Tuesday, October 11, 2011

குண்டக்க மண்டக்க கமெண்ட்டக்க ஜோக்ஸ்

1.சாதாரண பலம் கொண்ட நம்மை அசுர பலம் கொண்டவராக மாற்றுவதால் நாம் நம் எதிரிகளை பாராட்ட வேண்டும்!


-------------------------------------

2. பலராலும் அறியப்படாத திறமைசாலிகளை தூக்கி விட குனிபவனே உலகின் சிறந்த , உயர்ந்த மனிதன்

---------------------------

3. பூஜை அறை இல்லாத மிடில் கிளாஸ் வீடுகளில்  சாமி படம் போட்ட காலண்டர் மாட்டப்பட்ட ஹாலே பூஜை அறையாக பாவிக்கப்படுகிறது

-----------------------------------------

4. உன்னிடம் எனக்குப்பிடிக்காதது என்னை கண்டு கொள்ளாத அலட்சியம், என்னிடம் உனக்குப்பிடிக்காதது உன்னை விட்டு விடாத ,விட்டுத்தராத என் லட்சியம்

---------------------------------

5. ஈகோ பார்ப்பதுதான் தம்பதிகளுக்குள் தோன்றும் பெரிய பிரச்சனை, விட்டுக்கொடுத்தல்தான் அதற்கான ஒரே தீர்வு

-------------------------------------

6.  அவமானங்களை இரைத்து என்னை காட்சிப்பொருள் ஆக்குகிறாய் நீ! அன்பு ஆபரணங்களால் இழைத்து உன்னை என் காதல் சாட்சிப்பொருள் ஆக்குகிறேன் நான்

-------------------------------------

7. உன் அழகில் வீழ்பவர்கள் பட்டியல் நீளவேண்டும் என்ற பேராசை உனக்கு. உன் அன்பால் வாழ்பவர் பட்டியலில் நான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஓராசை எனக்கு

--------------------------------------------

8. உங்க ஃபர்ஸ்ட் நைட் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருந்ததாமே? 

ஆமா, அவ ரொம்ப கூச்ச சுபாவி, தொடாம, மேல படாம என்ன வேணா செஞ்சுக்குங்கன்னுட்டா!

--------------------------------------------

9. ரூ.200 கோடி நிலத்தை அபகரிக்க அதிமுக அரசு முயற்சி- கருணாநிதி -- சரி விடுங்க, 5 வருஷம் உங்களுக்கு, 5 வருஷம் அம்மாவுக்கு

----------------------------------

10. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளேன்-ஜெ # அப்போ வந்த வேலை முடிஞ்சது, ரிசைனிங்க்?

----------------------------------11. வடிவேலு சேர்ந்ததால் திமுக அழிந்தது-சிங்கமுத்து # சிம்ரனுக்கு திருமணம் ஆனதால்தான் தமனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது - தீபக்

-----------------------------------

12.  இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன்..  

அப்டியா உக்காருங்க.

. தாங்க்ஸ்.. கம்ப்பெனில இருக்கற டாப் 10 ஃபிகர்ஸை கூப்பிடுங்க, பார்க்கலாம்!

-----------------------------------------

13. டியர்.. எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கு.. 

ஓஹோ, அப்போ பல பெண்களை பார்த்துட்டு கடைசியாத்தான் இங்கே வந்தியா?

-------------------------------------

14.  தலைவரே! நீங்க ஒரு பொய்யர்தானே? 

ஆமா... அதுக்கென்ன? 

பொய் வழக்கு போடறாங்கன்னு ஏன் குதிக்கறீங்க?

---------------------------------

15. தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் ஜெ- நடிகர் தியாகு # தொண்டனுக்கு கொடுப்பேன், குண்டருக்கோ, குடிகாரருக்கோ தர மாட்டேன் - ஜெ

----------------------------


16. எந்த நடிகர் வந்தாலும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது :EVKS # காங்கிரஸ் கட்சி என்ன நயன் தாராவா?

-------------------------------

17. நில மோசடி வழக்கு எதிர்க்கட்சி ஆளுங்க மேல மட்டும் தான் பாயுதாமே? 

ச்சே, ச்சே, அப்படி இல்லை, ஆளுங்கட்சி ஆளுங்க மேல பாயாது, அவ்ளவ் தான்

---------------------------------------

18. டாக்டர், பேஷண்ட்டோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு? 

எங்கே இருக்கு?ன்னு கேளுங்க.. ஏர்கண்டிஷன்ல

------------------------------

19. அவர் ரொம்ப அப்பாவி,


எப்படி சொல்றே?

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நம்புபவர்...

-----------------------------------------

20. சென்சஸ் ஆஃபீசர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்டி சொல்றே? 

வீட்ல எத்தனை லேடீஸ் இருக்காங்க? நான் அளவெடுக்கனும்கறாரே?

------------------------------------

45 comments:

Unknown said...

அண்ணே வணக்கம்...

5 வது நச்!

12 வது ஜொள்ளர் பார்க்க விரும்பும் ஜொள்ளிகள் ச்சே கள்ளிகள்!

13 ஓட்ட வாயன்!

ஹிஹி மத்ததெல்லாம் சாரா ச்சே சராசரி!

ராஜி said...

4, 13 super

வைகை said...

பலராலும் அறியப்படாத திறமைசாலிகளை தூக்கி விட குனிபவனே உலகின் சிறந்த , உயர்ந்த மனிதன்//

அண்ணே.. நீங்க ஏன் வாரம் ஒரு முறையாவது ஒரு புதிய பதிவர உங்க ப்ளாக்ல அறிமுகப்படுத்தி நீங்களும் உயர்ந்த மனிதனா ஆக கூடாது? அதிகமான வாசகர்கள் கொண்ட நீங்க பண்ணினா என்னை மாதிரி வெளில தெரியாத பதிவர்களுக்கு பயனுள்ளதா இருக்குமே? :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

IlayaDhasan said...

பத்தொன்பது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே , பத்திரிகைக்கு அனுபீசீங்களோ?

கல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா?

கோகுல் said...

17-செம உள்குத்து.

Astrologer sathishkumar Erode said...

சிபியார் தத்துவங்கள் அதிகம் காணப்படுகிறதே..!!

Astrologer sathishkumar Erode said...

அமலாபால் விகடன் ஜோக்தானே..?

Mathuran said...

5ஆவது சூப்பர் தல

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.
நலமா?

//குண்டக்க மண்டக்க கமெண்ட்டக்க ஜோக்ஸ் //

அப்படீன்னா நாம குண்டக்க மண்டக்க கமெண்ட் போடலாமா?

நிரூபன் said...

சாதாரண பலம் கொண்ட நம்மை அசுர பலம் கொண்டவராக மாற்றுவதால் நாம் நம் எதிரிகளை பாராட்ட வேண்டும்!//

ஹே...ஹே...

உள் குத்து! உள் குத்து!
அண்ணே தத்துவம் எலலம் பேசுறார்..

அசுர பலம் கொண்டவராக மாறும் போது அசைக்க முடியாத ஆலமரமாக நீங்கள் மாறுகின்றீர்கள் என்பதில் மறுப்பில்லைத் தானே;-)))

நிரூபன் said...

4. உன்னிடம் எனக்குப்பிடிக்காதது என்னை கண்டு கொள்ளாத அலட்சியம், என்னிடம் உனக்குப்பிடிக்காதது உன்னை விட்டு விடாத ,விட்டுத்தராத என் லட்சியம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நெசமாவா...

ஆமா ப்ளாக் விடு தூது என்பது இது தான;-_)))

நிரூபன் said...

உன் அழகில் வீழ்பவர்கள் பட்டியல் நீளவேண்டும் என்ற பேராசை உனக்கு. உன் அன்பால் வாழ்பவர் பட்டியலில் நான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஓராசை எனக்கு//

ஹே...ஹே...
நான் வைரமுத்து சுயசரிதை படிக்கும் போது,
கல்லூரிக் காலத்தில் அவர் பின் வருமாறு எழுதியிருந்தார்.
வரின் கவிதைப் படைப்புக்களை மாணவர்கள் கல்லூரி விடுதிச் சுவரில் எழுதி மகிழ்ந்தார்களாம்.

அப்படீன்னா சிபியோட இந்த டுவிட்ஸ் மட்டும் காலேஜ் பொண்ணுங்க கையில மாட்டனும்’?

உணவு உலகம் said...

20. சிபியை விடவா!

நிரூபன் said...

. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளேன்-ஜெ # அப்போ வந்த வேலை முடிஞ்சது, ரிசைனிங்க்?/


ஹே...ஹே....
ஹையோ...ஹையோ..

vetha (kovaikkavi) said...

குண்டக்கா மண்டக்காவே தான், சிரிப்பும் சிந்தனையும்....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

நிரூபன் said...

இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன்..

அப்டியா உக்காருங்க.

. தாங்க்ஸ்.. கம்ப்பெனில இருக்கற டாப் 10 ஃபிகர்ஸை கூப்பிடுங்க, பார்க்கலாம்!//

கொய்யாலே..

இது செம டெரரா இருக்கில்லே..

நிரூபன் said...

நகைச்சுவைகள், டுவிட்ஸ், அனைத்தும் அசத்தல் பாஸ்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் நல்லாயிருக்கு.

பாவம்ண்ணே நயன்தாரா... விட்டுடுங்க... வாழ்ந்துட்டுப் போகட்டும்.

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில் ..


அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?

செங்கோவி said...

இன்னிக்கு தத்துவமா கொட்டியிருக்கே..

சென்னை பித்தன் said...

நன்று
5 மிக நன்று.

K.s.s.Rajh said...

தத்துவ ஜோக்ஸ் தத்துவம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

சி.பி.க்கு ஜொள்ளு அதிகமா பதிவுலகம் பரபரப்பு?? டுடே ஜொள்ளு #பதிலுக்கு பதில் ஹீ ஹீ

சசிகுமார் said...

சி.பி.க்கு ஜொள்ளு அதிகமா பதிவுலகம் பரபரப்பு?? டுடே ஜொள்ளு #பதிலுக்கு பதில் ஹீ ஹீ

RAMA RAVI (RAMVI) said...

2,5 நன்றாக இருக்கு.

தனிமரம் said...

7. உன் அழகில் வீழ்பவர்கள் பட்டியல் நீளவேண்டும் என்ற பேராசை உனக்கு. உன் அன்பால் வாழ்பவர் பட்டியலில் நான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஓராசை எனக்கு
// இது தான் காதலின் தாகம் சூப்பர் வசனம்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...

தத்துபித்துவம் எல்லாம் நல்லா இருக்கு நண்பரே..

Mohamed Faaique said...

///பலராலும் அறியப்படாத திறமைசாலிகளை தூக்கி விட குனிபவனே உலகின் சிறந்த , உயர்ந்த மனிதன்///
இது சூப்பர்,,

எல்லாமே அருமை

MANO நாஞ்சில் மனோ said...

நீ குத்துடா ராசா கும்மாங்குத்து...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று//

நீ உருப்படவே மாட்டாய் போ....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, அந்த தலைவர் நெசமாலுமே பொய்யன்'தான் ஹி ஹி...

மாலதி said...

சிறந்த நகைசுவை படைப்புகள் அதுசரி உங்களை யாரும் பின்னி எடுக்கவில்லைய டாப் டென் பிகரை கேட்டமைக்குதான் சிறந்த பதிவு தொடருங்கள் ....

சக்தி கல்வி மையம் said...

super.,

சேகர் said...

எப்படிங்க உங்களால இது மாதிரி எல்லாம் யோசிக்க முடியுது.க க போ ....

Nirosh said...

வழமைபோல ஏறுமுகம்..!

Unknown said...

கலக்கல் தம்பி!
ஏழாவது சூப்பர்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிபி பதிவுலகின் பாக்கியராஜ்??

கடம்பவன குயில் said...

//you can feel her care in a form of a sister//

இந்தப் படம் அருமை. நல்ல செலக்சன்.

கடம்பவன குயில் said...

1 வது தான் இருப்பதிலேயே டாப்.

”தளிர் சுரேஷ்” said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு! முதல் டிவிட் சூப்பர்!

Anonymous said...

///எந்த நடிகர் வந்தாலும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது :EVKS # காங்கிரஸ் கட்சி என்ன நயன் தாராவா?////

கண்டிக்கிறோம்...
இவ்வண்
பிரபுதேவா அடிப்பொடிகள்

மாங்கனி நகர குழந்தை said...

அருமை பாஸ்...........