Wednesday, November 22, 2017

பிக்பாஸ் ஜூலிக்கே டப் பைட்

ஊழல் வழக்கில் கைதானவர்கள் சொத்துகளைசவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் - சவுதி சவுதி"அனுப்பிட்டா?

=============


2 அதிமுக அழிய தொடங்கிவிட்டது திமுகவை எளிதாக அழித்து விடுவோம்-பொன்னார்.
# அடுத்தவங்க அழிஞ்சா அவ்ளோ சந்தோஷமா?சீக்கிரம் முன்னேறிடுவீங்க

=============


3 தமிழக அரசு செயல்படவில்லை: பொன்.இராதா # தலைக்கு எவ்ளோ தில் பாத்திங்களா?மோடியையே மட்டம் தட்டறாரு


=============


4 கட்சியில் நான் படிப்படியாக வளர்ந்துதான் முதல்வரானேன்.-EPS # அப்டி பாத்தா ஜெ இருக்கும்போதே துணை முதல்வர் ஆகி இருக்கனுமே?


==============


5 மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது: அன்புமணி ராமதாஸ் திடீர் பாராட்டு சொன்னாதான்"ரெய்டு வராதுன்னாங்க,சொல்லிட்டாரு


=============

6 கறுப்பு பணத்திற்கு எதிராக அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது - தமிழிசை
# அதாவது பாஜக வுக்கு எதிரா யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுக்கு எதிரா?


==============


7 பொருளாதார ரீதியாக இந்தியாவில் 2 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது-OPS # விளங்கட்டும்,ஆமா ஏதோ போராட்டம்,நியாயம்,தர்மம்னு பேசுனது?


============


8 தமிழகத்தில் நேரடியாக ஆட்சியை
பிடிப்போம் −தமிழிசை ட்ரெயினிங்க்தான் இந்த மறைமுக பொம்மலாட்ட ஆட்சி?

=============


9 வேதா இல்லத்தில் வேதாளங்கள் குடியிருந்ததால் தான் ரெய்டு நடைபெற்றது: எச்.ராஜா
# போற போக்குல போக்கிரி ங்க கூட அறிக்கை விடுவாங்க போல


==============


10 குஷ்பு ஒரு நடிகை என்பதால் அவருடைய விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை: செல்லூர் ராஜூ.# நாம கால்ல விழுந்து கிடந்தமே ஜெ அவங்க?


============

11 சசிகலாவும், தினகரனும் என்னை முதல்வராக்கவில்லை.கட்சியில் நான் படிப்படியாக வளர்ந்துதான் முதல்வரானேன்”−EPS ஜூலிக்கே டப் பைட் தர்றாரே?


=============


12 சாதி" பெயரை சொல்லி போனில் கூட திட்டக்கூடாது..! உச்சநீதிமன்றம் அதிரடி..! தினம் வேற.பொஞ்சாதி பேர சொல்லியாவது திட்டலாமா?


=============


13 மக்கள் சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் பயப்படுகின்றனர்: -லாலு வெச்சு சர்க்கஸ்காரன் ,பசுவை வெச்சு அரசியல்வாதி சம்பாதிக்கறான்


=============


14 எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம், அடிபணிய மாட்டோம் −Ops #
மோடி −அங்கே என்ன சத்தம்?
ops - சும்மா பேட்டி குடுத்துட்டு இருக்கேங்க


==========

15 குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்; யோகி ஆதித்யநாத் ,பதவி பலம் இல்லாத குற்றவாளிகள் என சொல்லவும்


============


16 பிரதமர் மோடி தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை -நிர்மலா சீதாராமன். # அப்டி சொன்னாதான் யாரும் விமர்சிக்க மாட்டாங்க?


=============


17 நான் தீவிர அரசியலுக்கு வர இந்திராகாந்தி தான் காரணம்- ஸ்டாலின் !# அந்த நன்றிக்கடனுக்குதான் காங் உடன் கூட்டணியா?


=============


18 சிலரின் தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.. வேதனை அடைந்துள்ளேன்.Eps ,தினகரன்,Ops .Eps 4 பேர் தான் மெயின்


=============

19 தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் -மு.க.அழகிரி ஸ்டாலின் சிஎம் ஆக விடமாட்டிங்க?


=============


20 தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: ஸ்டாலின்
# நாம நம்ம ஐடெண்ட்டியை விட்டுத்தரக்கூடாது தலைவா


==============

0 comments: