Friday, March 15, 2013

பரதேசி - திரைவிமர்சனம் ( twitter review)


பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
 
 
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
 
 
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.
நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 
 
thanx - http://dohatalkies.blogspot.in/2013/03/blog-post.html

14 comments:

Rajeshdevanathan said...

முதன் முறையாக கருத்திடுகிறேன்.உங்கள் எழுத்திலேயே தெரிந்துவிட்டது படைப்பின் அருமை இரவு காட்சியில் இன்று பரதேசிதான்

கோவை நேரம் said...

சித்தப்பு....எங்க...உங்க விமர்சனம்

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

உங்க விமர்சனம் எங்க செந்தில் சார்...?
காலையிலிருந்து உங்க விமர்சனத்திற்கு காத்திருந்தால் ஏற்கனவே படித்த ஒருவரின் விமர்சனத்தை காப்பி பண்ணி போட்டு இருக்கிங்க...?

கி.ச.திலீபன் said...

இது ஏற்றுக்கொள்ள முடியாது. மகேந்திரனின் இடத்தை பாலாவால் நிச்சயம் கைப்பற்ற முடியாது. அதற்கான தகுதி பாலாவுக்கு கிடையாது. விமர்சனம் சிறப்பு... எரியும் பனிக்காடு நாவலிலேயே இந்த தாக்கத்தை நான் கண்டுணர்ந்து விட்டேன்.... விமர்சனத்துக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்...

Doha Talkies said...
This comment has been removed by the author.
Anonymous said...

அண்ணே எனக்கு வெக்கமா இருக்கு, எதுக்கு இந்த பொழப்பு. அடுத்தவர் உழைப்பை திருடி நீங்க சம்பாதிக்கும் செயல் நல்லாவா இருக்கு. நான் கூட உங்கள் விமர்சனத்தை தான் எதிர்பார்த்தேன். எதுக்கு இது. நன்றி போட்டாலும் ஏற்கக்கூடிய செய்கை இதுவல்ல.

Doha Talkies said...
This comment has been removed by the author.
Doha Talkies said...

உங்க விமர்சனத்தை படிக்க உங்க ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கும் பொது, நான் எழுதின விமர்சனத்தை அப்படியே உங்க பிளாக்ல காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கீங்களே இது நியாயமா ???

SENTHIL said...

Pls post ur review, i m waiting......

By
Bala

Unknown said...

இதெல்லாம் ஒரு படம்.இதுக்கு ஒரு கேடு கெட்ட விமர்சனம் வேற..பாலா ஒரு வெட்ககேடு..மகேந்திரன ஏன் அசிங்க படுத்திறிங்க..

ஆராமுதன் said...
This comment has been removed by the author.
ஜானகிராமன் said...

அண்ணே, நீங்க ப்ளாக் வச்சிருக்கீங்களா இல்ல பதிவுகளின் திரட்டி வச்சிருக்கீங்களான்னு தெளிவாச் சொல்லிடுங்கண்ணே. நிறைய போஸ்ட்ட புத்தக கட்டுரைகளில் இருந்து போடுவீங்க. இப்ப அடுத்தவர் பதிவை காபி பேஸ்ட் பண்ணியிருக்கீங்க. நீங்க நியாயமானவரா இருந்தா, அவரோட லிங்கை மட்டும் கொடுத்துட்டு விட்டிருக்கலாம். (இதுல, உங்க உலகமகா பதிவுகளை வேற யாரும் காப்பிஅடிச்சிடக்கூடாதுன்னு ரைட் கிளிக்கை டிஸ்ஏபில் வேற செஞ்சுரிக்கீங்க) அஞ்சு பத்து கூட தேராத நமக்கெல்லாம் ஏன் இந்த வீண்வௌம்பரம்?

R.Puratchimani said...

நண்பர்களே அவர்தான் இணைப்பு கொடுத்து நன்றி தெரிவித்துள்ளாரே...இது அந்த பதிவுக்கு கிடைத்த மதிப்பாக கருதவேண்டுமே தவிர இவரை சாடுவது எனக்கு ஏற்ப்புடையதல்ல.. அதே நேரத்தில் இதை நீக்க வேண்டுமா இல்லையா என்று கூற dohatalkies- கு உரிமை உண்டு...