Thursday, February 28, 2013

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள்


* 18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள். மறைமுக வரிகள் மூலமாக அரசுக்கு 4,700 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நேரடி வரிவிதிப்பின் மூலம் 13,300 கோடி வருவாய் அதிகரிக்கும். மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 9 ஆயிரம் கோடி வழங்கப்படும்

வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை


*  வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி

*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
* சிகரெட் மீதான கலால் வரி 18 விழுக்காடு அதிகரிப்பு.

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

* ஒரு லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் புதிய எப்.எம். சேனல் தொடங்கப்படும்.

* ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நில ஒப்பந்தங்கள் மீதான டிடிஎஸ் 1 விழுக்காடாக நிர்ணயம்.

* அஞ்சல் நிலையங்களில் வங்கிப் பணிகளுக்கு ரூ.532 கோடி.

* ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் உடைய உள்ளூர் கம்பெனிகளுக்கு 5-10% சர்சார்ஜ் விதிக்கப்படும்
* கல்வி வரி தொடரும்
* அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ் ஒரே ஒரு நிதியாண்டுக்கு மட்டுமே


* 2014 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.3 %

* வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும்;ஒரு ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களை தயார்படுத்த முடியும்

* காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.

* நிலக்கரி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ரூ.253 கோடி செலவில் பாட்டியாலாவில் அமைக்கப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 கோடி பேருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு.

* விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு ரூ.5,400 கோடி ஒதுக்கீடு.

* அணு சக்தி துறைக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

* பாதுகாப்பு துறைக்கு ரூ.2,20,000 கோடி ஒதுக்கீடு.

 * நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி 43 விழுக்காடு.
* கடந்த ஆண்டில் இந்தியாவை விட வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவும், இந்தோனேஷியாவும் மட்டுமே.

* நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே.

* மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.
* சர்வதேச பொருளாதாரம் 3.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக சரிவு

* 2013-14 ல் சீனா மட்டுமே இந்தியாவைவிட வேகமாக வளர்ச்சி அடையும்

 * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே.

* மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.


* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக 41,000 கோடி மற்றும் 28,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* மொத்த செலவினம் 16,30,825 கோடி ஆக உள்ளது. இதில் 5,55,322 கோடி திட்டச் செலவுகள்.

* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகள் நலனிற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவத் துறைக்கு மொத்தமாக 33,000 கோடி ஒதுக்கீடு.

*கல்வித் துறைக்கு ரூ.65,000 கோடியும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.27,257 கோடியும் ஒதுக்கீடு.

*குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ.11,700 கோடி நிதி ஒதுக்கீடு.

*குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

*தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி உதவித் தொகை ரூ.5,200 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் துறைக்கு ரூ. 27,500 கோடி ஒதுக்கீடு
* *தூய்மையான குடி நீர் வழங்க ரூ.15,260 கோடி ஒதுக்கீடு
* மருத்துவ கல்வி, பயிற்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு

* ஊனமுற்றோர் நலத்துறைக்கு ரூ. 110 கோடி ஒதுக்கிடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ. 37,330 கோடி ஒதுக்கீடு. இதில் ரூ.21,239 கோடி புதிய தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும்

* ஆயுஷ் திட்டத்திற்கு ரூ. 1069 கோடி ஒதுக்கீடு

* AIIMS போன்ற நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு

* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு


* மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 13,215 கோடி ஒதுக்கீடு

* குழந்தைகள் நலம் மற்றும் கல்விக்கு ரூ. 17,700 கோடி ஒதுக்கீடு

* தண்ணீர் சுத்திகரிப்புக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு

* உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்கும்

* வேளாண் ஏற்றுமதியால் ரூ.1,38,403 கோடி வருவாய்

* வேளாண் அமைச்சகத்திற்கு ரூ. 27,049 கோடி  ஒதுக்கீடு

* கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

* சராசரி வேளாண் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது

* கிழக்கு இந்திய மாநிலங்களில் ரூ.1000 கோடி அளவுக்கு பசுமை புரட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளது.

* வேளாண் கடன் இலக்கு ரூ. 7 லட்சம் கோடி.

* ராய்ப்பூர் மற்றும் சட்டீஸ்கரில் தேசிய உயிரியில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்

* ராஞ்சியில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப மையம்

* தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ரூ.10000 கோடி பெறும்

*13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளுக்கும் ஏடிஎம் வசதி 2014 ஆண்டிற்குள் வழங்கப்படும்.

*பசுமைப் புரட்சி செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி.

*சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மேம்பாட்டிற்கு ரூ.1,061 கோடி ஒதுக்கீடு.

*கைத்தறி துறைக்கு கூடுதலாக ரூ.96 கோடி ஒதுக்கீடு.

*சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 ஆண்டு வரிச் சலுகை.

*விவசாயத் துறையின் சராசரி வளர்ச்சி 3.6 விழுக்காடாக உள்ளது.

*மேற்குவங்கம், ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு.

*கிராமப்புற முன்னேற்றத்திற்காக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு.

*உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

*ரூ.25 லட்சம் வரையிலான முதல் வீட்டுக் கடன் வட்டியில் மேலும் ரூ.1 லட்சம் குறைக்கப்படுகிறது.

*தூத்துக்குடி துறை மேம்பாட்டிற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.

*மின் இயந்திரங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.

*உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்களாக இருக்கும்.

*வேளாண் ஏற்றுமதி மூலம் ரூ.1,38,403 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

*நபார்டு மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.17,000 கோடி

*ஊட்டச்சத்து பயிர் சாகுபடி முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.300 கோடி

*மாற்றுப் பயிர் சாகுபடி வளர்ச்சிக்கு ரூ.75 கோடி

*கேரளா, அந்தமான் தென்னங்கன்று வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.75 கோடி

*புதிய தேசிய சுகாதாரப் பணித் திட்டத்திற்கு ரூ.21,239 கோடி.

*இந்திரா அவாஸ் திட்டத்திற்கு ரூ.80,195 கோடி ஒதுக்கீடு.

*சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.37,300 கோடி ஒதுக்கீடு.

*ஜவஹர்லால் நேரு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.14,873 கோடி ஒதுக்கீடு.

*4 உள் கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.25,000 கோடி நிதி திரட்ட முடிவு.

* குழந்தைகள் நலனிற்காக ரூ.77,236 கோடி ஒதுக்கீடு.

*ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 2,400 கோடி
* கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டிவிகிதத்தில் தொழில் மூலதனம்

*13 பொதுத் துறை வங்கிகள் 2013-14 ல் ரூ.14000 கோடி மூலதனமாக பெறும்

* அனைத்து கூட்டுறவு வங்கிகளும் CBS கீழ் கொண்டுவரப்படும்

* அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் தங்களது சொந்த இடத்திலேயே ஏடிஎம் இயந்திரங்கள் 

* ரூ. 100 கோடி தொடக்க முதலீட்டில், இந்தியாவின் முதல் பெண்கள் வங்கி பொதுத் துறை வங்கியாக தொடங்கப்படும்.


-------------------

பட்ஜெட்டில் கூடுதல் வரி: சிகரெட், செல்போன்,கார்கள் விலை உயருகிறது
புதுடெல்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட்,  செல்போன்,கார்கள் விலை உயருகிறது. 

நாடாளுமன்றத்தில் இன்று 2013 - 14ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி  அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அதில், சிகரெட் மீதான வரி 18 சதவீதமாகவும்,வாகனங்கள் மீதான சுங்க வரி 27  சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள  செல்போன்கள் வாங்கும் போது செலுத்த வேண்டிய வரி, ஒரு சதவீதத்தில் இருந்து 6  சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.மேலும் வெள்ளி, செல்செட்டப்  பாக்ஸ் ஆகியவற்றுக்கான வரிகளும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மேற்கூறிய பொருட்களுக்கான விலை உயருகிறது.

மேலும் ஏ.சி. உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்


-----------------

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; ரூ.2,000 சலுகை
புதுடெல்லி: தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் ரூ.2000 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று 2013-14-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது உரையில் தனிநபர் வருமான வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:


* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்களுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி.


*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.

*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி

----------------------

பட்ஜெட்: ஜெயலலிதா, வைகோ கருத்து
 
 
சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், அவரது பகல்  கனவு பட்ஜெட்டாக உள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"நாட்டின் பொருளாதார  பிரச்னைகளைத் தீர்க்க அறிவிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட், ப.சிதம்பரத்தின் பகல்  கனவு பட்ஜெட். வெளிநாட்டு முதலீட்டை பெருக்குவதற்கு மட்டுமே மத்திய
பட்ஜெட்டில்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும்  இல்லை.

நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகளை பயன்படுத்தி தீர்க்க மத்திய அரசு  நினைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாநில அரசுகளுக்கு எதிரான மத்திய அரசின்  மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார். ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு பயன் இல்லை: வைகோமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்து உள்ள 2013-2014 ஆம்  ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்பு மக்களையும் அதிருப்தி அடையச்  செய்து உள்ளது. உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியப்  பொருளாதார வளர்ச்சியில் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார்.  ஆனால், இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம் என்று இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது;  ஆனால், 5 சதவிகித வளர்ச்சியையே எட்ட முடிந்தது. நடப்பு  ஆண்டில் இது 6.7 சதவிகிதம் என்பது எப்படி சாத்தியம் ஆகும்?

பணவீக்க விகிதம் 6.6 சதவீதம் உள்ள நிலையில், அதனைக் குறைத்து, விலைவாசி  ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான திட்டம் இல்லை. விலைவாசி  உயர்ந்திடக் காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைக்கவோ,  சேவை வரி விதிப்பு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றை இரத்து செய்யவோ  நடவடிக்கை இல்லை.

தொழிலாளர் நலன்களுக்கான திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ  திட்டங்கள் இல்லை. கருப்புப் பணத்தை மீட்க, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து  அம்சத் திட்டம் என்னவாயிற்று? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள  கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரவும் நடவடிக்கை இல்லை.

ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தான் ப.சிதம்பரம் தாக்கல்  செய்து இருக்கிறார். சாதாரண ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும்  இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
 thanx - vikatan

ஜெ - வை கோ சந்திப்பு - பின்னணி என்ன? இன்னொரு இன்னொவா கார் பார்சல்? வை கோ பர பரப்புப்பேட்டி

நாடகமாடுகிறார் கருணாநிதி... உண்மையாகப் போராடுகிறார் ஜெயலலிதா!''


டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: கே.ராஜசேகரன்
 
 
புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. 

 
 ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' 



''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு குவிந்துவிட்டார்கள். இது தமிழகத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். 



உலகிலேயே உழைப்புக்குப் பெயர்போன தமிழர்களை மதுவும் இலவசமும் முடக்கிப்போட்டுவிட்டது. அதனால்தான் இந்த நடை பயணம். நான் நடை பயணத்தில் எங்கேயும் அரசியல் பேசவில்லை; என் கட்சிக்கு ஆதரவும் கேட்கவில்லை. வேதனையிலும் சோதனையிலும் வெந்து நொந்துகிடக்கும் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்!''



''நடை பயணத்தில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதாவுடனான உங்கள் சந்திப்பின் பின்னணி என்ன?'' 



''முதல்வர் ஜெயலலிதா என்னைத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை. சாலையின் எதிர்ப்புறம் திடீரென முதல்வரின் கார் வருகிறது. நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முதல்வரின் கார் நிற்கிறது. உடனடியாக அவர் இறங்கிவிட்டார். அவர் மனதில் முன்னரே என்னைச் சந்திக்கும் திட்டம் இருந்தால், காரில் இருந்து இறங்குவதற்கான படிக்கட்டைக் கொண்டுவரச் சொல்லி இருப்பார். ஆனால், அவர் அப்படியே காரைவிட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் குடை கூட இல்லாமல் என்னுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.



நடை பயணத்தின் நோக்கம் என்னவென்று முதல்வருக்கும் தெரியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, நான் சொல்லத் தயங்குவேனோ என்று அவரே எனது கோரிக்கையைக் கேட்டார். முழு மதுவிலக்கு வேண்டும் என்றேன். அதை அவரும் கேட்டுக்கொண்டார். என்னைப் பொறுத்த வரை இது ஓர் அரசியல் நாகரிகம். அவ்வளவு தான். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது!''



''ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?'' 



''நிறையவே! மதுவால் பெண்கள் படும் துன்பங்களை அவர் அறிவார். பல கோடிப் பெண்கள் மதுவிலக்கு வராதா என்று ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் ஒரு பெண்ணான அவரது மனதிலும் வெகு விரைவில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!''



'' 'எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் முதல்வர். காரை விட்டு இறங்கி வந்து உங்களைச் சந்திக்கிறார். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?'' 



''அவர் ஈழப் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது முதலே அவரது மனநிலை மாறித்தான் இருக்கிறது. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற சட்டமன்றத் தீர்மானம், மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு, காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஆசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது என உண்மையாகப் போராடுகிறார் முதல்வர். 



கருணாநிதியின் நாடகங்களை ஒப்பிடுகையில், முதல்வர் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முற்பட்டபோதும், பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வின்போதும் அவரைக் கண்டிக் கத் தவறவில்லை!''  



''தி.மு.க-வில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''



''தனது தந்தை இறந்தபோது அவரது ஈமச் சடங்குக்குக்கூடப் போகாமல் தலைவருடன் சுற்றுப்பயணத்தில் இருந்தவர் தா.கிருட்டிணன். அப்படிப்பட்ட தியாகி நடுரோட்டில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டபோதே, அந்தக் கட்சியில் பேரறிஞர் அண்ணா ஊட்டி வளர்த்த பாசமும் கொள்கைகளும் சவக் குழியில் புதைக்கப்பட்டுவிட்டன. நியாயவான்கள் என்றால், அப்பீலுக்குப் போயிருக்க வேண்டியதுதானே... இப்போது என்ன சொல்ல...'' 



''பாலச்சந்திரன்...'' 


(கேள்வியை முடிக்கும் முன்பே...) ''ஐயோ... பச்சைப் பாலகன் அவன். எதையோ வாயில் மென்றுகொண்டு வெறித்துப் பார்க்கும் அவன் கண்களைக் கண்டீர்களா? அதைக் கண்டால், எமனுக்குக்கூடப் பாசக்கயிற்றை வீச மனம் வராதே. அந்தப் பாலகனின் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் தந்த துன்பத்தைவிட, அவன் கண் முன்பாக ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எவ்வளவு பெரிய ரணத்தை அளித்திருக்கும். இனப்படுகொலையை நிரூபிக்க இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும். இப்போதைய உடனடித் தேவை, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை!''



''19 ஆண்டுகளாகக் கட்சியை நடத்தி வருவதற்குரிய பலன் இல்லை என்று நினைக்கும்போது விரக்தி மனநிலை உண்டாகிறதா?'' 



''ராட்சத பலம்கொண்ட கட்சிகளுக்கு இடையிலும் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு இடையிலும் லட்சக் கணக்கான தொண்டர்கள் என்னுடன் இருப் பதே ஒரு சாதனைதான். மக்களின் அவப் பெயருக்கு ஆளாகாமல் நன்மதிப்பை பெற்று வருகிறேன். 'வெற்றியை ருசிக்கவில்லை’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லலாமே தவிர, தவறானவர்கள் என்று சுண்டு விரலையேனும் நீட்ட முடியுமா? நாங்கள் குடும்பத்துக்காகக் கட்சி நடத்தவில்லை. நாங்கள் போராளிகள். போராளிகளுக்கு விரக்தியும் கிடையாது; தோல்வியும் கிடையாது.


முல்லைப் பெரியாறுக்காக 10 லட்சம் மக்களைத் திரட்டினோம். மிரண்டது கேரளா. சுற்றுச்சூழலை நாசம் செய்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறேன். பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல்முறையாக ஈழப் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்புகுறித்துப் பேசினேன். இவைதான் எங்கள் சாதனைகள். பதவியில் அமர்வதும்... பகட்டு வேஷங்கள் போடுவதும்தான் சாதனைகள் என்றால், அது இந்த வைகோவுக்கு ஒருபோதும் தேவை இல்லை!''



''ஆனால், உங்கள் நிர்வாகிகள் கட்சியைவிட்டு வரிசையாக வெளியேறுகிறார்களே? நீங்கள் மட்டும் உற்சாகமாக இருந்தால் போதுமா... தொண்டர்கள் சோர்ந்துபோக மாட்டார்களா?'' 



''இல்லை... இல்லை... இல்லை. எங்களைக் கண்டால், சோர்வுக்கே சோர்வு வந்துவிடும். நாங்கள் சாஞ்சிக்கே சென்று ராஜபக்ஷேவையும் மன்மோகன் சிங்கையும் அசைத்துப் பார்த்தவர் கள். சொந்தக் காசைச் செலவு செய்து எங்கள் கட்சியின் போர் வீரர்கள் டெல்லியை மூன்று முறை முற்றுகையிட்டார்களே... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு இருக்கிறது இந்தத் துணிச்சலும் அர்ப்பணிப்பும். இதில் இருந்து தெரியவில்லையா... ம.தி.மு.க. முன்பைவிட வலுவாக இருக்கிறது என்று. கட்சி நிர்வாகிகள் ஓரிருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருக்கலாம். அப்படிச் சென்றவர்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.''



''ஆனால், ஓட்டு அரசியலே பிரதானமாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் உங்கள் வியூகம் எடுபடுமா?'' 



''எகிப்தில் வெடிக்கவில்லையா மல்லிகைப் புரட்சி? அதை யாராலும் கணிக்க முடியவில்லையே! தானாகத்தானே மக்கள் அங்கு வெகுண்டு எழுந்தார்கள். அப்படி ஓர் எழுச்சி தமிழகத்திலும் வராமலா போகும். அப்போது அவர்களுக்காக ஒரு மாற்று அரசியல் இயக்கமாக ம.தி.மு.க. இருக்கும்.''



''மாற்று அரசியல் இயக்கமாக இருப்போம் என்கிறீர்கள்... ஆனால், கடந்த காலங்களில் தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறித்தானே கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?'' 



''1996 மற்றும் 2001-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அதன் பின்பு நடந்த தேர்தலில் தொண்டர்களின் அன்புக்கு அடிபணிந்து அ.தி.மு.க-வுடன் உடன்பாடுகொண்டோம். அதன்பிறகும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் மாறுபடவில்லை. ஆனால், சுயமரியாதை, தன்மானம் இவை எல்லாம் எங்கள் உயிருக்கு நிகர். அதனால் நாங்களாக விலகினோம்!''  



''சரி... வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்கள் வியூகம் என்ன?'' 


''ஏன் சுற்றி வளைத்து? யாருடன் கூட்டணி என்று வெளிப்படையாகக் கேளுங்களேன். அதைப் பற்றி இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி... எங்கள் தன்மானத்தை, சுயமரியாதையை, மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை யாரிடமும் அடகுவைக்க மாட்டோம். அதே நேரத்தில், இந்த இயக்கத்துக்காக 19 ஆண்டுகாலம் சுகங்களை இழந்து துன்பங் களுடன் உழன்றுவரும் கட்சியின் தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தினரின் மன ஓட்டம், மகிழ்ச்சி இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டுதான் முடிவுகள் எடுப்பேன்!''



''சட்டென்று கோபப்படுபவர்; பொசுக்கென்று அழுதுவிடுபவர்; எளிதில் உணர்ச்சிவசப்படுபவரால் அரசியல் தளத்தில் வெற்றிகரமாக இயங்க முடியாது என்கிற இமேஜ் உங்கள் மீது இருப்பது தெரியுமா?'' 



''என் மீது கசப்பு கொண்டவர்கள் 15 ஆண்டுகளாகச் சொல்லும் விமர்சனம் அது. அவர்களுக்கு என் மீது குற்றம் சொல்ல வேறு காரணம் கிடைக்கவில்லை. மனிதநேயம் உள்ளவன், பிறர் துன்பம் கண்டு விழி நீர் சிந்துவான். என் கண்களில் வழியும் கண்ணீரும் அப்படியே. என் கண்கள் யாரைக் கண்டு பயந்தும் கண்ணீர் சிந்தாது. அக்கிரமத்துக்கும் அநீதிக்கும் எதிராக மட்டுமே என் கண்கள் சிவக்கும். அநாவசியத்துக்கு அல்ல. நான் நடிகன் அல்ல... உண்மையானவன். உண்மையானவனால் எந்தத் தளத்திலும் வெற்றிகரமாக இயங்க முடியும்!''


நன்றி - விகடன் 



 வாசகர் கருத்து 

1. பாலச்சந்திரன் மேல உண்மைலேயே பாசம் இருந்துதுனா போர் ஆரம்பிச்சபவே உனக்கு உள்ள வெளிநாட்டு செல்வாக்கில் ஏதாவது நாட்டுக்கு கொண்டு சென்று இருக்கலாமே ......... இப்ப என்ன முதலை கண்ணிர் ?



2. வைகோ நல்ல மனிதர், அற்புதமான தலைவர், சிறந்த போராளி. இவரை எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனாலும் இவருக்கோ அல்லாது இவருடைய கட்சிக்கோ நான் வாக்களிப்பதில்லை, காரணம் இவருடைய விடுதலை புலிகளின் ஆதரவு நிலைதான்.

ஈழ தமிழர்களை, விடுதலை புலிகளை தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்தார்கள், ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்வதற்கு முன்பு வரை. எப்போது விடுதலை புலிகள் ராஜிவை கொன்றார்களோ, எப்போது மற்ற குழுக்களின் தலைவர்களை கொன்றார்களோ அப்போதே விடுதலை புலிகள் மீதான பாசமும் பற்றும் போய், அவர்கள் துரோகிகளாக, இந்தியாவை நிர்மூலமாக்க வந்தவர்களாக தான், தமிழக மக்கள் மற்றும் இந்திய மக்களுக்கு தெரிகிறார்கள்.

அத்தகைய விடுதலை புலிகளை வைகோ போன்ற தலைவர் ஆதரிப்பது, வைகோ வுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல மற்றும் இந்தியாவுக்கும் நல்லதல்ல.

ஒரு தலைவன் தான் நாட்டு மக்களுக்காக போராடும் போதுதான் புகழ் பெறுகிறான், வெற்றி அடைகிறான், மக்கள் பிரதிநிதியாகிறான், ஆட்சியை பிடிக்கிறான்.

ஆனால் வைகோ வோ, நம் நாட்டு பிரதமரை கொன்றவரை, அந்நிய நாட்டு சக்தியை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கிறார், தான் சக்தியை வீணடிக்கிறார் (வேலூர் சிறையில் அடைக்கப்படிருந்த விடுதலை புலிகள் தப்பியதற்கு உதவுவதுவரை).

வைகோ செய்தால் தமிழ் பற்று, கஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் செய்தால் தீவிரவாதமா? 


3. ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?''
14 வருசமா ஒரே கேள்வி .....



4. அருமையான பதில்கள். அகம்பாவம் இல்லாத, பொறுப்பான, உண்மையான பதில்கள். சுயநலம் இல்லாத பண்பான நடத்தை உள்ள, தெளிவான பார்வை உள்ள ஒரே தலைவர் இவராகவே இருக்க முடியும். தமிழகத்துக்கு நல்ல நேரம் வரும்போது இவருக்கும் நல்ல நேரம் வரும். 



5. இனப்போராளி திரு வைகோ அவர்கள் அப்பழுக்கற்றவர். அவரை விமர்சனம் செய்பவர்கள் தமிழனுக்காக உண்மையாக உழைக்கக்கூடிய ஒரு நல்ல தலைவரை புரிந்து கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை



6. நடைபயணம் போன்ற அறப்போராட்டங்களை காந்திவழி வந்த காங்கிரஸாரே மறந்துவிட்ட நிலையில் வைகோ இதுபோன்ற நடை பயணங்களை பொது நலன் கருதி 15 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவருவது அவரை தமிழக காந்தி என்று அழைக்கத்தோன்றுகிறது.



7. பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. அப்படி நடந்தால் கள்ளசாராயம் பெருகும் மற்றும் அது சார்ந்த குற்றங்கள் பெருகும். சாரயம் விற்ற பெண்கள் கற்பழிப்பு என்பது அன்றாட நிகழ்வாகிவிடும். அத்துடன் அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தலை தடுப்பது என்பது பெரிய நிகழ்வாகிவிடும்.

அரசு செய்ய வேண்டியது 1) மதுவை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும் (AIDS விழிப்புணர்விற்கு அரசு எடுத்த முயற்சிகள் போல இதற்கும் எடுக்க வேண்டும்). 2)மது விற்பனையில் தயவு தாட்சண்யம் இல்லாத விதி முறைகள் அமல் படுத்தப்பட வேண்டும் (விற்பனை நேர குறைப்பு, 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மது, பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளை மூடுதல்). 3) குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஜாமீன் இல்லாமல் 3 மாதம் உள்ளே போட வேண்டும். 4) குடித்து விட்டு குற்றம் புரிந்தால் மிக கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும் ( அதற்கு முதலில் குற்றம் புரிந்தால் நம் நாட்டில் தண்டனை கிடைக்கும் என்ற ஒரு நிலை வரவேண்டும்). இது மட்டுமில்லாமல் இன்னும் பல கடுமையான் விதி முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

சரியான சிந்தனை இல்லாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் செயல்படுதல் பாதாளத்தில் தள்ளிவிடும்.



8/ ஏனையோரோடு ஒப்பிடுகையில் இவர் உயர்வாக இருந்தாலும், எனக்கென்னவோ விழல் நீராக போவதாகவே தோன்றுகிறது. இப்பொழுது கூட இவர் ஒரு சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து அத்தொகுதிகளில் மக்கள் நிம்மதியாக வாழ இடையூறாக இருக்கும் ஊழல்களை எதிர்த்து மக்கள் நம்பிக்கை பெற்றால் எதிர்காலம் உண்டு என நினைக்கிறேன். 



9/ கருணாநிதி நாடகமாடுகிறார் ஒகே ...!!! சரி கரெக்ட் ............ ஜெயலலிதா உண்மையாகவே போராடுகிறார் ........... இது எப்ப இருந்து ? சொல்லவேயில்ல ....!!!!!!!! இதை கேட்டா அந்த அம்மாவே விழுந்து விழுந்து சிரிக்குமே ..........

சரி விடு இன்னும் சில பேர் உன்ன நம்பறாங்க !!!......... அப்புறம் மருமகனோட சிகாகோ ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நல்ல டெவெலப் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டோம் அப்படியா ?

அமீரின் ஆதி-பகவன் ,ஹரிதாஸ் -சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு )

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

ஆதி vs டான் பகவான்தான்... 'அமீரின் ஆதி-பகவன்’!


 பொதுவாக, பஞ்சம் பிழைக்கத் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் என்றுதான் செல்வார்கள். ஆனால், படத்தில் அஜால் குஜால் சங்கதிகளுக்குப் பேர் போன பாங்காக்குக்கு அம்மா, தங்கையோடு ஜெயம் ரவி செல்லும்போதே உஷாராகி இருக்க வேண்டும்... இது வேறு அமீர் என்று. என்ன்ன்னா அடி!



'எ மாஃபியஸோ ஆக்ஷன் லவ் ஸ்டோரி’ என்று படத்தின் கேப்ஷனில் மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் அமீர். கோட்-சூட், சுருட்டு, பப், கையில் துப்பாக்கி, சொகுசு கார்கள்... இவற்றோடு வெளிநாட்டு வீதிகளில் வாக்கிங் போனால், அவர் டானாகத்தானே இருக்க முடியும். தமிழ் சினிமாவில் அஜித் ஆரம்பித்துவைத்த மாஃபியா கலாசாரத்தை ஹீரோ ஜெயம் ரவி டிட்டோ அடிக்கிறார். தமிழில் வெளிவந்த டான் கதைகளில் பார்த்துச் சலித்த விஷயங்களை இயக்குநர் அமீர் டிட்டோ அடிக்கிறார்.


ஆண்டான், அரவாணி டான் என இரண்டு பாத்திரங்களில் வித்தியாசம் காட்ட நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் ஜெயம் ரவி. லிப்ஸ்டிக் பூசி, நெளிந்து நடந்து வெட்கப்படும் மும்பை பகவானைக் காட்டிலும், கனத்த மீசையும் கம்பீர நடையுமாக ஆதி மிரட்டுகிறார். ஆனால், இரண்டு 'ரவி’க்களைவிடவும் திரையை அதிகம் ஆக்ரமித்து இருப்பது, நீத்து சந்திராதான். இருப்பினும், ஏனோ சோகம் அப்பிய கண்களுடன் எப்போதும் அசதியாகவே காட்சிஅளிப்பது ஏன் நீத்து? அட, பகவானோடு சேர்ந்திருக்கும்போதேனும் கண்களில் வில்லத்தனம் ஒளிர வேண்டுமே... அதுவும் நீத்துவிடம் லேது!



பாகவதர் தோன்றி எம்.ஜி.ஆர். தோன்றாக் காலத்து முன் தோன்றிய, ஹீரோ உடம்பில் இருக்கும் துப்பாக்கிக் குண்டை ஹீரோயின் கத்தி கொண்டு எடுக்கும் காட்சி இதிலும் உண்டு. ஹீரோவின் அம்மா நியாயத்தின் பக்கம் நின்று கொடி பிடிக்க வேண்டுமே? இதில் ரவியின் அம்மா சுதா சந்திரன் 'என் புள்ளை நல்லவனா இருக்கும்போதே செத்துட்டான்!’ எனக் கண்ணீர் சிந்துகிறார்.  




காதல் வில்லி நீத்து, அரவாணி வில்லன் பகவான்... இந்த இரண்டு டிவிஸ்ட்டும் படத்தைக் காப்பாற்றும் என்பது அமீரின் நம்பிக்கையாக இருந்திருக்கும்போல. ஆனால், இடைவேளைக்குப் பிறகான எந்தச் சம்பவமும் ஆர்வப் பரபரப்பைக் கிளப்பவில்லையே சார்? இன்ன காரணத்துக்காகத்தான் ஆதியைக் கடத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் திரைக்கதையை ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்வது... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாவ் பகவன்!  


தேவராஜின் ஒளிப்பதிவில் பாங்காக் லொகேஷன்கள் பளிச். இசை யுவன்ஷங்கர் ராஜா... நோ கமென்ட்ஸ்!


காதலர்கள் இருவரும் ஈகோ சண்டை தான் போடுவார்கள். இதில் நிஜமாகவே கட்டிப் புரண்டு கராத்தே சண்டை போடுகிறார்கள். அது ஒன்று மட்டுமே படத்தில் வித்தியாசம்.


- விகடன் விமர்சனக் குழு


 சினிமா விமர்சனம் - ஹரிதாஸ்

ன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அப்பா, ஆட்டிஸம் பாதித்த தன் மகனின் கனவை நிறைவேற்றப் போராடுவதே... ஹரிதாஸ்!


 மாஃபியா தாதா பிரதீப் ராவத்தை என்கவுன்டரில் வேட்டையாட அலைகிற நேரத்தில், தன் மகன் ஹரிதாஸைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வருகிறது கிஷோருக்கு. அப்பா என்றுகூட சொல்லத் தெரியாத ஹரியின் ஆழ்மன விருப்பத்தை அறிந்துகொள்ளும் கிஷோர், அதன் மூலம் ஹரியை ஒரு சாதனையாளனாக்க முயல்கிறார். ஹரியின் சாதனைக்கு மேடை அமைக்கப்படும் நாளில், பிரதீபின் தாக்குதலை எதிர்கொள்கிறார் கிஷோர். ஹரி தன்னை நிரூபித்தானா... கிஷோர் தாக்குதலை வெற்றிகொண்டாரா என்பது உருக்கமும் நெருக்கமுமான க்ளைமாக்ஸ்!    


    
கொரிய மொழியில் வெளியான 'மாரத்தான்’ படத்தின் மென்மையான 'ஆட்டிஸம்’ அத்தியாயத்தை எடுத்துக்கொண்டு, அதில் வன்மையான என்கவுன்டர் திரைக்கதையைப் பின்னிப் பிணைத்திருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன். தழுவல் சாயல் என்றாலும், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சிப் ப(£)டம் எடுத்த வகையில் இயக்கு நரின் முனைப்பு பாராட்டத்தக்கது!



டீக்கடையில் ரவுடியிடம், 'உனக்கு பால்தானே... சொல்லியாச்சு!’ என்று விறைக்கும்போதும், 'உன்னை எப்படி உருவாக்குறதுனு தெரியலையே?’ என்று மகனிடம் கரையும்போதும் அசத்துகிறார் கிஷோர். மகன் காணாமல் போன இடத்தில் சினேகாவிடம் அதிகாரியாக விசாரித்துவிட்டு, மறைவாக குளிர்க் கண்ணாடியைக் கழட்டிக் கலங்கும் இடம்... க்ளாஸ்! படத்தின் ஹீரோ... ஹரியாக நடித்த மாஸ்டர் பிருத்விதான். கண்கள் செருகி, கைகள் கோணலாக, கால்கள் வளைந்து நடக்கும்போதும், அதையே ஓட்டமாக மாற்றும்போதும் உடல்மொழியில் பின்னி எடுக்கிறான். 'அப்பா’ என ஒரே ஒருமுறை சொல்வதைத் தவிர, வேறு வசனம் எதுவும் இல்லை. ஆனால், பந்தயப் பயிற்சிகள் ஆரம்பித்த பிறகான காட்சிகளிலும் அந்த க்ளைமாக்ஸ் பந்தயத்திலும் கலங்கடிக்கிறான் பிருத்வி!




இப்படியான படங்களின் 'க்ளிஷே’ கேரக்டர்தான் என்றாலும், 'அமுதவல்லி டீச்சர்’ கேரக்டரில் சினேகா நச்! எந்த அவசரமும் இல்லாமல் மெதுவாகப் பயணிக்கும் கதையில் கிச்சுகிச்சு பிரேக் கொடுக்கிறது சூரியின் காமெடி!
'அவன் கோச் இல்லை... காக்ரோச்’, 'டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு; கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு!’, 'நம்மளைச் சுத்தி இருக்குற நாலு பேர் தப்பா பேசுறது இருக்கட்டும்... முதல்ல நீ தப்பா பேசாத!’ போன்ற ஏ.ஆர்.வெங்கடேசனின் பளிச் வசனங்கள் படத்தின் பெரும்பலம். திரைக்கதையின் பின்னணிக்கு ஏற்ப ஆக்ரோஷம், அன்பு நேச தொனிகளைப் பிரதிபலிக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு.



பள்ளி வகுப்பு, பந்தயப் பயிற்சிகள் மூலம் குழந்தைகள் உலகத்திலும், 'மாமு... மச்சி’ என்று அழைத்துக்கொண்டு பணி புரியும் காவலர்களின் உலகிலும் ஒருசேர எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பயணிக் கும் திரைக்கதையின் ஒவ்வோர் அடுக்கும் க்ளைமாக்ஸை நோக்கி சின்னச் சின்னதாக வேனும் முன்னேறுகிறது.  



ஹரிதாஸ்... ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் உலகைப் புரிந்துகொள்ள ஒரு கேட் பாஸ்!


- விகடன் விமர்சனக் குழு   


thanx - vikatan

2013 -ல் சத்யவான் சாவித்திரி VS எமன்

1. ஜட்ஜ் - கொலையைக்கண்ணால் கண்ட நேரடி சாட்சி நீதானா? சரி, நீ தான் சாட்சி என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கா?



சாட்சி - போய்யாங்க்;;


--------------------



2. ட்விட்டர்ல பொண்ணுங்களை மட்டும் தான் ஃபாலோ பண்றியாமே?



 நிஜ வாழ்க்கைலயும் அப்டித்தான், ஆம்பளைங்களை எதுக்கு ஃபாலோ பண்ணனும்?



----------------------

3. நடிகை - என் படத்தை பார்த்து நானே அழுதேன்! -



நடிச்ச படமுங்க்ளா? உங்க புகைப்படமா?



------------------------


4. டேக் ஹோம் சேலரி வெறும் 50 ரூபாய்தானா?



 ஆமா சார், 1ந்தேதி அன்னைக்கு சம்சாரம் ஆஃபீஸ்க்கே வந்து 20,950 ரூபாயையும் வாங்கிடுவா



-----------------------------


5. கருணாநிதிக்கு பின்பு் திமுகவை யாராலும் அழிக்க முடியாது:  க.அன்பழகன் # இப்போ அழிச்்சாத்தான் உண்டு?்


--------------------



6. ரஜினியுடன் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை-KV.ஆனந்த் # கேவிக்கேவி அழுதுட்டே இந்த ஸ்டேட்மெண்ட்டை சொல்லி இருப்பாரோ?்





------------------------



7. பைக் ஓட்டிட்டுப்போகும்போது ஹெல்மெட் போடு.கார் ஓட்டிட்டுப்போகும்போது சீட் பெல்ட் போடு ok.பிகர் ஓட்டிட்டுப்போகும்போது என்ன போடனும்?




-------------------------


8. ஷங்கரின் அடுத்த பட டைட்டில் ஜெ.



 எப்டி கண்டு பிடிச்சே?

இதை எப்டி கண்டு பிடிச்சேன்னா ஐ க்குப்பின் ஜெ தானே? I .J K L




-----------------------


 9 தேசிய நெடுஞ்சாலைஓர ் அனைத்து டாஸ்மாக் களையும் மார்ச் 31க்குள்் அகற்ற வேண்டும்:-கோர்ட் #புதுக்கணக்கு போட்டுட்டு மீண்டும் ஓப்பன்?்



------------------------



10. நான் ஒரு ரோசி இல்லா ராஜா.என் நேசத்திற்கில்லை இதுவரை ரோஜா.1000 ஆகட்டும் செலவு.திரும்புன பக்கம் எல்லாம் எழவு




-----------------


11. சேலை கட்டிய ,சுடிதார் உடுத்திய குணவதியை நம்பு.அடிக்கடி முந்தானையை ,துப்பட்டாவை சரி செய்யும் பில்டப் பகவதியை நம்பாதே



---------------------------


12. பாலக்காடு அருகே உள்ள மலப்புரம் மஞ்சேரி பிகர்கள் ஒரு காதில் மட்டும் 10 பவுன் க்கு தோடு போடறாங்க.அடேங்கப்பா




----------------------


13. காதலின் அர்த்தம் ,ஆயுள் எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்



-----------------------


14. ஊடலுடன் நீ பேசாமல் இருந்தாய்.செலவு மிச்சம் என்று இருந்தேன்.துண்டு சீட்டில் சின்னாளப்பட்டுப்புடவை என எழுதிக்கொடுத்தாய்.சின்னாபின்னம் ஆனேன்




------------------


15.  டியர்.நம்ம காதல் சேராது.தற்கொலை பண்ணிக்கலாமா? 



ம் லேடீஸ் பர்ஸ்ட்.இந்தா விஷம்



------------------------


16. ஜட்ஜ் - 16 வயசுப்பையனான நீ என்ன தைரியத்துல 18 பொண்ணுங்களை ரேப் பண்ணே? 



மைனர் பையனுக்கு எப்படியும் தண்டனை கிடையாதுங்கற தைரியத்துலதான் 



-----------------------------


17. சார், கே வி ஆனந்த் கூட படம் பண்றீங்க்ளா? இல்லையா?



 ரஜினி - காலமும் நேரமும் கூடி வந்தால்.... எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு 



---------------------------------


18. புத்தம் புதிய புத்தகமே! உன்னைப்புரட்டிப்படிக்கலாம் என்றால் முகப்புத்தகத்திலேயே.24 மணி நேரமும் குடி இருக்கிறாயே?



---------------------------------


19.பொண்ணுங்க ஒண்ணா ரிக்கி மார்ட்டின் வேணும்கறாங்க .இல்லனா ரிச்சி கை ( RICHY GUY) வேணும்கறாங்க.அப்போ நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் என்ன பண்ண?



-----------------------------\


20. இளம்பெண்களுக்கு திடீர் முத்தம்: வட மாநில தொழிலாளர்கள் கைது # அடடா வட போச்சே



-------------------------


21. இன்ஸ்பெக்டர், எந்த ஆதாரமும் இல்லாம 80 வயசு தாத்தாவை ஏன் கைது செஞ்சீங்க? 



அவர் ஃபோர் ட்வெண்ட்டி ( 4 * 20 = 80) ஆச்சே


-------------------


22, டாக்டர் சீனிவாசன் .நத்தம் விஸ்வநாதன் என்ன வித்தியாசம் ?



 அவர் பவர் ஸ்டாரு ,இவர் பவர் கட் ஸ்டாரு 



--------------------------


23. நிலக்கரிக்கு புகழ் பெற்றது நெய்வேலி.வரிக்கி பேக்கரிக்கு பேமஸ் ஊட்டி




------------------------



24. ஜன்னல்கள் பல இருந்தும், நான் திறக்க முற்ப்பட்டது, உனது ஜாக்கெட் ஜன்னலைத் தான்..



---------------------------


25. 2013 சாவித்திரி - என் புருஷன விட்டுடு .எமன் - வேற கேளு .சாவி3- அட்லீஸ்ட் அவரோட ஏ டி எம் கார்டையாவது குடு


---------------------------------

Wednesday, February 27, 2013

அழகிரி - அட்டாக் பாண்டி - பொட்டு கொலை வழக்கு - ஜூ வி கட்டுரை

அழகிரியிடம் அட்டாக் கேட்ட 5 சத்தியங்கள்!
 
 
>>சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி  ஒரு ஃபவர்புல் பதவி.

 >>தி.மு.க-வில் ஏதாவது ஒரு பதவி.

>>பொட்டு சுரேஷ§க்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது.

>>இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும்.

>>மதுரை உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கும் 100 சென்ட் இடப் பிரச்னையில் நான் தலையிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு எதிராகப் பஞ்சாயத்து செய்து அந்த லாட்டரி அதிபருக்கு சாதகமாகச் செய்து விட்டனர். அதில் 50 சென்ட் நிலமாவது எனக்கு வாங்கித்தர வேண்டும்.



-''இந்த ஐந்து கோரிக்கைகளை அழகிரியிடம் வைத்து சத்தியம் கேட்டார் அட்டாக் பாண்டி'' என்று, போலீஸ் கஸ்டடி விசாரணையில் விஜய பாண்டி சொல்லி, திகிலைக் கிளப்பி உள்ளாராம்.


 சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹோட்டல் அறையில் ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு நடந்தது. அப்போது மு.க.அழகிரியிடம் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தாராம் அட்டாக் பாண்டி. 'கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி.. இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலயும் அரசியல் ரீதியாக நான் ரொம்பப் பாதிக்கப்பட்டு விட்டேன். இதிலிருந்து விடுபட நீங்கள்தான் உதவ வேண்டும்... பொட்டு சுரேஷ் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அவரது முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும்' என்றும் அட்டாக் கேட்டாராம்.  'அட, அவரும் உன்னை மாதிரித்தானே பாதிக்கப் பட்டிருக்கார். அவரை எப்படி விட முடியும்?'' என்றாராம் மு.க.அழகிரி.

சந்திப்பு முடிந்த பிறகு,  ஜனவரி 31-ம் தேதி திடீரென பொட்டு சுரேஷ் கொலை செய்யப்​பட்டார். சென்னை சம்பவத்தை அட்டாக் பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டி விலா வாரியாக வர்ணித்துள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது.


விஜயபாண்டி மற்றும் ஆரோக்கிய பிரபு ஆகிய இருவரையும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். அவர்கள் சொன்ன பகீர் ரகத் தகவல்கள் போலீஸ் வட்டாரத்தையே கலங்க வைத்துள்ளது.


சென்னை ஹோட்டலில் என்ன நடந்தது?  


''சென்னை ஹோட்டலில் கீழே நின்றிருந்தோம். சிவப்பு விளக்கு வைத்த கார் இருந்தது. போலீஸ் செக் யூரிட்டிகள் நின்றுகொண்டிருந்தனர். டெல்லிக்கு மு.க.அழகிரி செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணிநேரம் லேட் ஆனதால், அங்கே தங்கியிருந்தார். அவர் ஒரு அறையிலும் அவரது மகன் துரை தயாநிதி இன்னொரு இடத்திலும் இருந்தனர். முதலில், துரைதான் அட்டாக்கிடம் பேசிவிட்டு, பிறகு, அழகிரி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் பேசி இருக்கிறார்கள்.



 அப்போது அங்கே நடந்ததை ரிசப்ஷனில் காத்திருந்த என்னிடம் அட்டாக் திரும்பி வந்து சொன்னார். 'பொட்டுவால் எங்களுக்குப் பெரிய தலைவலி. குடும் பத்துக்கும் தொந்தரவு' என்று அழகிரி சொன்னதாக அட்டாக் எங்களிடம் சொன்னார். 'நீங்க என்ன சொல்றீங்களோ? அப்படியே செய்றேன்' என்று அட்டாக் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு, கொஞ்சநேரம் அமைதியாக இருந்த அட்டாக், பிறகு ஆவே சமாக மாறினார். 'ஆள் ரெடி பண்ணுங்க' என்று எங்களிடம் சொன்னார். பிறகு நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்'' என்று முடித்தானாம் விஜயபாண்டி.



போலீஸின் அன்பான விசாரணை! 



கஸ்டடியில் மூன்றாவது நாள், போலீஸின் அன் பான விசாரணை ஆரம்பிக்க... விஜயபாண்டியின் பேச்சு அங்குமிங்கும் அலைபாய்ந்ததாம். 'பொட்டு சுரேஷ் கொலைக்குப் பிறகு அட்டாக்கை எங்கே பார்த்தே?’ என்று விஜயபாண்டியிடம் கேட்டபோது, 'மைசூரில் சந்தித்தோம். யார், யார் எப்படி வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார். 


அவர்களும் அவர் சொன்னபடிதான் வாக்குமூலங்களை போலீஸில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் என்னிடம், 'நீ போய் கோர்ட்டில் சரணடைந்து விடு. நீ போலீஸில் என்ன சொல்ல வேண்டும் என்று உனக்குத் தகவல் வரும்' என்றார். அதன்படியே, சட்டம் தெரிந்த பிரமுகர் ஒருவர் மூலம் 'அழகிரி, துரை தயாநிதி பெயரை நீ சொல்லலாம்’ என்று தகவல் வந்தது. வழக்கு விஷயங்களுக்காகத் தேவைப்படும் பணம் அப்போது​தான் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்றும் கூறினார். அதன்படிதான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன்'' என்றானாம் விஜயபாண்டி.


''அழகிரி, துரை தயாநிதி பெயர்களை விஜயபாண்டியை விட்டு முதலில் சொல்லச் சொல்கிறார் அட்டாக் பாண்டி என்றால், வேறு ஏதோ சதி செய்கிறார் என்று அர்த்தம். முன்னுக்குப் பின் முரணாக அவரின் ஆட்களை போலீஸிடம் பேசவிட்டுக் குழப்பப் பார்க்கிறார். அழகிரியிடம் ஏதோ நிபந்தனைகளை வைத்து பிளாக்மெயில் செய்கிறார். அதற்காகத்தான் விஜயபாண்டியை விட்டு ஒரு 'ஷாக்' கொடுத்துவிட்டு, அடுத்து தனது கோரிக்கைகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறார். அட்டாக் போலீஸில் சிக்கும்போது, தங்களையும் சொல்லிவிடுவாரோ? என்ற பீதியில் அழகிரியையும் துரை தயாநிதியையும் தவிக்க விட்டிருக்கிறார்.



முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த வழக்கில் இருந்து அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய் நகர்த்துகிறாரா? என்று சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.


ஆனாலும் விஜயபாண்டி சொன்னதை​யெல்லாம் வீடியோ பதிவுசெய்து, வாக்குமூலமாக மேலிடத்​துக்கும் அனுப்பி விட்டதாம் போலீஸ் தரப்பு.


துப்பு சொல்லும் பொட்டு தரப்பு 


பொட்டு சுரேஷின் அனுதாபிகள் தரப்பில், ''எங்கள் அண்ணன் கொலையில் இருந்து தப்பிக்க, அட்டாக் ஏதாவது தந்திரம் செய்வார். அவரது சகாக்களை விட்டு முதலில் போலீஸை ஆழம் பார்க்கிறார். நம்பாதீர்கள்'' என்று திரும்பத் திரும் பச் சொல்லி வருகிறார்களாம். மதுரையில் உள்ள பொட்டு சுரேஷின் நலம்விரும்பி ஒருவர் கூறும்போது, ''தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில், தன்னை ஏவியது யார் என்று அட்டாக் கடைசி வரை சொல்லவே இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் அடித்து விசாரித்தபோதும்கூட சொல்லவில்லை. 


ஆனால், எந்த நேரமும் சொல்லி விடுவேன் என்று மறைமுக பிளாக்மெயில் செய்தே, வாரியத் தலைவர் பதவியை வாங்கினார். ஜெயம் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அட்டாக்கின் தலையீடு பற்றி ஊரில் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த விவகாரத்தில் தன்னை போலீஸ் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். இவைபோக, பணம் வரும் பல்வேறு கான்ட்ராக்ட்களைப் பெற்றார். அப்படிப்பட்ட கேரக்டர் அட்டாக் பாண்டிக்கு உண்டு. அதுபோலவே இப்போதும் எங்கள் அண்ணன் கொலை வழக்கில் அழகிரிதான் செய்யச் சொன்னார்... துரைதான் செய்யச் சொன்னார்.. என்று மறைமுகமாகத் தகவலைப் பரப்பிவிடுகிறார் என்றே நாங்கள் நினைக்கிறோம். எங்கள் அண்ணனுக்கும் அழகிரி குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு முக்கியமான எந்த ஒரு மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.


எதிர்வாதம் பண்ணும் அட்டாக் தரப்பு..! 


அட்டாக்கின் நெருங்கிய சட்டம் தெரிந்த நண்பர்​களிடம் பேசியபோது, ''கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிலை இல்லாமல் தவித்தார் அட் டாக். ஓடஓட விரட்டிக்கொண்டே இருந்தனர். அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், கேட்கவே வேண்டாம்... படு ஸ்பீடில் துரத்தினர். தான் உயிர் வாழப் புகலிடம் தேடி ஸ்டாலினிடம் போனார். பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் மோட்டிவ் உண்டு என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். இதையே ஒரு சான்ஸாகக் கருதி பழி அட்டாக் மீது திரும்பும் என்பதைத் திட்டம் போட்டு, யாரோ அட்டாக்கின் ஆட்களைப் பிடித்து இந்த அசைன்மென்ட்டைத் தந்திருக்க வேண்டும். அட்டாக் கூடிய விரைவில் வருவார். அப்போது எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்து விடும்'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்கள்.


மௌன வேடிக்கை பார்க்கும் போலீஸ்... 



அட்டாக் கோஷ்டியினர் ஒருகோணத்திலும் பொட்டு தரப்பினர் இன்னொரு கோணத்திலும் தகவல்​களைச் சொல்லிவர... மௌனமாக வேடிக்கை பார்க்கிறது போலீஸ். பொட்டுவைக் கொலை செய்தது 'அட்டாக்’தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. இருந்தாலும், இரு தரப்பினர் சொல்வதையும் புறக்கணித்து விடவில்லை அவர்கள். பொட்டு கொலைக்குப் பிறகு, சரணடைந்த ஆட்களில் சிலர் துரை தயாநிதியின் நண்பர்கள் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் அணியில் பொட்டுவின் சகாக்களும், அட்டாக்கின் உறவினரான இளைஞர்களும் இருக் கிறார்கள். இதை வைத்து, பொட்டு கொலை ஏற்பாடுகளில் உதவியவர்கள் என்ற பட்டியலில் சிலர் பெயர்களைச் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், போலீஸ் அதை கிராஸ்செக் செய்தபோது, அது பொய் என்று தெரிந்து மேற்கொண்டு விசாரிக்கவில்லை. ஏன் துரை நண்பர்களையும் இதில் இழுத்து விடு கிறார்கள் என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. பொட்டுவின் பினாமிகள் யாராவது இந்தக் கொலையை பின்னணியில் இருந்து செய்தார்களா என்ற கோணங்களிலும் விசாரிக்கிறார்கள்.




'அட்டாக் பாண்டிக்கு யாரோ மாஸ்டர் ப்ரெய்ன் இருக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. அதேபோல், சட்ட ஆலோசனை விவகாரங்களைக் கவனிக்க, எங்கிருந்தோ திடீர் திடீரென்று உத்தரவுகள் வருகின்றன. இந்த செலவுகள் எப்படி நடக்கிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்’ என்கிறது போலீஸ்.


''விஜயபாண்டியின் வாக்குமூலத்தில் மு.க.அழகிரியையும் துரை தயாநிதி¬யும் சொல்​கிறான். ஆனால், 'அவர்களை நேரடியாக சென்னை ஒட்டலில் இவன் பார்க்கவில்லை என்றும், அட்டாக் கூறியதை வைத்து சொல்வதாகவும்’ எங்களிடம் சொல்கிறான். எனவே, அட்டாக் பிடிபட்ட பிறகு, எங்களிடம் அந்த ஹோட்டல் சந்திப்பு பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகுதான், அழகிரி, துரை தயாநிதிக்கு சம்மன் அனுப்பும் படலம் தொடங்கும். ஒருவேளை, சென்னை ஹோட்​டலில் அழகிரியோ, துரை தயாநிதியோ இருந்து பொட்டு பற்றி பேசி இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்தால், இந்தக் கொலை வழக்கில் சதி என்ற பேனரில் அவர்கள் பெயரை நிச்சயமாகச் சேர்ப்போம்'' என்கிறார்கள்.


அட்டாக் அரெஸ்ட்டில் அடங்கி இருக்கிறது பொட்டுவின் வழக்கு.
- ஆர்.பி.

நன்றி - ஜூ வி 


 வாசகர் கருத்து 



1. முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த வழக்கில் இருந்து அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய் நகர்த்துகிறாரா? என்று சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.

பொய் சாட்சியாக எவ்வளவு பொய்களை கூறினாலும் டிஃபென்ஸ் வக்கீல் அதை உடைத்தெறிந்து விடுவார், இது போலீசுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பொய் வழக்காக அழகிரி மேல் புனைந்தாலும் பாட்டிக்கு மீண்டுமொரு முறை குட்டு விழும் நீதிமன்றத்தில்



2. அவர் உத்தமரா இல்லையா என்பது அல்ல. இவ்வளவு அப்பட்டமாக ஒரு காரியம் செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் அளவு.. யோசிக்காமலா செய்வார்?


 3. பொட்டு-வால் குடும்ப பிரச்சனை; அட்டாக் பாண்டி ஏற்கெனவே 5 விஷயங்களை கேட்டு ப்ளாக் மெயில் செய்கிறான். ஒருத்தனை கொலை செய்து இன்னொருத்தன் மேல் பழியை போட்டுவிட்டால் பிரச்சனை எல்லாம் முடிந்தது. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியா வருதோ?




4. இந்த வழக்கோடு அழகிரியின் அரசியலை அடக்கும் முடிவாக இருக்கலாம். எது நடந்தாலும் நல்லதே.




5.  நாடாளு மன்ற தேர்தல் அறிவிச்ச உடனே ரெண்டு பேரையும் லிஸ்ட்ல சேருங்க பையன்அப்ஸ்கான்ட் ஆவாரு அப்பா சரம் அடைவார் இதையே 2 மாசம் நியுசா போட்டு பேர பங்க்சர் ஆக்கி 40 சீட்லயும் அந்த கும்பல மன்ன கவ்வ வைச்சுரலாம் . மத்தில இருக்கும் செல்வாக்க வைச்சு ஜெ. அரசுக்கு கெட்ட பேரு வரணும்கரதுக்காக தமிழ் நாட்டுக்கு நிதி, கரண்ட் , தண்ணி எல்லாம் சரியாய் கிடைக்க விடாம ரொம்ப பிரச்சனை பண்றாங்க 



6. சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி ஒரு ஃபவர்புல் பதவி.......தப்பே இல்லை......அழகிரி மத்திய அமைச்சராக இருக்கும்போது, அட்டாக் ஒரு பதவி எதிர்பார்ப்பது தப்பே இல்லை........இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும்.......அமௌண்ட் மிக கம்மியாய் இருக்கே.......செய்திருக்கும் வேலைக்கு ஏத்த மாதிரி கூலியை கேளுங்கப்பா......எவ்வளவு கேட்டாலும் தருவாங்க.......ஏனெனில், அவ்வளவு இருக்கு அவிங்க கிட்டே.....


7. எங்கள் அண்ணனுக்கும் அழகிரி குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு முக்கியமான எந்த ஒரு மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.*** ஆதிக்க அரசியலில் அனைத்தும் சாத்தியமே.



சில்லுனு ஒர் சந்திப்பு - சினிமா விமர்சனம்

 

அந்தக்காலத்துல சீத்தலைச்சாத்தனார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் ஏதாவது தப்பா எழுதிட்டா தன் தலைல தானே எழுத்தாணியால குத்திக்குவாரு. அப்படி குத்தி குத்தி மண்டை செப்டிக் ஆகி சீழ்த்தலை சாத்தனார் ஆகிட்டாரு, பேச்சு வழக்கில் பின் சீத்தலைச்சாத்தனார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க . அதே மாதிரி ஒரு ஃபிகரு தான் என்ன தப்பா சொன்னாலும் அழகா தன் மண்டைல கொட்டிக்கறாரு ( நல்ல வேளை ... மண்டைல கொட்னாரு ) 


ஹீரோயின் மண்டைல கொட்டிக்கற அழகைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்து தொலைச்சுடுது. 2 கேனங்களும் லவ் பண்ணுது . இதுல என்ன புதுமைன்னா அவங்க 2  வீட்டு பெற்றோர்களும் மாமா வேலை பார்க்காத குறையா  அவங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்றாங்க . ( ஒரு சீன்ல மாடில இருக்கும் பெட்ரூம்க்கு 2 பேரையும் அனுப்பிட்டு 2 பெற்றோர்களும் கெக்கே பிக்கே னு இளிக்குதுங்க )

படத்துல வில்லனே இல்லைன்னு தெரிஞ்சதுமே நமக்கு சிச்சுவேஷன் தான் வில்லன்னு தெரிஞ்சுடுது. ஹீரோவுக்கு  +2 படிக்கும்போது ஒரு  லவ் இருந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுது , ரொம்ப சென்சிட்டிவ் கேரக்டரான ஹீரோயின் டூ விட்டுட்டு போய்டுது . 

 ஹீரோ அந்த + 2 படிக்கறப்ப லவ்வுன ஃபிகரை இப்போ மீட் பண்றாரு. 2 பேரும் லவ்வைப்புதுப்பிச்சாங்களா? இல்லையா? யார் கூட ஹீரோ ஜோடி சேர்றார்? என்பதே கதை

களவாணி படம் ஹிட் ஆனது இயக்குநர் சற்குணத்தால. விமல் தன்னால தான் அப்டினு நினைச்சுட்டு இருக்கார் போல. ரொம்ப அசால்ட்டு . என்னமோ புருஷனை மதிக்காத பொண்டாட்டி மாதிரி படம் முழுக்க ஏனோ தானோன்னு நடிச்சிருக்காரு . வசனம் பேசும்போது வாய்ஸ் மாடுலேஷன் சுத்தமா வர்லை . கவனம் செலுத்துனா நல்லது . மற்றபடி ஆள் பர்சனாலிட்டி ... 

ஹீரோயின் தீபா ஷா , ஃபிகருக்கு  கண் உதடு 2ம் ரொம்பச்சின்னது . ( இனி ஒண்ணும் பண்ண முடியாது , சும்மா சொல்லி வைப்போம் )  அடிக்கடி தலைல கொட்டிக்கும் சீன், வெட்கப்படுவது என ஸ்கோர் பண்றார். க்யூட்டான நடிப்பு , ஆனா பாப்பாவுக்கு கோபம் சரியா வர்லை . இன்னும் வளரனும் ( ஃபீலிங்க்ஸை சொன்னேன் ) 


 போஸ்டர்ல மார்க்கெட் வேல்யூ ஏத்திக்க இன்னொரு ஹீரோயின் ஓவியா. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை வேணும்னு பாரதியார் சொன்னாலும் சொன்னாரு . ஓவியா டைட் டி சர்ட் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு படம் பூரா வருது . என்னமோ ஜிம்ல பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் டூ செஸ்ட் பண்ணிட்டு அப்போதான் வெளில வர்ற மாதிரி ஒரு பில்டப் . செம கிளு கிளுப்பு . இவர் +2 கேர்ளா வர்றது கூட ஓக்கே , ஆனா விமல் கூட  + 2 பாய்னு சொல்றது எல்லாம் ஓவரோ ஓவர் 





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  போஸ்டர் டிசைனும் , டைட்டிலும் செமயான லவ் ஸ்டோரி போல என எண்ண வைக்கும் யுக்தி , நல்லா ஒர்க் அவுட் ஆகி  ஓப்பனிங்க்ல தியேட்டருக்கு காலேஜ் ஸ்டூடண்ட்சை வர வெச்சிருக்கு 



2. சின்னத்தம்பி பெரிய தம்பி பிரபு சத்யராஜ்  மாதிரி சின்ன தங்கச்சி பெரிய தங்கச்சி மாதிரி தீபா ஷா , ஓவியா வை முறையே ஹீரோயின் நெம்பர் 1 , நெம்பர் 2 வா புக் பண்ணது 


3. இதே ஹீரோ விமல் நடிச்ச இஷ்டம் படக்கதையை கொஞ்சம் உல்டா பண்ணி இவர் கிட்டேயே கால்ஷீட் வாங்குனது


4. மனோபாலா காமெடி டிராக்கை டபுள் மீனிங்கில் எழுதி சி செண்ட்டர் ரசிகர்களை கவர முயன்றது 



5. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் 2ம் குட் 




இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ ஹீரோயின் 2 பேரும்  பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸா டவுன் பஸ்ல டிக்கேட் எடுக்காம பொய் செக்கிங்க்ல மாட்டிக்கறாங்க . ஓக்கே , ஆனா  அதுக்காக 2 பேரையும் போலீஸ் ஜீப்ல ஏத்திட்டு போகுமா? வார்ன் பண்ணி விட்டுடுவாங்க . அதுவும் மாணவியை ஜீப்ல ஏத்திட்டு போக சட்டத்துல இடம் இல்லை 



2.  ஹீரோ கூட சைக்கிள் ல போக ஹீரோயின் தன்னோட சைக்கிளை  ஹேர் பின்னால டயரை குத்தி பஞ்சர் பண்ணிக்குது. அது ஏன் காலம் காலமா அப்படியே பண்றாங்க? வால்ட்யூப்பை ஓப்பன் பண்ணி விட்டா காத்து இறங்கிட்டுப்போகுது . அவன் என்ன செக் பண்ணவா போறான்? 


3. ஹீரோ ஃபோன்ல  “ அங்கே தான் வந்துட்டு இருக்கோம் “னு பன்மைல தான் சொல்றாரு , எதுக்கு “ அவளையும் கூட்டிட்டு வா அப்டினு அம்மா சொல்வதா ஒரு வசனம் ? 



4.  லவ்வர்ஸ் ஹோட்டல்ல சாப்பிடுவதும் , காதலி லவ் பண்ணலைன்னு சொன்னதும் காதலன் தனித்தனி பில் என்பதும் உடனே காதலி கிஸ் கொடுப்பதும் பல படங்களில் பார்த்து சலித்த சீன். அந்த காமெடியை அவ்வளவு நீளமா மொக்கையா கொண்டு போகனுமா? 



5. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கும் எல்லா பசங்களுக்கும் நான் தான் டாக்டர் அப்டினு ஓவியா சொல்லும் டபுள் மீனிங்க் காமெடி சகிக்கலை 


 




6.  அமெரிக்கா போறவர் தன் சொந்தக்கார்ல போய் பார்க்கிங்க் பண்ணிட்டு ஃபிளைட்ல போய் அமெரிக்கால செட்டில் ஆவது செம காமெடி , சொப்பன சுந்தரி கார் மாதிரி ஸ்டேண்டில் விட்ட காரை யார் வெச்சுப்பாங்க? அதுக்கு டாக்சில போய் இறங்குவதா காட்டி இருக்கலாம் 


7. க்ளைமாக்ஸ்;ல ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார், அவர் எடுக்கலை , பர பரப்பான சூழல்ல ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப மாட்டாரா/ ?


8.  கதைக்களம் ஊட்டி, ஆனா ஒரு சீன்ல ஜெமினிகணேஷன் பங்களா வருது , அது கொடைக்கானல் ஆச்சே? 


9. ஹீரோ ஃபாரீன்ல இருந்து ஒரு  நாய் பொம்மை வாங்கிட்டு வர்றார். அதுக்கு ஏன்  அவ்வளவு முக்கியத்துவம்? கதைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சா?


10 .  ஸ்கூல் லவ்வை ஹீரோவே கேவலமா பேசுவதும் , இந்தக்காதலி இல்லைன்னா அந்தக்கதலி என்னும் விதமாய் ஹீரோ பல்டி அடிப்பதும் காதலை கொச்சைப்படுத்தும் உத்திகள் 


11. ஸ்கூல் கலாட்டா என்ற பெயரில் நடக்கும் டீச்சர் - வாத்தியார் லவ் கூத்துகள் , காபி சாப்டியா? என்றால் மேட்டரை முடிச்சுட்டியா? என்ற டபுள் மீனிங்க் காமெடியை ஒரு லேடியே சொல்வது எல்லாம் மலிவான வியாபார உத்தி  





மனம் கவர்ந்த வசனங்கள்



1.  டியர் ஸ்டூடண்ட்ஸ் , லிசன்  ( கவனிங்க ) 


அடேய்.. எங்கேடா பார்க்கறீங்க? போர்டை பார்க்கச்சொன்னா பொண்ணுங்களைப்பார்க்கறீங்க? 



2.  செக்கிங்க் ஆஃபீசர் - டிக்கெட் எங்கே? 

 போன ஸ்டாப்பிங்க்லயே இறங்கிப்போய்ட்டா.. 



3.  என்னை மட்டும் இல்லை , என் பேப்பரைக்கூட உன்னால திருத்த முடியாது 


4. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.




அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா?


5. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு



6. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை




7. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே 



8.  நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலை


9.நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது


10.  உலகத்துலயே பெரிய அருவியான நயாகரா அருவியை தெரியாதவங்க கூட இருக்கலாம் , ஆனா வயாக்ரா தெரியாத ஆளே கிடையாது 

 





11.  என்னம்மா நோட்டு(ம்) கசங்கி இருக்கு> ?



`12.  கண்டக்டர் கிட்டே பேசுனே ஓக்கே , டிரைவர் கிட்டேய்யும் பேசுறியே , அவர் நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துடப்போறார்



13.  அம்மா , அடிக்கடி அந்த மேஜர் அங்கிள் துப்பாக்கியை காட்டி பயப்படுத்தறார்



14.  ஃபாரீன்ல கில்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க . ஜஸ்ட் காஃபி சாப்பிடற மாதிரி 

 லேடி - தம்பி , அப்போ எத்தனை காபி சாப்டிருக்கீங்க? 



15.  எனக்கு காபி சாப்பிடற பழக்கமே இல்லைங்க 

 கல்யாணத்துக்கு அப்புறமாவாவது சாப்டுறு, வேற யாராவது உன் காபியை குடிச்சுடப்போறான்


16.  நீ எனக்கு தெரிஞ்சதைப்பேசுனாலும் , தெரியாததைப்பேசுனாலும் எனக்கு அது புதுசாத்தான் இருக்கும் 


17. பொண்ணுங்க ஏன் ஆபத்துல இருந்து அவங்க காதலனை க்காப்பாத்தறாங்க?

 மேரேஜ்க்குப்பிறகு தான் சாகடிக்க வேண்டிய ஆளை வேற யாரும் சாகடிக்கக்கூடாதுன்னுதான் 


18.  வீட்டுக்கு ஒரு மேரேஜ் புரோக்கர் ஓக்கே, ஆனா உங்க வீட்ல  வீடே புரோக்கர் மயமா இருக்கே? 



19.  வெட்கமா இருக்கு 

 ஏன்? வெட்கம்னா உனக்குப்பிடிக்காதா? 


 வெட்கத்தைப்பிடிக்காத  பொண்ணு உலகத்துலயே இல்லை 



20 . கல்யாணம் ஆகும் வரை ஒரு செகண்ட் கூட சலனப்படாத , சலனப்படமாட்டேன்கற  நேர்மையோட நான் இருப்பேன் 



 



21 இந்த உலகத்துல எத்தனை லவ் ஃபெயிலியர் ஆனாலும் மீண்டும் மீண்டும் லவ் தோன்றக்காரனம் சரக்கு இருக்கும் தைரியம் தான்



22.  உன்னைப்பார்த்தா லவ் ஃபெயிலருக்காக குடிக்கற மாதிரி தெரியல , குடிக்கறதுக்காகவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி தோணுது 



23.  பசங்க சைக்காலஜி என்னன்னா மிஸ்டு கால் வந்தா உடனே கூப்பிட்டு பேசிடனும் , அது ஒரு ஃபிகரா இருக்கக்கூட சான்ஸ் இருக்கே..? 



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார் 



 சி பி கமெண்ட்  - ஓவியாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்,  மற்றபடி படத்துல ஒண்ணும் கிடையாது . அரியலூர் நடராஜா தியேட்டர்ல இந்த டப்பா படத்தை பார்த்தேன் . தியேட்டரும் டப்பா  . தமிழ் நாட்லயே கேண்ட்டீன் கூட இல்லாத  ஒரே தியேட்டர் இதுதானாம், டெண்ட் கொட்டாய்ல கூட கேண்ட்டீன் இருக்கும் . ஹூம்..  படம் பிப்ரவரி 14 க்கே ரிலீஸ் ஆகிடுச்சு, இப்போதான் நான் பார்த்தேன்