Wednesday, March 13, 2013

தயாநிதி தகராறு வித் அருள்நிதி - என்ன நடந்தது? அருள் நிதி பேட்டி

போட்டி பலமா பயங்கரமா இருக்கு!''


க.நாகப்பன்
லயோலால பி.காம். சேரும்போது, 'ஸ்டூடன்ட் யூனியன்ல சேரமாட்டேன்’னு நான் உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் என்னை காலேஜ்லயே சேர்த்துக்கிட்டாங்க. அங்கே படிச்சு முடிக்கிற வரை நான் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில்கூடக்கலந்துக் கிட்டது இல்லை. அப்படி ஒரு அப்பாவி. இப்போதான் சினிமா பக்கம் வந்திருக்கேன். ஒவ்வொண்ணாக் கத்துக்கிறேன்... ஒவ்வொரு படமும், ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு!'' - 'தகராறு’ படத்துக்காக வளர்த்திருக்கும் தாடி தடவிச் சிரிக்கிறார் அருள்நிதி.


 '' 'தகராறு’னு டைட்டிலே தாறுமாறா இருக்குதே?''


''நிறைய டைட்டில் யோசிச்சோம். எந்த டைட்டில் வெச்சாலும் அதுல முதல் பாதியோ, ரெண்டாவது பாதியோ ஏற்கெனவே ரிஜிஸ்டர் ஆகியிருந்தது. 'எல்லா டைட்டிலும் ஒரே தகராறா இருக்கே?’னு யோசிச்சப்ப, துரை தயாநிதி அண்ணன்தான் டக்குனு 'தகராறுன்னே டைட்டில் வெச்சிரலாம்’னு சொன்னான். பேப்பர்ல 'தயாநிதி தகராறு வித் அருள்நிதி’னு நியூஸ் வந்துச்சா... எல்லாரும் பரபரப்பாகிட்டாங்க. வில்லங்கமான டைட்டில்வெச்சா, வேகமா ரீச் ஆகிடலாம்போல!''


''என்ன தகராறு பண்ணப்போறீங்க?''



''நான் நடிச்ச படங்கள்ல இதில் காமெடிக்கு ஸ்கோப் அதிகம். நானும்... பவன், முருகதாஸ், தருண் சத்யானு என் மூணு நண்பர்களும் பீரோ திருடுறது தான் கதை. ஒரு தடவை திருடும்போது ஹீரோயினைப் பார்த்து, லவ் பண்ண ஆரம்பிச்சிருவேன். படம் பாருங்க... ரொம்ப ஜாலியா இருக்கும்!''



''உதயநிதியும் நீங்களும் சேர்ந்து படம் பண்றதா பேச்சு வந்ததே?''



''சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தா, அண்ணனோட நிச்சயம் நடிப்பேன். ஆனா, உதயநிதி அண்ணனைப் பார்த்தா, பயமா இருக்கு. முதல் படத்திலேயே அவ்ளோ பெரிய ஹிட் கொடுத்துட்டார். இப்போ 'இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பிஸியாகிட்டார். அவர்கிட்ட இருந்து நான் நிறையக் கத்துக்கணும்!''



''நீங்க நிஜத்துலயும் 'மௌனகுரு’தான்னு இனியா கிண்டல் பண்ணி இருந்தாங்களே?''



''பொதுவா, பெண்கள்கிட்ட பேசும்போது ரொம்பக் கூச்சப்படுவேன். ஆனா, இப்போ பரவாயில்லை. படத்தில் கூட நடிக்கும் ஹீரோயின்கள் ஏதாவது பேசினா, பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சிட்டேன். அதே சமயம் தேவை இல்லாமப் பேசமாட்டேன். மௌன குருவா இருப்பதில் தப்பில்லையே!''
''நீங்க நடிக்க வந்த பிறகு நிறைய ஹீரோக்கள் அறிமுகமாகிட்டாங்க. யாரையெல்லாம் கவனிக்கிறீங்க?''



''அதர்வாகிட்ட ஒரு ஃபயர் தெரியுது. ஸ்கூல்ல அதர்வா என்னை விட மூணு வருஷம் ஜூனியர். ஆனா, சினிமாவில் நானும் அதர்வாவும் ஒரே நேரத்தில்தான் என்ட்ரி ஆனோம். சடசடனு முன்னேறி மூணாவது படத்துலயே பாலா சார் டைரக்ஷன்ல நடிக்கும் அளவுக்குத் தன்னை மெருகேத்திட்டார் அதர்வா. என்னை இம்ப்ரெஸ் பண்ண இன்னொருத்தர் 'அட்டகத்தி’ தினேஷ். 


'மௌனகுரு’வில் ஃபாத ரோட மகனா சின்ன ரோல் நடிச்சி ருப்பார். ஆனா, விடாமப் போராடி 'அட்டகத்தி’ சான்ஸ் பிடிச்சு அசத்திட்டார். 'கும்கி’ படத்தில் விக்ரம் பிரபுவே கண்ணுக்குத் தெரியலை. பாகன் பொம்மனாதான் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் இருந்தார்.  'கடல்’ படத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பும் பிடிச்சிருந்தது. போட்டி பலமா, பயங்கரமா இருக்குங்க!''



நன்றி - விகடன் 

1 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

ண்ணா இது போலவே விகடனில் வரும் அனைத்தையும் காபி பேஸ்ட் சாப்பாடு போட்டால் நல்லா இருக்கும் ..
25 ரூபாய் மிச்சமாகும் சிபியின் கருணை கிடைக்குமா