Saturday, October 22, 2011

உயிரின் எடை 21 அயிரி - ஹேர் இழையில் மிஸ் ஆன வெற்றி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-yQO5nP2YkQ-vC2zkiSGEaqfnDf44pu-cJW5xm3fOOtIb1CxJsLUFMbBibxfFEMQx8Hl-Q8p1mSTmnAuxXAL39xdgqsXjz_EyA0LQl7TfH65chAY2dyQ8rO8uBnhVh5v2Gvfdu46zdbEa/s1600/Uyirin+Yedai+21+Gram+Movie+Stills+%25289%2529.jpg

கதை எழுத அமரும்போது இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் தன் திறமையை மக்கள் உணர வேண்டும் ,தன் எழுத்து கவனிக்கப்பட வேண்டும்,வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கோமே என அனைவரும் பாராட்ட வேண்டும் என்பதை விட மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும், அனைவரையும் கதை சென்று அடைய வேண்டும் என்பதே..

பெரும்பாலான இயக்குநர்கள் தங்கள் மேதா விலாசம் வெளிப்பட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள். அதிலும் கதையின் அதாவது படத்தின் நாயகனாக இயக்குநரே அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.. மொத்தக்கதையும் அந்த ஒத்தை ஆளை சுற்றியே நகரும்./.

திலகன் பற்றி முதல்ல சொல்லிடறேன்.. சத்ரியன் படத்துல கேப்டன் கிட்டே நீ மறுபடியும் ஏ சி பன்னீர் செல்வமா வரனும்.. அப்டினு கலக்கலா வசனம் பேசினாரே அந்த கேரளா வில்லன் தான் இதுல தாதாவா வர்றார்..ஊரே அஞ்சி நடுங்கும் தாதா.. அவரது ரைட் ஹேண்ட் கம் வளர்ப்பு மகன் தான் ஹீரோ.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRpi6e6nlHiAqsiZ1Ig4YVjw5UC0IGgBTChpbgb8nOPQsy8AqDSzCjbUPi56Jx4UfOw7ahGRBNg09uPUcYClkLZbySiL-1kJItsi9cBcP2WiQb7B_WJHSGW5ZyXpOGyuCzFIHxd6shIgU/s400/Uyirin-Yedai-21-Gram-Stills-042.jpg
. இப்படத்தின் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நாயகனாகவும் நடித்து வருகிறார் இந்திரஜித். இவர், தண்டாயுதபாணி, கி.மு., சாமிடா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பதும், திரைப்படக் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட இயக்குநர்தான் இந்தப்பட ஹீரோ.. படத்தோட கதை என்ன?

தாதா திலகன் மனதில் நினைப்பதை ஹீரோ உடனே செய்கிறார்.. தாதாவின் நிஜ மகன்க்கு தன் அப்பாவுக்குப்பின் தானே வாரிசு ஆக ஆசை... அதற்கு ஒரே குறுக்கீடாக இருக்கும் ஹீரோவை போட்டுத்தள்ள நினைக்கிறான்.. மயிரிழையில் உயிர் தப்பும் ஹீரோ  ஒரு கிராமத்தில் குற்றுயிரும், குலை உயிருமாக  இருக்க, ஒரு மருத்துவர் அவரை காப்பாற்றுகிறார்.. அவரது விதவை பேத்தி ஹீரோவை .. ஹி ஹி அதே லவ் .. ஹீரோ மனம் மாறுகிறான், திருந்துகிறான்..

ஆனால் ஹீரோ உயிரோடு இருப்பது தெரிந்த வில்லன்  மீண்டும் அவனை போட்டுத்தள்ளுகிறான்.அம்புட்டுதான் கதை..
இடைவேளை வரை ஒரே அடிதடி , வெட்டு குத்து, துரத்தல், வன்முறை, ரத்தம்....
அதற்குப்பிறகு ஹீரோ திருந்தும் படலம், ஹீரோயின் ரூட் விடும் படலம்..
http://www.kollywoodtoday.in/wp-content/uploads/2010/02/uyirnedai21gram-fe7-10.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இதிகாச காலத்தில் இருந்து இன்னைக்கு வரை உப்பைத்தின்னு விசுவசமா வாழ்ந்த எவனும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை, அநியாயமாத்தான் இறந்திருக்காங்க..

2. பேட்ஸ்மேன் அவுட் ஆகலைன்னாலும் அம்ப்பயர் கை தூக்கிட்டா வெளீல போய்த்தான் ஆகனும்.. அது மாத்கிரி தான் எங்கண்ணன்..அச்சன்

3. என் உயிர் இருக்கற அவரை உங்களூக்கு துரோகம் செய்ய மாட்டேன் அச்சன்..

செஞ்சா உயிர் இருக்காது..

4. என்னய்யா? கை வைக்க வேண்டிய இடத்துல கத்தி வைக்கறீங்க?

5. தடயமே இல்லாம காத்துல கரையனுமா? நீ?

6. ஒரு பொறம்போக்கு நிலத்துல ஆக்ரமிப்பு பண்ணிட்டு அழிச்சியாட்டியம் பண்ற அரசாங்க டாக்டர் இம்புட்டு யோசிச்சா உயிரை எடுக்கற நாங்க எம்புட்டு யோசிப்போம்?

7.  பொண்ணு  -லவ் வேற , லைஃப் வேற..

பையன் - அப்போ நமக்குள்ள நடந்தது?

பொண்ணு -நாம 2 பேரும் விருப்பபட்டு இணைஞ்சோம்.. ஓப்பனா சொன்னா எனக்கு உன் கிட்டே நோ சாட்டிஸ்ஃபேக்‌ஷன்.. பை  ( காலம் கலிகாலம்)

8. காசில்லாம வந்தா காலை உடௌச்சிடுவேன்..

இருக்கறதே ஒரு காலு..

9. டேய்.. நான் தெரியாம தான் கேக்கறேன் ஒரே ஆட்டை எத்தனை தடவைடா நீ வாங்குவே?ஒவ்வொரு தடவையும் நீ வாங்கறே.. ஆடு நைஸா எங்க வீட்டுக்கு வந்துடுது.. மறுபடி சந்தைக்கு கொண்டு வர்றேன்.. மறுபடி நீ வாங்கறே..

10.  அவன் மூளைக்காரன்..

எனக்கு மூளைக்காரன் தேவை இல்லை ,நான் சொல்றதைக்கேட்டு நடக்கற வேலைக்காரன்தான் தேவை..

11.  திலகன்  - இத்தனை பேர் முன்னால என்னை அழ வைக்காத, வா வீட்டுக்கு போலாம், எதா இருந்தாலும் அங்கே வெச்சு பேசிக்கலாம்..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Uyirin%20Yedai%2021%20Ayiri-reel-12.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டைட்டில் போடும்போது ஒரு மேட்டர் ( ச்சே, ச்சே அந்த மேட்டர் இல்ல)

1907 ஆம் ஆண்டுஒரு ஆராய்ச்சி குறிப்பு என்ன சொல்லுதுன்னா ஒரு உயிரின் எடை 21 கிராம் தான்.சாகும் தருவாயில் உள்ள மனிதனின் எடை, இறந்த பின் அவன் எடை கண்டு பிடிக்கப்பட்டு இந்த கணக்கு எடுக்கப்பட்டது அப்டினு சொல்றாங்களே.. அந்த தகவல்..

2.  மனிதன் தன் மரண வாசலை தொட்டு விட்டு மீண்டும் உயிர் பிழைத்தால் அவன் போக்கு சிந்தனை எல்லாம் மாறி விடும் என்பதை பதிவு செய்த விதம்

3. ஹீரோயின் , அந்த பேபி இருவரின்  ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் ( அந்த பேபி எங்க ஊர்க்காரர் இதயம் ராஜ் மோகன் மகள்)

4. திலகன் -ன் அசத்தலான நடிப்பும் அந்த பாத்திரத்தின் கம்பீரமும்..

http://www.cinemaexpress.com/Images/article/2011/1/14/uyirin.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள் , சில ஆலோசனைகள்

1.  ஹீரோ முகம் பூரா டேமேஜ் ஆகி படு பயங்கரமா இருக்கார், அவரைப்பார்த்த அடுத்த செகண்டே  ஹீரோயினுக்கு லவ் வருதே எப்டி? அதுவும் அவர் அவரோட தோளை தொட்டதும்?அது கூட பரவால்ல.. ஒரு குழந்தை எந்த வித அசூசையும் இல்லாம ஹீரோவை ஏத்துக்குது, அப்பான்னு கூப்பிடுது எப்படி?

2.  ஆடு , சந்தை சேல்ஸ் சீன் நல்ல காமெடி சீன் தான் அதுக்காக எதுக்கு அத்தனை தடவை ரிப்பீட்டிங்க்?

3. திலகனோட மகன் தான் ஹீரோவை கொலை செய்ய முயற்சி பண்றார்..மறுபடி அவர் வீட்டுக்கு வர ஹீரோ எப்டி ஒத்துக்கறார்?

4. திலக்னோட மகனா வர்றவர் தனுஷ்க்கு தம்பி மாதிரி இருக்காரே... வேற ஆள் சிக்கலையா?திலகனின் மகன் என நம்பற மாதிரி ஆள் போட்டிருக்கனும்

5. ஹீரோ க்ளைமாக்ஸ்ல சாகற சீன் இப்போ நிறைய வருது.. ஆனா அது நெகடிவாதான் போகுது பட ரிசல்ட்ல..


http://www.koodal.com/cinema/gallery/movies/uyirin_yedai_21_ayiri/uyirin_yedai_21_ayiri_19_113201192526123.jpg

ஈரோடு சங்கீதா வில் படம் பார்த்தேன், போன வாரம் வெள்ளிக்கிழமை பார்த்தேன், 8 நாள் ஆச்சு, அதுக்குள்ள படம் எடுத்தாச்சு.. அதனால இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்னு நான் சொல்ற வேலை மிச்சம்..

சி.பி கமெண்ட் -
பெண்கள் இந்தப்படம் பார்க்கவே முடியாது, ஓவர் வயலன்ஸ்... ஆண்கள் இந்தப்படம் பார்க்க முடியாது, ஏன்னா படம் தான் தியேட்டரை விட்டு எடுத்தாச்சே?

டிஸ்கி - அப்புறம் எதுக்காக இந்த விமர்சனம்? ஒரு பதிவு தேத்தத்தான் ஹி ஹி30 comments:

K.s.s.Rajh said...

பாஸ் எனக்கு இந்தப்படம் பார்த்த ஞாபகமாக இருக்கு..அட அதான் இதே கதையில் எத்தனை சினிமா படம் அவ்ந்திருக்கு அதை சொன்னேன்..ஹி.ஹி.ஹி.ஹி..

settaikkaran said...

இதுக்குத்தான் நானு புது ஆளுங்க படமுன்னா கொஞ்சம் உஷாரா விமர்சனம் படிச்சிட்டுப் போறது. :-)

Unknown said...

பதிவு தேத்தவாவது உபயோகப்பட்டுதே அது வரை சந்தோசம் அண்ணே ஹிஹி!

உலக சினிமா ரசிகன் said...

ஆனாலும்... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!

ராஜி said...

Velangidum

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

காலை வணக்கம்
வழக்கம் போல ....
கலக்கல் .
உங்களக்கு வானம் வசப்படும் .
(திரைவானம் )
அன்புடன்
யானை குட்டி

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

காலை வணக்கம்
வழக்கம் போல ....
கலக்கல் .
உங்களக்கு வானம் வசப்படும் .
(திரைவானம் )
அன்புடன்
யானை குட்டி

rajamelaiyur said...

டிஸ்கி சூப்பர்

rajamelaiyur said...

மொக்க படமும் பார்க்கின்ற நீங்க தெய்வம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

Anonymous said...

திலகனின் ஒரு மகா கலைஞன்ய்யா..

ADMIN said...

சி.பி. க்கு ஒரு விசில் போடு..!!

'உய்ய்ய்..உய்ய்ய்..உய்ய்ய்....ஷ்ஷ்!!!.

Unknown said...

"என்ன தல பிறந்தநாள் பார்ட்டி ஓவரா.... ?"
8 நாள் முன்னாடி பார்த்த படத்தை இன்னைக்கு போடுறிங்க நடக்கட்டும்..... நடக்கட்டும்.....

vetha (kovaikkavi) said...

இந்த விமரிசனம் மிச்சம் சமர்த்துப் பிள்ளையா எழுதியிருக்கு.(நக்கல் கிண்டல் நளினம் வழமை பாணியின்று) நான் படங்கள் பர்ப்பது குறைவு இப்படி வாசித்து அறிவு பெறுகிறேன் நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடியோ மொக்கை படத்துக்கு விமர்சனம் போட்டு பதிவை தேத்திட்டான்...

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கை பட விமர்சனத்துக்கு கமென்ட் ஓட்டு போடணுமா இல்லை போடனுமான்னு கேக்குறேன்...???

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடியோ பொழச்சி பொ.....

ம.தி.சுதா said...

மீண்டும் அரிவாளை தூக்கிட்டாங்களா?

ஆனா ஒண்ணு சீபி கிராமப் பின்னணி என்பதால் எதோ ஒரு விசயமாச்சும் இருக்கும்..

வரட்டும் பாத்திடுவோம்...

M.R said...

படம் பற்றி முழுமையும் நீங்களே சொல்லிட்டீங்க ,அப்புறம் தியேட்டருக்கு எதுக்கு போறோம்...
ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி..ஹி... நீங்க பாவம்னே.... விமர்சனத்துக்கு டிஸ்கி சூப்பர்.

ananthu said...

அது எப்படிங்க எல்லா படத்தையும் பாத்து இவ்வளவு விலாவாரியா விமர்சனம் போடுறீங்க ... அருமை ...

கார்த்தி said...

விமர்சனம் நல்லா இருந்தது..
(அண்ணே.. ரொம்ப நன்றி நீங்கள் என் பிளாகிற்கு வந்தது பெருமையாக உள்ளது..ரொம்ப நன்றி அண்ணே.......)

மாதேவி said...

நன்றி.

அம்பாளடியாள் said...

சரி படம் எப்படி என்று சொல்லத் தெரியவில்லை .ஆனாலும்
உங்கள் விமர்சனம் அருமையாக உள்ளது போதுமா ?......ஹி..ஹி ..ஹி ..
வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு சார் .வேணுமென்றால் எண்ணிப் பாருங்கள் .

Jaganathan Kandasamy said...

idhayam rajmohan ponna...... good selection...

நிரூபன் said...

வணக்கம் தல,
விமர்சனத்தின் முதல் இரு பந்திகளும் சூப்பராக இருக்கு..
அதுவும் இயக்குனர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய ஒரு விடயத்தை ஆடியன்ஸின் கூற்றாக சொல்லியிருக்கிறீங்க.

விமர்சனம் எங்கள் பாக்கட் மணியை சேமிக்க வழி செய்திருக்கிறது.

Unknown said...

arumai nanbar c.p.kku
makkalidam irundhu vandha sirandha vimarsanangal kaaranamaaga.
padam meendum diwalikku pinnar release aagirathu. padathil vanmurai athigamaga ullathupol thotram amaindhadhu sirappana sound designal .meendum sendru padathai paarungal .

nandri

yegan d.f.tech

சி.பி.செந்தில்குமார் said...

Unknown said...

arumai nanbar c.p.kku
makkalidam irundhu vandha sirandha vimarsanangal kaaranamaaga.
padam meendum diwalikku pinnar release aagirathu. padathil vanmurai athigamaga ullathupol thotram amaindhadhu sirappana sound designal .meendum sendru padathai paarungal .

nandri

yegan d.f.tech

வணக்கம் சார், ரீ ரிலீசில் பின் பாதியை முன் பாதியாகவும் ம், முன் பாதியை பின் பாதியாகவும் மாற்றினால் நல்லாருக்கும் நு தோணுது சார்

திருமயிலை எங்க ஊரு ... said...

இருந்தாலும் உங்களுக்கு ஓவர் நக்கல் பாஸ்.. பார்க்க முடியாத படத்துக்கு ஒரு விமர்சனம்...