Tuesday, October 25, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி, ஸ்டைலிஸ் ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இந்தியாவிலேயே மிக மோசமான ஹேர் ஸ்டைலுடன் பாப்பா கீர்த்தி இன்னைக்கு ஆஜர் @ கலைஞர் டிவி.. அவர் போட்டிருந்த நைட்டி ஹா ஹா பூப்போட்ட டிசைன்ல கோமாளி போல் இருந்துச்சு.. மானாட மயிலாட நிகழ்ச்சில ஓரளவு கேவலமான டிரஸ்ல வர்ற மிஸ் கீர்த்தி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சில மட்டும் ஏன் படு கேவலமா வர்றாங்களோ?ஹூம்..

கீர்த்தி - நீங்க ஒர்க் பண்ணுன அளவுல உங்களுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்தாங்க?  ( ஹி ஹி நோ டபுள் மீனிங்க்)
கே பாக்யராஜ் - அமிதாப் பச்சன். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் தெரியாது.. ஆனாலும் ரொம்ப கோ ஆப்ரேட் பண்ணுனார் ஆக்ரி ராஸ்தா ஷூட்டிங்க் ல ( நான் சிகப்பு மனிதன் ஹிந்தி ரீ மேக் ).. லேடி ஆர்ட்டிஸ்ட் யார்னு சொல்ல முடியாது , வம்பு வந்துடும் ஹா ஹா ( நான் சொல்றேன்.. ஷோபனா .. அவர் தானே இது நம்ம ஆளுல...  ஹி ஹி )

சுந்தர் சி - எனக்கு கமல் & கார்த்திக்  .கார்த்திக்குக்கும், எனக்கும் நல்ல அண்டர் ஸ்டேண்டிங்க்.. நான் எது செஞ்சாலும் அவரோட நல்லதுக்குனு தான் நினைப்பார் ( குஷ்பூவை கல்யாணம் பண்ணுனது? ஹி ஹி )

கமல் வீட்ல இருந்து வர்றப்பவே ஹோம் ஒர்க் பண்ணிடுவார், நம்ம வேலையை மிச்சம் பண்ணிடுவார்..  ( அன்பே சிவம் யார் டைரக்‌ஷன்? உண்மையை சொல்லுங்க இப்பவாவது.. நீங்களா? கமலா?)

லேடி ஆர்ட்டிஸ்ட்ல சவுந்தர்யா.. 1. ராஜேஷ்குமார் -  BET ( ஆக்‌ஷன்)


ஓப்பனிங்க் ஷாட் செம ஸ்டைலிஸா இருந்தது.. ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உண்டான ஸ்பீடு கட்டிங்க், ஷார்ப் எடிட்டிங்க் என கலக்கறாரே மனுஷன்..

கார்ல ஹீரோ டிரைவிங்க்.. அவனுக்கு ஒரு ஃபோன் வருது.. உன் தங்கையை கடத்தி வெச்சிருக்கோம், நாங்க சொல்ற இடத்துக்கு வா அப்டினு கூப்பிடறாங்க.. போறான்.. அங்கே தங்கையை கண்ணை கட்டி வெச்சிருக்காங்க, வில்லன் எனக்கே உன் தங்கையை கட்டி வைக்கறேன்னு சொல்லு, அப்போத்தான் விடுவோம்கறான்..
அப்போ தங்கை சொல்லிடறா எனக்கு வேற ஒரு ஆள் கூட லவ் இருக்கு... உடனே வில்லன் அவளை ரிலீஸ் பண்ணிடறான்..கார்ல போறப்ப ஹீரோ தங்கைட்ட யார் அவன்?னு கேட்டப்ப அவ சொல்லலை. வெயிட் அண்ணா, நானே அவன் கிட்டே மேட்டர் ஓப்பன் பண்ணலை.. சொல்றேன்கறா.. 

அடுத்த ஷாட்ல ஹீரோ, வில்லன் 2 பேரும் ஒண்ணா தண்ணி அடிக்கறாங்க.எல்லாம் ஆல்ரெடி பிளான்.. அப்போ வில்லனுக்கு ஃபோன் வருது. ஸ்பீக்கர் ஃபோன் போடரான்.. ஹீரோவோட தங்கை ஐ லவ் யூ சொல்றா.
அவ்ளவ் தான் கதை.. கதைல நம்பகத்தன்மை கம்மி, ஆனா கொண்டு போன விதம் ஓக்கே...

தங்கையை கடத்திட்டு போறப்ப அந்த லொக்கேஷன் டாப் கிளாஸ்.. ஒளிப்பதிவும் பக்கா.. பேசிக்கலி படத்தோட டைரக்டர் ஒரு சவுண்ட் எஞ்சினியர் என்பதால்  ரீ ரெக்கார்டிங்க்லயும் நல்லா பண்ணி இருந்தார்.. 2. மாதவா - யு டர்ன் ( ஃபேண்ட்டஸி)

ஹீரோவுக்கு அகஸ்மாத்தமா ஒரு பூமாரங்க் மாதிரி ஆயுதம் கிடைக்குது ரோட்ல.. அதால சுவர்ல எரிஞ்சா அப்படியே விரிசல் விடுது.. அந்த ஆயுதம் மறுபடி அவர் கைக்கே வந்துடுது.. 


அவர்க்கு பணப்பிரச்சனை.. சேட் கடைல செயினை அடமானம் வெச்சிருக்கார். அதை திருப்ப முடியல.. ஊர்ல இருந்து அப்பா வர்றார்.. வந்தா செயின் எங்கே?ன்னு கேப்பார்.. அதனால சேட் கிட்டே ஒரு நாள் மட்டும் செயினை குடுன்னு கேட்டா தர்லை , கோபத்துல அந்த பூமரங்கால ஒரே போடு,ரிட்டர்ன் வர்றப்ப அவர்ட்ட நக்கல் அடிச்ச டிராஃபிக் போலீஸ் கிட்டே தகராறு, கைல மந்திர ஆயுதம் இருக்க கவலை ஏன்? அவரையும் அட்டாக்..


வீட்டுக்கு வந்து பார்த்தா அந்த பூமாரங்க் ஆயுதத்தால சேதம் அடைஞ்ச வீட்டு சுவர் சரி ஆகி இருக்கு.. அதாவது கொஞ்ச நேரம் மட்டும் தான் அந்த பாதிப்பு போல.. வீட்டு காலிங்க் பெல் அடிக்குது.. திறந்து பார்த்தா அந்த சேட்டு, டிராஃபிக் போலீஸ்.. அவ்வ்வ்வ்வ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சேட்டிடம் மீட்ட செயினை  அங்கேயே கழுத்தில் போடாமல் யாராவது 1 கி மீ நடந்து அப்புறம் நடு ரோட்டில்  நடந்து செல்லும்போது போடுவாங்களா?

2. அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது  கொலை செய்யத்துணிவார்களா?

3. டிராஃபிக் போலீஸை கடந்து சென்ற பின் ஹீரோ அந்த பூமாரங்கை வீசுகிறார். அது போலீஸின் பின் மண்டை, அல்லது முதுகில் தானே தாக்கும், எப்படி நடு நெற்றியில் தாக்கும்? நேருக்கு நேரா நின்றார்?3. வெங்கடேஷ் - நிழலுக்குப்பின்

வயதான தம்பதி - லேடி - என் மேல சந்தேகப்பட்டுத்தானே அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கமா வந்து வேவு பார்த்தீங்க?னு கேக்கறாங்க..உடனே ஃபிளாஷ்பேக்.. ஹீரோ வீட்டுக்கு வர்றப்ப வீட்டின் பின் பக்கமா ஒரு ஆள் ஓடி போறான், அவனை துரத்திட்டுப்போனா அவன் எஸ் ஆகிடறான்.. ஹீரோ யோசனை பண்ணிட்டே வீட்டுக்குள்ள போறாரு.. எஸ் ஆன ஆள் திரும்ப வீட்டுக்குள்ளயே வந்து படுத்துக்கறாரு.. வாட்ச்மேன்.. நம்பிக்கைத்துரோகம் பண்ணிட்டான். பீரோல இருந்த நகையை எல்லாம் கொள்ளை அடிச்சுட்டான்.. 

ஒண்ணும் தெரியாதவன் போல் வீட்டுக்குள்ல வந்து படுத்துக்கிட்டான்.. இவர் பெட்ரூம்ல போய் செக் பண்றப்ப மனைவி ரத்த வெள்ளத்துல இறந்து கிடக்கறாங்க.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்பவே மடார்னு பின்னால இருந்து வாட்ச் மேன் தாக்கி அவரையும் கொலை பண்ணிடறான்,

இப்போதான் நமக்கு தெரியுது.. வயசான தம்பதிகள் ஆவின்னு.... அவங்க பையனை தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு கலங்கறாங்க.. அவன் பின்னாலயே போறாங்க.. அவங்க பையனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோண திரும்பி பார்க்கறான்.. அதோட ஷாட்  முடியுது..

யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதை சொல்லும் திறமை இருக்கறதால இவருக்கு எதிர்காலத்துல நூறாவது நாள் மணி வண்னன் மாதிரி அமைய சான்ஸ் இருக்கு.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. அவ்ளவ் தூரம் ஓடிட்டு மறுபடி ரிட்டர்ன் வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி வாட்ச்மேன் அல்லது வேலைக்காரன் படுத்துக்கறான்.. ஹீரோ பெட்சீட்டை எடுத்து அவனை பார்க்கறார்.. அப்போ அவன் உடம்புல வியர்வை, அல்லது ஓடி வந்த இளைப்பு வாங்கி இருக்குமே?

2.  பீஸ் கட்டை பிடுங்கப்பட்டதை பார்த்து கரண்ட் இதனால தான் போயிருக்குன்னு ஹீரோ கண்டு பிடிச்சடறார்.. யாரோ ஆள் வீட்ல நடமாடறாங்கனு டவுட் வந்துடுது,. உடனே அக்கம் பக்கம் உதவிக்கு யாரையும் கூப்பிடலை.. ஏன்?4. அஸ்வின் - குரு


ரிட்டயர்டு ஆன ஒரு ஆசிரியரின் மன அலைகளை பதிவு செஞ்ச அழகான படம்.. பொதுவா ரிட்டயர்ட் ஆகிட்டா மனிதனுக்கு 2 விதமான பயம் வந்துடும்.. 1. தான் சமூகத்தை விட்டு ஒதுக்கப்பட்டுட்டமோ..   2. நம்மோட திறமைகள் இனி செல்லுபடி ஆகாதோ..


அந்த விஷயங்கள் படத்துல நல்லா சொல்லப்பட்டிருக்கு.. 


ரிட்டயர்டு ஆன பேராசிரியர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மெமண்ட்டோவை ஆசையா பார்த்துட்டு இருக்கறப்ப வீட்டுக்குள்ள கிரிக்கெட் பால் வந்து அதை உடைச்சிடுது.. கிரிக்கெட் ஆடுன பையன் பாலை வாங்க வர்றான்.. அவனை கண்டபடி திட்டி காதை கிள்ளறப்ப பையனோட அம்மா வந்து மன்னிப்பு கேட்டு அந்தப்பையனுக்கு டியூஷன் சொல்லித்தரச்சொல்லி கேட்கறா..ஓக்கே சொல்றாரு..ஆரம்பத்துல சரியா கவனிக்காம விளையாட்டுப்பையனா இருக்கான்.. அப்புறம் ஒழுங்கா கவனிக்கறான்.. சார்.. நான் பாஸ் ஆகிடுவேனா?னு கேட்கறான்.. 2 பேருக்கும் குரு மாணவன்  என்ற ஃபீலிங்க் தாண்டி ஒரு ஒட்டுதல் ஏற்படுது..

டியூஷன் முடிச்சுட்டு கிளம்பறப்ப பையன் வாத்தியாரை கிண்டல் பண்றான்.. உங்களால பேட்டிங்க் பண்ண முடியுமா?ன்னு கேட்கறான்.. அவரும்  கோதால இறங்கறாரு.. அவ்ளவ் தான் கதை..

ஒவ்வொரு மனுஷனும் தான் கவனிக்கப்படனும் , தன்னை எல்லாரும் மதிக்கனும், தன்னால யாருக்காவது ஏதாவது பிரயோஜனம் இருக்கனும்னு நினைக்கறான் என்ற கான்செப்டோட படம் முடியுது.. 

டெக்னிக்கலா அசத்துற படங்களை விட மனித மனங்களை படித்து எடுக்கப்படும் சாதாரன எளிய படங்களே மக்களை கவரும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்தபப்டம் தான் சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோசமா இருந்துச்சு

இயக்குநரிடம் சில சுட்டிக்காட்டல்கள்

1.  வாத்தியார் மெமண்ட்டோவை பார்த்திட்டிருக்கறப்ப ஜன்னல்க்கு எதிரேதான் நிக்கறார்.. ஆனா பந்து அதுக்கு ஆப்போசிட் சைடுல இருந்து வருது.. அப்படி வந்தா அதை உடைக்க வாய்ப்பே இல்லை, கேமரா ஆங்கிளை மாத்தி இருக்கனும்..

2. வாத்தியார் மனைவி கேரக்டர் சமையல் அறைல இருந்து பேசற வசனங்கள், தேவை அற்றது.. அவ்ளவ் ஏன்? மனைவி கேரக்டரை காட்டாமயே இன்னும் அழகா இந்த கதையை சொல்ல முடியும்.. பொதுவா குறும்படம் எடுக்கறப்ப எந்த அளவு கேரக்டரை குறைக்கறமோ அந்த அளவு நல்லது.. ஆடியன்சுக்கு ஈசியா புரியும்.. நமக்கும் வேலை கம்மி.. 


இந்த வாரம் போட்ட 4 படங்கள்ல 3 படங்கள் ஓக்கே ரகம்..

45 comments:

Unknown said...

ஹாப்பி!!! தீபாவாளி.
வழக்கம் போல
சி .பி . டச் .....
கலக்கல் பதிவு ...

Unknown said...

ஹாப்பி!!! தீபாவாளி.
வழக்கம் போல
சி .பி . டச் .....
கலக்கல் பதிவு ...

Unknown said...

ஹாப்பி!!! தீபாவளி .
வழக்கம் போல
சி .பி . டச் .....
கலக்கல் பதிவு ...

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

Unknown said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி...உங்க குறும்படம் எப்போ ரிலீஸ் ஆகுது....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி விக்கி,டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா உதை விழும், பதிவை படித்து பார்த்து நிறை குறை கூறவும்

சி.பி.செந்தில்குமார் said...

மகா ஜனங்களே, பாருங்க விக்கி தக்காளீயோட லொள்ளை..

விக்கி: pathivai padichirunthaa
pathil poda maattama
hehe
enyaa
en
unnoda
kurumbadatthukku thaan
naan pathil poduven

HajasreeN said...

vikki unmaya solli irukkaru

Unknown said...

அடப்பாவி....சாட்ல சொன்னத கமன்ட்டா போடுறியா ராஸ்கல்!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி, நானாவது பரவால்ல கமெண்ட்டாதான் போட்டேன், , நீ பதிவாவே போடறியே!!

Unknown said...

அண்ணன் திரு. சிபி அவர்கள் தன் பதிவை படிக்குமாறு ஆரியமாலா(!) மூலமாக கேட்டுக்கொண்டதால் படித்து விட்டு மீண்டும் கமன்டுகிறேன் ஹிஹி!

காந்தி பனங்கூர் said...

தல, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

செங்கோவி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Unknown said...

1. காதில் பூ சுற்றல்...

2. முன் செய்யின் பின் விளையும்(ஒரு அர்த்தமாக கொள்க!)

i)அவன் உன்னைய போல பொண்ணுங்கள பாத்தா பந்தா பண்றவன் போல...ஹிஹி..

ii)அது தான் பூமராங் ஆச்சே...அது இஷ்டம்ய்யா...எங்க வேணா தாக்கும்..

3. அப்போ மூணாவது ஆளுக்கு தான் மூளைங்கர(!).....

i) அவன் என்ன கில்மா படமா பாத்தான்..ஒரு வேலை குளிர் காலமா இருக்கும்...அதான் பெட்ஷீட் போத்தி இருக்கான் போல...

ii) அவர் தான் ஹீரோ ஆச்சே...

4. மனித மனம்...

i) யோவ் அது இப்போ இருக்க ஹீரோக்களோட பாதிப்பா இருக்கலாம்...

ii) No comments!

போதுமா அண்ணே!

சக்தி கல்வி மையம் said...

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கைலயே முத முறையா பதிவைப்படித்து கமெண்ட் போட்ட தம்பி விக்கி தக்காளியை மனமார பாராட்றேன் ஹி ஹி

Unknown said...

யோவ் நக்கலு..இருடி இரு!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Unknown said...

சிபி மாமாவிற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sen22 said...

தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்....!!

நிரூபன் said...

கீர்த்தி மேல உங்களுக்கு அம்புட்டுப் பிரியமா?

நிரூபன் said...

அலசல் அருமை பாஸ்..

இயகுனர்கள் மீதான கேள்விகள் தான் இப் பதிவின் ப்ளஸ் பாயிண்ட்...

இப் பதிவினை இந்த இளம் இயக்குனர்கள் பார்த்தால் எதிர்காலத்தில் தம்மைத் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என நினைக்கிறேன்.

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

சசிகுமார் said...

யோவ் சிபி பதிவுலகமே தீபாவளி கொண்டாடிகிட்டு இருக்கு உன் ப்ளாக்ல கொண்டாலியா... காசு ஏதாவது வேணும்னா கருண் கிட்ட கேட்டு வாங்கி கொண்டாடுய்யா...

rajamelaiyur said...

நல்ல விமர்சனம் ..

rajamelaiyur said...

முதல் கதை அருமை

rajamelaiyur said...

இன்றுஎன் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

MnB said...

I like ur writing. Small correction.
AAkri Raastha is the remake of "Oru Kaithiyin Diary"

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு அலசல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தீபாவளி வாழ்த்துக்கள் செந்தில்...

settaikkaran said...

தல, அந்த ’யு டர்ன்’ மட்டும் பார்த்தேன். இதுக்குப் பேருதான் ஃபேன்டஸியா-ன்னு தோணுச்சு! :-)

F.NIHAZA said...

கலக்குறீங்க.....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.....

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் அற்புதம்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி விக்கி,டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா உதை விழும், பதிவை படித்து பார்த்து நிறை குறை கூறவும்//

ஹா ஹா ஹா ஹா நாசமாபோச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
மகா ஜனங்களே, பாருங்க விக்கி தக்காளீயோட லொள்ளை..

விக்கி: pathivai padichirunthaa
pathil poda maattama
hehe
enyaa
en
unnoda
kurumbadatthukku thaan
naan pathil poduven//

தர்மத்தை மீறி விட்டான் சிபி, ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அடப்பாவி....சாட்ல சொன்னத கமன்ட்டா போடுறியா ராஸ்கல்!//

இது அநியாயம்....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி, நானாவது பரவால்ல கமெண்ட்டாதான் போட்டேன், , நீ பதிவாவே போடறியே!!//

எலேய் உருப்படுற வழியை பாருங்கடா வெண்ணைகளா.....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அண்ணன் திரு. சிபி அவர்கள் தன் பதிவை படிக்குமாறு ஆரியமாலா(!) மூலமாக கேட்டுக்கொண்டதால் படித்து விட்டு மீண்டும் கமன்டுகிறேன் ஹிஹி!//

இனி வியட்னாம் உருப்படுமா...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
1. காதில் பூ சுற்றல்...

2. முன் செய்யின் பின் விளையும்(ஒரு அர்த்தமாக கொள்க!)

i)அவன் உன்னைய போல பொண்ணுங்கள பாத்தா பந்தா பண்றவன் போல...ஹிஹி..

ii)அது தான் பூமராங் ஆச்சே...அது இஷ்டம்ய்யா...எங்க வேணா தாக்கும்..

3. அப்போ மூணாவது ஆளுக்கு தான் மூளைங்கர(!).....

i) அவன் என்ன கில்மா படமா பாத்தான்..ஒரு வேலை குளிர் காலமா இருக்கும்...அதான் பெட்ஷீட் போத்தி இருக்கான் போல...

ii) அவர் தான் ஹீரோ ஆச்சே...

4. மனித மனம்...

i) யோவ் அது இப்போ இருக்க ஹீரோக்களோட பாதிப்பா இருக்கலாம்...

ii) No comments!

போதுமா அண்ணே!//

போதும் நொன்னே...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
வாழ்க்கைலயே முத முறையா பதிவைப்படித்து கமெண்ட் போட்ட தம்பி விக்கி தக்காளியை மனமார பாராட்றேன் ஹி ஹி//

ஹி ஹி அண்ணே....

Mahan.Thamesh said...

Good post sir . happy dewali

ராஜி said...

அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது கொலை செய்யத்துணிவார்களா?
>>

ராஜி said...

அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது கொலை செய்யத்துணிவார்களா?
..
அப்பாவை சமாளிக்குறதுல செம அனுபவம் போல. பேசாம தவறு செய்துவிட்டு அப்பாக்களை சமாளிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன். எங்களுக்கெல்லாம் பயன்படும்

வெளங்காதவன்™ said...

தீபாவளி வாழ்த்துக்கள்!