Wednesday, November 01, 2017

ஆளைப்போட்டுத்தள்றோம்,கட்அவுட் வைக்கறோம்

வயிற்றுப் பிழைப்புக்காக அமைச்சர்கள் ஏதேதோ பேசுகிறார்கள் : டிடிவி தினகரன் சகிச்சுக்கலாம்,உளறிக்கொட்றாங்க

============


2 ஊழல் செய்வதில் மட்டும் தான் அமைச்சர்கள் கவனம் செலுத்துகின்றனர்:TKS இளங்கோவன் வெளிநடப்பு,ஆளுங்கட்சின்னா ஊழல் பண்றது சகஜம்


===========


3 பிரதமர் மோடி; அவர் தேர்தல் ஆணையர் கிடையாது; நிச்சயம் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் :தினகரன் பிரச்னை பெரியபிரச்னையா ஆகிடுச்சே


============


4 பாமகவுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது அதிமுக தான்:கே.பி முனுசாமி # ஓஹோ,தப்பும் பண்ணீட்டு அதுல பெருமை வேறயா?===========5 விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும்: SAC # கலைஞர் கூட ஸ்டாலினுக்கு இது போல் ஆதரவு தரலை


===========


6 பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது-மோடி # பைலட் சொல்றதை நம்ப முடியாது,பேசஞ்சர்ஸ் சொன்னாதான் நம்புவோம்


=============


7 வருமான வரி சோதனை அரசியல் ரீதியான மிரட்டல் என்றால் சந்திக்கவும் தயார்- விஷால்
# லட்சுமி சாரி"லட்சிய முன்னேறக்கழகம் ஆரம்பிச்சிடுவாரோ?


=============


8 விஜயின் வளர்ச்சியைப் பார்த்து பதவியில் இருப்பவர்களுக்கு பயம்: எஸ்.ஏ.சந்திரசேகர் # அமிதாப்பச்சன் ,சத்யராஜ் இவங்க பெற்றோர்"கூட அப்டி சொல்லல


============


9 EPS-ம்் OPS-ம் பாஜகவினரையும் ஒருநாள் முதுகில் குத்துவார்கள்-வெற்றிவேல் # மக்கள் ஓட்டு குத்தனுமில்ல?கட்சில"புத்தனும் இல்ல,சுத்தமும் இல்ல


============


10 சிங்கப்பூரை விட, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவு - விஜயபாஸ்கர் # அங்கே விஞ்ஞானிகள் கூட ரொம்ப கம்மியாம்,போறீகளா?


==============


11 உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்: விஷால் ஆபீஸ் ஐடி ரெய்டு பற்றி எச். ராஜா உண்மை வெளியிட்டவங்களுக்கும் பொருந்தும்


=============


12 சிகிச்சை பெறும் போட்டோவை வெளியிடக் கூடாது என ஆளுநருக்கு கடிதம் எழுதினார் ஜெ... புகழேந்தி # அவரே கோமால இருந்தாரு.லெட்டர் எழுதுனாராமில்ல?


===============


13 ரயிலில் ஓசி பயணம் செய்தால் போலீசாருக்கு அபராதம் : தெற்குரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை # மீறி பயணித்தால் காவலன் அவன் கேவலன் என அழைக்கப்படுவர்


=============


14 என்னை சிலர் ஜெ போல இருப்பதாக கூறுகின்றனர்: தமிழிசை # அவங்க சும்மா காமெடி பண்ணி இருக்காங்க,அதைப்போய் சீரியசா எடுத்து புளகாங்கிதப்பட்டா எப்டீ?


=============


15 தமிழக அமைச்சர்கள் மோடி இருக்கும் வரை பயம் இல்லை என்கிறார்கள்: தமிழிசை # அவங்க சொல்றதை"எல்லாம் நம்பறீங்களா?அம்மா இட்லி சாப்ட்டார்னாங்க


=============


16 உயிரோடு இருப்பவர்களுக்க கட் அவுட் பேனர்கள் வைக்கக் கூடாது - ஹைகோர்ட் உத்தரவு முடியாது,ஆளைப்போட்டுத்தள்றோம்,கட்அவுட் வைக்கறோம்


==============


17 அடுத்து சில மாதங்களில் வங்கிகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: அருண் ஜெட்லி
முதல்ல இருந்தா?விளங்கிடு

===========


18 தொலைபேசியில் விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்: தமிழிசை
மிரட்ட வந்தா அவன் அரண்டுடுவான்


==============19 பைரவால யூஸ் பன்ன விக் தான் மெர்சல்ல யூஸ் பன்னோம் உன்மையை உடைத்த அட்லீ # ஓஹோ,அதுவும் பழசா?


==============


20 EPS தனிக்கட்சி தொடங்கும் நிலைமை ஏற்படும் – டி.டி.வி.தினகரன் # திடீர் திடீர்னு இவரு கனா கண்டு முழிச்சுக்கறாரு


==============

0 comments: