Thursday, February 06, 2014

வண்ணத்துப்பூச்சி (2008) - திரை விமர்சனம்


சமீபத்தில் ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான திரைப்பட விழா நடைபெற்றது.இதில் நல்ல கருத்துள்ள படங்கள் மாணவ மாணவிகளுக்கு காட்டப்பட்டன. கடந்த சனிக்கிழமை அன்று (01.02.2014) மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி என்ற படம் காட்டப்பட்டது. நல்ல படமா இருந்தா அட்ராசக்கக்கு ஒரு பதிவு தேறும்-னு போனேன் (தொழில் தர்மம்). உண்மையாவே படம் சூப்பர்....

படத்தோட கதை என்ன? பெத்தவங்க தன் குழந்தைகளை கவனிக்காம பணம் பணம்-னு இருக்காங்க. கதைக்கு ஏத்த மாதிரி ரெண்டு பேரும் சாஃப்ட்வேர் துறைல பெரிய வேலைல இருக்காங்க. ஆனா தன் குழந்தை திவ்யா மேல அக்கறை இல்லாம இருக்காங்க. ஒரு நாள் அந்த குழந்தைக்கு கிராமத்துல இருக்கற தாத்தாவ பத்தி தகவல் தெரியுது. அப்பா அம்மா சம்மதத்தோட அந்த கிராமத்துக்கு போகுது. அப்பா அம்மா கிட்ட இருக்கறத விட தாத்தா கூட இருக்கறத தான் விரும்புது.

அப்பா அம்மா கூட போக மாட்டேங்குது. கோவத்துல சொந்த அப்பானு கூட பார்க்காம அடிச்சுடறார். குழந்தக்கு கோபம் வந்து தன் பெற்றோர்கள் மேல கேஸ் போடுது. கேஸ்ல யார் ஜெய்ச்சா என்பதை பார்த்து தெரிந்துகொள்க. இந்த படத்தை ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைகாட்சில அடிக்கடி போடுவாங்னு நண்பர்கள் சொன்னார்கள்.



மொத்த படத்தையும் தாங்கி நிற்பவர்கள் அந்த குழந்தையும் தாத்தாவாக வருபவரும் தான். அருமையான நடிப்பு.கிராமத்து கதாப்பாத்திரங்கள் அனைவரும் சூப்பர் நடிப்பு. அதிலும் தாத்தாவாக வருபவர் பிள்ளை பாசத்திற்கு ஏங்கும் கதாப்பாத்திரத்தில் நிஜ தாத்தாவாக வாழ்ந்து இருக்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் கன கச்சிதம். ஆனால் நகரத்து அப்பா அம்மாவாக வருபவர்களிடம் ஏன் அவ்வளவு செயற்கையான நடிப்பு? இயக்குநர் அதை கவனிக்க மறந்துட்டாரா? பாடல் இசை ஓக்கே ரகம்.

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள் :

1. படத்தின் ஆரம்பத்தில் அருமையான மெல்லிய பாடலை வைத்தது. காற்றில்.. காற்றில்.. வண்ணத்துப்பூச்சி பாடல் அதில் குழந்தையின் ஏக்கங்களை பாடல் வரியாக அமைத்தது.

2. கெஸ்ட் ரோலில் ரேவதியை நடிக்க வைத்தது.

3.கிராமத்து கதாப்பாத்திரங்களை யதார்த்தம் குறையாமல் பதிவு செய்தது.

4.ஆட்டம் போட வைக்கும் கடைசியாக வரும் கோவில் திருவிழா பாடல்.

5. ரேவதி தரும் தீர்ப்பு மற்றும் அவர் பேசும் வசனங்கள்.

6. குழந்தையாக வரும் திவ்யாவின் சுட்டித்தனமான நடிப்பு.

7.இறுதியாக தாத்தாவும் பேத்தியும் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் காட்சி பேக்கிரவுண்ட் சூரிய ஒளி.. குட் வொர்க்.


இயக்குநரின் கவனத்திற்கு:

1. ஹீரோ ஏன் சின்ன வயசுல ஏன் ஓடி போறார்? அதற்கான காரணத்தை சரியாவே சொல்லல.

2. கந்துவட்டி கேரக்டர் திணிப்பு மாதிரி தெரியுது. அவ்ளோநாளா திருந்தாதவன் அந்த பாப்பா பேச்ச கேட்ட உடனே திருந்திடறான். ( வர வர பசங்க பேச்சுக்கு மரியாதை இல்லாம போய்டுச்சு...)

3. முன்பாதி கொஞ்சம் ரப்பர். காட்சிகளை குறைத்திருக்கலாம்.

4. யாரோ ஒரு பெரியவர் சொன்ன உடனே குழந்தையை நம்பி அனுப்பி வச்சுடறாங்க. யாராவது இப்படி அனுப்புவாங்களா?

5. க்ளைமேக்ஸ் காட்சில பெற்றோர்கள் நடிப்பு படு செயற்கை.

6.அம்மவாக வருபவர் ஓவர் மேக்கப் ... படிக்கிற பசங்க பயப்படுறாங்கள்ல...

7.கிராமத்துக்கு அந்த பாப்பா வந்த உடனே அவள எந்த காரணத்துனால கடவுளா கொண்டாடுறாங்க? (நானும் நிறையா கிராமத்துக்கு போயிருக்கேன் தாயீ ...)

மனம் கவர்ந்த வசனங்கள் : 


1. நான் முக்கிமியல்ல, நான் வாங்குன கப்புக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுறாங்க.


2. அங்கிள் உங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாராவது இருக்காங்களா?

    இல்ல.. ஏன் கேக்கற?

    அப்புறம் ஏன் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கறீங்க? அது     யாருக்கு பயன்பட போகுது?

3. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கனும்.

4.என் தாத்தாக்கு நான் தான் கஷாயம் வச்சு தருவேன். நீங்க வச்சு கொடுத்துட்டு போயிட்டா மறுபடியும் உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் நான் எப்படி வைக்கறது? எனக்கும் சொல்லி கொடுங்க..

5. சின்ன புள்ளையா இருந்தாலும் மரியாதையா பேசுதுல்ல?

அதோட பரம்பரை அப்படி...

6.இது வரை நான் சட்டப்படி தான் தீர்ப்பு கொடுத்து இருக்கேன். இப்பதான் முதல் முறையா ஒரு குழந்தையை புரிந்து கொண்டு தீர்ப்பு கொடுத்து இருகேன்.ரொம்ப திருப்தியா இருக்கு.

மொத்ததில் வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கச்செய்யும். ஆனால் கமர்ஷியல் படம் இல்லை. பக்கா டாக்குமெண்ட்ரி. 

டிஸ்கி: படம் முடிந்தவுடன் மாணவ மாணவிகள் எழுந்து நின்று கை தட்டி அங்கீகாரத்தை அளித்தனர்.

இந்த விமர்சனத்தை வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக். எடிட்டிங், male பார்வை மட்டும் சி.பி.

ரேட்டிங்= 6.0/10


 


0 comments: