Friday, July 27, 2012

சுழல் - சினிமா விமர்சனம்



http://www.fingertipszone.com/cinema_images/tamil/suzhal/suzhal_11.jpg 

ஹீரோ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்.. பார்ட் டைம் ஜாப்பா எலக்ட்ரீஷியன் ஒர்க்கும் பார்ப்பாரு.. பிரதாப் போத்தன் ஒரு போதை மருந்துப்பிரியர்.. அடிமை.. அவருக்கு ஒரு சம்சாரம்.. எப்போ பாரு அவரை கரிச்சுக்கொட்டிட்டே இருக்கு.. எதுக்குமே நீ லாயக்கில்லை.. உன்னை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்னு  24 மணி நேரமும் புலம்பிட்டே இருக்கு.. கோபத்துல எதையோ தூக்கிப்போட மெயின் ஸ்விட்ச் பணால்.. இப்போ எலக்ட்ரீசியன் ஹீரோ அங்கே எண்ட்ரி.. 


 என்ன மலையாள பிட்டுப்படம் மாதிரி ஓப்பனிங்க்கா இருக்கேன்னு அவனவன் நிமிர்ந்து உக்கார்றான்.. ஆனா கதை வேற மாதிரி போகுது.. அதாவது பிரதாப் போத்தன் போலீசால் கண்காணிக்கப்படற ஒரு சமூக விரோதி,.,. என்னமோ பண்றார்.. சட்டத்துக்குப்புறம்பா சம்பாதிக்கறார்.. அது என்னன்னு கண்டு பிடிக்க  அதுல் குல்கர்னி.. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட்.. 




http://www.mottaboss.com/stills/jun12/26/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_eab1745.jpg


படத்தோட மெயின் கதை இடைவேளைக்குப்பின் தான்.. இப்போ டைம் பாஸ் பண்ணனும்.. எப்படி 5 ரீல் ஓட்ட? ஹீரோவுக்கு ஒரு அறிமுக காட்சி பாடல்...  அவங்க நண்பர்களோட சேர்ந்து ஹீரோ கிராமத்துக்கு போறப்ப ஒரு ஜாலி பாட்டு ( ஜாலி பாட்டுன்னு யூனிட் நினைச்சுக்குச்சு.).. அங்கே நண்பர்களுக்குள் ஒரு ஜோடி லவ் செட் ஆகுது.. ஹீரோ ஒரு கற்பனை ஹீரோயின் கூட ஒரு பாட்டு.. 3 பாட்டு ஆச்சா? அவங்க அந்த கிராமத்துல இருந்து ரிட்டர்ன் வர்றப்போ ஒரு விபத்து.. ஒரு பொண்ணு அவுட்.. ஒரு பையன் சீரியஸ்.. அவசரமா ஆபரேஷனுக்கு 50 லட்சம் பணம்  தேவைப்படுது..


 ஹீரோ மறுபடி பெண்டிங்க் ஒர்க் பார்க்க  பிரதாப் வீட்டுக்கு போறாரு.. பிரதாப்க்கு கொச்சின்ல இருந்து ஒரு கொரியர் கவர் வ்ருது.. அதை நைசா ஹீரோ அபேஸ்.. அப்புறம் தற்செயலா பிரதாப் டெட்.. இதான் சான்ஸ்னு ஹீரோ அந்த கவரை எடுத்துட்டு கொச்சின் போறார்.. 


 அங்கே ஒரு உயிர் விளையாட்டு.. சின்னப்பசங்க எல்லாம் வரிசைல நின்னு சுத்தி தொட்டு விலையாட்டு விளையாடற மாதிரி.. அதாவது கோடீஸ்வரர்கள் பலர் பெட் கட்டி இருப்பாங்க.. 10 பேர் சுற்றி நின்னு ஒருவரை ஒருவர் குறி பார்த்து சுடனும்.. ரிவால்வர்ல  3 குண்டு தான் இருக்கும்.. லக் இருக்கறவன் பிழைப்பான்.. லக் இல்லாதவன் எமன் கிட்டே போவான்.. 

 3 ரவுண்ட்லயும் ஹீரோ ஜெயிச்சு பணத்தை அள்ளிக்கிறார்..  அப்புறம் என்ன ஆச்சு? என்பதை வெண் திரையில் காண்கன்னு சொல்லலாம்.. ஆனா 98% கதை முடிஞ்சது.. மீதி 2 லைன் தான்.. அதையும் சொல்லிடறேன்.. ஹீரோவை பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருத்தன் மலையூர் மம்பட்டியான் செந்தில் மாதிரி டொப்புன்னு கொன்னுடறான்.. ஹீரோ ஃபிரண்ட் அநாமத்தா ஹாஸ்பிடல்ல இருக்கார்.. போலீஸ் ஆடியன்சை பார்த்து நக்கலா சிரிக்க  த எண்ட்.. 




http://haihoi.com/Channels/cine_gallery/Suzhal-Movie-Stills-53_S_109.jpg


 இந்த கேவலமான படத்துல  அதுல் குல்கர்ணி நடிக்க ஒத்துக்கிட்டது ஏன்னு தெரியல.. படத்துல மொத்தமா 14 சீன் தான் வர்றார்.. அவர் வர்ற நிமிஷங்கள் டோடலா 18 நிமிஷம் தான்.. பேசற வசனங்கள்  ஏ ஃபோர் சீட்ல  கால் பக்கம். அட்டகாசமான நடிகரை வேஸ்ட் பண்ணிட்டாங்க.. 


காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற ஹீரோ பாவம்.. சொல்லிக்க ஏதும் இல்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ( சப்போஸ் நெக்ஸ்ட் பட சான்ஸ் கிடைச்சா.. ) ஏன்னா முத படம் ஊத்திக்கிச்சுன்னா யாரும் சான்ஸ் தர மாட்டாங்க.. 

படத்துல ஹீரோயின்னு யாரும் இல்லை ( அதுக்காகவே இந்த டைரக்டரை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. ) படத்துல 6 கேர்ள்ஸ் கேரக்டர் வருது.. எல்லாரும் ஒண்ணைக்கண்ட மாதிரியே குதிரை முகக்காரிகளா இருக்காங்க.. தமிழனுக்கு இது சுத்தமா பிடிக்காதே.. எப்படி செலக்ட் பண்ணாரு? அட கதையைத்தான் ஒழுங்கா செலக்ட் பண்ணலை.. அட்லீஸ்ட் சதையை சாரி பொண்ணுங்களையாவது பார்க்கற மாதிரி பிடிச்சுப்போடக்கூடாது? அட்டர் வேச்ட்.. ஆல் கேர்ள்ஸ்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZHiHjOePidR8zwRNo381oWhHtIRLpoq77AtsuXQ9vbiC4Bqfbehx1CzMLRq0Dn4a97o5OxGPL07o34BF19O4hs4vjJSGPjk-MHmGP7ZFcsVS47iU6ZsLD6mSaaa6l3zGzEQbeyR8WlgOG/s1600/Suzhal+Movie+Audio+Launch+Stills+Suzhal+Movie+Audio+Release+Event+Photos+(4).jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  குருதிப்புனல் கமல் ரேஞ்சுக்கு அதுல் குல் கர்னியை ஃபோட்டோ எடுத்து பிரமாதமா போஸ்டர் டிசைன் செஞ்சது, ஸ்டில்ஸ், விளம்பரங்கள்ல நல்ல ஆக்‌ஷன் படம் மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது



2. படத்தோட ஹீரோ அதுல் குல்கர்னிதான்னு எல்லாரையும் நம்ப வெச்சது.. அது கூட தேவலை.. அதுல் குல்கர்னியையே நம்ப வெச்சிருக்காரு ( ஸ்டார் டஸ் ஆங்கில மாத இதழ்ல அண்ணன் பேட்டி குடுத்திருக்காரு ஹய்யோ அய்யோ பாவம் )


3. சொல்லாத ஆசை எல்லாம் சொல்ல வந்தேன் பாடல் காட்சில ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதைல வர்ற பரிசல் காட்சிகளை எல்லாம் சுட்டிருக்கார். இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு 


4. ஹீரோவின் நண்பருக்கு நடக்கும் பைக் ஆக்சிடெண்ட் தத்ரூபம்.. அதில் அட்டகாசமாக பங்கு பெற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஒரு சபாஷ்.. 



5. யார் யாரோ பூமியில் வந்து போனார்கள் பாடல் வரிகள் கிளாசிக்..  வாழ்க்கைத்தத்துவத்தை பிழிஞ்சுட்டாங்க.. ஆனா மிஸ் பிளேஸ்.. 




http://www.tollywoodnews.net/wp-content/plugins/RSSPoster_PRO/cache/c976e_thumbs_suzhal-movie-stills-27.jpg



 இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள்


1. படத்துக்கு வர்ற தமிழ் ஆடியன்சை எல்லாம் கேனக்கிறுக்கனுகன்னு நினைக்கறீங்களா? என்ன இதுக்கோசரம் பட பிரமோஷன்கள்ல, பிரிவ்யூ ஷோக்கள்ல எல்லாம் அதுல் குல்கர்னி படம்னு பில்டப் கொடுக்கறீங்க? முறைப்படி போஸ்டர்ல கெஸ்ட் ரோல்ல அதுல் குல்கர்னின்னு போடனும்.. 



2. ஹீரோ எலக்ட்ரிகல் ஒர்க் பாதி பெண்டிங்கல வெச்சுட்டு டூர் போறார்.. அப்போ ஓனர் சரி போ நான் பாத்துக்கறேன்கறார்.. அப்புறம் அவர் டி வி தான் பார்த்தார், ஹீரோ ரிட்டர்ன் வந்து உயிருக்கு போராடிட்டு இருக்கற நண்பன் கூட ஹாஸ்பிடல்ல இருக்கும்போது  கூட விடாம துரத்திட்டு வந்து பெண்டிங்க் ஒர்க்கை முடிச்சுக்குடுக்க சொல்றார்.. ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? வேற ஆளே இல்லையா?


3. ஹீரோ கொச்சின்க்கு ரிசர்வ்டு டிக்கெட்டோட ரயில் ஏறிட்டார்.. ஆனா ஒரு சின்னப்பொண்ணு கிட்டே “ கொஞ்சம் தள்ளி உக்காரும்மா”ன்னு இடம் பிடிக்கறார்.. சரி அன்ரிசர்வ்டு கம்பார்ட் மெண்ட்ல ஏறிட்டார் போலன்னு நினைச்சா டி டி ஆர் செக்கிங்க் வர்றார்.. அப்போ சிலர் ஸ்டேண்டிங்க்ல வேற பேக்ல  நிக்கறாங்க..  எந்த ஊர்ல ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல ஸ்டேண்டிங்க் எல்லாம் வந்துச்சு?


4. கதை கொச்சின்ல நடக்கறப்போ ஒரு பய மலையாளமே பேசலை.. ஆல் தமிழ் தான்.. கொச்சின் தமிழ் நாடா மாறிடுச்சா? ( போனாப்போகுதுன்னு போலீஸ் மட்டும் மலையாளம் பேசுது)


5. ஹீரோ ஒரு சீன்ல ரயிலை பிடிக்க தண்ட வாள நடுவால வேகமா ஓடறார், பக்கத்துலயே அம்புட்டு இடம் காலியாத்தானே இருக்கு? ஏன் அப்படி கேனத்தனமா ஓடறார்? ஹீரோ பில்டப்பா?


6. பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையா நினைக்கறீங்களா? படத்துல வர்ற 6 பொண்ணுங்க பேர்ல ஒரு ஆள் பேரு கூட டைட்டில்ல வர்லை.. டைட்டில்ல மொத்தமே  3 பேர் பேருதான் வருது.. அப்புறம் எல்லாம் டெக்னீஷியன் நேம் தான்.. 


7. இந்த ஆக்‌ஷன் படத்துல தேவையே இல்லாம 6 பாட்டு.. அதிலும் அந்த குத்தாட்ட அயிட்டம் சாங்க் ரொம்ப மட்டம்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHYTyVwvabQLU5p2TYbWlZHyiID9VqL_1jJHcKzuRO5tdMSE7rM9lYfFAHV_JDkKZyMP7lxCVmy34f4oA0ntI6qw-3hpd_avmH98MzVxFydJV6VfR4kgfwTavfRHw06H6NL2NuzjqEwoU/s1600/suzhal_latest_wallpapers_001.jpg


 படத்துல வசனகர்த்தாவுக்கு வேலையே இல்லை.. சமீபகாலமா அதாவது நான் பார்த்த கடந்த 10 வருட படங்கள்ல வசனம் இவ்ளவ் மோசமா இருக்கற படம் இதுதான்.. போனா போகுது.. 3 வசனம் சொல்றேன்





 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அடுத்தவங்களை எதிர்பார்க்கற மாதிரியே இருக்கு?


2. ஒரு நாட்டோட எக்கனாமி, லா & ஆர்டர் சீர் குலைக்கற மாதிரி சக்தி அந்த கும்பல் கிட்டே இருக்கு.. அதை வளர விடக்கூடாது.. 


3. நீங்க சொன்னது சரிதான் சார்.. எதிரிங்க பூமியிலோ, வானத்திலோ இல்லை.. தண்ணில தான் இருக்காங்க ( ஆமா சரக்கு அடிச்சுட்டு கப்பல்ல இருக்காங்க )





http://moviegalleri.net/wp-content/gallery/suzhal-movie-stills/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_2a0f843.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் எதிர்பார்க்கும் ரேங்க் - சுமார்


டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க்கிங்க்  -  1.5 / 5


டெக்கான் கிரானிக்கல் - 3/10




சி.பி - கமெண்ட்  - தெளிவா சொல்லிட்டேன் இது ஒரு குப்பை படம்னு.. யாராவது ஃபோன் பண்ணி படம் எப்படி?ன்னு கேட்டா கடுப்பாகிடுவேன்.. ஆண்கள், பெண்கள் யாரும் பார்க்கத்தேவை இல்லாத படம்..இந்தப்படத்தோட ஒரிஜினல் கீழே உள்ள படமாம் தகவல் உதவி அதிஷா


 டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html


பொல்லாங்கு விமர்சனம் - http://www.adrasaka.com/2012/07/2_28.html
 


Movie Review: 13 Tzameti

6 comments:

ராஜி said...

தெளிவா சொல்லிட்டேன் இது ஒரு குப்பை படம்னு.. யாராவது ஃபோன் பண்ணி படம் எப்படி?ன்னு கேட்டா கடுப்பாகிடுவேன்.. ஆண்கள், பெண்கள் யாரும் பார்க்கத்தேவை இல்லாத படம்..
>>>
டி.வில கூடவா பார்க்க முடியாது. ரூ.150ம், 3 மணிநேரத்தையும் மிச்சம் பண்ணி குடுத்ததுக்கு நன்றி.

Unknown said...

ஹ்ம்ம் நன்றி

Doha Talkies said...

அண்ணே இது எதோ இங்க்லீஷ் படத்தோட கப்பியாம்ல, நெசந்தானா?

”தளிர் சுரேஷ்” said...

இப்படி ஒரு படம் வந்துதுன்னு உங்க விமர்சனம் படிச்சுத்தான் தெரியுது?

கோவை நேரம் said...

தெய்வமே....தெய்வமே...

கவி அழகன் said...

Iyo iyo