Monday, October 31, 2011

பாண்டிச்சேரி டாக்டரின் பாலியல் அத்து மீறல்கள் - உண்மை சம்பவம்

பாண்டிச்சேரியில் வசிக்கும் பிரல டாக்டர் ரவி பற்றிய அக்மார்க் உண்மைகள் அடங்கிய சம்பவம் இது.. பெயர் , ஊர் உள்பட அனைத்தும் உண்மை.. 0% கூட கற்பனை எதுவும் இல்லை...


மேரி, கியூரி தம்பதியினர் நோபல் பரிசும், ராமகிருஷ்ணபரமஹம்சர், சாரதாதேவி இணைந்து ஆன்மீகத்திலயும், காந்திஜி கஸ்தூரிபாய் இணைந்து நாட்டு விடுதலைக்கும், பெரியாரும் வள்ளியம்மையும் இணைந்து பெண்விடுதலைக்கும் பாடுபட்டனர். இது போல் எத்தனையோ தம்பதிகள் இணைந்து , மனமொத்து பலத்துறைகளில் சாதித்துள்ளனர். 
 
ஆனால், என் நண்பருக்கு தெரிந்த ஒரு  தம்பதியினரோ கலாச்சார சீர்க்கேட்டில் பரிசு வாங்கிடுவாங்க போல. அந்த “சூப்பர் ஜோடி”யை பற்றி இப்பதிவு. இது, இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நம் கற்பனைக்கும் மிஞ்சிய அருவெறுப்புகள் நம் சமூகத்தில் அரங்கேறுகின்றது என்பதற்கான விழிப்புணர்விற்கான பதிவே தவிர கில்மா பதிவல்ல.

 சமீபத்தில்  சேலம் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. அது ஹாஸ்டல் வசதியுள்ளது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பிள்ளைகள் படிக்க வந்திருந்தனர்.    அங்கு ஒரு மாணவனின் அழகும், துறுதுறு பேச்சும் என்னை கவரவே ஆசிரியரான என் நண்பரை அப்பையனை பற்றி விசாரித்தேன். அவன் சென்னையிலிருந்து வந்து படிக்கிறான் என  சொன்னார். 
 
சென்னையில் இல்லாத பள்ளியா? இவ்வளவ் தூரம் வந்து படிக்க வைக்குறாங்களே?ன்னு கேட்டதுக்கு., என் ஃப்ரெண்ட் நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே சாயந்தரம் வீட்டுக்கு வா எல்லாத்தையும் சொல்றேன்னு சொன்னார், நானும் சாயந்தரம் வீட்டுக்கு போனதும் கதையை ஆரம்பித்தார்..


சென்னை வளசரவாக்கத்தில் லதா, மோகன் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். அவர்கள் பையன் தான் இவன். ரொம்ப வசதியான ஃபேமிலி. மோகன் எம்.பி.ஏ. லதா பிஎஸ்சி. மோகன் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. பணமும், பன்னாட்டு கல்லூரியும்  அவனை மேற்கத்திய கலாச்சார படி வளர வைத்தது. 
 

 
ரவி, அவர் நண்பன் மோகன் பற்றி சின்ன ஃபிளாஸ் பேக் .எப்பவும் மோகன் நண்பன் ரவியுடன் தண்ணி, சனிக்கிழமை டிஸ்கொதே பார்ட்டின்னு ஊரை சுற்றுவது வழக்கம்.  வயசு பிள்ளைங்கன்னா இதெல்லாம் சகஜம்,கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகும்ன்னு எல்லாரும் விட்டுட்டாங்க.

முதலில் ரவிக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ரவி பாண்டிச்சேரியில் பிரபல டாக்டர்.. அடிக்கடி சென்னை வருவார்.. அப்பவும் ரெண்டு பேரும் ஒண்ணாவே சுத்திக்கிட்டு இருந்தாங்க. பொண்ணு பார்ப்பதில் கூட ரவியின் தலையீட்டை கண்டு மனம் துணுக்குற்றாலும் மகனுக்காக பொறுத்துக்கிட்டாங்க .மோகனின் அப்பா அம்மா. லதா என்ற கிராமத்து பெண்ணை பார்த்து கட்டி வச்சாங்க. 
 
முதலில் சென்னையைக் கண்டு மிரண்டாலும் சுதாரித்துக் கொண்டு அக்மார்க் சென்னை பெண்ணாவே மாறிப்போனாள். திருமணமாகி சில வருடங்கள் கழிந்து மோகனும், லதாவும் தனிக்குடித்தனம் வந்தனர்.


தனிக்குடித்தனம் வந்தபிறகு மோகன் மெல்ல மெல்ல ரவியை பற்றி லதாவிடம் அதிகம் பேசலானான். அவன் என்னைவிட கலர், உயரம், அவன் உடம்பை பாரு சிக்ஸ் பேக்குலாம் வச்சிருக்கான்னு பேச ஆரம்பிச்சான். ஒரு நாள் ”லதா ,நம்ம ரவியோட வொயிஃப்க்கு உடம்பு சரியில்ல. அதனால், அவன் ”தனியா தவிக்குறான்”. நீதான் அவனுக்கு ”கம்பெனி” குடுத்து அவன் தனிமை போக்கனும்னு சொல்லியிருக்கான். 
 
லதாவுக்கு அதிர்ச்சி.. கணவனே இப்படி பேசறானே? என்று.. 
 
முதலில் மறுத்தாலும் மோகனின் பேச்சில் மயங்கி புது அனுபவத்துக்கு ஆசைப்பட்டு ஓக்கே சொல்லிட்டா. அப்புறம் நண்பர்கள் இருவருக்கும் மனைவி போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.


தன் பொண்டாட்டியை லேசா யாராவது இடிச்சாலே சட்டையை பிடிச்சு அடிக்குற ஆளுங்க நாம. அப்படியிருக்கும்போது மனைவியையே ஒரு கணவன்  விட்டுக்குடுக்கனும்னா என்ன லாபம்? பணத்துக்காகவா?தொழில் அபிவிருத்திக்காகவா??ன்னு நான் கேட்க..., அதெல்லாம் ஒண்ணுமில்லை, ரவியும் மோகனும் பைசெக்ஸுவல் பார்ட்டிங்க. அதாவது, ஆணுடனும், பெண்ணுடனும் செக்ஸை பகிர்ந்துக்க்றவங்க. இது அவங்க கல்யாணத்திற்கு முன்னலிருந்தே இருக்கு. தற்செயலா ரவியோட வொயிஃப்க்கு உடம்பு முடியாம போயிடுச்சு. அப்பவும் ரவி சும்மா இருக்கலை, ரவியின் மச்சினியை கரெக்ட் பண்ணி என்ஞ்சாய் பண்ணி இருக்கான். அது மட்டுமில்லாமல் மோகனையும் எஞ்சாய் பண்ண விட்டிருக்கான்.
டாக்டர் ரவி மோகனுக்கு தன் மச்சினியை தாரை வார்த்தது ஒரு வகையில் சுயநலத்துக்குத்தான்.. அதை சாக்காக வைத்து மோகனின் மனைவியை  பரிசாக கேட்க.. கிட்டத்தட்ட எக்ஸேஞ்ஜ் ஆஃபர் போல..

  ரவி பாண்டிச்சேரியில செட்டிலாகிட்டான். அப்புறம் சனிக்கிழமை சென்னை வருவான், வந்து ரவி, மோகன், லதா மூணுப்பேரும் சென்னை டிஸ்கொதே பார்ட்டிக்கு போவாங்க.

Yulia Brodskaya (1)


அங்க எதுக்கு? அப்பாவியாய் கேட்க.

 எல்லா கருமமும் சனிக்கிழமை ராத்திரி அங்க அரங்கேறும். ஜோடியா போனாத்தான் ஹாலுக்குள்ளயே விடுவாங்க. தண்ணி, தம்முன்னு களைக்கட்ட ஆரம்பிக்கும் பார்ட்டி மெல்ல மெல்ல டான்ஸிற்கு வரும். எல்லா ஜோடி ஆடுவாங்க. டான்ஸ் முடியும்போது பார்த்தால் ஜோடி மாறி இருக்கும். அப்புறமென்ன “செட்டான ஜோடி”லாம் ரூமிற்குள் போனாங்கனா விடிஞ்ச பிறகுதான் வெளில  வருவாங்க. ஜோடிகள் மாத்திக்குறதுக்கும் கோட் வேர்ட் இருக்கு.

 இந்த ஜோடி மாற்றமெல்லாம் ஹோட்டலுக்கு வர்ற எல்லா ஜோடிகளும் கிடையாது. டிஸ்கொதேக்கு வருவதில் டீசெண்டான ஜோடிகளும் உண்டு. வந்தோமா? தண்ணி, டான்ஸ்ன்னு இருந்தோமான்னு ஒழுக்கமா திரும்பி போற ஜோடிகளும் இருக்காங்க.

இந்த கருமமெல்லாம் பத்தாதுன்னு, லதாவின் ஃபிரெண்ட்ஸ்களை  தங்களுக்கு “அறிமுகம்” செய்துவைக்கும்படி மோகன் கேட்டானாம். லதாவோ என் சொந்த ஊரில் என் இமேஜ் போயிடும். அதனால் மாட்டேன் னு சொல்லிட்டாளாம். 
 
 இதுல ரவியின் ஃபார்முலாவை மோகன் ஃபாலோ பண்ண பார்த்திருக்கான்.. அதாவது என் ஃபிரண்டை உனக்கு கிஃப்ட்டா(!!) குடுத்ததுக்கு பிரதிபலனா உன் ஃபிரண்ட்சை எனக்கு கிஃப்ட்டா குடுன்னு.. 


பிள்ளை வளர்ந்து வரான். அவனுக்கு இதெல்லாம் தெரியக்கூடாதுன்னுதான் இங்க கொண்டு வந்து சேர்த்திருக்காங்க.

ஹூம் காலம் எப்படி கெட்டு போயிருக்கு பாரு. பொண்ணை பெத்தவங்க பொண்ணை கட்டி குடுக்குறவரை பொத்தி பொத்தி வளர்க்குறாங்க. ஒருத்தன்கிட்ட கட்டிக்குடுக்கும் வரை நெருப்பை வயத்துல கட்டி இருக்குற மாதிரின்னு கற்போட ஒழுக்கமா வளர்க்குறாங்க. ஆனால் சில பேர் தனக்கு மட்டுமே சொந்தமான அவள் கற்பை பல்வேறு காரணத்துக்காக அவனுங்களே கடைசரக்காக்கிடுறங்க என்று கூறி வருத்தப்பட்டார்.

எல்லாம் சரி இதை எப்படி லதா ஒத்துக்கிட்டாள்? 

அதான் சொன்னேனே  ரவியை பத்தி  பேசி பேசியே சரிக்கட்டிட்டான்.

”ஃபிரெண்ட்” மட்டும் ஓக்கே. ஆனால், ஜோடி மாற்றத்திற்கு எதுக்கு லதா ஒத்துக்கிடனும்.

பட்டிக்காட்டுல வளர்ற சில பொண்ணுங்களுக்கு இயல்பிலேயே நகரத்து வாழ்க்கை மேல ஒரு மோகம் உண்டு. லதாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுமட்டுமில்லாமல், மோகனின் வசீகர பேச்சு, ரவியின் அழகு, புதுபுது அனுபவங்கள் மீதான ஆசையும் அவளை இணங்க வைத்தது.

ஓக்கே. நீங்க இருப்பது சேலத்துல. அவங்க இருப்பது சென்னையில. அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி இந்த கதைலாம்  தெரியும்?

பள்ளி விடுமுறையின் போது ஸ்கூல் பிள்ளைகளை அவரவர் வீட்டில் கொண்டு   எங்கள் பள்ளியின் பொறுப்பு. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் போவார். ஒரு சமயம் சென்னை செல்லும் பொறுப்பு எனக்கு வந்தது. நான் சென்னைக்கு புதுசு. சென்னையிலிருக்கும் என் ஃபிரெண்ட் துணையுடன் பிள்ளைகளை அவரவர் வீட்டில் விட்டேன். இவன் வீட்டிற்கு போகும்போதுதான் என் ஃப்ரெண்டிற்கு அவன் பேரண்ட்ஸ்  ஏற்கனவே அறிமுகம் போல. அவன் தான் சொன்னான் இந்த கதை எல்லாம்.
 
Facebook status Update
 
 
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. கிராமங்களில் இருந்து நகரத்துக்கு பெண்ணை கட்டிக்கொடுக்கும் பெற்றோர் கல்யாணம் முடிந்ததும் நம்ம கடமை முடிஞ்சுதே என ஒதுங்கி விடக்கூடாது, அட்லீஸ்ட் வாரம் , அல்லது மாதம் ஒரு முறையாவது மகளை பார்க்க சென்று வர வேண்டும்..

2. கலாச்சார சீர்கேட்டில்  சிக்கிய தம்பதிகள் தங்கள் சுய நலத்துக்காக தங்கள் வாரிசை ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், தங்க வைப்பதால்  அவனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.. 

3. ஹை க்ளாஸ் மக்கள் என்பதால் அவர்களுக்கு எந்த வியாதியும் இருக்காது ,என்ற நம்பிக்கையில் பாதுகாப்பு இல்லாத உறவு கொள்வதாக தகவல்கள் வருகின்றன.. இது சமுதாயத்துக்கே இழைக்கப்படும் அநீதி.. உங்கள் அஜாக்கிரதையால் உங்கள் எதிர்காலம், பலரது எதிர்காலம் பாதிப்பு அடைகிறது

4. பெண்ணுக்கு ஆசைப்படும் ஆண்கள், வெரைட்டி வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கென்றே இருக்கும் பெண்களை அணுகவும்,... தாலி கட்டிய மனைவியை அதில் ஈடுபடுத்தி குடும்ப எதிர்காலத்தை, அமைதியை சிதைக்க வேண்டாம்.. 

5. இந்தப்பதிவால் அந்த மாதிரி ஆட்கள் உடனே திருந்தி விடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மனதில் சின்ன சலனத்தையாவது ஏற்படுத்த முனைந்தால் அதுவே போதும் எனக்கு

6. சென்னை , பெங்களூர் ஆகிய நகரங்களில் இது போன்ற ஜோடி மாற்றும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.. இதை தடுக்க காவல் துறை முன் வர வேண்டும்.. 

7. தனது மனைவி என சொல்லி ஒரு விலைமகளை யாராவது அழைத்து வந்தாலும் ஆச்சரியம் இல்லை.. எனவே எச்சரிக்கை

33 comments:

Unknown said...

Me the first?

முத்தரசு said...

நிற்க வைத்து இல்லை இல்லை ஓட விட்டு போட்டு தள்ளனும்

முத்தரசு said...

//ஜோடி மாற்றும் கலாச்சாரம்//

கருமம் பிடிச்ச கலாசாரம்...

rajamelaiyur said...

மனசாட்சி சொன்னதுதான் சரி

rajamelaiyur said...

நல்ல விழிப்புணர்வு பதிவு தல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேற்கு நாடுகள்ல இருக்கற நல்ல நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுப்புட்டு மக்கள் இதுகளை மட்டும் கெட்டியா புடிச்சிக்கிறாங்களே?

குரங்குபெடல் said...

"டிஸ்கொதேக்கு வருவதில் டீசெண்டான ஜோடிகளும் உண்டு. வந்தோமா?
தண்ணி, டான்ஸ்ன்னு இருந்தோமான்னு ஒழுக்கமா
திரும்பி போற ஜோடிகளும் இருக்காங்க.

இது உமக்கே ஓவரா தெரியலை

Unknown said...

ஸ்ஸ்ஸ் ஸ பா!!!

இந்த ஜோடி மாற்றம் என்பது அந்தக்காலத்தில இருந்தே சென்னைல இருக்காம்! - அப்பிடின்னு கண்ணதாசன் எழுதிய 'அரங்கம் அந்தரங்கம்' புத்தகத்தில விரிவா சொல்லி இருப்பார்!

எல்லாரோட கார் கீயையும் ஒண்ணா சேர்த்து குலுக்கி, யாரோட கீ வந்திருக்கோ அவரோட மனைவி....!

ஆக தெரியிறது என்னன்னா முன்னர் உயர்வர்க்க மக்களிடம் (சிலரிடம்) மட்டும் இருந்தது இப்போ நடுத்தர வர்க்கத்திற்கும் (சிலருக்கும்) தொற்றி இருக்கலாம்!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்,
நல்லதோர் பதிவு,
கோயிலுக்கு அவசரமாக போக வேண்டியுள்ளதால் விரிவாக கமெண்ட் போட முடியலை.
முன்பு ராணி பத்திரிகையில் வாசித்த உண்மைச் சம்பவங்களையும், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் வரும் கீபார்ட்டியினையும் இப் பதிவு நினைவுபடுத்துகிறது.

கணவனே...மனவியை...

பை செக்சுவல் ஆசைக்காகா...

கொடுமையான விடயம்,.


பன்னி அண்ணன் சொல்வது போல, மேலை நாட்டில் உள்ள பல நல்ல விடயங்களை விடுத்து, இத்தகைய அஜால் குஜால் மேட்டர்களில் அகப்பட்டுச் சீரழிவதில் மாத்திரம் எம் சமூகம் தன் கவனத்தை செலுத்துகிறது.

எங்கள் நாடுகளின் சனத்தொகைக்கு கொஞ்சம் முன்னாடி யோசித்திருந்தா,
நாம தான் செவ்வாய்க்குப் போய் குடியிருந்த முதல் ஆளாகியிருப்போம் பாஸ்..

Astrologer sathishkumar Erode said...

உங்க அத்துமீறல் தாங்கமுடியலையே -;))

நிரூபன் said...

மன்னிக்கவும், ஜீ சொல்லும் போது தான் நினைவிற்கு வந்தது.
அது அரங்கம் அந்தரங்கம் புத்தகம் என்பது,
பெங்களூர் பார்ர்டி மேட்டர்..
காரில் போகும் போதே எல்லாவற்றையும் பேசி டீலிங் முடிச்சுக் கொள்ளுவார்கள்..

அம்பலத்தார் said...

வணக்கம் சிபி, இப்படியான செயல்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவ்து குழந்தைகளின் வாழ்க்கைதான்.

அம்பலத்தார் said...

group sex, மனைவியை மாத்திக்கிறதெல்லாம் இங்கு மேலைதேசத்தவர் மத்தியிலேயே குறைந்துவரும் இன்றையகாலத்தில் உங்கு சூடுபிடிக்கிறதுபோலிருக்கிறது. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னதுபோல வெள்ளைக்காரனின்றை நல்ல விடயங்களை விட்டிட்டு இதுகளைத்தான் கத்துக்கிறார்கள்.

Unknown said...

Ithu enna boss Periya Akkaporaalla iruhhuthu
--> Kaalam Maarippochu <--

Pro Hacking Tips and Tricks

Unknown said...

எல்லாம் கலிகாலம்....
சென்னை பெங்களுரில் டிஸ்கோத்தே கிளப்பில் கார் சாவியை ஒரு பெட்டியில் போட்டு குலுக்கி ஒவ்வொருவராக எடுப்பார்களாம் அந்த காரின் உரிமையாளரின் மனைவியை இரவு முழுவதும்.....பயன்படுத்திக்கொள்ளலாம்
சில ஜெகஜால கில்லாடிகள் விலைமாதுவை அழைத்துவருவது உண்டாம் பால்வினைநோய் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட நிறைய பேர் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று இருக்கிறார்களாம்...ரிப்போர்டரில் படித்தது

வெளங்காதவன்™ said...

நிதர்சனமான உண்மை...

#இந்தக் கருமமெல்லாம் பிசுக்கோத்துய்யா... இன்னும் நிறையக் கருமம் இருக்கு.....

உணவு உலகம் said...

கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

சக்தி கல்வி மையம் said...

யோவ் மாப்ள நாம எங்கையா போயிட்டுருக்கோம்?

சக்தி கல்வி மையம் said...

இந்த கலாசாரம்ன்னு சொல்லுவாங்களே அது எங்கே?

N.H. Narasimma Prasad said...

என்ன சொல்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து. இந்த 'கலாச்சாரம்' ரொம்ப வருஷமாகவே நம்ம நாட்டுல இருந்துகிட்டிருக்கு.

செவிலியன் said...

என்னய்யா நடக்குது இங்க.....வெட்கக்கேடு...நல்லா சொல்லியிருக்கீங்க....ஆனா உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது...

Unknown said...

சிபி..ரெண்டு நாளா பதிவைக் காணோமேன்னு பார்த்தா...
தீபாவளி வாரம் (என்ஜாய் சிட்டி) முடிஞ்சு திங்கக்கிழமை ஒழுங்கா வேலைக்கு போயி உக்காரலாம்ன்னு நினைச்சவங்க மத்தியில இப்படி ஒரு பதிவப் போட்டு சில பேர் வயித்தில புளியைக் கலக்க வச்சுட்டீங்களே...
பதிவில் பணக்கார கிளப் மெம்பர்ஸ்...க்கு கொஞ்சம் ஷாக் கொடுத்திருக்கீங்க...
இந்த மாதிரி சமாச்சாரங்கள் அரசியல், விளையாட்டு, சினிமா உலகில் சகஜம்... கோவை ஆபீசர்ஸ் கிளப்பில் இது போல் நடக்கும் (20 வருடங்களுக்கு முன்பே) என்றும் அதுபோல் எல்லா மெட்ரோ சிட்டிகளில் இதுபோல் நிறைய நடக்கும் என்று வயது முதிர்ந்த நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டதுண்டு...
அடுத்தவங்க அந்தரங்க விசயத்த தெரிஞ்சுக்கப் போனா (படிக்கனும்னா)...
'மன்மதலீலை' படத்து கணக்கு பிள்ளை கணக்கா...பித்துப் பிடித்து அலைய நேரிடும்...
-கில்மாபித்துவம்

Unknown said...
This comment has been removed by the author.
settaikkaran said...

தல, ரொம்ப யோசித்தபிறகு பின்னூட்டம் இடுகிறேன். கோவிக்காதீக! :-)

இது அதிர்ச்சியூட்டும் நிகழ்வுதான். ஆனால், ஒரு காலத்தில் பெண்களை வீட்டுக்குள் பூட்டிவைத்து விட்டு ஆண்கள் வெளியே ஆட்டம் போட்டார்கள். இப்போது பெண்களும் வெளியுலகத்துக்கு வந்து விட்டதால், அவர்களிலும் சிலர் இது போல தடம் மாறிப் போகத்தான் செய்வார்கள். இதன் பின்விளைவுகளாகத் தான் அதிகரித்து வரும் விவாகரத்துகள், கொலைகள், தற்கொலைகள் எல்லாம் தொடர்கின்றன. இதை நிறுத்த விரும்பும் ஆண்கள் முதலில் தங்களது வாழ்க்கைமுறையை சீர்படுத்த முயல வேண்டும்.

காரணம், ஆதிகாலம் தொட்டே இது போன்ற சீரழிவுக்கு வித்திட்டவன் ஆண் தான். கண்ணதாசன் அரங்கம் அந்தரங்கத்தில் சொன்னது இருக்கட்டும். அதற்கு முன்னரே இது போன மனவிகாரங்கள் குறித்துப் பலர் எழுதி, பேசியிருக்கின்றனர். அதை ஜீரணிக்கிற துணிச்சல் இன்னும் பெரும்பாலானோருக்கு வரவில்லை. தனிமனித ஒழுக்கம் என்பதில் ஆண், பெண் என்றெல்லாம் தரம்பிரிப்பது இனி சரியாக இருக்காது.

சில நாட்கள் முன்பு சென்னைப்பித்தன் ஐயா ’கற்பு’ குறித்து ஒரு நல்ல இடுகை எழுதினார். அதில் நான் ஔவையார் சொன்ன, ’கற்பெனப்படுவது சொல்திறம்பாமை’ என்ற வரியைப் பின்னூட்டமாக இட்டேன். நேர்மைதான் கற்பு! இது போன்ற சம்பவங்கள், ஆணின் தனிமனித ஒழுக்கம் சீர்படாதவரை தொடரும். இது பெண்களுக்காக வக்காலத்து வாங்குவதற்காக எழுதியதல்ல. நகரவாசியாக இந்த நரகலுக்கு யார் காரணம் என்பதை பார்த்தும் கேட்டும் அறிந்தவன் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

ஆளுமை அதிகம் கொண்டவனாய் எண்ணுகிற ஆணுக்கே அதிகம் பொறுப்பும் இருக்கிறது; இருந்தாக வேண்டும். அதாரிட்டி இருப்பவனுக்கு ரெஸ்பான்சிபிலிட்டியும் இருக்கிறது அல்லவா? நன்றி!

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப கொடுமையான விஷயம்.இந்த மாதிரியான கலச்சாரம் எல்லாம் தேவையே இல்லை.

நீங்க கடைசியாக சொல்லியுள்ள கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

மகேந்திரன் said...

மனசாட்சி சொன்னதுதான் சரின்னு எனக்கு தோணுது....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, என்கிட்டே இதைப்பற்றி கேட்டுருந்தியன்னா இன்னும் நிறைய விஷயம் ஹோட்டலில் நடந்ததை சொல்லி இருப்பேனே.....

உதாரணம்....[[உண்மை]]

எங்கள் ஹோட்டல் முதலாளிகளின் [[முன்பு வேலைபார்த்த இந்தியன் முதலாளிகள்]] நண்பர்கள் பத்து பேர் உண்டு இவர்கள் வாரம் ஒருநாள் பார்ட்டி நடத்துவார்கள், பார்ட்டிக்கு உள்ளே ஜோடியாதான் வரவேண்டும். அப்படி பார்ட்டி உள்ளே வந்ததும் கார் சாவியை உண்டியல் போன்ற ஒரு பாக்சில் போடவேண்டும் எல்லாரும், பார்ட்டியில் தண்ணி, டான்ஸ் எல்லாம் போட்டுவிட்டு, கடைசியாக போகும் போது, ஒவ்வொருத்தராய் கையை விட்டு கார் சாவியை எடுப்பார்கள், எந்த காரின் சாவி யாருக்கு கிடைக்குதோ அவன் பொண்டாட்டி அன்று இரவு அவனுக்கு...!!!!

சிபி, இது நான் நேரில் பார்த்ததும் அல்லாமல் அந்த பாக்சை [[சாவி]] பாதுகாப்பதும் நானாகத்தான் இருந்தேன், நான் வேறே ஹோட்டலுக்கு மாறிவிட்டாலும், நண்பர்கள் அங்கே இருப்பதால் சொல்லுவார்கள், இந்த சம்பவம் இப்பவும் நடந்துட்டுதான் இருக்காம் அல்லாமலும் புது புது ஜோடிங்களும் சேர்ந்திருக்கார்களாம்...!!!ச்சே ச்சே...இரு இதுக்கு நான் ஒரு பதிவு ரெடி பண்ணுறேன்.

Unknown said...

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிங்க...இதுல பாருங்க ஆண்களும் பெண்களும் சமம்னு ட்ரை பண்ணி இருக்காங்க...இது இலை மறைவா நடந்து கிட்டு இருக்கு...எனக்கு தெரிந்த நண்பனே இப்படி ஆகி இருக்கான்....இதுக்கும் இப்போ அவரின் மனைவி பெரிய டீவில வொர்க் பண்றாங்க..என்னத்த சொல்ல!...இந்த விஷயம் இன்னும் தொடருது..............

SURYAJEEVA said...

பத்து வருஷம் முன்னாடியே இதே போல் எதோ ஒரு கதையா எதோ புத்தகத்தில் படித்த நினைவு... ராணி என்று நினைக்கிறேன்.. சரியா நினைவு இல்லை

சென்னை பித்தன் said...

என்ன கொடுமை இது.

Unknown said...

என்னமோ..ஏதோ? ரெண்டு மூணு நாளா மேட்டெரெல்லாம் ஒரு தினுசாவே இருக்கே!

Anonymous said...

சினிமா கதைகளைவிடவும் ரியல் லைஃப் சம்பவங்களை அடிச்சிக்க முடியாது போல...

விழிப்புணர்வு பதிவு

Unknown said...

@சேட்டைக்காரன் சேட்டைன்னு பேர் வச்சிருந்தாலும்...
கருத்துக்களை தரமானதா சொல்லிருக்கீங்க......