Saturday, October 29, 2011

UNFAITHFULL - ஹாலிவுட் கில்மா - சினிமா விமர்சனம்


http://www.moviegoods.com/Assets/product_images/1020/205088.1020.A.jpg
அந்தக்காலத்து ரசிகர்களும் சரி, இந்தக்காலத்து ரசிகர்களும் சரி கில்மாபடம் பார்க்கறதுல மட்டும் ஒரே மாதிரி தான் இருக்காங்க, என்னதான் இண்டர்நெட், செல்ஃபோன் வீடியோ என சயின்ஸ் (!!) & டெக்னாலஜி முன்னேற்றம் அடைஞ்சாலும் நம்ம ஜனங்களுக்கு சீன் படம் பார்க்கறதுல உள்ள ஆர்வமே தனிதான்..

2002 ல ரிலீஸ் ஆன இந்தப்பட டைட்டிலைப்பார்த்ததும் அர்த்தம் என்ன?ன்னு கண்டு பிடிக்க பக்கத்து வீட்டு ஃபிகர்  பங்கஜம் (Sister/Of அம்புஜம் )கிட்ட வாங்குன ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரில தேடுனேன்.. துரோகம், நம்பிக்கை துரோகம்,உண்மையாய் நடந்து கொள்ளாமல் இருத்தல் உட்பட 13 அர்த்தம் போட்டிருந்தாங்க.. அப்பத்தான் ஒரு நம்பிக்கை வந்து படத்துக்கு போனேன்,., ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன் ( வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!)


ஹீரோ,ஹீரோயின், 2 பேரும் தம்பதிகள் , அவங்களுக்கு ஒரு பையன் - நல்ல குடும்பம்.. ஹீரோ வேலைக்கு போறான்,...பையன் ஸ்கூலுக்குப்போறான்.. ஹீரோயின் எங்கே போற? போனா? என்பதுதான் படம் ஹி ஹி .. பாப்பா பங்களா ஒயிஃப்.. ( ஹவுஸ் ஒயிஃப்னு சொன்னா பாப்பா கோவிச்சுக்கும் , வசதியான ஃபிகர் இல்லையா?)

Still of Diane Lane and Olivier Martinez in Unfaithful

ஹீரோயின் ரோட்ல எங்கேயோ நடந்து போறா.. அப்போ பார்த்து காத்து பலமா அடிக்குது.. அவ கைல இருந்த பேப்பர் எல்லாம் பறக்குது.. வில்லன் அந்த பேப்பரை எல்லாம் எடுத்து கொடுக்கறான்.. பக்கத்துலதான் என் அபார்ட்மெண்ட், வாங்க ரெஸ்ட் எடுத்துட்டு ஃபிரஸ் அப் பண்ணிட்டுப்போலாம்னு அவன் இன்வைட் பண்றான்.

ஹீரோயின் ரொம்ப அப்பாவி போல.. உடனே பின்னாலயே போறா..அவன் காஃபி வெச்சுத்தர்றான், அவ குடிக்கறா.. சம்பந்தம் இல்லாம 2 பேரும் பேசிட்டு இருக்காங்க.. அவ கிளம்பிடறா. வில்லனோட ஃபோன் நெம்பர் வாங்கிக்கறா..

இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 3 சந்திப்புகள் நடக்குது.. ஆனா வேதியியல் ,உயிரியல் மாற்றங்கள் ஏதும் இல்லாம.... அப்புறம்  4 வது . சந்திப்பு நடக்கறப்ப பக்கத்து சீட் ஆள் சொல்றான். மாப்ளை.. சத்தியமா இப்போ சீன் இருக்கும் பார்டாங்கறான்.. அதுக்கு ஒரு வியாக்கியானம் வேற குடுக்கறான்.. அதாவது எம் ஜி ஆர் படங்கள்ல வில்லன் கிட்டே ஹீரோ 2 டைம் அல்லது 3 டைம் அடி வாங்குவார்.. அப்புறமா. உதட்ல வழியற ரத்தத்தை தொட்டு பார்த்துட்டு ரிட்டர்ன் பஞ்ச் குடுக்க ஆரம்பிப்பார். அந்த மாதிரிதான்.. இந்த சந்திப்பும்.. அப்டிங்கறான்..


அவன் சொன்னது சரிதான்.. வில்லன் ஹீரோயினை அணைக்கறான் , கிஸ் பண்றான்.. அப்போ எல்லாம் ஹீரோயின் எதுவும் சொல்லாம அனுமதிச்சுட்டு மெயின் மேட்டர் நடக்கறப்ப “ நோ , இதெல்லாம் தப்பு , வேணாம்” கறா... வில்லன் விடுவாரா?மேட்டர் முடிஞ்சுடுது.


இந்த சீனை அப்டியே ஃபுல்லா காட்னா சுவராஸ்யம் குறைஞ்சிடும்னு இயக்குநர் புத்திசாலித்தனமா ஹீரோயின் வில்லனோட அபார்ட்மெண்ட்ல இருந்து பஸ்ல ரிட்டர்ன் போறப்ப நினைச்சு பார்க்கற மாதிரி கட் ஷாட்ஸ்ஸா காட்றாரு..

 http://gallery.celebritypro.com/data/media/119/diane-lane-58.jpg


பாலிவுட் ஏஞ்சலீனா ஜூலி என அழைக்கப்படும் மல்லிகா ஷெராவத் நடிச்ச மர்டர் படத்துல வர்ற முத சீன் இந்தப்படத்தை பார்த்துத்தான் அப்பட்டமா சுட்டிருக்காங்க..சாரி, மொத்தபடமுமே சுட்டிருக்காங்கபா..  ஹய்யோ, அய்யோ.. நம்மாளுங்க ஒரு படத்தை விட மாட்டாங்க போல.. 


அப்புறம் இது தொடர்கதை ஆகுது.. அடிக்கடி வில்லனும் , ஹீரோயினும் மீட் பண்ணிக்கறாங்க .விளையாடறாங்க..எனக்கு இப்போ சம்பந்தம் இல்லாம ஒரு பாட்டு நினைவு வருது.. முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகம் ஆனோமே, 2 ம் சந்திப்பில் நான் என்னை மறந்தேனே..


ஒரு டைம் ஹீரோயின் வில்லன் கூட ஜாலியா இருந்துட்டு தன் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றதையே மறந்துடறா.. அப்புறமா அடிச்சுப்பிடிச்சு போனா நல்ல வேளை அவன் மட்டும் ஸ்கூல்ல இருக்கான் வித் எ டீச்சர்.. இனிமே ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவெடுக்கறா..


 4 வது சந்திப்பில்

ஒரு ரெஸ்டாரண்ட்ல ஹீரோயின் அவ ஃபிரண்ட்ஸோட  வந்திருக்கறப்ப அங்கே வர்ற வில்லன் அவளை பாத்ரூம்க்கு வரச்சொல்லி ஹி ஹி ஹி .. இப்போதான் கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. ஹீரோவோட ஒர்க் பண்ற ஆள் அவங்களை பார்த்துடறார்.. (அவர் தலைல இடி விழ..)


ஹீரோ கிட்ட பத்த வெச்சுடறார்.. உடனே ஹீரோ ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்டே தன் மனைவையை கண்காணிச்சு ரிப்போர்ட் தரச்சொல்லி கேட்கறார் ... அவர் ஹீரோயினை கரெக்ட் பண்ணப்போறார் போலன்னு ஆர்வமா பார்த்தா அவர் அன்னா ஹசாரே மாதிரி நேர்மையான ஆள் போல , ஒரிஜினல் ரிப்போர்ட்டை ஹீரோ கிட்டே ஒப்படைச்சிங்க்.. வித் ஃபோட்டோஸ்..


அவர் கொடுத்த அட்ரஸை வெச்சுக்கிட்டு ஹீரோ வில்லனோட அபார்ட்மெண்ட்க்கு போறாரு.. அங்கே 2 பேருக்கும் வாக்குவாதம்.. வில்லனை அசந்தர்ப்பமா இசகு பிசகா தலைல டமார்னு ஒரு டேபிள் வெயிட்டால அடிக்க ஆள் அவுட்..

Still of Richard Gere and Diane Lane in Unfaithful


இதென்ன சிக்கலா போச்சேன்னு  ஹீரோ வில்லனை பார்சல் பண்ணி ஊருக்கு ஒதுக்குப்புறமா கொண்டு போய் டிஸ்போஸ் த பாடி..

அடுத்த நாள் போலீஸ் அவங்க வீட்டுக்கு வருது..


இதுக்குப்பிறகு என்ன நடக்குது? யார் மாட்றாங்க என்பதை மிச்ச சொச்சம் உள்ள கதை..

படத்துல மொத்தம் 5 சீன் இருக்கு படம் போட்ட 38 வது, 49 வது , 57 வது , 70 வது , 78 வது நிமிஷங்கள்ல சீன் இருக்கு , நோட் பண்ணிக்குங்கப்பா. ( உலக விமர்சன வரலாற்றிலேயே முதல் முறையாக  சீன் வரும் நேரங்களை துல்லியமாக சொன்னதற்காக யாராவது , ஏதாவது அவார்டு குடுத்தா அதை அங்காடித்தெரு அஞ்சலி கையால வாங்கிக்க தயாரா இருக்கேன்.. )

http://image.toutlecine.com/photos/s/o/u/sous-le-soleil-de-toscane-03-10-g.jpg


.படத்தோட பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் -

Budget:

$50,000,000 (estimated)

Opening Weekend:

$14,065,277 (USA) (12 May 2002) (2613 Screens)

Gross:

$122,000,000 (Worldwide) 
 ஹீரோ வைப்பற்றி சொல்ல பெரிசா ஏதும் இல்ல .. ஹி ஹி நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்க நடிப்பை பற்றி சிலாகிச்சு எழுதுனோம்? ஹீரோயின் ஆல்ரெடி ஆஸ்கார் அவார்டு வாங்கி இருக்காங்க.. அவங்க நடிப்பு பிரமாதம்.. ஹா ஹா ஹா எதுலனு கேக்காதீங்க..


படத்தில் ரசித்த வசனங்கள்

வசனத்தை எல்லாம் ரசிக்கற மூடில் இல்லாததாலும், படத்தில் அதிக வசனங்கள் இல்லாததாலும் இந்த முறை இந்த பகுதிக்கு விடு முறை



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

அதான் சொன்னேனே,  படத்துல மொத்தம் 5 சீன் இருக்குன்னு அந்த இடங்களீல் எல்லாம் இயகுநரை “தாராளமா” பாராட்டலாம்.. ஹி ஹி ஹி

http://nadinejolie.com/blog/wp-content/uploads/2011/04/Diane-Lane-Unfaithful.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள், சில கேள்விகள், சில ஆலோசனைகள்

1. டவுட் நெம்பர் 1- எப்படி இந்த மாதிரி பிரமாதமான கதை அம்சம் உள்ள படம் எடுக்க தோணுச்சு?

2. கேள்வி நெம்பர் 1 - இந்தப்படத்துக்கு ஏன் 3D எஃபக்ட் கொடுக்கலை?

3. ஆலோசனை சொல்லவே தேவை இல்லை ஹி ஹி . இந்த படத்தின் பாகம் 2 , பாகம் 3 வெளியிடவும். ( பாகம் 2 வந்துடுச்சுன்னு  கேள்விப்பட்டேன்)

25 comments:

Unknown said...

முதல் வடை

பால கணேஷ் said...

Over Jollu Senthil!

Unknown said...

ஒரு சீன் இல்லை மர்டர் படமே இந்த படத்தை பார்த்துதான் சுட்டிருக்காங்க....
சரிதான் 5 சீன் இருக்கற படத்தில வசனத்தை எங்க ஞாபகம் வச்சிக்கிரது

ஸ்ரீராம். said...

பழைய படமா இருந்தால் கூட முடிவைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயின்டெயின் பண்றீங்களே பாஸ்...

தர்ஷன் said...

பாஸ் ரொம்ப பழைய படம் பாஸ், ஒரு 7,8 வருஷத்துக்கு முன்ன பார்த்தது.
பிபாஷாவின் ஜிஸ்ம்ல வர்ற சீன்,மர்டர், அப்புறம் பேர் மறந்து போன மேக்னா நாயுடு நடிச்ச ஒரு படம், தமிழ்ல திருட்டு பயலே எல்லாத்துலையும் இந்தப் படத்தோட பாதிப்பு இருக்கு

Mohammed Arafath @ AAA said...

Boss... so murder padam itha parthu than eduthu irukangala..

mallika sherwat parthathuku apuram itha pakanum nu thonlala.. :)

any way nice review..

namba aalunga english la oru bittu padatha kooda vida matrngranga. :)

வெளங்காதவன்™ said...

:-)

செங்கோவி said...

என்னது காந்தியைச் சுட்டுட்டாங்களா?

கூடல் பாலா said...

நடக்கட்டும் ...

Unknown said...

ஏன்யா பய புள்ளைங்க ஜொள்ளு விட்டுகிட்டே பதிவ முழுசா படிச்சிட்டு சம்பந்தமே இல்லாம பதில் போடுதுங்களே ஹிஹி...மீ டூ!

Unknown said...

விமர்சனம் விஷயங்களுடன் அருமை. இது வரையில் பார்கவில்லை, பார்க்கவேண்டியதுதான் (உங்களை நம்பி).
ஹிந்தியில மட்டும் இல்ல, தமிழ் கூட இந்த படத்த சுட்டாங்க, ஆன அது செரிய வேகல...... ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு வந்தது, படத்தோட பேர் நாபகம் இல்ல.

rajamelaiyur said...

நடக்கட்டும் ..நடக்கட்டும் ..

உலக சினிமா ரசிகன் said...

கில்மா படம் என்று சாக்லேட் தடவி சிறந்த கிரைம் திரில்லரை கொடுத்து விட்டீர்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே நன்றி....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு.,

Astrologer sathishkumar Erode said...

கில்மா காணோம்

கேரளாக்காரன் said...

Old but gold college first year padikkum podhu gilli and unfaithful ore complex confusionla kadaisila unfaithful thaan win pannuchu

கேரளாக்காரன் said...

Theni vasanth theatre...... One of ur best review... Pls continue reviewing in this style

Anonymous said...

விமர்சனம் அருமை...

Anonymous said...

விமர்சனம் அருமை...

அன்பு said...

ரசிக்கும்படி இருந்தது விமர்சனம்...
ஹீரோயினுக்கு வில்லன் மீது காதல் வருவதற்கு கவித்துவமான!!!!! காரணமும் சொல்லப்பட்டிருக்கும்...
( கவிதை பேசியே பயபுள்ள மயக்கிடுவான்ங்க...)

Saravanan MASS said...
This comment has been removed by the author.
Saravanan MASS said...

// ஹீரோயின் ரொம்ப அப்பாவி போல.. உடனே பின்னாலயே போறா.. //

அந்த நேரத்தில் பல Taxi-யை நிப்பாட்டுவாங்க,ஆனா யாரும் நிறுத்தாம போய்டுவாங்க.
வில்லனோட‌ வீட்டுக்கு போகலாம்னு முடிவெடுத்தபின் ஒரு Taxi மெதுவா அவரை கடந்து போகும்..
ஆனால் இவர் அதை நிறுத்தமாட்டார்!
அந்த டாக்ஸியை நிறுத்தி பயணம் செய்திருந்தால் இவ்வளவு துன்பமில்லையேன்னு இறுதி காட்சியில் ஹீரோயின் நினைத்து பார்ப்பார்.

Family Photo பின்புறம் தன் கணவன் எழுதிய
to
My Beautiful
wife
the best part
of every day-ன்னு
வரிகளை படித்து தன் தவறை உணர்ந்து கண்ணீர் விட்டு அழும்போது அவர் கணவன் அனைத்து ஆறுதல் சொல்றப்ப சூழ்நிலைகளால் நல்ல குடும்பங்கள் எப்படியெல்லாம் அழிக்கின்றன‌, குற்றவாளியா ஆக்குது புரியும்!

சில வினாடிகளில் நாம எடுக்குற முடிவு எவ்வளவு பெரிய‌ பாதிப்பை ஏற்படுத்தும்னு நான் உணர்ந்த நல்ல‌ படமாதான் எனக்கு தெரியுது...

உங்களுக்கு கில்மா படம்மா தெரியரது!

jroldmonk said...

பாஸூ விமர்சனம் :-))),#விவிசி.. உஉசி..

வருண் said...

ஏங்க செந்தில்குமாரு, அந்த மூனாவது நபர், அதாவது டயான் லேனுடைய "காதலனை" எப்படி "வில்லன்" ஆக்கினீங்க!!!

அவன் ஒண்னும் பெருசா தப்பு செய்யலைங்க. அவன் அந்தம்மாவை என்ன கற்பா அழிச்சான்? அந்த அம்மாதான் விரும்பி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்ப் போச்சு.

ரிச்சேர்ட் கியர் தான் உண்மையான வில்லன் இந்தப்படத்தில். படுகொலை செய்றவரு அவரு. அதை மூடி மறைக்க கணவனோட சேர்ந்துக்கிறா இந்த "அம்மா". இவள் ஒரு வில்லன்!

பாவம், பரிதாபமாக கொலை செய்யப்படுற அந்தப் பையனை வில்லன்னு சொல்றீங்க?!!!

ஒரு எதிர்வினை பதிவு போடனும்போல இருக்கு! இது கில்மா படம் இல்லைங்க. very disturbing movie!

You need to understand extramarital affair is wrong. But legally, nothing wrong with that guy's part as he is a single. Yes, he gets involved with a married woman but it is not illegal or anything. Diane Lane certainly crossed the line and what she does is not " quite legal" as she is married and a mother. Moreover, covering up that murder is really wrong.