Thursday, March 15, 2012

தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..


a
உலகம் முழுவதும் தன் இனம் வாழ அதை பார்த்து பெருமைப்படும் மனங்கள் இருக்கையில் தமிழ் இனம் மட்டும் தான் தன் இனம் வீழ்வதை நேரில் கண்டும் என்ன செய்வது என்ற நினைப்பே இல்லாமல் சொரணை அற்று இருக்கிறான்.. ஒரே ஒரு ராஜீவ் உயிரை கொன்றதற்கு 3 பேருக்கு தூக்கு என்றால் ஒரு லட்சம் தமிழ் உயிர்களை கொன்ற ராஜ்பக்சேவுக்கு  என்ன தண்டனை தருவது? இத்தனை நாளாக மறைத்து வந்த போர்க்குற்றங்கள் இப்போது வீடியோ வடிவில் வெளிவந்து விட்டது.. கனத்த நெஞ்சத்துடன் அதை பகிர்கிறேன்


கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவை  இல்லை. ஆனால், கொலைக்கு..? கண்ணே தேவை இல்லை!


 மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத் தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடு களுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா.


ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். ''எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது!'' என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப் பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான்-கி-மூன் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களும் போர்க் குற்றத்தின் கொடூரச் சுவடுகள் தெரியாமல் அழிக்கப்பட்டு இருந்தன.


 அந்தத் தடயங்களை மறைப்ப தற்குத்தான் நான்கு நாட்களை எடுத்துக் கொண்டார் மகிந்த ராஜபக்ஷே. தடயம் அழிக்கப்பட்ட இடங்களே பான்-கி-மூனைப் பதைபதைக்கவைத்தது என்றால், முந்தைய மூன்று ஆண்டுகள் எப்படி இருந்திருக் கும்?


''குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சும். அதனால், காற்றில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்துச் செத்துப்போவார்கள். அப்போது அவர்களுடைய உடைகள் எல்லாம் நார்நாராகக் கிழியும். செத்துப்போனவர்கள் உடல்கள் எல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும்!'' என்று தான் பார்த்த காட்சியை மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் குழுவிடம் தமிழ் ஈழப் பெண் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது கற்பனை அல்ல. அந்தப் பெண் சொன்னதை வாஷிங்டனில் உள்ள சர்வதேச மூத்தகுடி மக்கள் குழு வழிமொழிந்தது.


'இலங்கை அரசின் செயல்பாடு, சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்!’ என்று எழுதப்பட்ட வாசகத்தில் கையெழுத்துப் போட்ட மூன்று முக்கியமானவர்கள்... தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான்.


மூன்று ஆண்டுகள் கழித்து, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா வந்து இதனை ஆரம்பிக்க வேண்டிய அளவுக்கு உலக நாடுகளிடம் மௌனம் நிலவியது. ஜார் சக்கரவர்த்திக்குப் பாடம் கற்பித்த சோவியத் ஒன்றியமும் பண்பாட்டுப் புரட்சி கண்ட செஞ்சீனமும் பாடிஸ்டாவுக்கு எதிராகக் களமாடிய ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் ஈழத் தமிழர்க்கு அரணாக இருந்து காத்திருக்க வேண்டும். அல்லது காந்திய தேசமாவது கை கொடுத்திருக்க வேண்டும். அமைதி விடுதலை கண்டவர்களும் ஆயுத விடுதலை அடைந்தவர்களும் மௌனிக்க... அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது.


ஒருகாலத்தில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான் இலங்கை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் ரத்தத் தொடக்கமாக அமைந்தது 1983 ஜூலைப் படுகொலைகள். அப்போது அமெரிக்க அரசாங்கம் விடுத்த அறிக்கையில், 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இந்த இனக் கலவரமாகும்’ என்று நியாயப்படுத்தியது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரம்தான் ஜெனிவாவில் இப்போது காணப்படுகிறது!


ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபை மூவர் குழுவை அமைத்து விசாரித்தது. சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கையை மையமாக வைத்துதான் அமெரிக்கா தனது தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த கண்துடைப்பு ஆணைய அறிக்கையை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுக்கும் மனித உரிமைக்கும் காட்டும் அக்கறை ஆகாது. ஆனாலும், அமெரிக்கா இதையாவது செய்கிறதே, இவர்களாவது செய்கிறார்களே என்று மனத் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்!


பொருளாதார வளத்திலும் ராணுவ வளத்திலும் அமெரிக்காவுக்குச் சமமாக நிற்கும் சீனாவின் கைப்பாவையாக இலங்கை மாறிவிட்டது என்பதால், அந்த நாட்டை மிரட்டுவதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. அமெரிக்கா எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்று கம்யூனிஸ நாடுகள் குருட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இரண்டு பகடைகளுக்கு மத்தியில் தமிழனின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷே உயிர் தப்பிவருகிறார்.


1949-ம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3-ல் போர்க் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 'போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபாடுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயினாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும்!’ என்று அந்த விதி கூறுகிறது. 


ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கைப்படி கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேரும் (இதைவிட எண்ணிக்கை கூடுதலானது என்றாலும்!) இந்த விதிகளில் குறிப்பிடப்படும் வகையினர்தான். தங்கிய இடங்கள், பதுங்குக்குழிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வளையம் என அத்தனையையும் மயானமாக்கியவர்களுக்கு ஐ.நா. சபையோ 47 உறுப்பு நாடுகளோ தண்டனை தருமா? அதுவும் எப்போது என்று தெரியாது.


ஆனால், 'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!


தனது கைக்கூலிகளால் ஆளப்படும் இந்தியா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏன் தன்னை எதிர்க்கிறது என்று அமெரிக்காவே ஆச்சரியப்படும். இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரன் காலத்திலும் கொள்ளைக்காரர்கள் காலத்திலும் கொண்டு பதுக்கப்பட்ட 75 லட்சம் கோடிகளை பாதுகாப்பாகவும் அதே நேரம் தங்கள் பாதுகாப்பிலும் வைக்க சிறந்த இடம் இலங்கைதான் என்று நம் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ? மொத்தத்தில் காட்டிக்கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளிருந்தே தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. சாதி, மதம், கட்சி என பல கூறுகளாக தமிழர்களை பிரித்து அவர்களுக்கு இனமானம் இல்லாமல் செய்து இறையாண்மை என்று புதிதாக ஒன்றை கண்டுபிடித்து அந்தக் கூட்டம் கொட்டமடிக்கிறது. தமிழனின் ஆரம்பம் காங்கிரஸின் அழிவில்தான்.
 
சற்று சிந்தித்து பாருங்கள். அமெரிக்கா தான் பாதிக்கப்பட்டால் ஒழிய போரில் ஈடுபடாது. ஈராக் (புஷ் குடும்ப யுத்தம்). ஆப்கான் - இரட்டை கோபுர தாக்குதல். மற்றப்படி ரவாண்டாவில் என்ன செய்த்து. டார்போர் ஒன்றும் இல்லை. சோமாலியா - சுணக்கத்துடன் போய் அடி வாங்கி வந்தது. பாஸ்னியா - வோ ஐரோப்பிய இணையம். லிபியாவில் கூட பிரெஞ்ச் அரசு தீவிரமாக இருந்த்தே தவிர ஒபாமா இல்லை.

அப்படிப்பட்ட அரசு - இலங்கைக்காக எப்படி போராட முன்வரும்? இந்தியாவை எதிர்த்து கொண்டு (ஒரு போர்தளம் நிறுவ ஏதுவாக இடமில்லையே).

வெறும் பொருளாதார மிரட்டல் விடுக்கலாம் - இலங்கையின் ஏற்றுமதிகள் மீது. அதுவும் கடினமே. ஈரான் இத்தனை தடைகளுக்கும் பின்னர் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்படி தடைகள் ஒரு வேளை அவர்களின் பொருளாதாரத்தை அசைக்கும் எனில் அதன் கோபம் அநாவசியமாக இலங்கை தமிழர்கள் (அங்கு இருப்பவர்கள்) மீதுதான் திரும்பும். ஆக, இவர்களின் மிரட்டல் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர்களுக்கே இன்னல் தரும்.

இது தமிழ் சினிமா போல - பொண்ணை கட்டி கொடுத்தால் மாப்பிள்ளை இஷ்டப்படி நடக்க வேண்டும் என்ற கோட்பாடு போன்றது.

அடுத்தது கொல்லப்பட்ட 40 ஆயிரம் என்பதனை யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் அறிக்கைகள் கேள்வி குறி ஆக்குகின்றன. அதனை படிக்கும் முன் என் எண்ணமும் அட இத்தனை பேரா என்று!. ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னர் ஒரு நிகழ்வையே மீண்டும் மீண்டும் பலர் விவரிக்கின்றனர். நேரில் பார்த்தவர் இல்லை எல்லாமே கேள்விப்பட்டது, மருவி வேறு சூழ்நிலையில் (using diff background) சொல்லப்பட்டது. ஆக எத்தனை டபுள் கவுண்ட் என்பது தெரியவில்லை. ஆள் கணக்கெடுப்பு என்பது தோராயமாகத்தான் உள்ளது. நிஜமாகவே எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரிய வராது. 30 இல்லை 50 ஆயிரமாக கூட இருக்கலாம்.

 எத்தனையோ இனங்கள் இந்த உலகத்தில் அழிந்திருக்கின்றன! போராடியவை மட்டுமே தப்பி பிழைத்திருக்கின்றன.இந்தியா தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மிதித்துகொண்டேயிருக்கிறது.தவறு செய்தவர்களை 'தெய்வம் நின்று கொல்லும்’ என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்ததாகவோ அல்லது அழிந்துப்போன இனத்தை தெய்வம் மீட்டெடுத்தாக எவராவது அறிந்ததுண்டோ

31 comments:

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம்


இவ்வள்வு நேரம் அந்த ஆவணத்தை கண்டேன்...தூ இதுக்கு பேரு இறையாண்மையா...அப்பாவி மக்களை கொன்றவனை விட அவனுக்கு உதவி செய்தவனை என்ன செய்வது..இன்னும் இது சரியான புரிதலுடன் நம்நாடு முழுதும் எடுத்து செல்லப்படவில்லை...தமிழன் என்பவன் பயங்கரவாதி என்று இன்னும் பொய்யுரைத்துக்கொண்டு இருக்கும் வட மீடியாக்களும்...எம்மக்களை கையறு நிலையில் வைத்து விளையாடும் மத்திய நிர்வாகமும் சீக்கிரத்தில் மண்ணாக போகுக...இதயமே நொருங்கியது போன்ற உணர்வு!

சி.பி.செந்தில்குமார் said...

நிலவன்பன் -இப்பொழுது சொல்லுங்கள்! நாங்கள் ஏன் ஈழத்தை விரும்புகின்றோமேன்று! ரத்தக்காட்டேரிகளுடன் எப்படி முயல்களால் வாழ முடியும்?

மன்மதகுஞ்சு said...

உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பதிவை தகுந்த நேரத்தில் முக்கிய விளக்கப்படுத்தல்களுடன் எழுதியமை.....
ஒவ்வொரு தமிழனும் இலங்கைத்தீவில் இனிமையாக அனைவருடனும் வாழ்த்தான் விரும்பினான் ஆரம்பத்தில் ,ஆனால் கழுத்தில் கத்தி வைத்த போதே விழித்தெழுந்து பறித்தெடுத்தான் கத்தியை தன் கையில்.. நாமாக ஆயுதப்போராட்டத்தை விரும்பி ஏற்கவில்லை பெரும்பான்மை அரசியல்வாதிகள் திணித்தனர். பெரும்பான்மை மக்களுக்கு தீவிரவாதமும் ஊட்டப்பட்டு எம் குலமும் தேசமும் தீயிடப்பட்ட போது நாமும் காதியவாதிகா பார்த்திட்டு நிக்கமுடியாது, வலியை கொடுத்தவனுக்கு வலியை திருப்பி கொடுப்போம் என்றே கருவி கொண்டு தாக்கினோம் எமது இருப்பை தக்கவைக்க எமது வாழ்வை ஒளிமயமாக்க.. துரோகங்களாலும் பழிவாங்கல்களாலும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தலைகளில் குண்டு போட்டுவிட்டு இப்போ ஒன்றுமே நடக்கவில்லை என்றூம் ,இது பெரும்பான்மை இனத்துக்கான சவால் என்றூ தமது தவறுகளை மறைத்து இனத்தூபம் இடுகிறார்கள் .. தமிழனும் சிங்களவனும் சந்தோசமாய் வாழுதல் சிங்கள அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை.. அதற்க்கு அவர்கள் தூபமிடும் ஒரே ஆயுதம் பயங்கரவாதிகள் நாட்டை பிரிக்கிறார்கள்.. நாம் எமக்கான உணவைத்தான் கேட்கிறோம் அவர்கள் உணவுக்கோப்பையில் இருந்து தட்டி பறிக்கவில்லையே

sutha said...

மிக நல்ல பதிவு - நன்றி

K.Arivukkarasu said...

டைமிங், மற்றும் காமெடிக்கு பேர்போன செந்திலிடம் இருந்து மிக முக்கியமான, ஆழ்ந்த கருத்துக்களுடனான பதிவு......கடைசி பாரா மிக முக்கியமானது.

வெளங்காதவன்™ said...

:-(

CS. Mohan Kumar said...

ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் காணொளியாக பார்க்கும் போது மிக அதிர்ச்சியாக உள்ளது

நாய் நக்ஸ் said...

:((((((((((

Anonymous said...

வேதனை...

சானல் 4 வீடியோ பார்த்து முடிக்கையில் கொடூரத்தை நடத்தி முடித்த க்ரூரர்களை காட்டிலும் துணை நின்ற இந்திய கோழைகள் மீது தான் வெறி வருகிறது...

வெட்கம்...

ஒவ்வொரு இந்திய தமிழனும் வெட்கப்பட வேண்டும்...குறிப்பாக இன்று எல்லாம் முடிந்த பின் நீலிக்கண்ணீர் வடிக்கும் துரோகிகள் கருணாநிதியும்... ஜெயலலிதாவும்...

ராஜபக்ஷே போர் குற்றவாளி என்பதற்கு அத்தனை ஆதாரங்களும் காணொளியில்...இன்னும் எவ்வளவு நாள் பேடி மன்மோகன் சோனியாவின் பாவாடைக்குள் ஒளிந்திருப்பான்...

நன்றி...

சானல் 4 ...ஜான் ஸ்நொவ்...எம்மக்களின் குரலாய் நிமிர்ந்து நிற்ப்பதற்கு..

சி பி உங்கள் ஆயிரக்கணக்கான பதிவுகளில் இது தலைப்பதிவு...

ஈழ சகோதர சகோதரிகளே...
எங்கள் சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் உங்களுடன்...எப்போதும்...

Anonymous said...

வேதனை...

சானல் 4 வீடியோ பார்த்து முடிக்கையில் கொடூரத்தை நடத்தி முடித்த க்ரூரர்களை காட்டிலும் துணை நின்ற இந்திய கோழைகள் மீது தான் வெறி வருகிறது...

வெட்கம்...

ஒவ்வொரு இந்திய தமிழனும் வெட்கப்பட வேண்டும்...குறிப்பாக இன்று எல்லாம் முடிந்த பின் நீலிக்கண்ணீர் வடிக்கும் துரோகிகள் கருணாநிதியும்... ஜெயலலிதாவும்...

ராஜபக்ஷே போர் குற்றவாளி என்பதற்கு அத்தனை ஆதாரங்களும் காணொளியில்...இன்னும் எவ்வளவு நாள் பேடி மன்மோகன் சோனியாவின் பாவாடைக்குள் ஒளிந்திருப்பான்...

நன்றி...

சானல் 4 ...ஜான் ஸ்நொவ்...எம்மக்களின் குரலாய் நிமிர்ந்து நிற்ப்பதற்கு..
சி பி உங்கள் ஆயிரக்கணக்கான பதிவுகளில் இது தலைப்பதிவு...

ஈழ சகோதர சகோதரிகளே...

எங்கள் சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் உங்களுடன்...எப்போதும்...

K said...

இந்தப் பதிவையும், பதிவின் தலைப்பையும் வாழ் நாளில் மறக்க மாட்டோம் சி பி!

அழுதுகொண்டு இருக்கிறோம்....! அதிகம் பேச முடியவில்லை!! :-((((

சத்தியா said...

இன்று வாசித்த பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது. நன்றி. எம் இனத்தின் இன்னல்களை தமது பொருளாதார பலத்திற்கும் வல்லரசுக் கனவுகளுக்குமாக ஒரு சில நாடுகள் சாதகமாக்கிக் கொண்டு வருகின்றது. எனினும் இன்னும் சிறிது நம்பிக்கை உண்டு கொலைவெறியர் நீதியின் முன் கொண்டு வரப்படுவர் என்று. எனினும் அதனால் தமிழன் மேலும் மேலும் இன்னல்களுக்காளகப் போவது உறுதி. இதற்கு ஒரே வழி உலகம் இனியாவது எம் மண்ணில் நாம் சுதந்திரமாய் வாழ வழிசெய்வதே. ஈழம் ஒன்றே இதற்குத் தீர்வு. எம்மை பயங்கரவாதிகளேன கூவித் திரிந்தவர்களின் உண்மை முகம் உலகம் அறிந்திருக்கும்.

சம்பத்குமார் said...

மனம் வலிக்கும் வீடியோ..

நேரில் அனுபவித்த என் சகோதர சொந்தங்கள் சிந்திய ஒவ்வொருதுளி கண்ணீருக்கும் காரணமாய் இருந்த காரணவாதிகள் காணாமல் போகும் நேரம் வந்துவிட்டது.

எதிரியை கூட மன்னிக்கலாம்.குழிபறிக்கும் கோழைகளை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது

ஹாலிவுட்ரசிகன் said...

“தமிழன் என்று சொல்லடா ... தலை நிமிர்ந்து நில்லடா” என்று பெருமையுடன் சொல்லக் கூடிய தகுதி இன்று இல்லாமல் போய்விட்டது. இதைப் பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் (நான் உட்பட) வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஆனால் இலங்கை அரசினது நடவடிக்கைகள் அப்பாவிகள் மீது எவ்வாறு அமையுமோ தெரியவில்லை.

ராஜ் said...

ஐ.நா தீர்மானம் வெற்றி அடைய வேண்டும், இது தான் அணைத்து உண்மையான தமிழர்களின் எண்ணம்.

Unknown said...

ரத்தவெறி பிடித்த ஈழ இராணுவம்
கோரத்தாண்டவம் ஆடிய பொழுதில்
அமைதி முகமூடியனிந்து காங்கிரஸ்க்கு
சாமரம் வீசிய கனிமொழி!
இன்று இந்தியாவில்தான்
தமிழகம் இருக்கிறதாக
நம்புகிறாராம்.....
நாங்கள் நம்பிக்கையிழந்து
பல வருடம் ஆனதம்மா....
தமிழர்களை ஒரு நாயாய்
கூட மதிக்காமல் சுட்டுக்கொல்ல
ஆயுதம் தந்துதவிய கன்னடன்
எஸ் எம் கிருஸ்ணா எங்கள் வரிப்பணமும்
அதில் கலந்திருக்கிறது நினைத்து
இருப்பாயா? முதல்வர் அனுப்பிய
கடித்ததை பிரியங்கா குழந்தையின்
கக்கா துடைக்கப்பட்டதோ?
யார் அறிவார்...!
மௌனகுரு
உளரி பதில் கடிதம் படித்து
அர்த்தம் யார் சொல்வார்
அமரிக்கனுக்கு இருக்கும்
சூடு சுரனை பஞ்சாப்
சப்பாத்திக்கு இல்லையோ...!
மிஸஸ் மௌனகுரு கொஞ்சம்
உப்பு கொஞ்சம் அதிகமாக போடுங்கள்
சுரனைக்காக அல்ல
கடலில் சிங்களவனால் சுடப்பட்ட
தமிழக மீனவனின் ரத்தம் அதில்
இருக்கும்....

கேரளாக்காரன் said...

இது விகடன் கட்டுரையா?

ஹேமா said...

இன்று உங்கள் உணர்வுக்கு நன்றி சொல்ல மட்டுமே தென்பு இருக்கு சிபி !

கோகுல் said...

கண்ணீர் விடுவதற்கா இன்னும் இருக்கிறோம் என நினைத்து வெக்கமாக இருக்கிறது.
ஆனால் உண்மையில் வெக்கப்பட வேண்டியவர்கள் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்து கொண்டிருப்பது எவ்வளவு நாளைக்கு.,நிச்சயம் ஒரு நாள் வரும் இந்த பாவிகளை பழி தீர்க்க.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!என்ன சொல்ல?எல்லாமே நீங்கள் சொல்லி விட்டீர்கள்.உங்கள் எழுத்தும் ஈழமக்கள் வாழ்வில் நிலைத்திருக்கும்!

சார்வாகன் said...

சகோ!!!!!!!!!!!
காணொளி பார்க்க பதறுகிறது.ஒன்று திரள்வோம்,சாதி ,மதம்,அரசியல் மறந்து தமிழனுக்கு நீதி கொடுக்க குரல் கொடுப்போம்.

PUTHIYATHENRAL said...

இந்த இரண்டகத்தை, துரோகத்தை செய்த நாட்டின் பெயரை ஏன் வைத்துள்ளீர்கள் இந்தியன்... தமிழன் என்று சொல்லுங்கள்............. நாம் இந்தியன் இல்லை தமிழன்.

உலக சினிமா ரசிகன் said...

சிபி...உங்களோடு என் கண்டனத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.

விழித்துக்கொள் said...

indhaa keduketta naattil pirandhamaikkaaga vetkapadugiren nammavoor congress thalaivargalai avargalum thamizhargal thaane enna seidhukkondu irukkindraargal kozhi muttaikku maiyer pudungigiraargalo

உணவு உலகம் said...

கண்ணீர் சிந்த வைத்த காணொளி.வார்த்தைகளால் என்ன சொன்னாலும் வலி தீராது.

swejeni said...

தேர்ந்த கட்டுரை . சி பி இடம் இருந்து இப்படி ஒரு சீரியஸ் மேட்டர் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஒரு நாள் வெல்லும் . அது வரை நம்பிக்கை தான் வாழ்க்கை

Unknown said...

அன்பரே!

கடந்த நான்கு நாட்களாக நான்
தினம் ஒரு கவிதை எழுதினேன்
இந்த எண்பது வயதில் என்னால்
செய்யமுடிந்தது அதுவே!
ஏனோ தமிழகம் சுரணை
அற்றுக்கிடக்கிறது!

புலவர் சா இராமாநுசம்

ராஜ நடராஜன் said...

சி.பி!நேற்றே போட வேண்டிய பின்னூட்டம் தாமதமாக இப்பொழுது.

உங்கள் தனித்துவமான கமெண்ட் போட் முடியாத அளவுக்கு மனதில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அழிந்து போன இனத்தை தெய்வம் மீட்டெடுத்தாக நம்பும் ஒரு இனம் உண்டு.

இஸ்ரேல்!

UNMAIKAL said...

எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
.
.
.

முத்தரசு said...

ஓட்டு பொறுக்கிகள் நம்பி ஏமாந்து விட்டோம்.
வரும்.. மாற்றம் வரும் - விடியல் வரும். வந்தே தீருமடா.

சிவகுமாரன் said...

நெஞ்சம் பதைக்க, கண்களில் நீர் வழிய வீடியோவைப் பார்த்தேன். கேட்பாரற்றுப் போனதே நம்மினம்,துணைபோன காங்கிரசுக்கு என்ன பாடம் கற்பிக்கப் போகிறோம் நாம்.? இந்த விடியோவை ஒவ்வொரு தமிழினமும் பார்க்க வேண்டுமே . ஏதாவது செய்ய வேண்டுமே தோழா ?