Saturday, October 29, 2011

அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா? அவ்வ்வ்....(ஜோக்ஸ்)1. அடிக்கடி கோபம் கொள்ளும் மனைவி இருக்கும் வீட்டில்  2 பூஜை அறைகள் இருக்கும் # புருஷனுக்கு பூசை, மனைவியின் ஆசை

------------------

2. ஆண்களிடம் இருந்து பெண்களைத்தனித்துக்காட்டும் முதல் திறமை பேரம் பேசி விலையை குறைக்கும் திறன்

---------------

3. வீட்டில் டவர் கிடைக்கலைன்னா வெளில வந்து அலைபேசில பேசுவது போல  மனைவியிடம் அன்பு கிடைக்காத போது கணவன் வெளியில் அதைத்தேடுகிறான்

--------------------------

4. எல்லா மழலைகளும்  எதிர் கொள்ளும் முக்கியகேள்வி  - பாப்பா, உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?,அதற்கு சொல்லப்படும் பதில் - 2 பேரும் பிடிக்கும்.

--------------

5. மனைவி ஊடல் உடன் குப்புறப்படுத்திருந்தால், மழலையின் உதவியுடன் அவள் துக்கத்தை அப்புறப்படுத்த முயல்வதே நல்லது

--------------------


6. மாமியார், மருமகள் சண்டையை ஆண்கள் விரும்பாததற்குக்காரணம் அதன் பக்க விளைவுகள்  ஆண்களை பாதிக்கும் என்பதால் தான்

---------------------

7. பெண்களின் மாதாந்திர அவஸ்தைகளை ஆண்களுக்கு அவர்கள் அடி வயிற்றில் வலிப்பது போல்  உணர வைத்த கவிதாயினி அ. வெண்ணிலா w/o  மு. முருகேஷ்

--------------

8. மின்னலே படத்தின் வசீகரா உன் நெஞ்சினிலே பாடல் தான் தமிழில் ஒரு பெண்ணின் காதலை முழு வீச்சுடன் சொன்ன பாடல்  BY தாமரை


-------------------

9. தன்னை விட தன் வாரிசு புத்திசாலியாக இருந்தால் அதைக்கண்டு எந்த தந்தையும் பொறாமை கொள்வதில்லை.

---------------------------

10. எத்தனை நகைகள் அணிந்தாலும் பெண்ணுக்கு அழகு சேர்ப்பது அவள் புன்னகை தான் # பவுன் விலை ரூ 21,000,அடங்கொய்யால

--------------


Abbey Watkins Illustrations
Abbey Watkins Illustrations


11. மழலைகள்.கணவன்,  அனைவருக்கும் துணிகளை வைக்க ஒரு பீரோ, மனைவியின் துணிகளுக்கு மட்டும் தனியா 2 பீரோ # 33 % இட ஒதுக்கீடு ஆணுக்குத்தான் தேவை

---------------------------------
12. ரகசியங்களைப்பகிர்ந்து கொள்ளாத நட்பும், உரிமையை எடுத்துக்கொள்ளாத காதலும் உண்மையான உறவாக இருக்க முடியாது

------------------------

13. நீ கண்ணீர் சிந்தும்போது எத்தனை கரங்கள் அதை துடைக்க முன் வருகிறதோ அந்த அளவு நீ செல்வந்தன்

----------------------

14. நீங்க யாரையாவது ஏமாற்றி விட்டால் அவர்கள் ஏமாந்தார்கள் என்பதை விட உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே சரி


------------------------

15. வாழ்வில் வெற்றி பெற அன்பை யாசித்து யாரிடமும் நிற்காதே,நீ அன்பை வாரி வழங்கு

------------------------


16. அன்பே! சிற்பமாக இருக்கும் உனக்கு ஒரு தாஜ்மகால் கட்டவா?

அற்பமா கவிதை எழுதுவதை நிறுத்திட்டு  கர்ப்பமா இருக்கற என்கழுத்துல ஒருதாலி கட்டு

------------------------------------

17. நெல்லை - ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து தபால்காரர் கொடூர கொலை # லவ் லெட்டர்ஸை டெலிவரி பண்ணுனது ஒரு குத்தமாய்யா?

--------------------

18. செப்.1ல் யுவனுக்கு 2வது திருமணம் : டாக்டரை மணந்தார்!!  # கலைஞர் நேர்ல வந்து வாழ்த்தினார் பாருங்க, அடடா.. யார் 2 வது மேரேஜ் செஞ்சாலும் ஆஜர் ஆகிடறார்

---------------------------

19. சூழ்நிலையால் வில்லனான இசையமைப்பாளர் தினா!  # ரேப் சீன்ல பேக் கிரவுண்ட் மியூசிக் கானா பாட்டா போடுவாரோ? டவுட்டு

--------------------------------

20. மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல -வெங்கட்பிரபு!!  # வேலாயுதம் விஜய்க்காக உருவாக்கப்பட்டதுதான்,ரசிகர்கள் பார்க்கத்தேவை இல்லை

-----------------------------


21.  ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்,கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! # அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா?

----------------------


22. லவ் வந்ததும் முகத்துல ஒளியும், மனசுல பட்டாம்பூச்சியும் பறக்கும், ஏன்னா ஃபியூஸ் போற பல்பு பிரகாசமாத்தான் எரியும்

-------------------------


23. உங்க மனைவி முழுகாம இருக்காங்க..

டாக்டர்,அவ எப்பவுமே வாராவாரம் 2 நாள் குளிக்கவே மாட்டா.. சோம்பேறி.. செண்ட் போட்டுக்கிட்டு ஆஃபீஸ் போவா.

------------------------

24. டியர், நேத்து வரை என்னை கண்ணா என்றாய், திடீர்னு அண்ணா என்கிறாயே ஏன்?

எனக்குப்பிடிக்காத பேப்பர் வாங்கறீங்களே? அதான்,நமக்குள்ள ஒத்துவராது. # சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டைவர்ஸ் வரை போபவள் தான் மாடர்ன் தமிழச்சி

--------------------------

25. நீங்க எதுக்கு உண்ணா விரதம் இருக்கீங்க?

யோவ், என் சம்சாரம் கோவிச்சுட்டு சமைக்கலை, கிச்சன் ரூமை பூட்டிட்டு அவங்கம்மா வீட்டுக்கு போய்ட்டா.

--------------------

52 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா? அவ்வ்வ்....///

அய்யயோ அண்ணே உங்க நெலம இப்பிடி ஆச்சே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

1. அடிக்கடி கோபம் கொள்ளும் மனைவி இருக்கும் வீட்டில் 2 பூஜை அறைகள் இருக்கும் # புருஷனுக்கு பூசை, மனைவியின் ஆசை///

அய்.... உங்க வீட்டுல இப்படித்தானா???

stalin wesley said...

என்ன தொழில் நூட்பம் ன்னே அது ..

SURYAJEEVA said...

நம்பர் மூணு ஜோக் இல்லை சார், உண்மை

சக்தி கல்வி மையம் said...

மாப்ள அந்த 25 சொந்த(நொந்த) அனுபவம் தானே?

Shanmugam Rajamanickam said...

சிந்திக்கவைக்கும் விதமாகவும் இருக்கின்றான.....

Astrologer sathishkumar Erode said...

படங்கள் எல்லாம் பயமுறுத்துதே

கருங்குயில் கருப்பி said...

பென்சில் சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புதம். இதுவரை எங்கும் நான் காணாத கலைநயம்.

கருங்குயில் கருப்பி said...

14. ஏமாந்தார்கள் என்பதைவிட உங்கள்மேல் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே உண்மை. //

ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் சிபி. நம்பிக்கைகள் நாசமாகும்போது ஏற்படும் மனவலி சொல்லில் அடங்காது.

Mathuran said...

என்னன்னே ஆச்சு

rajamelaiyur said...

Title super and jokes super

RAMA RAVI (RAMVI) said...

4 புத்திசாலி குழந்தைகள்.
14 சூப்பர்.
படங்கள் அழகா இருக்கு.

Anonymous said...

படங்கள் சூப்பர்...

குரங்குபெடல் said...

"என்னை கண்ணா என்றாய், திடீர்னு அண்ணா என்கிறாயே"

ரைமிங்குல டீஆரை மிஞ்சிறியே தம்பி
நன்றி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கூடல் பாலா said...

@ 25 >> இப்படில்லாம் கூட உண்ணாவிரதம் நடக்குதா ....

Mohamed Faaique said...

எல்லாம் நல்லா இருக்கு....
11,22 போன்றவை செம கடி....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரைட்டேய்...

KANA VARO said...

இருபதாவது ஜோக்கிற்று உங்களை குண்டர் சட்டத்தில உள்ள போடணும்

உணவு உலகம் said...

அனுபவப் பகிர்வு அருமையா இருக்கு

முத்தரசு said...

# 3 - ஆமா ஆமா இப்படி கிளப்பிவிடுங்க.

எல்லாமே அருமை. படங்கள் சூப்பர்

நம்பிக்கைபாண்டியன் said...

14 வது ரொம்ப நல்லாருக்கு நீங்க எழுதினதா?

'பரிவை' சே.குமார் said...

பல சிந்திக்கவும் சில சிரிக்கவும் வைக்கின்றன.
அருமை... படங்கள் பயமுறுத்தும் ரகம்.

COOL said...

ஜோக் சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா? அவ்வ்வ்....///

நீ எப்பிடிப்பட்ட ஆளுன்னு எனக்கு தெரியாதா என்ன...?

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா? அவ்வ்வ்....///

மறுபடியும் உன் பிளாக்'ல சூனியம் வச்சிரவேண்டியதுதான்.

MANO நாஞ்சில் மனோ said...

செம ஜோக்ஸ் ரசிச்சி சிரிச்சேன்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அண்ணே ஹி ஹி மைனஸ் ஓட்டு விழுந்துருக்கு....

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

அம்பலத்தார் said...

பாதிக்குமேல சொந்த அனுபவத்தில் வந்ததுபோலத் தெரிகிறதே.

Unknown said...

super

கருங்குயில் கருப்பி said...
This comment has been removed by the author.
மூ.ராஜா said...

17. நெல்லை அல்ல! 'ஈரோடு' காதலை வாழவைப்பது எங்கள் பூமி. சொற்பிழைக்கு வருத்தம். மற்றபடி அனைத்தும் அருமை.

Unknown said...

இன்று பதிவே போடாத CP !

Unknown said...

8. சரியான பாடல்...

9. நச்

12. சத்தியமான வார்த்தை...

13. ஆஹா

14. அப்படிப்போடு அருவாள...

அதிகப்படியா பெண்களை வாரியதால் அண்ணனுக்கு மைனசோ ஹிஹி!

நிரூபன் said...

இனிய இதமான இளங் காலைப் பொழுது வணக்கங்கள் பாஸ்,
மற்றும் அவையோரே...
இது எப்பூடி...

ஹி....ஹி.,.

தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி இருக்கு பாஸ்?

நிரூபன் said...

அய்யய்யோ, இனி ஆஃபீசில் கில்மா படம் பார்க்க முடியாதா? அவ்வ்வ்....(ஜோக்ஸ்)//

ஏன் நெட் கனெக்சனை கட் பண்ணிட்டாங்களா..

ஹி.................

நிரூபன் said...

2. ஆண்களிடம் இருந்து பெண்களைத்தனித்துக்காட்டும் முதல் திறமை பேரம் பேசி விலையை குறைக்கும் திறன்
//

இது டச்சிங் மாமு,.,,,,,,,,,,

நிரூபன் said...

வீட்டில் டவர் கிடைக்கலைன்னா வெளில வந்து அலைபேசில பேசுவது போல மனைவியிடம் அன்பு கிடைக்காத போது கணவன் வெளியில் அதைத்தேடுகிறான்
//

அண்ணே. அட்ரஸ் கொடுங்க.
சென்னிமலையில் உள்ள உங்க வீட்டுக்கு இதை போஸ்ட் பண்ணிடுறேன்.

கூடவே துடப்பங் கட்டையும், ரெண்டு பூரிக் கட்டையும் பார்சல் பண்ணி அனுப்பி வைக்கிறேன்.

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

4. எல்லா மழலைகளும் எதிர் கொள்ளும் முக்கியகேள்வி - பாப்பா, உனக்கு அப்பா படிக்குமா? அம்மா பிடிக்குமா?,அதற்கு சொல்லப்படும் பதில் - 2 பேரும
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணே அப்பா பிடிக்குமா?
இல்லே படிக்குமா?

நிரூபன் said...

மனைவி ஊடல் உடன் குப்புறப்படுத்திருந்தால், மழலையின் உதவியுடன் அவள் துக்கத்தை அப்புறப்படுத்த முயல்வதே நல்லது
//

அனுபவம் புதுமை அவளிடம்;-))))

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

மாமியார், மருமகள் சண்டையை ஆண்கள் விரும்பாததற்குக்காரணம் அதன் பக்க விளைவுகள் ஆண்களை பாதிக்கும் என்பதால் தான்
//

ஆகா..இதனை நாம நம்பிடுறோம்.

என்னதான் இருந்தாலும் ஆண்கள் சமரசம் பேசும் சந்தடி சாக்கில கூத்துத்தானே பார்க்கிறாங்க.

சண்டை எப்பூடி பலமா நடக்குதா?
இல்லையான்னு...

நிரூபன் said...

பெண்களின் மாதாந்திர அவஸ்தைகளை ஆண்களுக்கு அவர்கள் அடி வயிற்றில் வலிப்பது போல் உணர வைத்த கவிதாயினி அ. வெண்ணிலா w/o மு. முருகேஷ்
//

ஐயோ...முடியலையே...
சிபி திருந்திட்டாரா..

பெண்களை சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கிட்டாரே...

நிரூபன் said...

மின்னலே படத்தின் வசீகரா உன் நெஞ்சினிலே பாடல் தான் தமிழில் ஒரு பெண்ணின் காதலை முழு வீச்சுடன் சொன்ன பாடல் BY தாமரை
//

உண்மையான வரிகள்..

நிரூபன் said...

எத்தனை நகைகள் அணிந்தாலும் பெண்ணுக்கு அழகு சேர்ப்பது அவள் புன்னகை தான் # பவுன் விலை ரூ 21,000,அடங்கொய்யால
//

காலத்திற்கேற்ற கடி பாஸ்........

நிரூபன் said...

ரகசியங்களைப்பகிர்ந்து கொள்ளாத நட்பும், உரிமையை எடுத்துக்கொள்ளாத காதலும் உண்மையான உறவாக இருக்க முடியாது//

என்னய்யா...இது பேக்ரவுண்டில படையப்பா படத்தில வார அளவுக்கதிகமா பஞ்சு வசனம் ஒலிக்கிற மாதிரி இருக்கே.

நிரூபன் said...

நீ கண்ணீர் சிந்தும்போது எத்தனை கரங்கள் அதை துடைக்க முன் வருகிறதோ அந்த அளவு நீ செல்வந்தன்//

சபாஷ்...சூப்பரான வரிகள்...

உண்மையில் இடுக்கன் வரும் போது நகுதல் தானே நல்லோர்களை இனங்காட்டுகிறது என்று வள்ளுவர் ஐயாவே சொல்லியிருக்காரே..

நிரூபன் said...

அன்பே! சிற்பமாக இருக்கும் உனக்கு ஒரு தாஜ்மகால் கட்டவா?

அற்பமா கவிதை எழுதுவதை நிறுத்திட்டு கர்ப்பமா இருக்கற என்கழுத்துல ஒருதாலி கட்டு

---------//

திமுகவின் முடிக்கும் சொல் ஒத்துவரும் பிரச்சார கவிதைகள் தான் எனக்கு இதனைப் படிக்கையில் நினைவிற்கு வருகிறது.
அதில் அரசியல் கலந்திருக்கும்,.
இங்கே முடிக்கும் சொற்களை ஒன்றாக்கி சிபி அவர்கள் கமர்சியல் கலந்திருக்கார்.

ஹி.......

நிரூபன் said...

சூழ்நிலையால் வில்லனான இசையமைப்பாளர் தினா! # ரேப் சீன்ல பேக் கிரவுண்ட் மியூசிக் கானா பாட்டா போடுவாரோ? டவுட்டு
..//

எனக்கும் இப்படி ஒரு டவுட் இருக்கு பாஸ்..

நிரூபன் said...

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல -வெங்கட்பிரபு!! # வேலாயுதம் விஜய்க்காக உருவாக்கப்பட்டதுதான்,ரசிகர்கள் பார்க்கத்தேவை இல்லை
//

அதானே பாஸ்..
அப்புறம் ஏன் தியேட்டரில படத்தை ஓட்டுறாங்க

பேசாம விஜய் வீட்டிலயும், அஜித் வீட்டிலையும் போடலாமில்லே

நிரூபன் said...

ஏனைய பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்க முயற்சிக்கிறேன்.

நன்றி
வணக்கம்!

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாம் கலக்கல், கொஞ்சம் பிரிச்சு போட்டிருக்கலாமில்லே...
ஹி....ஹி..

ஏன் ஒரே தடவையில் 25 டுவிட்ஸை பதிவில் போட்டிருக்கிறீங்க...