Tuesday, October 18, 2011

காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)


1.வேட்பாளர் ஆயுள் கைதியா ஜெயில்ல இருக்கார்.எப்படி ஜெயிச்சார்.? 

வெளில வந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கைதான்

------------------------------

2. டீச்சர், என் பையனுக்கு மெம்மரி பவர் கம்மி, என்ன மேல் படிப்பு படிக்க வைக்கலாம்?..

எதுவும் வேணாம், அவன் நிதி அமைச்சர் ஆனாலும் ஆகிடுவான்

--------------------------------

3. தலைவரே! மணல் கொள்ளைல உங்க பேரும் அடிபடுதே? 

கொள்ளை அடிச்சது உண்மை தான், போயும் போயும் மணலையா? நெவர்

------------------------------

4.  ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமா இருக்கே?எப்டி?

சும்மாவா? 2 பேருக்கும் ஜாதகப்பொருத்தம் 10 பொருந்தி இருக்கே?

------------------------------

5. தலைவரே! செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு போய்ட்டாங்கன்னீங்களே? 
 மறுபடி நகைத்திருட்டு நடந்திருக்கே?

ஆந்திரா போரடிச்சிருக்கும்,6 மாசம் இங்கே

--------------------------------
6. ஸாரி மிஸ்டர், எனக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. 

வாவ்! எனக்கும்தான் மிஸ்.நம்ம 2 பேருக்கும் எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-----------------------------------

7.  எங்களுக்குத்தான் ஓட்டு போடனும்னு மக்கள்ட்ட வீடு வீடா போய் சத்தியம் வாங்குனீங்களா? 

நோ நோ பொய். வாட் எ சத்திய சோதனை?

--------------------------------------

8. சிம்பு ரசிகரை லவ் பண்ணுனது தப்பா போச்சா ஏண்டி? 

லவ் பண்ணும்போது நான் தான் ”ஒஸ்தி”ன்னார், மேரேஜ்க்குப்பிறகு லைஃபே நாஸ்திங்கறார்

-----------------------------------

9.கோடம்பாக்கத்தின் கொலம்பஸ் பட்டம் விஜய்க்கு எப்படி கிடைச்சுது?

வேல் ஒரு ஆயுதம்னு கண்டு பிடிச்சாரே? # வேலாயுதம் ராக்ஸ்

-------------------------------

10. போதிதர்மன் யார்னே தெரியாதுன்னு தலைவர் சொன்னாராமே?

ம்க்கும், அவருக்கு மகாபாரதத்துல வர்ற தருமனையே தெரியாது

--------------------------------

 11. சிம்புவும், பிரபுதேவாவும் இணைந்து ஒரு படம் பண்றாங்களாமே?

ஆமா, டைட்டில் -  சட்டி சுட்டதடா, கை விட்டதடா..

---------------------------------

12. உள்ளாட்சித்தேர்தல்ல யாராவது பணம் கொடுத்தா உடனே போலீஸ்க்கு தகவல் கொடுங்க..

ஏன்? அவங்களுக்கு அங்கே வந்து தர மாட்டாங்களா?

-------------------------

13. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசமில்லை - விஜயகாந்த் # சிம்புவுக்கும், பிரபு தேவாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை - 9 தாரா

----------------------------------

14. ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. இதற்குப்பிறகும் எங்களை ஜெயிலில் அடைத்தால் நாங்கள் ஆளுங்கட்சிக்குத்தாவுவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கிறோம்

--------------------------------

15. இந்த ஃபிகருதான் என்னோட நாளைய இயக்குநர்...

புரியலையே?

என் வருங்கால மனைவிடா.

--------------------------------


nice shift photography


16. தலைவரே! நீங்க எத்தனையோ பெண்களை ஏமாத்தி இருக்கீங்க.. இப்போ உங்க மேல போட்டிருக்கற நம்பிக்கைதுரோக வழக்கு எந்த பெண் தொடுத்த வழக்கு?

------------------------------

17. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவர் இருப்பாரு..

சும்மா கதை விடாதே.. அவருக்குத்தான் வேலையே கிடையாதே?

------------------------------

18. தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

நிரந்தர வருங்கால முதல்வரே!ன்னு கட் அவுட் வெச்சாங்களாம்

-------------------------------

19. என் காதலர்ட்ட வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டேன்..

அடடா.. என்னாச்சு? வேறென்ன? லிப் கிஸ் தான்

----------------------------

20. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-----------------------------

22 comments:

ராஜி said...

Yes sir

ராஜி said...

17 tweettudai nayagan neengathane!?

ராஜ் said...

நல்லா இருக்கு.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... நகரும் படம் சூப்பரு(super)...

Anonymous said...

அனைத்தும் அருமை சார்

rajamelaiyur said...

Final twitt super

SURYAJEEVA said...

அந்த 19 அனுபவம் இல்லையே

Unknown said...

Tilt shift Photography ஸ்டில் சூப்பர்.....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

ரைட்டு.

Thenammai Lakshmanan said...

நாளைய இயக்குநர்தான் சூப்பர்.:)

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நல்லாயிருக்கு,அதிலும் 2,15,18 எல்லாம் சூப்பர்.

சசிகுமார் said...

மாப்ள எப்பவும் போல டெர்ரர்....

Unknown said...

அண்ணே நல்லா கீது

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் அருமையா இருக்குடா அண்ணா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சிம்புவுக்கும் பிரபுவுக்கும் வித்தியாசம் இல்லையா, நீ அந்த எம் எம் எஸ் பார்களையாக்கும்...???

MANO நாஞ்சில் மனோ said...

ஆயுள் கைதி அரசியவாதி, சூப்பர்!!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஒட்டூ தவிர எல்லா நொட்டும் ஸாரி ஓட்டும் போட்டாச்சி...

செங்கோவி said...

நல்ல ஜோக்ஸ்!

K.s.s.Rajh said...

ரைட்டு ஆமா பாஸ் எங்க இருந்து புதுசு புதுசா டைட்டில் கண்டு பிடிக்கிறீங்க

Mohamed Faaique said...

சூப்பர்.....

லோகு said...

அருமை அருமை அனைத்தும் அருமை