Wednesday, October 12, 2011

காதல் ரசம் சொட்டும் கவிதைகள்

1.உன்னைப்பார்க்கும்போது மட்டும் என் இதயம் 2 மடங்கு வேகத்துடன் வேலை செய்கிறது மூளையை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு

-------------------------------

2. என்கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.

. உளறாதே.. உன் தங்கையை வெச்சுக்கறதே ஏகப்பட்ட செலவு, இதுல நீ வேறயா?

------------------------------

3. அடிக்க அடிக்க பந்து எழுவது போல திமுகவும் எழும்-கலைஞர் # எத்தனை படம் ஃபெயிலியர் ஆனாலும் நான் பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்தமாட்டேன்-விஜய்

---------------------------

4. மிஸ், என்னைப்பார்த்து 143ன்னு சொல்றீங்களே? ஐ லவ் யூன்னு அர்த்தமா? 

இல்லடா லூசு.இது வரை உன்னை மாதிரி 142 பேர் என் கிட்ட143 சொல்லிஇருக்காங்க, நீ 143 வது ஆள்.. 

-----------------------

5. டைரக்டர் - என் படம் 100 நாள் ஓடுன பிறகுதான் நம்ம கல்யாணம் ..

நடிகை - நடந்த மாதிரி தான்

-------------------------------

Wallpapers Fantasias Mix

6. ஆறறிவு உள்ள எந்த ஆளுக்குமே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை.. 

அடேங்கப்பா.. அப்டி என்ன வார்த்தை? ரிங்கா ரிங்கா..

--------------------------------

7. உன் மாமியாரை எப்படியாவது கரை சேர்க்கனும்னு நீ ஆசைப்படறியா? 

ஆச்சரியம் தான்!!  ஹி ஹி இடிந்த கரைல....

------------------------------

8. யுவர் ஆனர், தலைவருக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம்..

. இப்படி சொல்லி பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடியதை ஏத்துக்க முடியாது

----------------------------

9. கடலில் என்னை தூக்கிப்போட்டாலும் செம கட்டையாக நான் இருப்பதால் நான் மூழ்க மாட்டேன், மிதப்பேன்... - கவர்ச்சி நடிகை கில்மா ஸ்ரீ

-------------------------------------

10.வாழ்வில் சிலரை மறக்க முடியாது, சிலரை பிரிய முடியாது. என்னை மறக்காமல் நீ இரு, உன்னைப்பிரியாமல் நான் இருக்கிறேன்

------------------------------


11. உனக்கான மகிழ்ச்சிகளை பென்சிலால் எழுதுவதை விட உன் வருத்தங்களை ரப்பரால் அழித்து விடவே விருப்பம் எனக்கு

-----------------------------------

12. சந்தோஷம் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் , அல்லது நான் இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவேன் - மழலை

-----------------------------

13. அம்மா என்ற சொல்லைக்கேட்க பல முறை அம்மா அம்மா என அரற்றுகிறாள்  -பிரசவ வலியில்  இருக்கும் பெண்

-----------------------------

14. உன் வாழ்க்கையைப்பற்றிய திட்டமிடலை பென்சிலால் செய்து கொள்.. தேவைப்பட்டால் அழித்து மாற்றிக்கொள்ளலாம்.. 

---------------------------

15. நாம் ஏன் சோகமாக இருக்கிறோம் என்பதை விளக்கிக்கொண்டிருப்பதை விட  ஒரு மெல்லிய புன்னகையை அணிந்து கொள்வதன் மூலம் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது

----------------------------


16. என் உயிரே.. என SMS அனுப்பினியே?  

ஆ... அதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.. என் உயிரே. போனாலும் உன்னை எல்லாம் லவ் பண்ண மாட்டேன்னு சொல்ல வந்தேன்

-----------------------
17. செல்லும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக ஓடினாலும் வெற்றி கிடைக்கும்.. 

-----------------------

18. எவ்வளவு காயப்படுத்தினாலும் மனதிற்குப்பிடித்த உறவை வெறுக்கவோ, மறக்கவோ முடிவதில்லை---------------------------------

19. அவள் சொன்ன பொய்களிலேயே நான் ரசித்த, நேசித்த ஒரு அழகிய பொய் உன்னை என்றும் பிரிய மாட்டேன்

------------------------------

20. கவிதைகளை எல்லோரும் அமைதியாக வாசியுங்கள், ஏன் எனில் அது அமைதியை இழந்த ஏதோ ஒரு இதயத்தின் அழுகையாக இருக்கக்கூடும்

----------------------------

26 comments:

ராஜி said...

1 ?

ராஜி said...

15 tweet super

ராஜி said...

mazhalai tweetum arumai.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

Unknown said...

3 நச்

10 ஜொள்ளு வித் லொள்ளு!

12 யதார்த்தம்

13 வலி

17 வாழ்கைக்கு லேகியம்

அண்ணே போதுமான்னே!

Unknown said...

நச்.... கிசுகிசு.... கிச்சு கிச்சு ....

செங்கோவி said...

செம கட்டை ஜோக் சூப்பர்..தலிவர் பாவம்.

கோகுல் said...

எல்லாம் ஓகே தல.
இடிந்த கரை ஏனோ உறுத்துதே?

Mathuran said...

15 ஆவது சூப்பர்

Jaleela Kamal said...

எல்லாமே கலக்கல்

Unknown said...

20th kalakkal....

Mohamed Faaique said...

எல்லாமே அருமை.. கடைசியா சொன்னது டச்சிங்...

SURYAJEEVA said...

கரெக்ட் ஆ தானே சொல்லி இருக்கார் இயக்குனர்
no:5

RAMA RAVI (RAMVI) said...

இன்னைக்கு எல்லாமே அருமையாக இருக்கு,அதிலும் 15 சூப்பர்.

rajamelaiyur said...

//
என்கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.

. உளறாதே.. உன் தங்கையை வெச்சுக்கறதே ஏகப்பட்ட செலவு, இதுல நீ வேறயா?//

அனுபவ வரிகள் ?

rajamelaiyur said...

//

18. எவ்வளவு காயப்படுத்தினாலும் மனதிற்குப்பிடித்த உறவை வெறுக்கவோ, மறக்கவோ முடிவதில்லை//


உண்மையான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

'பரிவை' சே.குமார் said...

டுவிட்ஸ் சூப்பருங்கண்ணா...
படங்கள் அழகு.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

தலைப்பு வித்தியாசமா இருக்கு மாப்ள..

கும்மாச்சி said...

செந்தில் வழக்கமான கலக்கல் சூப்பர்.

செவிலியன் said...

அடிக்க அடிக்க பந்து எழுவது போல திமுகவும் எழும்-கலைஞர்
அடிச்ச பந்து பஞ்சர் ஆகிப்போச்சுனா?????

கடலில் என்னை தூக்கிப்போட்டாலும் செம கட்டையாக நான் இருப்பதால் நான் மூழ்க மாட்டேன், மிதப்பேன்... - கவர்ச்சி நடிகை கில்மா ஸ்ரீ
ஏறி பயணம் செய்யலாமா????டவுட்டு....

கடம்பவன குயில் said...

18 and 20 really super.

மகேந்திரன் said...

இனிமை ரசம் சொட்டுகிறது..

Mahan.Thamesh said...

எல்லாமே நல்ல இருக்கு . செம கட்டை தாளுமா, மிதக்குமா ,?