Friday, October 14, 2011

கடலை போடும் விடலை ஜோக்ஸ்

1.என் வீட்டின் முகவரி தெரியாதவளுக்கு என் இரவின் முகவரி மட்டும் எப்படியோ தெரிந்திருக்கிறது, கனவில் வந்து விடுகிறாளே?

-----------------------------------

2. திமுக வும் அதிமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்த கட்சிகள்- கேப்டன்#  அப்போ தேமுதிக வெள்ளையடிக்கிற கட்சிங்க்ளா?

---------------------------------

3. பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது

------------------------------

4. பதவில இருக்கற எல்லோருமே ஊழல் பண்ணுனா அது மக்கள் ஆட்சி, ஒரே ஒருவர் மட்டும் ஊழல் செஞ்சா அது சர்வாதிகார ஆட்சி # கலைஞர் VS ஜெ

--------------------------------

5. அவரு கேப்டன் ரசிகராம்..

அதுக்காக லவ் பண்ற ஃபிகர்ட்ட “ ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுங்க, எடு புடி புருஷனா வாழ்ந்து காட்டறேன்” அப்டிங்கறதா?

-------------------------------6. அந்த பேஷண்ட்க்கு பொறாமை ஜாஸ்தி.

ஏன் டாக்டர்?

நாங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிடறோம்? நீங்க மட்டும் நர்ஸுன்னு கூப்பிடறீங்களே?ங்கறானே?

---------------------

7. வாழ்க்கைல அடிக்கடி வெறுப்பு வந்தா அவன் குடும்பஸ்தன், பொது வாழ்க்கைல வெறுப்பே வர்லைன்னா அவன் அரசியல்வாதி

----------------------

8. கடலும் கடல் சார்ந்த இடமும்னு தலைவர் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரே?

ஆமா, கடலூர் ஜெயில்ல அவரை தள்ளிட்டாங்க, வேற என்ன பண்ணுவார்? பாவம்

-----------------------------

9. உங்க பையனுக்கு விவசாயத்துல ஆர்வம்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

24 மணி நேரமும் ஃபிகர்ங்க கூட கடலை போட்டுட்டு இருக்கானே?

-----------------------------------

10. உன் மனைவி ஒரு குடும்பத்து குத்து விளக்காமே?

ஆமா, ஏதாவது பிரச்சனைன்னா பேசி விளக்க மாட்டா, கும்மாங்குத்து குத்தி விளக்குவா..

--------------------------------------11. வயிறு எரியுதுன்னு மனைவி சொன்னா  ஸ்டொமக் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போகாம சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போறீங்களே?அவளுக்கு பக்கத்து வீட்டுக்காரி புது வீடு கட்டிட்டான்னு பொறாமைல வயிறு எரியுதாம்..

--------------------------------

12. அழகிப்போட்டில நான் தோத்துட்டேன்...ஏன்? நான் அழகி  ஆக தகுதி இல்லையா?

அழகிப்போட்டில கலந்துக்கவே தகுதி இல்லை..

--------------------------------

13. ஜட்ஜ் - மக்கள் நடமாட்டம் உள்ள பகுதில கொள்ளை அடிச்சிருக்கே.. ஏன்/

கைதி - அப்போதாங்க டக்னு மக்களோட மக்களா கலந்துட முடியும்?

----------------------------------

14. கவர்ச்சி நடிகையிடம் டைரக்டர் - என்ட்ரி எப்படி இருக்கணும் தெரியுமா... எல்லாமே ரெக்கார்ட் டான்ஸ் ஆகணும்... ஆடனும்

--------------------------------

15. டாக்டர், 4 ஆம் வார்டு பேஷண்ட்டோட போக்கே சரி இல்லை..

நர்ஸ்.. கண்டுக்காதீங்க, வயிற்றுபோக்குன்னு அட்மிட் ஆன பேஷண்ட். அவரு..

---------------------------------

16. தலைவருக்கு தொலை நோக்குப்பார்வை ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?

12 கி மீ தூரத்துல நடந்து வர்ற மகளிர் அணித்தலைவி என்ன கலர் டிரஸ் போட்டிருக்காங்கன்னு சரியா சொல்றாரே?

------------------------------------

17. போயஸ்கார்டன் போய் அவமானப்படாமல் திரும்பியவர்கள் இல்லை: சுப.வீரபாண்டியன் #  ஏன்? சசிகலா இல்லையா?

-----------------------

18. LIFE IS NO WHERE   என்பது நெகடிவ் சிந்தனை, LIFE IS NOW HERE  என்பது பாஸிடிவ் சிந்தனை # SMS

----------------------------

19.  மிஸ்! உங்க பேர் என்ன?ன்னு சொல்ற வரை உங்களை அனாமிகான்னு கூப்பிடறேன்.

ஆ.. அஸ்கு புஸ்கு, இப்படி சொன்னா என் பேரு செல்வின்னு சொல்லிடுவேனா?

---------------------------------

20. சாஸ்திரம், சம்பிரதாயம் எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்லை.

. அதுக்காக? லவ் மட்டும் தான் செய்வேன் நோ மேரேஜ், நோ தாலின்னா எப்படி?

-------------------------------------

25 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

kobiraj said...

சூப்பர் அதிலும் கப்டன் சரவெடி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?

விவாத மேடை ரணகளமாகி,
அப்புறம் ஐடியாமணி அதற்கு ஓர் எதிர்ப்பதிவு போட்டு அங்கேயும் ரணகளமாகி இப்போ தான் வந்திருக்கேன்.

நிரூபன் said...

கடலை போடும் விடலை ஜோக்ஸ்//

அண்ணாச்சி தான் இப்பவும் யூத் என்று சொல்ல வாறீங்களோ;-)))


நம்பிடுறோம் பாஸ்..

ஹே...ஹே..

நிரூபன் said...

3. பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது//

ஆமா இது என்ன நேற்றைய கடிதத்திற்கான பதிலா..


ஹே...ஹே...

நிரூபன் said...

. பதவில இருக்கற எல்லோருமே ஊழல் பண்ணுனா அது மக்கள் ஆட்சி, ஒரே ஒருவர் மட்டும் ஊழல் செஞ்சா அது சர்வாதிகார ஆட்சி # கலைஞர் VS ஜெ//

அரசியலில் இதெல்லாம் சகஜமுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

நிரூபன் said...

10. உன் மனைவி ஒரு குடும்பத்து குத்து விளக்காமே?

ஆமா, ஏதாவது பிரச்சனைன்னா பேசி விளக்க மாட்டா, கும்மாங்குத்து குத்தி விளக்குவா..//

பயங்கரமா நொந்திருப்பீங்க போல இருக்கே;-)))

ஹே...ஹே...

நிரூபன் said...

சாஸ்திரம், சம்பிரதாயம் எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்லை.

. அதுக்காக? லவ் மட்டும் தான் செய்வேன் நோ மேரேஜ், நோ தாலின்னா எப்படி?//

ஆகா...இது நல்லாத் தான் இருக்கும்..

பொண்ணுங்க தான்
ஒத்துக்கனுமே;-)))

Mahan.Thamesh said...

எல்லாமே அசத்தல்

வைகை said...

திமுக வும் அதிமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்த கட்சிகள்- கேப்டன்# அப்போ தேமுதிக வெள்ளையடிக்கிற கட்சிங்க்ளா?///

மண்டைல அடிக்கிற கட்சி # வேட்ப்பாளர

வைகை said...

பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது///

பட்.. அது யாரோட புன்னகைங்கிரத பொறுத்து இருக்கு :))

Mathuran said...

8, 10 சூப்பர் பாஸ்

வைகை said...

அவரு கேப்டன் ரசிகராம்..
அதுக்காக லவ் பண்ற ஃபிகர்ட்ட “ ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுங்க, எடு புடி புருஷனா வாழ்ந்து காட்டறேன்” அப்டிங்கறதா?/////

நல்ல வேளை... எனக்கு அஞ்சு வருஷம் மட்டும் போதும்னு அவரு சொன்னத சொல்லல :))

கூடல் பாலா said...

கடலை போடும் ஜோக் அருமை !

குறையொன்றுமில்லை. said...

தலைப்புக்கு ஏத்தாமாதிரி ஜோக்கெல்லாம் தேத்திட்டீங்கபோல?

Unknown said...

பெரும்வாரியான ஜோக் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எங்கள் அண்ணன் சிபி இன்று முதல் ஜோக்காராச்சி மன்ற தலைவராக பதவி ஏற்கின்றார்

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நன்றாக இருக்கு.

அந்த முதல் படத்தில் ஆயுதம் தாங்கியவர் பூனையிடம் காட்டும் அன்பை, மக்களிடம் காட்டினால் நன்றாக இருக்குமே என தோன்றுகிறது.

SURYAJEEVA said...

முரணான படங்கள், அருமையான சிந்தனைகள் திகட்ட திகட்ட கீச்சுக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

கடலும் கடல் சார்ந்த இடமும்///

உன்னை அந்த ஜெயில்ல போட்டுருந்ததா கேள்வி பட்டேன உண்மையா அண்ணே...??

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் சிந்திக்க வைக்கின்றன!!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா அண்ணா, கொஞ்சம் சோர்வா இருக்குற மாதிரி தெரியுதே என் டெலிபதி மனசுக்கு...!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

கேப்டன் ஜோக் சூப்பர்..இதையே நான் வேறுவிதமாக யோசித்திருந்தேன்..உங்களுது நல்லா இருக்கு..

ADAM said...

GOOD

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com