1.விலைவாசியை கட்டுப்படுத்துவேன்னு தலைவர் சொன்னதை மக்கள் நம்பலியே ஏன்?
தலைவர் சம்சாரத்தையே அவரால கட்டுப்படுத்த முடியலை. அவர் எங்கே விலைவாசியை கட்டு படுத்த போறார்?!
..............................
தலைவர் சம்சாரத்தையே அவரால கட்டுப்படுத்த முடியலை. அவர் எங்கே விலைவாசியை கட்டு படுத்த போறார்?!
..............................
2.தலைவரோட பிரச்சாரத்தால மக்கள் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்களாமே?!
ஆமா, கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது எங்கள் ஆட்சியில்தான். அப்படின்னாரே!
..............................
3.ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் ஏன் மறுபடியும் போட்டியிடுறதில்லை.
ஏற்கனவே லவ் பொண்ணை ஏன் லவ் பண்ணனும்? புது ஃபிகரை ட்ரை பண்ணாத்தானே கிக்?!
..............................
4. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைமை தமிழகத்தில் தேர்தல் கமிழனால் நிலவுதுன்னு தலைவர் சொல்றாரே ஏன்?!
பின்னே என்ன? பணப்பட்டுவாடா பண்ண முடில, கள்ள ஓட்டு போட முடில இது என்ன எலக்ஷன்?
..............................
5.தலைவருக்கு ஏகப்பட்ட மெயில் அனுப்பியும் அவரு கண்டுக்கவே இல்லையே.., ஒரு ரிப்ளையும் வர்லையே!
எப்படி வரும்? அவர் ஜெயில்ல இருக்கார்..., பெயிலே கிடைக்கலை! இதுல மெயில் எப்படி கிடைக்கும்?
..............................
6. 2 தலைவர்களுக்குள்ளும் சண்டை. ஆனா, 2 பேரும் ஒரே மேடைல பிரச்சாரம் செய்வாங்கன்னு பிரச்சாரம் வருதே எப்படி?
காலைல இந்த தலைவர் பேசுவார். மாலைல அந்த தலைவர் பேசுவார்.
..............................
7. தொங்கு சட்டசபை உறுதியாமே?!
ஆமா, அரசியல் வாதிகளுக்கு சங்குதான்.
..............................
8.தலைவர் எதுக்காக ஒரு ஆளை மைக்ல ”நம்ம கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்”ன்னு டெய்லி சொல்ல வைக்குறார்?!
அந்த ஆள் பேரு மகேசன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்குறதால மகேசன் தீர்ப்பே மக்கள் தீர்ப்புன்னு உட்டாலக்கடி ஃப்ரூஃப் பண்ண நினைக்குறர்.
..............................
9.மக்கள் கேட்ட கேள்வில தலைவர் தடுமாறிட்டாராமே!!
ஆமா.., இதுவரை நீங்க எத்தனை முறை கட்சி மாறி இருப்பீங்கன்னு கேட்டாங்க.
..............................
கூட்டணி விசயத்துல குட்ட குட்ட குனிய மாட்டோம்ன்னு தலைவர் சொல்லிட்டாரே?!
ஆமா, எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது.
-------
11. தலைவரோட தேர்தல் அறிக்கையினை பார்த்து மக்கள் மயக்கம் போட்டுட்டாங்களாமே!
ஆமா.., நாங்க ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை ஸ்விஸ் பேங்க்ல போய் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண தேவையில்லை. இந்தியாவிலேயே “பிளக்மணி பேங்க்” ஒண்ணு ஓப்பன் பண்ணி தரப்படும்ன்னாரே!
..............................
.............................. .......
12. சி.பி.ஐ ரொம்ப மேனர்ஸ் தெரிஞ்சவங்க போல..,
எப்படி சொல்றீங்க?!
ரெய்டு பண்ண வரவான்னு பெர்மிஷன் கேட்ட பிறகே வர்றாங்களே!
..................................................
13.தலைவரே! 234 தொகுதியிலயும் தனித்து போட்டின்னு சொன்னீங்களே.., ஏன் பேக் அடிச்சுட்டீங்க?!
அது தற்கொலை முயற்சிக்கு சமமானதுன்னு சொன்னாங்க. தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றாமாச்சே?!
...............................................
14. ஓட்டு போட பணம் வாங்க வேண்டாம்ன்னு தேர்தல் கமிசன் சொல்லுதே.. நீங்க ஏன் கேட்க மாட்டேங்குறீங்க?
சாரி எனக்கு சொல்புத்தி கிடையாது..., சுய புத்திதான் இருக்கு.
........................................
15. தலைவர் நிறைய பேசுவாரே! இப்போ சிபிஐ கிட்ட பேசறதே இல்லையே ஏன்?
அது ராஜ தந்திரம்.., இது ராசா தந்திரம்.
...................................................
16. பெண்களின் முதல் கடமை வீட்டில் இருந்தபடியே தன் கணவன், குழந்தைகளை கவனிப்பதுதான்னு தலைவர் சொல்றாரே அப்போ ஆண்களின் கடமை என்ன?
ஆஃபீஸுக்கும் போய்ட்டு மனைவி, குழந்தைகளை கவனிக்கனும்.
............................................
17. இது கோடைக்காலம் சூரியனின் ஆட்சி. அதனால உதயசூரியன்ம்தான் ஜெயிக்கும்ன்னு தலைவர் சொல்றாறே?!
இது இலையுதிர் காலம் இல்லை. அதனால் இரட்டை இலைதான் ஜெயிக்கும்ன்னு இன்னொரு தலைவர் சொல்றாரே?!
........................................................
18.விட்டா நாட்டையே வித்துடுவீங்கன்னு சிலர் சொல்றாங்களே தலவரே?
பொன் முட்டையிடும் வாத்தை யாராவது சேல்ஸ் பண்ணுவாங்களா?!
.............................................
19. எனக்கு ஊழல் செஞ்சு பழக்கமே இல்லைன்னு சொல்லி தலைவர் ஓட்டு கேட்குறரே?!
ஜெயிச்சா பழகிக்கிடுவார்,...,
.....................................
20. தலைவரே! வேலை வாங்கி தர்றதா சொல்லி ஒரு இளம்பெணை கற்பழிச்சுட்டதா உங்க மேல ஒரு குற்ற சாட்டு இருக்கே.
ஆமா., ரேப் பண்றதுன்னா சின்ன பொண்ணைத்தான் ரேப் பண்ண முடியும்? பின்ன வயசான பொண்ணையா ரேப் பண்ண முடியும்?!
---------------