Monday, November 13, 2017

ஆளவந்தானுக்கு செய்வினை

போருக்கு தயாராகுமாறு சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவு- செய்தி# ரஜினி அங்க்கிள் ,நீங்க எங்கே இருக்கிங்க?

==============


2 தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்! - கமிஷனரிடம் புகார் # ஆளவந்தானுக்கு செய்வினை வைக்கப்பார்க்கறாங்க போல


==================


3 இந்து தீவிரவாதம்' என்போர் தேச விரோதிகள்... மன்னிப்பே கிடையாது! - உபி முதல்வர் # மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவர் மிதவாதியா?தீவிரவாதியா?

==============


4 அதிமுக, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது.//விஜயகாந்த்;

ஆமாம,மதிமுக கூடத்தான்் தேமுதிக வை ஏமாற்றி விட்டது.!


================


5 இந்தியாவை புதிய யுகத்துக்கு மோடி கொண்டுசெல்வார்' - முதல்வர் பழனிசாமி # கொண்டு சென்றா சந்தோஷம்.கொன்று சென்றா தோஷம்


==============


6 ஓடும் காரில் கதவை திறந்த படியே நின்று கொண்டு மோடி Bjpதொண்டர்களை பார்த்து கையசைத்தார் மிராக்கிள்.தமிழகத்தில் பாஜக க்கு தொண்டர்களா?


==============


7 2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை - தமிழக அரசு
# இரட்டை இலை சின்னம் ஜனவரிலதான் கிடைக்கும் போல


===============


8 மோடியை வரவேற்க
வெளிநாடுசென்ற
ஸ்டாலின் திடீர் வருகை
# 2ஜி தீர்ப்பு நாளை வருது,பராக் பராக்


==============


9 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின ,கேரளா னு யார் தயவையும் இனி எதிர்பார்க்கத்தேவை இல்லை


==============


10 மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை: மு.க.ஸ்டாலின் # வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடுவது உங்கள் அபிமான தளபதி


=============


11 "ஆமா, நான் தான் வரைஞ்சேன். இனிமேலும் அப்படித்தான் வரைவேன்"- கார்ட்டூனிஸ்ட் பாலா # பாலாபிஷேகம் இனிமேதான் போல


===============


12 அரசியலுக்காக நற்பணிகள் இல்லை, நற்பணிகளுக்காகத்தான் அரசியல்− கமல்# அதான் அப்பவே ரசிகர் மன்றமா தொடங்காம நற்பணி இயக்கமா தொடங்குனார் போல


===============


13 எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்−கமல் # இப்டிதான் MGR சொன்னார்.ஆனா ஜெ வந்தார்


=============


14 கட்சி தொடங்குவதற்கு மக்களிடம் நிதி கேட்பதா: கமலுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் # நீதி வழங்கத்தான் அந்த நிதி


================


15 காலணிகளை உதவியாளரை தூக்கி வர வைத்த மத்திய அமைச்சர் ஜூயல் ஓரம்: செய்தி -# இவரை எல்லாம் அரசியலை விட்டு ஓரம் கட்டனும்


==============


16 மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி -# மழை,புயல்,அரசியல்வாதி வருகை போன்ற ஆபத்துகளிலிருந்து ஒதுங்கி இருப்பான் தமிழன்


===================


17 ஜி.எஸ்.டி.யை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக்கூடாது: நிதிஷ்குமார்- # எதை எல்லாம் எதிர்க்கலாம்?னும் ஒரு லிஸ்ட் தரவும்


===============

18 2020க்குள் சாலை விபத்துகள் பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது−விஜயபாஸ்கர்#முதல் கட்டமா சாலைகளை பாதியா குறைச்சிடுவாங்களோ?


===============19 வெங்காய விலையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் -செல்லூர் ராஜூ # சின்ன வெங்காயம் சின்னவிலை,பெ.வெ பெ.வி?


=============


20 கைது நடவடிக்கைகள் என்னை ஒரு போதும் தடுத்து நிறுத்தாது: கார்ட்டூனிஸ்ட் பாலா # இன்னும் பெருசா எதிர்பார்ப்பார் போல.சிறப்பா செஞ்சிடுவாங்க

===============

0 comments: