Friday, October 07, 2011

சார், சினிமால பெரும்பாலும் ஏன் பெண்களையே பேயா காட்றீங்க?

Alaska Train Snowplow
1.புதியதமிழகம் தனித்துபோட்டி - கிருஷ்ணசாமி # புதிய தலை முறை தெரியும், புத்தகம், புதிய தமிழகம்கறது நீங்க ஆரம்பிச்சிருக்கற கட்சியாங்க்ணா?

--------------------------------

2.தமிழ்ல எனக்குபிடிக்காத ஒரே வார்த்தை புரட்சி - கலைஞர் # புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் இவங்க 3 பேரும்தான்யா

----------------------------

3. பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் # நியூஸ்ல எனி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்? பிட் அடிச்சாங்களா? பிட் படம் பார்த்தாங்களா?

-------------------------------------

4. மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு # எப்டியோ அரசு கஜானா காலியாகப்போகுது!!!

--------------------------------------
5. சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம் # சோனாவை SPB சரண் சந்தித்தது ஏன் அப்டினு ஒரு விளக்கம் கொடுங்க தலைவரே.. ஃப்ரீதானே நீங்க?

--------------------------------


Naturaleza


6. தலைவரே! ஏன் சிரிக்கறீங்க?

கலைஞர் - உள்ளாட்சித்தேர்தல் நிலைமை மாதிரி பொதுத்தேர்தல்லயும் அனைவரும்தனி என்றால் வெற்றிக்கனி நமக்கே!# கனவு

---------------------7. உள்ளாட்சித்தேர்தலில் ”வாகை சூட வா! ”- கலைஞர் #

தலைவரே ! அந்தப்படம் 30 செப்டம்பர்லயே ரிலீஸ் ஆகிடித்து,வேற படம் போடலாம்

------------------------

8. o.p.s - அம்மா,உங்களை பார்க்க கேப்டன் வந்திருக்காரு!

ஜெ - கப்பல் கேப்டனா?மப்பில் இருக்கும் கேப்டனா?

----------------------------
9.நான் விரைவில் வலைப்பூ ஆரம்பிக்கப்போகிறேன் - பூனம் பாண்டே # மேடம், உங்க ஃபுல் நேக்கட் படம் போடுவேன்னு குடுத்த வாக்குறுதியை உங்க பிளாக்லயாவது நிறைவேற்றி ஃபோட்டோ போடுவீங்களா?

----------------------------------


10. சென்னையில் மீண்டும் 'உதயசூரியன்' உதிக்கும்: ஸ்டாலின் # சென்னையில் உள்ள திமுக வெண்ணெய்கள் விரைவில் கூண்டோடு கைது - ஜெ அறிக்கை!

-----------------------------------


11. தலைவரே,மதுரை ல இருக்கற ரவுடிகளை என்கவுண்ட்டர்ல போட்டுடச்சொல்லி ஜெ ஆர்டர் போட்டாராமே? 

அழகிரி - எனக்கு பயமில்லை, நான் என்ன கவுண்டரா?

-------------------------------------

12. சார்!ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு பின்னால நாடார்னு இருக்கே?

ஹாரீஸ் ஜெயராஜ் -  லாகிரி வஸ்துக்களை,ஆடம்பரத்தை நாடார்னு அர்த்தம்@ சமாளிஃபிகேஷன்

---------------------------------------

13.அடுத்தவங்க காலை எக்காரணம் கொண்டும் பிடிக்க மாட்டேன் என்று எல்லோராலும் சொல்ல முடியாது விதிவிலக்குகள் 

1. கபடிபிளேயர்ஸ் 2 கணவன்ஸ் 3. அ.வாதி

---------------------------------------------
14. பஸ்ஸில் கைக்குழந்தையுடன் பெண்கள் ஏறினால் ஒரு செகண்ட் கூட தாமதிக்காமல் எழுந்து இடம் கொடுப்பது ஆண்களே! # அவதானிப்பு

-------------------------------

15. அன்பே! நீ நடக்கும் பாதை முழுவதும் மலர்களைத்தூவி வைப்பேன். 

டேய் , லூஸு. ஒரு வெல்வெட் செப்பல் வாங்கிக்கொடுடா வேலை முடிஞ்சது

--------------------------

16. அன்பே! லெமன் ரைஸில் லெமன் சாறு போல் உன்னுடன் நான் இரண்டறக்கலந்தேன் # ஒரு சாப்பாட்டு ராமனின் மொக்க காதல் கவித

------------------------------

17. இது லவ் சப்ஜெக்ட் படம், அதனால லவ்வரோட போய் படம் பார்த்தேன், 

அப்போ பேய் சப்ஜெக்ட்னா உன் சம்சாரம் கூட போய் படம் பார்ப்பியா?

------------------------------

18. இன்னும் 2 மணி நேரத்துக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது. 

ஏன் DR?

  இப்போத்தான்யா படமே போட்டிருக்கான், அதுக்குள்ள படம் எப்டின்னா எப்டி?

--------------------------------
19. சார், சினிமால பெரும்பாலும் ஏன் பெண்களையே பேயா காட்றீங்க? 

யோவ்,. அப்பதான்யா திகில் படத்துலயுல் கிளுகிளுப்பு காட்ட முடியும்

------------------------

20. நீ என்னுடையவன் என்று சொல்பவனை விட நான் உன்னுடையவன் என்று சொல்பவனையே  பெண் அதிகம் நேசிக்கிறாள்

---------------------
டிஸ்கி 2 -

வேலூர் மாவட்டம் - போலீஸ் ஸ்டோரி வித் சந்தானம் காமெடி - சினிமா விமர்சனம்


33 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்கள் அழகு .

ராஜி said...

17 tweet super.

சக்தி கல்வி மையம் said...

படங்களும் அருமை.,

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
settaikkaran said...

//அப்போ பேய் சப்ஜெக்ட்னா உன் சம்சாரம் கூட போய் படம் பார்ப்பியா?//

அவன் சம்சாரம் பேய்-னு இவருக்கு எப்படித் தெரியும்? #டவுட்டு

SURYAJEEVA said...

super

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நலமா?

நிரூபன் said...

கலைஞர் என்ற வார்த்தைக்கு நீங்கள் சொல்லியிருக்கும் சொற்பதம் செம காமெடி + கிண்டல்

நிரூபன் said...

செம கிண்டலாக இன்று எழுதியிருக்கிறீங்க.

லெமன் ரைஸோட நீங்க இரண்டறக் கலக்காவிட்டாலும், அவளோடு இரண்டற..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த பேய் பதிவுக்கு தமிழ்மணம் ஏழு....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, கடைசில தத்துவம் பொழியுதே

Unknown said...

எனக்கு ஒரு டவுட்டு அண்ணே...நீங்க இம்புட்டு திங் பண்றீங்களே...இதெல்லாம் சொந்த அனுபவமான்னு கேக்கல!....இல்ல பக்கத்துல இருந்து பாத்த அன்புபவமா...அதுவும் அந்த 13 & 17!

மாய உலகம் said...

4. ஆஹா இந்த விசயம் எல்லாத்துக்கும் தெரிஞ்சா.. ஊத்திக்கொடுத்து அடிப்பாய்ங்களே...

Unknown said...

19. பேய..பேய வச்சுத்தான் காட்டமுடியும் (கல்யாணம் முடிஞ்சவுனுக்குத்தான் தெரியும் கஷ்டம்)

என்னை கண்காணிப்பவன்....(‘சவால் சிறுகதை-2011’)
http://veeedu.blogspot.com/2011/10/2011.html

கடம்பவன குயில் said...

//தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை புரட்சி- கலைஞர்.//

கலைஞருக்கு மட்டுமல்ல சிபிக்கும் எனக்கும் கூட பிடிக்காத ஒரேவார்த்தை புதுமையான புரட்சி......

ஹா....ஹா...ஹா...

மகேந்திரன் said...

படங்கள் மனத்தைக் கவ்வுது .....
14 ..நல்லா இருக்கு....
அதுதான் ஆண்களின் இளகிய மனம்.

கடம்பவன குயில் said...

//மாயஉலகம் said

4. ஆஹா இந்த விசயம் எல்லாத்துக்கும் தெரிஞ்சா ஊத்திக்கொடுத்து அடிப்பாய்ங்களே.....//

தமிழ்நாட்டுப்பெண்களை என்னவென்று நினைத்தீர்கள் சகோ...”ஃபுல் ஆனாலும் புருஷன், கள் ஆனாலும் கணவன்” என்று எதை ஊற்றிகுடித்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்னு இருக்கிறவங்க...

Mohamed Faaique said...

காமெடி கலக்கல்...
15வது சூப்பர்.. எல்லாமே அருமை..

கடம்பவன குயில் said...

//18.இன்னும் இரண்டுமணிநேரத்துக்கு என்னால் எதுவுமே சொல்லமுடியாது???

ஏன் Dr.

இப்பத்தான்யா படமே போட்டிருக்கான் . அதுக்குள்ள படம் எப்படின்னா எப்படீ??//

Dr என்ன சிபியா???

டைட்டில் போடும்போதே, படத்தோட எதிர்காலத்தை கணிச்சு சொல்ல????

rajamelaiyur said...

//
.புதியதமிழகம் தனித்துபோட்டி - கிருஷ்ணசாமி # புதிய தலை முறை தெரியும், புத்தகம், புதிய தமிழகம்கறது நீங்க ஆரம்பிச்சிருக்கற கட்சியாங்க்ணா?


//

நல்ல கேள்வி ..

rajamelaiyur said...

14 th very true

rajamelaiyur said...

tamilmanam 12 th vote

Yoga.s.FR said...

வெள்ளி வணக்கம்! நல்லாருக்கு,போட்டோங்களும்!ஏன் பிகருங்க போட்டோஸ் போடல?வெள்ளிக்கிழமைன்னோ?

MANO நாஞ்சில் மனோ said...

ஏன் முனி படத்துல ராஜ்கிரண் பேயா இருந்தாரே...???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, பெண்களை ஏன் பேயா காட்டுராங்கன்னா உன்னை மாதிரி அண்ணி'கிட்டே அடி வாங்குரவனுகளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டுமேன்னுதான்.

MANO நாஞ்சில் மனோ said...

நீயும் அஞ்சாநெஞ்சன விடப்போறதில்லை, அம்மா'வும் விடப்போறதில்லை, எப்பிடியோ மூணுபேரும் நாசமா போங்க....

சசிகுமார் said...

அருமை அண்ணாத்த

RAMA RAVI (RAMVI) said...

15,16 இரண்டும் சிரிக்க வைத்தது. மறுபடியும் அழகான படங்கள்..சூப்பர்.

செங்கோவி said...

கலைஞர் டவுசரை கழட்டுறீங்களே........

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று, நன்று...

Anonymous said...

எல்லாமே அருமை..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஹையோ !! அன்னங்கள் கொள்ளை அழகு !

goma said...

நிஜத்தில் ஆண்கள் எல்லோரும் பேய்கள் அதான் ............சினிமாவில் பெண்களைப் பேயாக் காட்றாங்க....