Thursday, October 27, 2011

ADRASAKA -ஏழாம் அறிவு - சூர்யா-வின் அதிர்ச்சித்தோல்வி - சினிமா விமர்சனம்

a
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/22239_17_7AumArivu.jpg 

பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு?ன்னு சத்தமே இல்லாம படத்தை ரிலீஸ் பண்றதும் தப்பு..ஓவர் பில்டப் கொடுத்து நொடிக்கு நூறு விளம்பரம் போட்டு மக்களை அதிகமா எதிர்பார்க்க வைப்பதும் தப்பு.. ஒரு நல்ல படம் கூட ஓவர் எக்ஸ்பெக்ட்டேஷனால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாமல் போகும் என்பதற்கு இந்தப்படம் அழகிய உதாரணம்..

பொண்ணு பார்க்க போறப்ப பொண்ணு எப்படி இருக்கும்?னு மாப்ள கேக்கறப்ப நீங்க தான் வர்றீங்க இல்ல, பார்த்து தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லிடனும் ,சும்மா ஐஸ்வர்யாராய்  மாதிரி இருப்பா, மஹா லட்சுமி தோத்தா போ அப்டினு சொல்லி கூட்டிட்டுப்போனா ஃபிகரு நல்லா இருந்தாக்கூட மாப்ளைக்கு பொக்குன்னு போயிடும்..

சரி , படத்தோட கதை என்ன?சீனா இந்தியாவுக்கு எதிரா ஒரு பயோ கெமிக்கல்வார் (BIO -CHEMICAL WAR) தொடங்குது.. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் பரவுன வைரஸ் அது.. இந்த வைரஸ்ஸை அழிக்கனும்னா 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் மீண்டும் வரனும்.. அவருக்குத்தான் அந்த மெடிக்கல் மேட்டர் எல்லாம் தெரியும்... அவர் வர முடியாட்டி சப்ஸ்டிடியுட்டா ஒருத்தர் அவரோட பரம்பரைல இருந்தே வரனும்.. அதாவது நேரு குடும்பத்துல இருந்தே காலம் காலமா பிரதமர் இந்தியாவுக்கு வர்ற மாதிரி.. 


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/09/7th-Sense-Movie-Stills.jpg

போதிதர்மர் சூர்யா.. அவர் டி என் ஏ மேட்ச் ஆகறதும்  இன்னொரு சூர்யா.. அப்புறம் என்ன? 2* 2 = 4..இந்த ஆக்‌ஷன் கதையை தட தடனு ஓடற த்ரில்லர் கதையா எடுத்திருந்தா படம் செமயா வந்திருக்கும்.. நம்ம தமிழர்கள் ஹீரோவுக்கு ஜோடி கேப்பாங்க,, டூயட், வேணும், லவ் வேணும், லவ் ஃபெயிலியர் சாங்க் வேணும்னு ஸ்டோரி  டிஸ்கஷன்ல பலர் குழப்பிட்டாங்க போல.. படத்தோட மெயின் மேட்டர்க்கு வர்றதுக்குள் 5 ரீல் முடிஞ்சுடுது..

ஒரு படத்துக்கு வில்லனுக்கு ஓப்பனிங்க் சீன்ல இவ்வளவு கைதட்டல் தியேட்டர்ல கிடைக்கறதை கேப்டன் பிரபாகரனுக்குப்பிறகு இந்தபட சைனீஸ் வில்லனுக்கு கிடச்சதை பார்த்தேன்.. ஆஹா. என்ன பாடி லேங்குவேஜ்...? நடை.. எதுக்கும் பதட்டப்படாத, ஆர்ப்பாட்டம் ,ஆரவாரம் பண்ணாம நிதானமா செம ஆக்டிங்க்பா.. அவர் போடும் ஃபைட்ஸுக்கு விசில் பறக்குது.. மார்ஷியல் ஆர்ட்ஸ்ல மன்னர் போல.. 

ஸ்ருதி.. ஹிப், லிப் மட்டும் அழகு .. மற்றபடி ஃபேஸ்கட் தமிழனை தூங்க விடாமல் பண்ணும் சக்தி கொண்டதல்ல.. சிலர் சொல்வது போல் இவர் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி ஆகவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமல் -ன் மகள் என்பதால் அவரை ரசிக்க மனசே வர மாட்டேங்குது.. அவர் முகத்தில் ரொமான்ஸே வரவில்லை.. சூர்யா கூட டான்ஸ் ஆடும்போது மதுரை நடன நாட்டிய நிகழ்ச்சியில் வரும் ஜோடி போல் ஏனோதானோ என ஆடுகிறார்..

சூர்யாவுக்கு இந்தப்படத்தில் பெரிய அச்சீவ்மெண்ட் எல்லாம் எதுவும் கிடையாது.. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் சிக்ஸ் பேக் காட்றார்.. போதி தர்மராக வரும்போது கம்பீரம் காட்றார். அவ்ளவ் தான்..  ஒரு விக்ரமோ, கமலோ இதை விட நல்லா பண்ணி இருக்க முடியும்.. படத்தில் வில்லனும் , ஹீரோயினுமே அதிகம் ஆக்ரமிக்கிறார்கள்.. http://www.indiancinemagallery.com/Gallery2/d/676932-1/Shruthi+Hassan+in+7am+arivu+stills+_22_.jpg

படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1. சார்.. உங்க சர்க்கஸ்ல இருந்து ஒரு குரங்கு வேணும்.. கூட வேணா இவர் வரட்டும்.. 


இவனை வேணா கூட்டிட்டு போங்க, சும்மாதான் இருக்கான், ஆனா  எனக்கு குரங்கு வேணும்..அது முக்கியம்.. 


2. ஹீரோ.. - டேய் டேய்.. அவங்க என்னையே பார்க்கறாங்க.. 


நோ, முறைக்கறாங்க.. 

3. டேய்.. சைட் அடிச்ச பொண்ணு கிட்டே ஃபோனை அடிச்ச முத ஆள் நீ தாண்டா.. 

4. முதல்ல இந்த ஃபோனை அவ கிட்டே குடு.. 

இப்போவே குடுத்தா ஜஸ்ட் தாங்க்ஸ் தான் சொல்வா (ம்க்கும், நாளைக்கு குடுத்தா மட்டும் ஐ லவ் யூ சொல்லிடப்போறாளா?)

5.  ஃபோன் ரிங்க் ஆகுது.. எடு எடு..

உடனே எடுத்தா நமக்கு வேலை இல்லைன்னு நினைச்சுவாங்க.. கொஞ்ச நேரம் போகட்டும்.. 

6.  யானைக்கு உடம்பு சரி இல்லை.. அதான் ..

அதுக்காக.. இப்படியா?

பின்னே? யானையை தூக்கிட்டா போக முடியும்?

7.  என்னை அவ உயிரோட போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டா.. 

8, உனக்கு வேணும்னா நீ என்ன வேணாலும் செய்வே, எதை வேணும்னாலும் இழப்பே.. 

வேணாம். வேற அர்த்தம் வருது.. இது நல்லாலை.. 

9.  போதி தர்மர் ஒரு தமிழர்.. இன்னொரு புத்தர்னு ஓஷோ சொல்லி இருக்காரு.. 

10. ஒரு மனிதனோட டி என் ஏ தான் அவனோட நோய் , திறமை எல்லாத்தையும் தீர்மானிக்குது.. 
http://www.bollywoodchaska.com/images/topic_attachement/13738-7.jpg

11. இப்போ நாம நினைச்சா 1600 வருஷங்கள் முந்தைய போதி தர்மரோட திறமைகளை, அறிவை உனக்குள்ள கொண்டு வர முடியும்..

12. சயின்ஸ் உதவியால 6 வது நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மரை , அவரோட ஜீன்ஸை ஆக்டிவேட் பண்ண முடியும். 

13. ஏன் சார் தமிழை தப்பா பேசறீங்க? 800 வருஷங்கள் முன்னே வந்த ஆங்கிலம் பெரிசா? 200000 ஆண்டுகள்  முன் வந்த தமிழ் பெரிசா? ( தமிழ் தான் பெரிசு ஏன்னா ஆங்கிலம் 26 லெட்டர்ஸ் ஒன்லி, தமிழ் - 247)

14.  வெள்ளைக்காரன் இங்கே வந்து நம்மளை எல்லாம் அடிமை ஆக்கிட்டு போனான்.. இப்போ நாம படிச்சு முடிச்சுட்டு ஃபாரீன் போய் அவனுக்கு அடிமை ஆகிட்டு இருக்கோம்..

15.  அவங்க வர்றதுக்குள்ள தேடு..

எதை?

எதையாவது.. எது வித்தியாசமா படுதோ அதை.. 

16.. ஏய்.. எதுக்கு குப்பைத்தொட்டியை தேடறே?

ஒரு மனுஷனைப்பற்றி நல்ல விஷயம் தெரியனும்னா அவன் படிக்கற புக்கை பாரு,கெட்ட விஷயம் தெரியனும்னா அவன் வீட்டு குப்பைத்தொட்டியப்பாரு..

17.  எனக்கு அவன் மேல லவ் எல்லாம் இல்ல, ஆனா அவன் கூட இருந்தா ஒரு சந்தோஷம் , தைரியம் எல்லாம் கிடைக்குது ...


18. முன்னே எல்லாம்  சயிண்ட்டிஸ் மருந்தை கண்டு பிடிப்பாங்க.. இப்போ நோய்களை கண்டு பிடிக்கறாங்க.அந்த நோயை பரப்பி அப்புறம் மருந்தை கண்டு பிடிச்சு மார்க்கெட் பண்ணப்பார்க்கறாங்க.. .
19. அந்தக்காலத்துல சாதாரணமா மனுஷன் இறந்தாக்கூட அவன் மார்புல கீறி புதைப்பாங்க.. விழுப்புண் எஃபக்ட்க்காக.. அப்படிப்பட்ட வீரம் விளைஞ்ச மண் இது,.,. நாம ஓடி வந்து எஸ்கேப் ஆனதை நீ பெருமையா பேசிட்டு இருக்கே.. 

20. தமிழர்களை ஆஸ்திரேலியாவுல அடிச்சாங்க, இலங்கைல அடிச்சாங்க, இப்போ தமிழ் நாட்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க/.. நாம இனி திருப்பி அடிக்கனும் ..

21. வீரம் வீரம்னு சொல்லி நாம் இலங்கை சண்டைல தோத்துத்தானே போனோம்?

அது துரோகம்.. வீரத்துக்கும், துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம வாழ்ந்திட்டிருக்கே.. ஈழத்துல நாம தோத்ததுக்கு துரோகம் தான் காரணம்..http://www.chitramala.in/photogallery/d/576219-1/shruthi-hassan-hot-stills+_3__001.jpg

இயக்குநர் & டீம் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. போதி தர்மர் பற்றிய குறிப்பு கிடைத்ததும் அதை கமர்ஷியல் படம் ஆக்க முடியும் என நினைத்ததற்கும், அதை 70 % சரியாக செயல் படுத்தியமைக்கும்..

2. வில்லனின் கேரக்டர்க்கு செம முக்கியத்துவம் கொடுத்ததும்..சூர்யாவை அண்டர் ப்ளே ஆக்டிங்க் பண்ண வைத்ததும்..

3. ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.. ஃபாரீன் லொக்கேஷன்களில், இந்தியாவில்... 
4. பாடல்காட்சிகளை படம் ஆக்கிய விதம்.. ஓ ரிங்கா ரிங்கா  பாட்டுக்கான பிக்சரைசேஷன் பிரமாதம்.. பொன்னந்தி மாலையில், உன் அன்புச்சாரலில்.. செம மெலோடி.. இசை, படப்பிடிப்பு அனைத்தும் கிளாஸ்.. யம்மா யம்மா  காதல் பொய்யம்மா பாடல் ஓடும்போது பல வரிகளுக்கு செம கிளாப்ஸ்.. குறிப்பாக 

அ.  பொம்பளையை நம்பி செத்தவன் உண்டு.. 

ஆ. காதல் ஒரு போதை மாத்திரை..

இ. திட்டம் போட்டு  என்னை திருடாதே.. 

அப்பிறம் நடன் இயக்குநர் அப்ளாஸ் வாங்குவது சல்லேலமா?. உள்ளம் துள்ளுமா? இந்தப்பாட்டுக்கு ஸ்ருதியின் நடனம் கவனிக்க வைத்தது..

5. பஸ் ஸ்டாப்பில் ஹீரோயின் நிற்க ஹீரோ அந்த வழியே யானையில் வருவதும் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதும் செம ஜாலியான காட்சி..

6. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனிலும், போதி தர்மருக்கான பில்டப் சீனுக்கும் கொடுக்கப்படும் பின்னணி இசை , பில்டப் மியூசிக் டாப்.. http://ravinder541.files.wordpress.com/2011/02/hot-exposing-unseen-sexy-navel-photos-of-shruthi-hassan.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்


1. போதி தர்மரைப்பற்றி ஓப்பனிங்க்லயே 2 ரீல் டாக்குமெண்ட்ரியாக காட்டியிருக்க தேவை இல்லை.. பாட்ஷா வில் பாட்ஷாவாக ரஜினி வரும் சீனை விட அவர் வருவதற்கான பில்டப் சீன்கள் தான் இடைவேளை வரை களை கட்டியது.. அது போல் போதி தர்மர்  பற்றி கொஞ்சம் பில்டப் கொடுத்து விட்டு இடைவேளை டைமில் அந்த ஃபிளாஸ்பேக் காட்டி இருக்கலாம்.. 

2. வெற்றி விழா ரேஞ்சில் படம் செம ஸ்பீடா ஓடிட்டே இருக்க வேண்டிய ஆக்‌ஷன் படம்  இது.. அதில் கமர்ஷியல்  கலக்கறேன், காம்ப்ரமைஸ் பண்ணீக்கறேன்கற பேர்ல எதுக்கு லவ், காதல் தோல்வி பாடல்..? இது தான் எல்லாப்படத்திலும் வருதே?

3. பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஸ்ருதி காலில் ஹை ஹீல்ஸூடன் இருக்கிறார், யானை மேல்  ஏறும்போது வெறுங்காலுடன் இருக்காரே? எப்டி? பஸ் ஸ்டாப்லயே கழட்டி வெச்சுட்டரா?

4. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யா தன் சொந்தகாரங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க , 20 டிக்கெட் குடுங்கறார், ஆனா 11 பேர் தான் வந்தாங்க ( இதை எல்லாம் எதுக்கு மெனக்கெட்டு எண்ணிட்டு இருந்தே?)

5. வில்லன் நாய்க்கு வைரஸ் ஊசி போடறப்ப அது எதிர்க்கவே இல்லையே? ஏன்? அட்லீஸ்ட் வலிக்கு ஒரு மூவ்மெண்ட் கூட தராதா?

6. ஸ்ருதிக்கு ஒரு சேசிங்க்ல முகம் பூரா அடிபடுது.. குறிப்பா நெற்றில கன்னத்துல நல்ல காயம் ( கெட்ட காயம்னா என்ன?), ஆனா 12 நாள் ட்ரீட்மெண்ட் சூர்யாவுக்கு தர போறப்ப எந்த தழும்புமே இல்ல.. எப்டி? பிளாஸ்டிக் சர்ஜரி?


7. சூர்யா ஆராய்ச்சிக்கூடத்துல ஒரு தண்ணீர் தொட்டில முழுக வைக்கப்படறார்.. நாள் கணக்குல அவர் தண்ணிக்குள்ள இருக்கார்.. எப்படி மூச்சு வாங்கறார்? நீரில் முழுகி ஆராய்ச்சி பண்றவங்க சுவாசிக்க ஒரு மாஸ்க் மாதிரி போடுவாங்களே.. அதை ஏன் போடலை?


8. வில்லன் ஹிப்னிடிசம் மூலமா பலரை தன் வசம் இழுத்து அவன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறான் , ஓக்கே, ஆனா அதுக்கு குறைஞ்ச பட்சம் 10 அடி பக்கத்துல ஆள் இருக்கனும்னு ஹிப்னாடிச ஸ்பெஷலிஸ்ட் சொல்றாங்க.. ஆனா வில்லன் 20  மீட்டர் தூரம், 1 கி மீ தூரத்துல இருக்கற ஆள்களை எல்லாம் அப்படி பண்றானே எப்டி?

9. அப்படியே ஹிப்னாடிசம் செஞ்சாலும் சாதாரண ஆள் குங்க் ஃபூ ஃபைட் எல்லாம் எப்படி போடறார்? 

10. தேமேன்னு அவங்க பாட்டுக்கு ரோட்டுல போய்ட்டிருக்கற ஆள்ங்க எல்லாம் மெனக்கெட்டு ஏன் வில்லனை , அவன் கண்களை உத்து பார்க்கறாங்க, திரும்பி பார்க்கறாங்க? அதென்ன தமனா இடுப்பா?
http://1.bp.blogspot.com/_a3ZI07KGbwA/TPo7YYXWndI/AAAAAAAAGBM/ryl-SJAJqv0/s1600/shruthi-hassan-hot-stills(9).jpg

ஏ செண்ட்டர்ல 50 நாட்கள், பி செண்டர்ல 30 நாட்கள், சி செண்டர்ல 20 நாட்கள் ஓடும்.. 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஒரு கமர்ஷியல் மசாலா படம் என்ற அளவில் ரசிக்கறவங்க பார்க்கலாம், ஜாலி எண்ட்டர்டெயினிங்க் தான்..ஆனா கஜினிக்கு ஒரு மாற்று கம்மிதான்

ஈரோடு ஆனூர்-ல் படம் பார்த்தேன்..http://www.southdreamz.com/wp-content/uploads/2011/04/shruti-hassan-hot-pic-23.jpgaடிஸ்கி 1 -

வேலாயுதம் - கமர்ஷியல் ஹிட்டா , விமர்சியல் ரிவீட்டா - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

RA -ONE - ஷாருக்கான் -ன் ட்ரீம் சப்ஜெக்ட் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 3 -

பிரபல பதிவர்கள்-ன் தீபாவளி அட்டூழியங்கள்

32 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் அறிவு

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபி படம் பாத்துட்டாரு.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

இதுவரை விமர்சனத்தில் இதுதான் நீளமான விமர்சனம் என நினைக்கிறேன்.

Unknown said...

சூப்பர் தம்பி!

ஆனா ரொம்பச் சின்னதா இருக்கே ...வழமையான விமர்சனங்களுடன் ஒப்பிடுகையில்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இயக்குனரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

Unknown said...

//தமிழ்வாசி - Prakash said...
இயக்குனரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?//

கிடைக்காது!

அவர் ஏழாம் அறிவை காப்பி பண்ணப்போற ஹாலிவுட் காரங்க சந்தேகங்களுக்கு பதில் சொல்றதில பிசி!

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

என் முதல் கமாண்ட் என்பதால் பில்ட்அப்போடு ஆரம்பிக்கிறேன்....

இந்த வலைப்பக்கத்துக்கு நான் இடுகை இடுதலுக்கு புதியவனாக இருப்பேன், வாசிப்பதற்கு அல்ல( இதுக்கு பேரு பில்ட்அப்பானு கேக்க கூடாது)....

செந்தில் சார்...

சில இணையபக்கங்களில்...
படத்துக்கு விமர்சனம் எல்லாம் படம் ஓடுறதுக்கு ஒரு காரணமாக இருக்கும், ஒரு வேலை உங்கள் விமர்சனத்தை படித்தால் படம் சுத்தம், ஊத்திக்கும் அந்த அளவுக்கு அக்குவேறாக ஆணிவேறாக பிரிச்சுட்டிங்க...!!

ஈரோடு ஆனூரில் பணம் கொடுத்து பாக்குறிங்க, சென்னையில் இப்போ எல்லாம் ப்ளாக்கர்ஸ்க்கு இலவச திரையிடல் நடத்துறாங்க... அய், ஜாலி நான் காசு கொடுக்காம படம் பாக்குறேனே...!!!

குரங்குபெடல் said...

"ஃபைட் சீனிலும், போதி தர்மருக்கான பில்டப் சீனுக்கும் கொடுக்கப்படும் பின்னணி இசை , பில்டப் மியூசிக் டாப்.. "


யோவ் காதை செக் பண்ணுய்யா . . . .

படத்துல செம காமெடியன் . . . ஹாரிஸ் ஜெயராஜ்தான் . . .

செல்ல நாய்க்குட்டி மனசு said...

16 நச்
ஸ்ருதி இந்த பதிவை பார்ப்பாங்களா? பார்த்தா தன் குறைகளை சீர் திருத்திக் கொள்ளலாம்
அந்த அளவு விமர்சனம் தெளிவு.
உங்க வீட்டு பக்கம் எல்லாம் ஆட்டோ வராதா? (இல்ல தைரியமா எழுதுறீங்களேனு கேட்டேன்

settaikkaran said...

தல, நான் வந்திட்டேன்; வாசிச்சிட்டேன்; ஓட்டும் போட்டிட்டேன்; இதோ பின்னூட்டமும் போட்டிட்டேன். எல்லாரும் சாட்சி! தமிழனாக இருப்பதை எண்ணி கர்வம் அடைகிறேன். ஓ.கே?

(இப்படியே பின்னூட்டம் மட்டும் போட்டு, விமர்சனம் எழுதாம தப்பிச்சிருடா சேட்டை!)

Unknown said...

மிகவும் நேர்மையான விமர்சனம்! ஆனால் திபாவளி ரிலீஸில் எதை முதலில் பார்ப்பது என்பதில் கோட்டை விடுவிட்டீர்! மொக்க வேலாயுதத்தை முதல்ல பார்த்துட்டீரே!

RAMA RAVI (RAMVI) said...

2 நாட்களில 3 படம். ஓக்கே.
இந்த படத்தோட விமர்சனம் ரொம்ப அருமையா பண்ணியிருகீங்க.

கமலோட பெண் என்பதால் அதிக எதிர்பாக்கறோம் போல இருக்கு.வரும் காலங்களில் ஈடு செய்வாரா?

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் நீங்களே சொல்லிட்டீங்க ஸ்ருதில பெருசா ஓன்னும் இல்லைனு(பேஸ்கட்)அப்பறம் என்ன?

நான் இன்னும் 7ம் அறிவு பார்கவில்லை..

போனை உடனே எடுத்தா சும்மா இருக்கேன்னு நினைப்பாங்க...இது பசங்க படத்தில் வந்த டயலாக்....

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
நான் உங்கள் விமர்சனங்களை முக்கியமாய் கருத்தில் கொள்வேன் ஆனால் இம்முறை கட்டாயம் படம் பார்க்கப்போகிறேன்... ஹி ஹி பாடல்கள் பிடித்துவிட்டதே..!!

Angel said...

உங்கள் விமர்சனம் படிச்சபோது படம் பார்த்த மாதிரியே இருக்கு .
சூப்பர்ப் .. உங்க விமர்சனத்தை சொன்னேன்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

முதல்ல 20 நிமிஷத்துக்கு டைர டக்கருக்கு நன்றி சொல்லும்யா!....கமர்சியல் படமான இதுக்கு பின்னணி இசை பெரிய சறுக்கல்...இதுல மெனக்கெடல் என்பது சூர்யாவுக்கு கட்டுடல் என்பது மட்டும்னு நெனச்சிட்டாரு போல..குரல் சரியா பொருந்தல போதி தர்மர் கேரக்டருக்கு.....உங்க பதிவின் பல பகுதிகள் நடுநிலைமையில் உள்ளது...முழுவதும் அல்ல ஹிஹி!

தர்ஷன் said...

எனக்குன்னா இன்னமும் படம் பார்த்த கடுப்பு குறையல்ல,
ஒரு நல்ல Knot ஐ வச்சிக்கிட்டு சுவாரஸியமா ஸ்க்ரீன்ப்ளே பண்ணத் தெரியல்லையே இந்த முருகதாஸுக்கு

உலக சினிமா ரசிகன் said...

தொடர் வெற்றி தந்த மமதையில் நல்ல கதைக்கருவை மோசமான கதை,திரைக்கதையால் அபார்ஷன் செய்து விட்டார் முருகதாஸ்.

அம்பலத்தார் said...

அட்ரா சக்க சூர்யாபட விமர்சனமா? விமர்சனக்களை படிக்கமுன்னாடி பார்த்திடணுமென்று நேற்றே பார்த்திட்டனே. விமர்சனம் நல்லாத்தான் எழுதியிருக்கிறியள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு, படத்தை பத்தி நெகடிவ் டாக் அதிகமா வர ஆரம்பிச்சிடுச்சு!

விச்சு said...

எப்படி உங்களால மட்டும் இப்படி அக்குவேர் ஆணிவேரா எழுதமுடியுது. விமர்சனம் நல்லாயிருக்கு..

'பரிவை' சே.குமார் said...

நீண்டதொரு... நல்ல விமர்சனம்...
ஸ்ருதி அவ்வளவு சரியில்லை என்று சொல்லிக்கிட்டே ஸ்ருதி போட்டாவா போட்டுத் தள்ளியிருக்கீங்களேண்ணா...
சரி... சரி... ரசிக்கலாமுல்ல... தப்பில்லை.

Jaganathan Kandasamy said...

நச் ன்னு 20௦ .

வழக்கமான முருகதாஸ் படம் இல்ல...

சூர்யா பத்தி ஒண்ணுமே சொல்லல..... தலைப்புல ஸ்ருதி மட்டும்........? சிபி ??

Jaganathan Kandasamy said...

///உங்க வீட்டு பக்கம் எல்லாம் ஆட்டோ வராதா? (இல்ல தைரியமா எழுதுறீங்களேனு கேட்டேன்//

சிபி ????

Jaganathan Kandasamy said...

தொடர் வெற்றி தந்த மமதையில் நல்ல கதைக்கருவை மோசமான கதை,திரைக்கதையால் அபார்ஷன் செய்து விட்டார் முருகதாஸ்


mundri doss

Jaganathan Kandasamy said...

இன்னும் என்ன தோழா சாங் பத்தி ஒரு வர்த்த கூட இல்ல

Jaganathan Kandasamy said...

anda chinese சாங் opening ல வர குழந்தையோட சிரிப்பு பார்க்க super

Agarathan said...

அய்யா வணக்கம் நானும் படம் பார்த்தேன் எதோ விமர்சனம் எழுதவேண்டும் என்கிறது காக ஏதோ எழுதாதீர்கள் இபொழுது வரும் மசாலா படங்களுக்கு நடுவில் தமிழனை பற்றியும் நமது பழம் பெருமையை பற்றியும் பறைசாற்றும் இப்படம் தமிழர்கள் பார்க்கவேண்டியதே .......

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ananthu said...

சி.பி .. நடுநிலையான நச் விமர்சனம் ... படத்துல தான் சூர்யாவ அமுக்குனா நீங்களும் ஒரே ஒரு ஸ்டில்ல போட்டு மத்ததெல்லாம்
ஸ்ருதிய வச்சே நிரப்பிட்டீங்களே ... ஜாலி என்டேர்டைனிங் தான் ஆனால் கஜினிக்கு ஒரு மாற்று கம்மி தான் ...
அருமையான வெர்டிக்ட் ...

Prakash said...

நீங்கள் ஒரு எதிர்மறை விமர்சகரோ? என்று என்ன தோன்றுகிறது.

எதிர்மறை விமர்சங்கள் அதிகமாக மக்களை கவரும். நீங்கள் ஹிட்சுகாக.. இதை செய்கிறீர்களோ ???