Wednesday, October 26, 2011

வேலாயுதம் - விஜய் -ன் கமர்ஷியல் ஹிட்- சினிமா விமர்சனம்

http://kollywoodz.com/wp-content/uploads/2011/05/Vijay-Velayutham.jpg 

ட்விட்டர், ஃபேஸ்புக் ,போன்ற சமூக வலை தளங்களில் விஜய் போல் விமர்சிக்கப்பட்டவர் யாரும் இல்லை ,அந்த கேலி கிண்டலை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், யாராலும் மறுக்க முடியாத ஒன்று இருக்கிறது.அது ரஜினிக்கு அடுத்து பலராலும் எதிர்பார்க்கப்படும், ரசிக்கப்படும் கமர்ஷியல் சக்சஸ் ஹீரோ விஜய் என்பதுதான்.. தொடர்ந்து 6 படங்கள் கைவிட்ட நிலையிலும் அவர் படத்துக்கு ஒரு மாஸ் ஓப்பனிங்க் இருப்பதை மறைத்து விட முடியாது.. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வமும் ,அக்கறையும் விஜய்க்கோ, அவர் தந்தைக்கோ கதைத்தேர்வில் , கேரக்டர்க்கான மெனக்கெடலில் இருப்பதாகத்தெரிவதில்லை.. ...

சென்னையில் வெடி குண்டு வைக்கும் தீவிரவாத கும்பலை பத்திரிக்கையாளரான ஜெனிலியா  படம் பிடிக்கிறார்... அந்த முயற்சியில் அவர் ஈடுபடும்போது வில்லன் குரூப்பால் தாக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறார், வில்லன் குரூப் எஸ் ஆகும்போது தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் கார் வெடிக்கிறது.இறந்து போனவனின் உடலில் ஒரு நோட்ஸ் வைத்து விடு மயக்கம் ஆகிறார் ஜெனிலியா.. இந்த கும்பலை கொன்றது வேலாயுதம்.. அவர் அக்கிரமக்காரர்களை அழிப்பார்.... எக்சட்ரா..


கிராமத்தில் தங்கைக்காக உயிரையே விடும் பாசக்கார அண்ணாச்சி ஹீரோ.. அவர் விஷாலின் பட ஃபார்முலா படி சென்னை வருகிறார்.. அவர் தற்செயலாக செய்யும் சில வேலைகள் எதேச்சையாக தீவிரவாத கும்பலுக்கு எதிராக அமைகிறது.. அப்புறம் என்ன? நான் சிகப்பு மனிதன், அந்நியன், இந்தியன், ரமணா பட ஹீரோக்கள் எல்லாம் என்ன செய்தார்களோ அதை இவரும் செய்கிறார்...அவ்வப்போது அவருக்கோ, இயக்குநருக்கோ போர் அடிக்கும்போது ஜெனிலியாவுடன், ஹன்சிகா மோத்வானியுடன் டூயட் பாடுகிறார்.. 


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/09/Velayudham-movie-new-stills-2.jpg
அரசியல் பிரஷர் காரணமா? தொடர் தோல்வி காரணமா? தெரியவில்லை , விஜய் முகத்தில் ஒரு டல் அடித்துக்கொண்டே இருக்கிறது.. அதுவும் பன்னீர் தெளித்த ரோஜா போன்ற (ஆர் கே செல்வமணி மன்னிக்க ) ஃபிரஸ் ஃபேஸ் ஹன்சிகா அருகில் விஜய் தோன்றும் க்ளோசப் காட்சிகளில் அண்னனை பார்க்க முடியவில்லை.. 


பாடல் காட்சிகளில் மட்டும் விஜய் செம உற்சாகம் காட்டுகிறார்.. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் கொஞ்சம் நடிக்க முயன்றிருக்கிறார்.. அந்த ஃபைட்டில் சூர்யாவின் சிக்ஸ்பேக்கிற்கு பதிலடி என நினைத்து அவர் டாப்லெஸ்ஸில் வர்றார்..அவ்வ்வ்வ்.. ஆனால் அவர் ரசிகர்கள் முதல் பாவம் ஹீரோயினை (அபிலாஷா) டாப்லெஸ்ஸில் பார்த்த மாதிரி ஒரே ஆரவாரம்.. பாவம்.. 

யூத் குஷ்பூ போல் வரும் ஹன்சிகா கொடுத்த வேலையை சிறப்பாக நிறைவேற்றி பாடல் காட்சிகளில் திறமையை , இளமையை காட்டுகிறார்.. ஜெனிலியா பாவம்..ஹீரோ மேல் ஆசைப்பட்டு பின் விட்டுக்கொடுக்கும் தியாகி கேரக்டர்.. 

சந்தானம்தான் படத்தை ஓரளவாவது காப்பாற்றுகிறார்.. ஆனால் வெறும் 24 ஜோக்ஸ் 14 ரீல் படத்தை காப்பாற்ற போதுமா?

வசனத்தில் களை கட்டிய இடங்கள் ( எழுத்தாளர் சுபா)

1. வில்லன் - தமிழ்நாடு பூரா ஜல்லடை போட்டு தேடினாலும் என்னை மாதிரி ஒரு பொறம்போக்கை நீங்க பார்க்கவே முடியாது (ம்க்கும், மனசுக்குள்ள தங்கபாலுன்னு நினப்பு)

2. ஹீரோயின் - ஜர்னலிஸம்னா என்ன? படிக்கறவங்களுக்கு திருப்தியை தர்றது மட்டும் இல்லை... அவங்க பிரச்சனைகளூக்கு தீர்வு என்ன? என்பதை ஆராயனும்.. 

3.  டி டி ஆர் கிட்டேயே நக்கலா?

எனக்கு டி ஆர் மட்டும் தான் தெரியும், நீங்க யாருங்க்ணா? 

( சாவி 1996 பொங்கல் இதழில் உ ராஜாஜி எழுதிய ஜோக்)

4. இந்த ஊர் மக்களே இவ்வளவு ஆர்வமா நிதி திரட்டி அனுப்பறாங்களே, அவ்ளவ் செல்வாக்கா அவருக்கு?

அட நீங்க வேற , ஆள் ஊரை விட்டுப்போனாப்போதுமுனனு அனுப்பறாங்க...


5. யக்கோவ்.. யார் இந்த ஆள்? நடு ராத்திரில உங்க கூட...???

அது வந்து..

ஓ. விருந்தோம்பல்.. ம் ம் நடக்கட்டும்..

6. கிணத்துல இருக்கற தங்கத்தை நாங்க பார்த்துக்கறோம்.. முதல்ல உன் அங்கத்தை மூடுடி.. எல்லாரும் பார்க்கறாங்க.. 

7. டேய்.. என்ன தான் தங்கை பாசம் இருந்தாலும் பாசமலர் படத்துல வர்ற அந்த ஒரு சீனையே எத்தனை தடவைடா திருப்பி திருப்பி பார்ப்பே..?

அது சரி , கில்மா படத்துல வர்ற சீனுக்காக 4 டைம் பார்க்கறதில்லை? 

8. நான் நாட்டாமை.. என் கிட்டேயேவா?

அது தியேட்டர் எதிர் சீட் லேடி கிட்டே காலை நீட்டாம இருந்திருந்தா பேசலாம்..

9. ஹீரோ பில்டப் வசனம் - ஆடிக்காத்துல அம்மி பறக்கும்,எங்கண்னன் ஆடுனா விசில் பறக்கும்.. 

10. அவனை எதுக்கு இந்த கும்மு கும்மறே? உன் தங்கையை சைட் அடிச்சானா?

அடிக்கலை.. ஆனா எதிர் சீட்ல உக்காந்திருக்கான், சைட் அடிக்க வாய்ப்பு இருக்கு. http://www.myselfanand.com/wp-content/uploads/images/08sl3.jpg

11.  டேய்... டேய்.. ஓடற ரயில்ல் இருந்து குதிக்காத.. உன் கால் , கை போயிடும்..

உன் தங்கை சமையலை சாப்பிட்டா உயிரே போயிடுமே.. அடேய்.. மாசமா இருக்கற தாய் வாமிட் எடுத்து பார்த்திருக்கேன்.. உன் தங்கை சமையலை சாப்பிட்ட ஒரு நாய் வாமிட் எடுத்ததை இப்பதாண்டா பார்க்கறேன். 

12. உன் தங்கச்சி சமையலை சாப்பிட்டா சிவாஜியை விட அதிக பர்ஃபார்மென்ஸ் காட்ட வேண்டி இருக்கும்டா.. நல்லாருக்கற மாதிரி நடிக்கனும்.. அது எங்களால முடியாது.. .

13.  என்னடா அப்படி சொல்லீட்டீங்க? என் தங்கை சமையல்ல புலிடா.. 

அதுக்கு நாங்க பலிடா.. 

ஏன்.. இந்த புளி சாதம் நல்லாலை..?


அண்ணே.. அது உப்புமா.. 


14. பிச்சைக்காரன் - உயிர் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன்...ரொம்ப நன்றிங்க சாப்பாடு போட்டதுக்கு..

சாப்பிடு.. உயிர் இருக்கா?னு பார்ப்போம்.. 

15.  என்னது? திருடன் ஓடிட்டானா?

சந்தானம்  - பின்னே..? திருடிட்டு ஓடாம பாதயாத்த்ரை போவான்னு நினைச்சியா?

16. சந்தானம் - பொறம்போக்குகள் எல்லாம் பொழுது போக்கு கேக்குது பாரு..

17. சந்தானம் - 62,000 ஒயிஃபை கரெக்ட் பண்ணுன தசரத சக்கரவர்த்தி சாப்பிட்ட லேகியம் இருக்கு.. அதை தர்றேன்.. அதை உன் மாமன் கிட்டே குடு..

அய்.. நல்ல ஐடியா..

டேய்.. மானம் உள்ள அப்பனா இருந்தா பால்ல பவுடர் போட்டுத்தர்றப்பவே, ஹால்ல இருந்த நீ அதை தடுத்திருக்கனும்.. மாமாப்பயலே.. 

18. தங்கைக்கு கட்டில் எடுக்கனும், பீரோ எடுக்கனும்.. 

சந்தானம் -  அதுக்கு  முன்னால நீ வெச்சிருக்கற பணம் எடுக்கனும்.. 

19.சந்தானம்  - . அய்யோ.. என் பின்னால ஆணி குத்திடுச்சே.. 

வெயிட்டர் - சார்.. அது எங்க ஹோட்டல்து.. தந்துடுங்க.. 

சந்தானம் - அடேய்.. பொறுப்பு பருப்பே... !!!! வெயிட்ட்

20.. சந்தானம் - நாம எல்லோரும் ஒரே கண்ட்ரி தான், எதுக்கு நமக்குள் நன்றி எல்லாம்.. ?
http://www.krunchmag.com/wp-content/uploads/2011/03/Hansika-Motwani-hot-Latest-Photo-Gallery-91.jpg

21. பொண்ணு  டிரஸ் மாத்தறப்ப திடீர்னு உள்ளே வர்றியே? உனக்கு இது அசிங்கமா இல்லை?

இல்லீங்க்,... அழகா இருந்துச்சுங்கோவ்,...

22. சந்தானம் - டேய்.. நீ அவளை டாப்லெஸ்ல பார்த்ததும், அவ உன்னை அப்படி பார்த்ததும் ஒண்ணாகிடுமா? இப்படி பழகி பழி வாங்கற ஹீரோவை நான் பார்த்ததே இல்லை.. 

23. சந்தானம் -  நீ கடையையே கண் காட்சி மாதிரி பார்ப்பியே.. காணாததை கண்டவனாட்டம்.. கண்காட்சியை எப்படி பார்ப்பியோ..?

24. சந்தானம் - பிரசவ கால நாய் மாதிரி உனக்கு ஏன் அடிக்கடி கோபம் வருது?

25. சந்தானம் - அப்பா.. நீ எப்படி இங்கே?

அதை நான் சொல்றேன்..

சந்தானம் - பெரிய அண்னா, நீ எப்படி இங்கே?


அதை நான் சொல்றேன்..


சந்தானம் - சின்ன அண்ணா.. , நீ எப்படி இங்கே?

அதை நான் சொல்றேன்..
சந்தானம்  - இப்படியே பண்ணிட்டு இருங்க.. நான் போலீஸ்ல சொல்றேன்..

26. அப்பனுக்காக என்ன வேனாலும் செய்வியா மகனே..?

சந்தானம் -இனி உனக்கு செய்வினை தான் செய்யனும்.. 
27. டேய்.. நீ என்னை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு.. 
சந்தானம் - நல்லா கண்ணைத்திறந்து பாரு நைனா.. நிஜமாலுமே  செருப்பால அடிச்சுட்டுதான் இருக்கேன்.. 

28. உலகத்துலயே கலப்படம் இல்லாத விஷயம் நம்பிக்கைதான்.. அந்த நம்பிக்கையை குலைக்கற ,மாதிரி வேலையை என்னை செய்யச்சொல்றியே..?

29. என்னாதிது.. அஞ்சாங்கிளாஸ் படிக்கறப்ப போட்ட யூனிஃபார்ம் போல.. இன்னும் மாத்தலை? ஓ மாடர்ன் கேர்ள்!!!!

30. சந்தானம் - திருடன் மாட்னா போலீஸ்க்கு சொல்லனும்.. ஏண்டா சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பறீங்க? http://topbollywoodactress.com/wp-content/uploads/2011/08/velayudham-movie-stills-11.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஆசாத் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுக்காமல் முன் பாதியில் காமெடியை அள்ளித்தெளித்தது, வசனம் சுபாவை எழுத வைத்தது..

2. ஹன்சிகாவை புக் செய்தது ( ஹீரோயினா நடிக்க ), கொடுத்த சம்பளத்துக்கு ஈடாக நடிப்பை!!!! வெளீப்படுத்த வைத்தது.. 

3. சூப்பர்மேன் மாதிரி வேலாயுதம் கேரக்டரை பில்டப் செய்தது.. கமர்ஷியலாய் படம் போர் அடிக்காமல் எடுத்தது..

http://media.santabanta.com/gal/bollywood/hansikaphotoshoot/12.jpg
இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. ஓப்பனிங்க் சீனில் பிரஸ் ஆள் மேல் வில்லன் பெட்ரோலை ஊற்றுகிறான்.. உடனே டக் என்று ஓடாமல் வேணாம், என்னை விட்ரு என அவர் ஏன் கெஞ்சிட்டு இருக்கார்.? அவரை யார் கட்டி வெச்சு இருக்காங்க?

2. கொலை செய்யப்பட்ட சக ஊழியரை கண்டதும் ஜெனிலியா ஓட ஆரம்பிக்கிறார்.. ஆனால் வில்லன் அந்த ஊழியர் மேல் மீண்டும் சுடும்போது ஜெனிலியா முகத்தில் ரத்தம் தெறிக்குதே, எப்படி?

3. விஜய் ஒப்பனிங்க் சீனில் 120 கி மீ வேகத்தில் வரும் ரயிலில் டகார் என ஜம்ப்புவது எப்படி?

4. சீட்டுக்கம்பெனியில் மேனேஜர் செக் தர 2 நாள் ஆகும் என்கிறார்.. கேஷ் என்றால் 3 நாள் ஆகும் என்கிறார்... ஃபோர்ஜரி செக் தானே? அப்பவே போஸ்ட் டேட்டட் செக் தந்திருக்கலாமே? ஹீரோ சென்னையில் 3 நாட்கள் தங்க வைக்க ஐடியாவா?

5.இடைவேளை டைமில் வேலாயுதத்தை நேரில் பார்த்த வில்லனின் அடியாளை ஹாஸ்பிடலில் வைத்து விசாரிக்கும் வில்லன் வேலாயுதத்தை நேரில் பார்த்ததாக டி வி யில் அறிவித்த ஆர் பாண்டியராஜனை ஏன் கண்டு கொள்ளவே இல்லை?

6. ஆரம்பத்தில் வேலாயுதம் அவதாரம் எடுக்க மறுக்கும் ஹீரோ தனக்கு பர்சனலாக ஏற்பட்ட பிரச்சனைக்குப்பின் தானே அவதாரம் எடுக்கிறார்?அது ஏன்?

7.முன் பின் பார்த்திராத சிட்பண்ட் ஓனரை விஜய் எப்படி அடையாளம் அறிகிறார்?

8. கண் தெரியாத பெண்ணை விட்டு விட்டு அவரது சகோதரி ஏன் திடலை விட்டு வெளியே போறார்?

9. ரயில் ஃபைட்டில் சில ஷாட்களில் 23 பெட்டிகள் உள்ள ரயிலையும், ஹெலிகாப்டர்  வ்யூவில் எடுக்கப்பட்ட காட்சிகளீல் 9 பெட்டிகள் உள்ள ரயிலை காட்டுவதும் ஏன்?

10. லட்சக்கணக்கான மக்களின் ஆரவாரத்தில், வில்லனின் மைக் பேச்சையும் மீறி அந்த பார்வை அற்ற பெண்ணின் குரல் கேட்டு எல்லோரும் உண்மையை அறிவது நம்பும்படியே இல்லையே?


http://hotphotos.picswallpapers.com/var/albums/Hansika-Motwani/hot/Hansika-Motwani-hot-photo-009.jpg?m=1306002539


பாடல்கள் பொதுவா விஜய் படங்களில் கலக்கலா அமையும், இந்த டைம் அபவ் ஆவரேஜ்.. மற்றபடி சூப்பர் ஹிட் பாட்டு எதுவும் இல்லை.. நல்ல கவிதை வரிகளை கொண்ட சரணங்கள் உள்ள பாடல் முளைச்சு மூணு இலை விடலை பல்லவியால் மதிப்பு இழக்கிறது.. விஜய் பாடும் என் ரத்தத்தின்ரத்தமே பாட்டு ஏழை ஜாதி படத்தில் விஜய் காந்த் பாடும் கொள்கை பாட்டு போலவே இருப்பது மைனஸ்..

 
முதல் பாதி கலகல... பின் பாதி அதிரடி.. கமர்ஷியலாய் படம் தப்பித்து விடும் தான்.. ஆனால் விமர்சன ரீதியில் பல கணைகளை சந்திக்க நேரும்.. விஜய் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.. 


ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி  செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம். 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


சி.பி கமெண்ட் - பார்க்கலாம் மோசம் இல்லை.. சந்தானத்துக்காகவும் ஹன்சிகாவுக்காகவும்.. 
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்
http://hindi.way2movies.com/wp-content/uploads/2010/09/Hansika-Motwani-Hot-Photoshoot-Stills-In-Black-1-300x202.jpg

34 comments:

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Sen22 said...

நல்ல விமர்சனம்...

அப்போ படம் பார்க்கலாம்-nu சொல்ரீங்க...

விஜய் ரசிகர்களுக்கு எல்லாம் கொண்டாட்டம்தான்...

Happy Diwali...

கேரளாக்காரன் said...

Vimarsanam vasanam bulb neraya thappa sollirukkinga

கோகுல் said...

அப்ப வேலாயுதம் எஸ்கேப்பா?

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ படம் பரவால்லையா?

அம்பாளடியாள் said...

இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

Unknown said...

இந்தப்பதிவை நான் படிச்சிட்டு சாயந்தரமா பதில் போட்டா போறுமா அண்ணே...!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
முத்தரசு said...

பொழுது போகும்ல ஓகே

Yoga.S. said...

இனிய தீபாவளி வாத்துக்கள்! நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்!என்னமோ பொழச்சா சரி!

'பரிவை' சே.குமார் said...

படம் பரவால்லையா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Unknown said...

படம் பரவால்லையா? தீபாவளி வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ படம் பத்தோடு பதினொன்னு....

MANO நாஞ்சில் மனோ said...

இப்போவெல்லாம் ஹீரோவை காப்பாத்துறதே சந்தானம்'தான்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டாகுட்டர்'கிட்டேயே நடிப்பை எதிர் பார்க்க முடியாது, ஹன்சிகா'கிட்டே எப்பிடி எதிர்பார்க்க முடியும் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

இனி அடுத்து அந்த கில்மா படம் விமர்சனம் வரும் ஹி ஹி...

settaikkaran said...

நான் பார்ப்பேன்; ஏழாம் அறிவெல்லாம் அப்புறம் தான்! :-)

"ராஜா" said...

அண்ணே எல்லாம் ஓகே ஆனா ரஜினிக்கு அடுத்து விஜய்க்குத்கான் மாஸ் ஒபெநிங்நு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் .தீபாவளிக்கே தியேட்டர் காத்தாடுது எங்க ஏரியா பக்கம்

கிராமத்து காக்கை said...

அருமையான விமர்சனம் அண்ணோ

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

என்னத்தை சொல்ல பாஸ் நானும் படம் பார்த்திட்டு நொந்து நூலாகி ஓரு விமர்சணம் போட்டு இருக்கேன்.........

Anonymous said...

விமர்சனம் அசத்தல் சிபி சார் ..தீபாவளி வாழ்த்துக்கள்

நிரூபன் said...

அண்ணே வணக்கம் அண்ணே,
அடியேனும் உள்ளேன்...

அப்புறமா வாரேன்.

murugan said...

விஜய் இன்னும் 10 படங்கள் flop கொடுத்தாலும் பார்ப்பதற்க்கு அவரை கான்பதற்க்கு காத்திருப்போம்

ADMIN said...

தீபாவளி வாழ்த்துக்கள் சி.பி. சார்..!! விமர்சனமும் அழகு..! ஆனால் விஜய் பாடு திண்டாட்டம்தான்.. போட்டு எடுக்குறீங்க..!! ஐயோ பாவம்..!!

Anonymous said...

தீபாவளி பட விமர்சனம் அருமை...
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Ramesh said...

Diwali wishes to all bloggers and followers and of course to all readers

Unknown said...

விமர்சனம் அருமை. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்த படத்தின் போஸ்டர் (மேலே முதல் போட்டோ) , ஆங்கில படம் 'Triangle' போஸ்டர் மாதிரியே இருக்கிறது. கொஞ்சம் ஒப்பேற்றி இருகிறார்கள்.

Try 🆕 said...

கலக்கல் விமர்சனங்ணா.

RAMA RAVI (RAMVI) said...

அதுக்குள்ள படம் பார்த்தாச்சா?

விமர்சனம் நல்லாயிருக்கு.அப்ப படம் பார்க்கலாம்

shanthi said...

நடுநிலை விமர்சனம்.ஆனால் எதுக்கு ரிஸ்க் எல்லாம் எடுத்துகிட்டு?உங்க விமர்சனத்துலருந்து கொஞ்சநாள் காத்திருந்து காமெடி channelகளில் சந்தானம் காமெடியை மட்டும் பாத்துக்கலாம்னு தோணுது .

சாமக்கோடங்கி said...

சிபி விமர்சனத்திற்குப் பிறகு தான் படம் பார்க்க வேண்டும் என்றிருந்தேன்.. ரொம்ப நன்றி.. ஏழாம் அறிவு விமர்சனம் போட்டாச்சா பாஸ்...

Jaganathan Kandasamy said...

doctor விஜய் ரசிகர்களுக்கு எல்லாம் கொண்டாட்டம்தான்...

நிரூபன் said...

விமர்சனம் வழமை போல அசத்தல் பாஸ்..
வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கொஞ்சம் குறைத்து,
படத்தின் ஏனைய கலை, சண்டை, கிராபிக்ஸ், கதை நகர்வு பற்றி கொஞ்சம் சிலாகிருந்தால் இன்னும் அசத்தலா இருக்கும்.