லார் சாய்சும் நிதிதான் போல


=============

19 கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது- கனிமொழி கேள்வி#2ஜி தீர்ப்பு வரப்போகுது,கூட்டத்துல ஒரு கறுப்பு சிவப்பு எஸ்"ஆகப்பாக்குது


============


20 தமிழக அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை: பொன்.ராதா # இவரு மோடியைக்குறை சொல்றாரா?எடப்பாடியை குறை சொல்றாரா?தெரியலையே?


============

0 comments: