Wednesday, December 05, 2012

Talaash - சினிமா விமர்சனம்

http://wallpaperpassion.com/upload_puzzle_thumb/27015/talaash-movie-front-back-cover-wallpaper.jpgமடோனா நடித்து அட்டர் ஃபிளாப் ஆன த பாடி ஆஃப் எவிடென்ஸ் படத்தில் இருந்து கொஞ்சம் , இன்னொரு ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் , ஒரு ஒரிஜினல் டிராக் என 3 கதைகளை ஒரு படம் ஆக்கி இருக்கிறார்கள்.மும்பையில் இது செம ஓப்பனிங்க் , வசூல் கொட்டுதாம், ஆனா படம் ஸ்லோ..


ஓப்பனிங்க்ல ஒரு கார் வேகமாக நிலை தடுமாறி வந்து கடல்ல விழுது. காருக்குள்ளே ஒரு ஆள் செத்துக்கிடக்கார்.இன்வெஸ்டிகேஷன் நடக்குது, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். இது ஒரு டிராக் இதுதான் மடோனா பட கதை உல்டா .


 இன்னொரு டிராக் , ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஸ் பேக். அவரோட பையன் ஒரு விபத்துல ஏரில தண்ணீர்ல மூழ்கி இறந்துடறான். அதுக்கு தான் தான் காரணம்னு ஒரு குற்ற உணர்ச்சி ஹீரோவுக்கு , அடிக்கடி அதை நினைச்சுப்பார்த்து உருகுதே மருகுதே ஒரே நினைப்பாலே அப்டினு அல்லாடறார். இது வேற ஒரு ஹாலிவுட் படத்துல இருந்து எடுத்த டிராக் ..3 வது டிராக் இந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உதவி செய்யும் கில்மா லேடி , அவருக்கும் , இவருக்கும் ஒரு மானசீகக்காதல். சம்சாரத்துக்கு சந்தேகம் , ஊடல் , சமாளிஃபிகேஷன்  என ஒரு டைப்பா போகுது. படத்துல க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு 


ஹீரோ அமீர்கானுக்கு போலீஸ் கேரக்டர் நல்லாப்பொருந்தி இருக்கு. ஆனா அவர் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரியோ , குருதிப்புனல் கமல் மாதிரியோ , மூன்று முகம் ரஜினி மாதிரியோ கம்பீரமா , ஸ்டைலிஷா பண்ண வாய்ப்பு இருந்தும் அண்டர் ப்ளே ஆக்ட் பண்ணி இருக்கார். ஏன்னு தெரியலை.. அவார்டு வாங்க ஐடியாவோ  என்னவோ.. அவர் தீவிர ரசிகர்க:ளுக்கு மட்டுமே பிடிக்கும்.. ஹீரோயின் ராணி முகர்ஜி . ஹீரோவுக்கு மனைவியா வர்றார். மேக்கப் அதிகம் இல்லாத முகம்.. பல காட்சிகளில் அமைதியாகவும் , சில காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடிச்சிருக்கார்.. 


 கில்மா லேடியாக கிட்டத்தட்ட ராணி முகர்ஜியை ஓவர் டேக்கும் விதம் கலக்கி இருப்பவர் கரீனா கபூர் . டிக்கெட்டாக வருகிறார். இவரது கொஞ்சல் பேச்சும் , மோகப்பார்வையும் அருமை.. ( இதைக்கூடப்பாராட்டலைன்னா எதைத்தான் பாராட்டுவது ? )


http://www.talaash2012movie.in/wp-content/uploads/2012/02/Talaash-7.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்1. ஒரு படத்தில் இருந்து உருவினால் கண்டு பிடிச்சு கழுவிக்கழுவி ஊத்திடுவாங்க என்பதால்  2 ஹாலிவுட் படங்களில் இருந்து உருவி அந்த இரண்டுடன் ஒரிஜினல் கதையை சேர்த்து 3 டிராக்கையும் ராஜேஷ் குமாரின் நாவல் போல் சாமார்த்திய,மாக இணைத்தது


2.  ராணி முகர்ஜியை குடும்பப்பாங்காகவும் , கரீனாவை கில்மா லேடியாகவும் கேரக்டர் அமைத்து ஏரியாவை ஒதுக்கி பேலன்ஸ் செய்தது3. அமீர்கானின் சொந்தபப்டம் என்பதற்காக அவருக்கு தேவையற்ற பில்டப் காட்சிகள் ஏதும் வைக்காததுhttp://latestupdates.in/bollywood/wp-content/uploads/2012/11/Hona-Hai-Kya-song-lyrics-talash-movie-poster-hd-wallpapers-download-free.jpg  மனம் கவர்ந்த வசனங்கள்1. கில்மா லேடி - உங்களைப்பார்த்தா ஆறுதல் தேவைப்படும் ஆள் மாதிரி தோணுது 


 ஹீரோ -  ஐ ஆம் எ போலீஸ் இன்ஸ்பெக்டர் கி லே - ஏன்? போலீஸ்க்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா? 2. வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏமாற்றங்கள் , தோல்விகள் , இழப்புகள் தாங்க முடியாதவை , ஆனா நாம வாழ்ந்துதான் ஆகனும் , எல்லாத்தையும் சகிச்சுக்கனும். மனப்பக்குவம் வேணும்http://media.glamsham.com/download/wallpaper/movies/images/t/talaash-the-answer-lies-within-03-12x9.jpg இயக்குநரிடம் சில கேள்விகள்1. இந்தப்பட ஹீரோ கேரக்டருக்கும் , பிரபுதேவாவின் ரியல் லைஃப் கேரக்டருக்கும் பொதுவா ஒரு கேள்வி கேட்கறேன். உங்க வாழ்க்கைல உங்க குழந்தை இறந்த சோகம் தாங்காம இருந்தப்ப ஏற்பட்ட ஆறுதல் தான்  புது லேடியுடன் ஆன பழக்கம்னு ஆர்கியூ பண்றீங்களே.. இதே டய்லாக்கை உங்க வாழ்க்கைத்துணைவி சொன்னா ஏத்துக்குவீங்களா? அதே சோகம் தானே அவங்களுக்கும் ? என்னங்க.. நம்ம குழந்தை இறந்த  துக்கம் தாளலை.. அந்த சோகத்தைப்பகிர வீட்டுதோட்டக்காரன் தோள் கிடைச்சுது சாஞ்சுக்கிட்டேன், சாரின்னா எத்துக்குவீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம் உங்க மனைவ்விக்கு ஒரு நியாயமா?2. ஒரு சீன்ல வீட்டு  ஹால் ல ஒரு சிம் கார்டு கீழே கிடக்கு . காலை சாய்ச்சு சாய்ச்சு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளி ( வில்லன் ) அப்படியே அந்த சிம்மை கடந்து போகையில் போகிற போக்கில் சிம்மை கால் விரலில் மெட்டி சென்று விடுகிறான். இது சாத்திய்மே இல்லை.. ஒருவர் சிம் கார்டின் மீது நின்றுகொண்டே 2 நிமிடங்களில் அப்படி செய்ய முடியுமே தவிர ஆன் த வே நடக்கும்போதே எடுக்கவே முடியாது..அதுவும் 2 பேர் அவரை பார்த்துக்கொண்டிருக்கும்போது , பிராக்டிகலாக நானே ட்ரை பண்ணிட்டேன் 3. அதே போல் அப்படி வெளீயே போன ஆள் அப்பவே ஒளிஞ்சிருந்து தம்பதிகள் என்ன பேசிக்கறாங்கன்னு கதவு இடுக்கில் ஒளிஞ்சிருந்து பார்க்க்றான். இதுக்கும் வாய்ப்பே இல்லை.. அப்போதான் அவன் போறான்.. தம்பதிகள் கவனிக்காம அப்படி கொஞ்சிட்டு இருப்பாங்களா? 4. சென்னை, பெங்களூர் , மும்பை போன்ற சிட்டிகளில் அபார்ட்மெண்ட்களில் யார் காலிங்க் பெல் அடிச்சாலும் யாரு>? என கேட்டு கன்ஃபர்,ம் பண்ணிட்டுதான் கதவை திறப்பாங்க. ஆனா இந்தப்படத்துல யார் காலிங்க் பெல் அடிச்சாலும் அதிமுக கட்சி தலைமை மாதிரி டக் டக்னு கதவு திறந்துக்குது. என்னமோ நாஞ்சில் சம்பத்தோ , கேப்டனோ கட்சில சேர வந்ததை வரவேற்பது போல் காட்றாங்க, முடியல


http://mimg.sulekha.com/hindi/talaash/stills/talaash-cinema-035.jpg


 5.ஏற்காடு , கிஷ்கிந்தா , போன்ற தமிழ்நாட்டு நீர் நிலைகளில் போட்டிங்க் போறப்ப சேஃப்டி பெல்ட் அல்லது மிதவை சாதனங்களை இடுப்புல கட்டி விடுவாங்க. மும்பை தமிழ் நாட்டை விட பின் தங்கிய கிராமமா?6. ஹீரோ ஆஃபீஸ் டென்ஷன்ல கண்ணை மூடி படுத்திருக்காரு . ஹீரோயின் அதாவது ஹீரோவின் மனைவி அவர் பக்கத்துல உக்காந்திருக்காங்க. பசங்க
 ஏரிக்கரைக்கு ஓடும்போது ஹீரோ கவனிக்கலை , ஓக்கே ஹீரோயின்? பொதுவா ஒரு அம்மாவுக்கு கண்கள் , புலன்கள் எல்லாம் குழந்தையை சுத்தித்தானே இருக்கும்? இருக்கனும? அந்த விபத்துக்காட்சி படமாக்கப்பட்ட விதம் சரி இல்லை7. போலீஸ் ஆஃபீசர்னா கெத்து வேணும் , ஹீரோ வித்தியாசமா பண்றதா  நினைச்சுட்டு எல்லா சீனிலும் கையை கட்டிக்கிட்டு  அடக்கமா வர்றார்? அவர் என்ன ஏ வி எம் சரவனனா? கல்யாண மாலை நடராஜனா? ஏன் பம்மனும்?


8. ஹீரோ கில்மா லேடியோட ஹோட்டல் ரூம் போகலாம்னு திட்டம் போட்டுட்டாரு , திடீர் முடிவல்ல . அப்புறம் ஏன் யூனிஃபார்மல போகனும்? எதிர்கள் யாராவது பார்த்து மாட்டி விட்டுட மாட்டாங்களா பொதுவா போலீஸ் ஆஃபீசர்ங்க தப்பு பண்றப்போ  சிவில் டிரஸ்ல தான் இருப்பாங்க.. இப்படி பட்ட வர்த்தமா யூனிஃபார்ம்ல இருக்க மாட்டாங்க..


9. க்ளைமாக்ஸ் காட்சி அப்பட்டமான ஆணாதிக்கம். ஹீரோவுக்கு அந்த கில்மா லேடி கிடைக்கலை. சோகமா உக்காந்திருக்காரு . மனைவி வந்து ஆறுதல் படுத்தறாங்க, கோபத்தை , ஊடலை விட்டுட்டு சேர்ந்துக்கறாங்க. ஏய்யா அந்த லேடி கிடைச்சா அவ கூட போய் இருப்பே? நான் நடுத்தெருவுல நிக்கனுமா? அப்டி னு கேள்வி கேட்காம  போய் கட்டிக்கறா.. !


http://www.bollywoodpinup.com/data/media/4/kareena-kapoor-hot-pictures-3.jpg
சி.பி கமெண்ட் - அமீர்கான் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றபடி புதிய முயற்சி என்று சொல்லி விட முடியாது . படம் செம ஸ்லோ . ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்.பட உல்டா தகவல் - 
3rd track is from one Harrison Ford movie. drowned or something!


டிஸ்கி - இந்தப்படத்தின் மூன்று கதைகளில் ஒரு கதையின் மூலம்


மடோனாவின் பாடி ஆஃப் எவிடென்ஸ் விமர்சனம்

http://www.adrasaka.com/2012/10/body-of-evidence-18.htmlhttp://1.bp.blogspot.com/-WagboiykadY/T1H8EGiU4JI/AAAAAAAAC0U/hBw3AYvbSuA/s1600/rani-mukherjee-hot-93d83.jpg


4 comments:

Anonymous said...

படம் slow என்பது படத்தின் trailer பார்க்குபோதே தெரியுது

Thozhirkalam Channel said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

Varsha said...

காப்பி யாகவே இருக்கட்டும் சார். நல்ல பொழுதுபோக்கு இருக்குது. அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் படத்தோட மெயின் மேட்டர். அந்த ட்விஸ்ட் என்ன நு பல விமர்சனங்கள் ல சொல்லிடாங்க. நீங்க மற்றும் இன்னும் ரெண்டு பேர் தான் அந்த ட்விஸ்ட் என்னனு சொல்லாம எழுதி இருக்கீங்க. அதற்கே உங்களை பாராட்டலாம். இங்க மும்பை ல படம் சூப்பர் ஆ ஓடுது.

Venkatesan said...

விமர்சனத்துக்கு நன்றி..........!!!!