Tuesday, November 28, 2017

இதெல்லாம் ஒரு ஜோக்கா?

சார்,ஒரு பொண்ணு சினிமால நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கு,ஏன் ரூம் கதவை சாத்தறீங்க?


உதவி செய்வதை
வெளியில் தெரியாமல்
செய்யனும்னாங்க


==============

2 உடன்பிறப்பே!நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மழைவெள்ளத்தால் தமிழ்நாட்டில் இவ்வளவு பாதிப்புகள் இருக்காது,அவ்வளவு ஏன் மழையே இருக்காது,நம்ம ராசி அப்டி


=============


3 சார்.யோக்கியமா இருக்கறவனுக்கு FB ,வாட்சப் ,ட்விட்டர் எதுவும் செட் ஆகாதாமே?


ஆமா.எதும் செட் ஆகாது=============


4 ஒரு நல்ல வாய்ப்பு கதவ தட்டி இருக்கு


சூப்பர்,என்ன செஞ்சீங்க?
இனிமேத்தான்===========


5 மிஸ்.286


யோவ்.புரியல.
ட்விட்டர் லிமிட் 140 ல இருந்து டபுள் ஆகி 280 ஆகிடுச்சு.அப்போ ட்விட்டர்ல ஐ லவ் யூ சொல்ல 143 டபுள் 286 தானே?


==============


6 நான் கடுமையா உழைச்சு முன்னேறி இந்த ஊர்ல எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைக்கப்போறேன்.


வீதி ல நின்னு "டேய்"னா பாதிப்பேரு திரும்பிபார்ப்பாகளே?=============


7 ஒருநாள் லீவு கேட்க

ஒன்பது முறை இருமி காட்ட வேண்டியதாய் இருக்கு.
ஓஹோ,அப்போ 9 நாள் லீவ் வேணும்னா 1 வாட்டி இருமுனா போதுமா?81 வாட்டியா?


=============


8 சார்

ஸ்லிப்ஸ் 2 குடுங்க
அட்ஜசபிள் ஸ்ட்ராப்சா?ஆர்டினரியா?மேடம்
யோவ்.நான் அட்ஜஸ் பண்ணி போற டைப் இல்ல.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு=============


9 இதுவரைக்கும் எந்தப்பொண்ணையும் நான் நோஸ்கட் பண்ணதே இல்ல


பொய்
சாமி சத்தியம்
என்ன தொழில் பண்றே?
பொண்ணுங்களுக்கு மூக்குத்தி குத்தி விடறேன்===============

10 தலைவரே!சபரிமலை சீசனுக்கு கறுப்பு சட்டை எடுத்துட்டீங்க போல


ஆமா,ஆனா வெளில சொல்ல வேண்டாம்.பகுத்தறிவு க்கு பங்கம் வந்துடும்=============


11 மேயாத மான் படத்துல நயன்தாரா நடிச்சிருந்தா

படம் பேர் என்னவா இருக்கும்?
ஒரே ஏரியாவில் நிலையா மேயாத மான்


==============


12 கீர்த்தி சுரேஷ் க்கு ஜோடியா வெண்ணிற ஆடை மூர்த்தி நடிச்சா ஜனங்க என்ன பேசிக்குவாங்க?


மூர்த்தி பெருசா இருந்தாலும்
கீர்த்தி சிறுசு


===============


13 எடிட்டர் சார்.உங்க பத்திரிக்கைல எங்க படைப்பு வர என்ன செய்யனும்?


ஆம்பளைன்னா நல்ல படைப்பா அனுப்பனும்.பொண்ணுன்னா சொந்த டிபி வெச்சு அனுப்பனும்==============


14 தலைவரே!ரெய்டு நடக்குது.பதட்டப்படாம ஜாலியா இருக்கீங்க


போங்க தம்பி.இதை எல்லாம் எதிர்பார்க்காமலா ஒரு சாமார்த்திய திருடன் இருப்பான்?=============


15 சார்,தமிழ்நாட்ல நெ 1 டிவி சேனல் எது?

சன் டிவி
அதை ரெய்டு பண்ணாம லூசுத்தனமா டம்மி சேனலை ஏன் கும்மிட்டு இருக்கீங்க?

==============

16 மிஸ்.மொட்டை மாடில வாக்கிங் போலாம்,வர்றீங்களா?

எதுக்கு?
தன்னை உயர்வா நடத்தறவரை பொண்ணுக்குப்பிடிக்கும்னு சில பொண்ணுங்க சொன்னாங்க.


=============


17 சார்.லட்சுமி னு ஒரு குறும்படம்.எல்லாரும் விமர்சனம் பண்ணீட்டாங்க,நீங்க பண்ணலையா?

பாத்துட்டேன்.அது ஏதோ குறும்புப்படம் மாதிரி இருக்கு


=============


18 சாப்பாடு எவ்ளோங்க?

இங்கேயே சாப்ட்டா 75 ரூபா,பார்சல்னா 85 ரூபா
அடேங்கப்பா.அப்போ 8 சாப்பாடு பார்சல் கட்டித்தந்தா 1 சாப்பாடு ப்ரீயா?


================


19 நீங்க எந்த ட்வீட் போட்டாலும் எதுனா கேள்வி கேட்டு கலாய்ப்போம்

அப்டியா?பதிலை தனி ட்வீட்டா போட்டு நாங்க ஸ்கோர் ஏத்துவோம்


=============


20 ஜோக் சொல்றதுக்கு முன்னாடி..இது ஜோக் அப்டினு சொல்லிட்டிங்கனா யாரும் ரொம்ப கேள்வி கேட்க மாட்டாங்க..

இதெல்லாம் ஒரு ஜோக்கா?னு கேட்டுட்டா?

==============

0 comments: