Sunday, August 14, 2011

புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில்..... ( ஆன்மீகம் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH25aYiXPAGLTR8iuM8cXkJrI_Hu-mqK-yz9m8dWggo6nT_AHqPk53BK7P1wg_7uR6NMVkQdtxSe_FPFqYAmqNvcwxI4lEFCrYX3SOgm7KflN48McmsDgBGUWjZvhSYgFd-KiBbikaWWiY/s1600/thenimalai7.jpg
தேனிமலை தீர்த்தம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா?

1. ஆலயங்களின் கோபுர கலசங்களில் இரீடியம் எனும் மதிப்பு வாய்ந்த உலோகம் இருப்பதாகக் கருதி, சில இடங்களில் கோபுர கலசங்கள் களவாடப்படுவதாகச் செய்தி படித்து அதிர்ந்தேன்! உண்மையிலேயே கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா? கோபுர கலசங்கள் குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன? 



ஸனாதனத்தின் உட்பிரிவான ஸ்மிருதி நூல்கள் 'பிரதிஷ்டா மயூகம்’ போன்ற நூல்களை அறிமுகம் செய்தன. அது வழி... வாஸ்து சாஸ்திரத்தின் துணையுடன் இறையுருவத்தை இருத்தி வழிபட, ஆலயம் அமைக்கும் நடைமுறையைக்  கையாண்டு வந்தது. பிற்காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்பட எண்ணியபோது, சைவ- வைணவ ஆகமங்கள் தோன்றி, ஆலய நிர்மாணம் பற்றிய பரிந்துரைகளை அளித்து உதவின.

தேசத்துக்கு தேசம் ஆலயம் அமைக்கும் விதத்தில் மாறுபாடு இருக்கும். கும்பத்தில், மந்திரம் வாயிலாக இறையுருவைக் குடியிருத்தி, பணிவிடைகளால் மகிழ்வித்து, அந்தக் கும்ப ஜலத்தை கோபுரக் கலசத்தில் சேர்ப்பார்கள். இதனால், இறையுருவின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்துக்கு வந்துவிடும். இதன் அடிப்படையிலேயே, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிற வழக்கு எழுந்தது. கூரான உருவ அமைப்பு, இடி- மின்னலால் பாதிக்கப்படாமல் இருக்கும். இரீடியம்... அதற்கு சக்தி அதிகம் என்று தாங்கள் குறிப்பிடுவதெல்லாம் நம்பிக்கையில் விளைந்தது. அதைவிடப் பெருமை வாய்ந்தது, கோபுரக் கலசத்தில் தென்படும் இறை சாந்நித்தியமே!

கோயில் இறைவனின் உடல்; கோபுரக் கலசம் அவருடைய சிரசு; கருவறை அவன் உறைந்திருக்கும் இடம் (தேஹோ தேவாலய:...). நம்முள் ஜீவாத்மா இருப்பது போல், கோயிலுக் குள் பரமாத்மா இருக்கிறார். கும்பாபிஷேக வேளையில், மந்திர ஒலியுடன் இணைந்த கோபுரக் கலசங்கள், ஆகாயத்தில் அவ்வப்போது நிகழும் தட்பவெப்பத்தின் தாக்கத்தாலும், அன்றாடம் கோயிலில் ஒலிக்கும் வேத மந்திரங்களின் சேர்க்கையாலும், சிந்தனைக்கு எட்டாத பெருமையைப் பெற்று விளங்கும்.

விஞ்ஞானம் கண்டுபிடித்தது கை மண்ணளவு; கண்டுபிடிக்காதது உலகளவு. விஞ்ஞானத் தகவலை வைத்துப் பெருமை கொள்வதைவிட, மெய்ஞ்ஞானத்துக்குப் பயன்படும் என்பதை அறிவது சிறப்பு. 'இரீடியம்’ இருப்பதால் கோபுரக் கலசங்கள் களவாடப் படுவதாகச் சொல்கிறீர்கள். களவாடப்படும் விஞ்ஞானம் நமக்கெதற்கு?!

எவராலும் களவாட முடியாத ஆன்மிகம், என்றென்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞான விளக்கத் தோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக் காமல்... கோபுரக் கலசம் முதலான வற்றில் இணைந்திருக்கும் ஆன்மிகப் பெருமைகளை உணரும் வகையில் நம் சிந்தனைகள் தொடர வேண்டும்.

மட்டையோடு இணைந்த தேங்காய் பயனுள்ளது. மட்டை, கயிறு திரிக்கப் பயன்படும்; கொட்டாங்கச்சி- அகப்பை செய்வதற்குப் பயன்படும்; தேங்காய்- சமையலுக்கு உதவும்; எண்ணெயும் கிடைக்கும்.

அதே நேரம்... தென்னையின் இளநீர் பருகவும் பயன்படும்; இறை அபிஷேகத்துக்கும் உதவும்; அதன் மூலம் ஆன்மிகச் சிந்தனைக்கு நம்மைத் திருப்பிவிடும். 'இரீடியம்’ உபயோகப் பொருள். அதைவிட உயர்ந்த தத்துவம், (திருட முடியாத) கோபுரக் கலசத்தில் அடங்கியிருக்கிறது. களவாடப்படும் பொருட்கள், காலத்தால் அழிவைச் சந்திக்கும். அழிவற்ற பரம்பொருளின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்தில் உறைந்திருப்பதை உணர்ந்து, அதை வழிபடுவோம்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/feb/rameswaram.jpg
ராமேஸ்வரம்


2. கிரகஸ்தனான நான், தியானத்தின்போது தூய்மையான துணியை தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன். இனி, தர்ப்பைப் பாயின் மீது அமர்ந்து தியானம் செய்ய எண்ணியுள்ளேன். இது சரியா? 



தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்).

அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ§ஆஸுன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது.

புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக்கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவிஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும் (ஆசன மஹா மந்திரஸ்ய... கூர்மோதேவதா). துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitOWWVX7D5BBOs03rdcdVMPtfkv9o0KUaRhdTFR1vuvCiboUjmaixI0mftEjsYy-KT036PMWODqHWerLBZTolwx62UldxCL4Pq1OrfSvNfbpjusAtfYHBC6deb5VfO3sPfxdobjROuxZQ/s1600/theerththam.jpg

3. உடல்நலக் குறைபாடு காரணமாக புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லித் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தமாடியதற்கான பூரண பலன் கிடைக்குமா? 



குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு.

வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலை முழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர- ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன் படுத்தக்கூடாது. விதி வேறு; விதிவிலக்கு வேறு.

விதிவிலக்கைத் தேடிப்பிடித்துச் சட்டமாக மாற்ற முற்படக்கூடாது. உடல் நலம் இருக்கும்போது தீர்த்தக்கரைக்குப் போக வேண்டும். குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங் கரை ஸ்னானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப் பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங் கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.


http://karurtimes.com/wp-content/uploads/2011/08/river-photo.jpg


4.திருமணமானதும் கிரகப் பிரவேசம் செய்யும் மணப்பெண், வீட்டு வாசற்படியில் வைக்கப் பட்டிருக்கும் அரிசி அல்லது நெல் நிரம்பிய பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டு உள்ளே நுழைவாள். இந்தச் சடங்குக்கான தாத்பரியம் என்ன? 



மெழுகிச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மணப்பெண் அடியெடுத்து வைக்குமுன் பீஜ தான்யத்தை, அதாவது நெல்லை வாரி இறைப்பார்கள். அதன்பிறகு, அவள் உள்ளே நுழைவாள்.

தான்ய லட்சுமியின் வருகைக்குப் பிறகு, கிரஹலட்சுமி விஜயம் செய்வாள். அறுசுவை உணவுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரம் தானியம்; அதாவது நெல். அது அந்த வீட்டில் என்றென்றும் நிரம்பி வழியவேண்டும். இந்த நடைமுறை இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும். வட நாட்டில், கிரஹலட்சுமியே தான்ய லட்சுமியை வாரியிறைக்கும் விதமாகத் தனது காலால் தானியத்தைக் கொட்டிய பிறகு நுழைவாள். இது, நம் பகுதிகளில் தென்படாததால், வியப்பாகத் தோன்றுகிறது!


- பதில்கள் தொடரும்... 

thanx - vikatan

22 comments:

nellai ram said...

super!

M.R said...

அருமை நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே ஆன்மிகம் என்பதால் தப்பித்து விட்டாய்....!!!

rajamelaiyur said...

Kalakkal

நிரூபன் said...

வணக்கம் குருவே, தாங்கள் ஏன் தமிழ் 10 இல் இணைக்கவில்லை?

நிரூபன் said...

புண்ணிய நதிகளில் நீராடுவதன் பெருமை,
பெண்கள் எத்தகைய காலங்களில் கிரகப் பிரவேசம் செய்யலாம் என்பதனை அழகு தமிழில் ஆன்மீகம் கலந்து சொல்லுகிறது உங்கள் பதிவு...

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

மாலதி said...

ஆன்மிகம் நமக்கும் ஆன்மீகத்திற்கும் எட்டாம் பொருத்தம் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட இருடியம் திருட்டு தொழில் மண்ணுள்ளி பாம்பு மக்களின் பொருட்கள் கலவடுதால் என ஒருகூட்டம் இதேவேலையாக இருக்கத்தான் செய்கிறது திருத்தவேண்டும் இடக்கைக்கு பாராட்டுகள் ...

செங்கோவி said...

சிவ..சிவா!

கூடல் பாலா said...

ஒரு முறை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சென்றேன் ........கடலுக்கடியில் இந்திய மக்களின் பாவங்கள் காலில் பட்டது ..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி சகோ சி பி அவர்களே !!!
ஹிஹி
நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!
தொடர்ந்து கலக்குவோம்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி சகோ சி பி அவர்களே !!!
ஹிஹி
நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!
தொடர்ந்து கலக்குவோம்

Unknown said...

@செங்கோவி
சிவா சிவான்னு ஏன் என் பேரை கூப்பாடு போடுறீங்க??

கவி அழகன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

vidivelli said...

ஆன்மிகம்..!!!நல்ல கேள்வியும் விளக்கங்களும்..
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்களும்..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Sivakumar said...

//செங்கோவி said...
சிவ..சிவா!//

கூப்டீங்களா செங்கோவி?

சுதா SJ said...

ஆன்மிகவாசிகளுக்கு அசத்தல் பதிவு

KANA VARO said...

இலங்கையின் புண்ணிய தீர்தங்களிலேயே நான் நீராடவில்லை. இந்திய தீர்த்தங்களை தரிசிப்பது எப்போது?

KANA VARO said...

மைந்தன் சிவா said...
நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!//

ஏன் அமெரிக்கா போனீங்களா?

Saravanaa said...

Unga pathivugalai thodarndhu padithu varugiren. Konjam tecnical sampantha patta pathivugalaiyum podunga. Niraiya pathivaalargal tecnical sampanthama podaranga. Irundhalum neenga mathavanga yosikadha vagaiyila differenta yosippenga. Adhanala than solren.

Nirosh said...

அன்பே சிவம்... உங்கள் பதிவோ சுகம்... வாழ்த்துக்கள்...!

aotspr said...

அருமையான பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com